ஹைடெக் ராமனும், ஹவுஸ் வைஃப் சீதையும் !

 

அன்று காலை
ஒரு இராமன் வந்தான்
வில்லை ஒடிக்காமலேயே
விலகிச் சென்றான்,
விசாரித்த போது
விபரம் தெரிந்தது,
சீதையின் தோழி மிக அழகாம்.

0

பிறிதொருநாள்
தனியே காத்திருந்தாள் சீதை,
இன்னோர் இராமன்
தனியே வந்தான்,

சீதையை விட
வில்லே பிரதானமென்று
வில்லோடு ஓடிவிட்டான்.

0

பிறகு வந்த
சில இராமர்கள்
கலியுக புகைபோக்கிகள்
வில்லை தூக்கும் போதே
எல்லொடிந்து போனார்கள்.

இன்னும் சிலர்
சீதை,
வில்லை ஒடித்தால் மட்டுமே
மணக்க சம்மதம் என்று
இன்னொரு ஒப்பந்தம் இட்டார்கள்.

0

கடைசியில்
ஒர் நாள்
அப்பழுக்கற்ற இராமன் வந்து
வில்லையும் ஒடித்து
சீதையின் கரத்தையும் பிடித்தான்.

சில வருடங்கள் சென்ற பின்
ஓர்
அதிகாலை அவசரத்தில்
சீதை சினந்தாள்,

இராவணனிடம் கூட
புஷ்பகவிமானம் இருந்தது

0

Advertisements

13 comments on “ஹைடெக் ராமனும், ஹவுஸ் வைஃப் சீதையும் !

 1. //…சீதையின் தோழி மிக அழகாம்.//
  ஆஹா….

  //…சீதையை விட வில்லே பிரதானமென்று
  வில்லோடு ஓடிவிட்டான்.//
  ஆஹா….வரதட்சனையுடன் ஒரு கம்பிநீட்டல்!!…ஹாஹா

  //…கலியுக புகைபோக்கிகள்
  வில்லை தூக்கும் போதே எல்லொடிந்து போனார்கள்.//
  ஆஹா…TB patient-ஆஆஆ???

  //…சீதை,வில்லை ஒடித்தால் மட்டுமே மணக்க சம்மதம்..//
  ஓ..ஓ..ஓ.. வேலைக்குச் செல்லும் பெண் தான் பிடிக்குமோ அவருக்கு???….

  //கடைசியில் ஒர் நாள் அப்பழுக்கற்ற இராமன் வந்து
  வில்லையும் ஒடித்து சீதையின் கரத்தையும் பிடித்தான். //
  அப்பாடா ஒரு நல்ல வரன் அமைந்து விட்டது….

  //சீதை சினந்தாள்,
  இராவணனிடம் கூட புஷ்பகவிமானம் இருந்தது//
  “அடுத்தாத்து அம்புஜத்த பாத்தேளா” என்ற பல்லவி தானா எங்கும்????… அட கடவுளே! 😦

  அருமை சேவியர்!…. வாழ்த்துகள்!!!! 🙂

  Like

 2. /“அடுத்தாத்து அம்புஜத்த பாத்தேளா” என்ற பல்லவி தானா எங்கும்????… அட கடவுளே!

  அருமை சேவியர்!…. வாழ்த்துகள்!!!!
  //

  😀 நன்றி சகோதரி….

  Like

 3. அன்பின் சேவியர்

  இக்காலப் பெண்களுக்கு திருமணம் செய்வதில் உள்ள பல சிக்கலக்ள் அழகாக விவரிக்கப்பட்டிருக்கின்றன. கடைசியில் எல்லாம் அமைந்தாலும் திருப்தி என்று ஒன்று இல்லையே – என்ன செய்வது

  நல்ல் கற்பனையில் எழுந்த கவிதை

  நல்வாழ்த்துகள் சேவியர்

  Like

 4. /இக்காலப் பெண்களுக்கு திருமணம் செய்வதில் உள்ள பல சிக்கலக்ள் அழகாக விவரிக்கப்பட்டிருக்கின்றன. கடைசியில் எல்லாம் அமைந்தாலும் திருப்தி என்று ஒன்று இல்லையே – என்ன செய்வது

  நல்ல் கற்பனையில் எழுந்த கவிதை

  நல்வாழ்த்துகள் சேவியர்

  //

  மனமார்ந்த நன்றிகள். வருகைக்கும், கருத்துக்கும் !

  Like

 5. //Dear Xavier Anna,
  I am speechless.
  Fantastic. Very elegantly written.
  Awesome.//

  ரொம்ப நன்றி. இப்படி ஒரு கிளர்ந்தெழும் பாராட்டுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் எழுதலாம் ! 🙂

  Like

 6. dear xavier
  kavithai ok
  but why u pull raman and sethai?
  do u have dil to pull puppet with katheeja?

  hindus are E vayarkala?

  Like

 7. //ரொம்ப நன்றி. இப்படி ஒரு கிளர்ந்தெழும் பாராட்டுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் எழுதலாம் !
  //

  இப்படி ஒரு மனம் திறந்த பதிலுக்காக வாய் நிறையப் பாராட்டலாம். வலிக்கும் வரை கை குலுக்கலாம்.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s