மழைக் கவிதைகள்

1

 

 

 

 

பிரியமில்லா தம்பதியரையும்
குடைக்குள்
பிணைய வைக்கிறது
பிரியமான
மழை.

 

 

2

 

 

ஒழுகாத கூரையும்
நனையாத படுக்கையும்
பசிக்காத வயிறும்
இருந்தால்
ரசிக்க வைக்கும்
எல்லா மழையும்.

.

.

.

3
மழைத்துளி விழுந்து
மண்ணின் மணம் எழுந்தது
எழுதினேன்,
கூவத்தின் மணம் கிளம்பும்
சென்னையில் இருந்து கொண்டு.

.

.

.

 

 

 

 

வெப்பம் தணித்த மழை
கிளப்பி விடுகிறது
பன்றிக் காய்ச்சல்
பீதியை

 

.

.

5.
 

ஜலதோஷம் பிடிக்கிறது…
என்றாலும்
குழந்தைக்கு
நனைவதே பிடிக்கிறது !

.

.

6

ஒவ்வோர் மழையும்
சில விவசாயிகளை
அழ வைக்கிறது
சில விவசாயிகளைத்
தொழ வைக்கிறது !

 

.

.

.

 

  

7

ஒவ்வோர் மழையும்
ஏதோ ஓர்
மேகத்தைப் பிரிகிறது
ஏதோ ஓர்
மோகத்தைப் பிழிகிறது

.

.

 

8

அடுத்த அடி
மரணத்தின் மடியிலா ?
டிரெயினேஜ் பயத்தில்
பாதங்கள் பதறுகின்றன
முழங்காலளவு மூழ்கிய சாலையில்

.

.

 

9
 

செல்போனில்
சிக்னல் கிடைக்காத காதலர்களும்
டிவியில்
சீரியல் தெரியாமல் பெண்களும்.
பெய்யெனப் பெய்யும் மழையை
நிறுத்தாமல் வைகிறார்கள்.

 

.

.

10

 

முதல் மழையில் நனையாதே
சுகக்கேடு வரும்.
பாட்டியின் குரல்
இன்னும் ஒலிக்கிறது
ஒவ்வோர் முதல் மழை தரிசனத்திலும்.

 

.

.

.11
கூரை ஓட்டிலிருந்து
அருவியாய்க் கொட்டும்
மழையில் நனைந்த
அரைடிராயர் சுகம்
அடுக்குமாடி தேனீர் சன்னல்களில்
சுத்தமாய் இல்லை.

.

.

 

12

 

 

மழைத் துளியல்ல,

சோர்வின் வடுக்களைச்
அழுத்தித் துடைக்க
மேகப் பருத்தி நெய்து
இறக்கும்
மழைத் துணி !

பிடித்திருந்தால்… வாக்களிக்கலாமே….

13 comments on “மழைக் கவிதைகள்

  1. உங்களது கவிதைத்துளிகள்..
    எனது உள்ளங்களில் நிறைந்து.. நதியானது….
    நட்புடன்…
    மு.இளவரசு(கா.இராஜகுமார்) புதுச்சேரியிலிருந்து….

    Like

  2. //அடடா அடடா அருமையான் கற்பனையில் எழுந்த சிறந்த சொற்கள் நிறைந்த மனதை மகிழ்விக்கும் மழைக் கவிதை//

    ரொம்ப ரொம்ப நன்றிகள் ஐயா…

    Like

  3. அன்பின் சேவியர்

    மழையினைப் பற்றிய பல கவிதைகளில் – கற்பனை வளம் மிக்க இக்கவிதை என்னைக் கவர்ந்தது.

    இணையாத தமபதியினரையும் இணைக்கும் மழைக்குடை
    மழையை இரசிக்க இயலாத ஏழ்மை
    மழைத்துளி கிளப்பும் மண்ணின் வாசத்தினை நுகர விடாமல் தடுக்கும் கூவத்தின் ந்றுமணம்
    பன்றிக்காய்ச்சலா – டிரைனேஜ் பயமா -சிக்னலோ சீரியலோ கிடைக்காதோ – இளமைக்கால மழையில் கிடைத்த மகிழ்ச்சி இப்பொழுது எங்கே – எப்படி இருப்பினும் மேகம் நெய்த மழைத்துளி சோர்வினைத் துடைக்காதோ – சில் விவசாயிகளை அழ வைத்தாலும் பலரைத் தொழ வைக்கிறதே – மேகத்தைப் பிரியும் மழை மோகத்தைப் பிழிகிறதே –

    அடடா அடடா அருமையான் கற்பனையில் எழுந்த சிறந்த சொற்கள் நிறைந்த மனதை மகிழ்விக்கும் மழைக் கவிதை

    நன்று நன்று நல்வாழ்த்துகள் சேவியர்

    Like

  4. நன்றி சகோதரி. உங்கள் விரிவான பின்னூட்டங்கள் ரொம்பவே மனதுக்கு இதமாய் இருக்கின்றன 🙂

    Like

  5. //ஒழுகாத கூரையும்
    நனையாத படுக்கையும்
    பசிக்காத வயிறும் இருந்தால்
    ரசிக்க வைக்கும் எல்லா மழையும்.//

    மழை என்றால் எனக்குக் கொள்ளை ஆசை…. மிக மிக ரசிப்பேன்…
    ஆனால் உங்கள் இந்தப் பதிவு, என் நெஞ்சத்தினோரத்தில் வலியையும் நெருடலையும் ஏற்படுத்தியது….
    ஏழைகளின் வாழ்க்கையில் அவர்களால் ரசிக்கப்படுவது “கனவுகளும், கற்பனைகளும்” மட்டுமே என நினைக்கும் போது வலிக்கிறது!
    எல்லோர் மனங்களையும் படம்பிடிக்கும் உங்கள் பயணம் தொடரட்டும்!…

    //ஜலதோஷம் பிடிக்கிறது…என்றாலும்
    குழந்தைக்கு நனைவதே பிடிக்கிறது!//

    எனக்கும் தான்! 🙂

    //மழைத் துளியல்ல,

    சோர்வின் வடுக்களைச் அழுத்தித் துடைக்க
    மேகப் பருத்தி நெய்து இறக்கும் மழைத் துணி !//

    மழைத்”துளி” அல்ல….மழைத்”துணி” …
    ஆஹா….எப்படி, இப்படியெல்லாம் நினைக்கத் தோன்றுகிறது உங்களுக்கு?…. பிரமாதம்!!!
    வாழ்த்துகள் சேவியர்!

    Like

  6. Brother xavi.
    Last many years i had been sinner in so many things But still i am a sinner but not in so many things.
    I was saved by jesus of nazareth .But whenever i see something like this picture

    i afraid that i would be committed adultery.
    I am not saying i have no selfcontrol but whoever in presence of god,obey and faith in god will never temp by any worldly pleasures or evil things.
    So please don’t publish such these pictures which is prompt to do commit adultery.
    I am your brother . i am one read so many things in your http://xavierbooks.wordpress.com after read your sites i was rejoice with presence of god.
    that’s why jesus said “But I tell you that anyone who looks at a woman lustfully has already committed adultery with her in his heart”
    your name is xavier please brother saviour understand.

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.