கவிதை : நிலாச் சாயம்

 இன்னும்
வெள்ளை காயாத
நிலாச் சாயம்
என்
மொட்டை மாடி முழுதும்.

நிலவைத் தின்னும்
வேகத்துடன்,
வானில்
வெள்ளை மேகங்கள்
வறண்ட நாக்குகளோடு
அலைகின்றன.

யாரோ
இறுகக்கடித்ததால் தான்
அந்த
நிலவில் கன்னத்தில்
கருப்பு பதிந்திருப்பதாய்
இறந்து போன ஏதேனும்
ஓர் இதிகாசம்
எழுதியிருக்கக் கூடும்.

எதையும் காதில் வாங்காமல்,
எத்தனை முறை
போர்த்தி முடித்தாலும்
முரண்டு பிடித்து,
புரண்டு படுத்து
மேகப் போர்வைக்கு வெளியே
நழுவி விழுகிறது
அந்த
நிலாக் குழந்தை.

சூரியனின் சிவப்பு ஒளியை
உறிஞ்சிக் குடித்து
எப்படி
வெள்ளை ஒளியை
பிரசவித்து நகர்கிறது
இந்த பிள்ளை நிலா ?

கலையக் கலைய
புதிது புதிதாய்
வெள்ளைப் பூக்களை
எப்படி
அள்ளி விதைத்து நடக்கிறது
இந்த மேகச் செடிகள்.

செதுக்கி வைத்த
உருவம் இன்றி,
நிலைமாறி லைமாறி
சப்தமின்றி சிற்பம் செதுக்கி
வானில் தொங்கவிடுகிறதே
இந்த
வெள்ளை தேக மேகங்கள்.

இத்தனை மிருதுவாய்
இதயம் இருந்தால்
எப்படி இருக்கும் ?

ஆனாலும்
கர்ப்பமான கார் மேகமாய்
பாரத்தோடு ஈரமாவதையே
பார்த்து நடக்கிறதே
மானுடம்.

கவிதை எழுத
வந்தவனுக்கு
வானில் ஓர்
கவிதைத் தொகுப்பு.

கண்களை விலக்கி
கவிதையை கலைக்காமல்
இன்னும் அந்த
வெள்ளை இரவில்
விழித்துக் கிடக்கிறேன்.

என் கையில்
கவிதை வந்து
படுக்கக் காத்திருக்கும்
ஓர் வெள்ளைக் காகிதம்.

8 comments on “கவிதை : நிலாச் சாயம்

  1. //யாரோ இறுகக்கடித்ததால் தான்
    அந்த நிலவில் கன்னத்தில் கருப்பு பதிந்திருப்பதாய்
    இறந்து போன ஏதேனும் ஓர் இதிகாசம் எழுதியிருக்கக் கூடும்.//

    ஆஹா….”நச்” என்ற உண்மை வார்த்தைகள்…யதார்த்தம் (“இறந்துபோன இதிகாசம்”)….

    //மேகப் போர்வைக்கு வெளியே நழுவி விழுகிறது
    அந்த நிலாக் குழந்தை.//

    அருமையான கற்பனை!….

    //இத்தனை மிருதுவாய் இதயம் இருந்தால் எப்படி இருக்கும் ?//

    அதனால்தான் நொந்து நூலாய்ப் போகிறது! 😦

    //என் கையில் கவிதை வந்து படுக்கக் காத்திருக்கும்
    ஓர் வெள்ளைக் காகிதம்.//

    அடடா…. எந்த வரிகளைப் பாராட்ட???????? 🙂 ….
    வாழ்த்துகள் சேவியர்!

  2. //யாரோ
    இறுகக்கடித்ததால் தான்
    அந்த
    நிலவில் கன்னத்தில்
    கருப்பு பதிந்திருப்பதாய்
    இறந்து போன ஏதேனும்
    ஓர் இதிகாசம்
    எழுதியிருக்கக் கூடும்//

    இறந்த இதிகாசத்தில் எழுதியதையும்
    ஊகிக்க கவிஞனாலேயே கூடும்.

  3. ////யாரோ
    இறுகக்கடித்ததால் தான்
    அந்த
    நிலவில் கன்னத்தில்
    கருப்பு பதிந்திருப்பதாய்
    இறந்து போன ஏதேனும்
    ஓர் இதிகாசம்
    எழுதியிருக்கக் கூடும்//

    இறந்த இதிகாசத்தில் எழுதியதையும்
    ஊகிக்க கவிஞனாலேயே கூடும்.
    //

    நன்றி கவி🙂

  4. வாங்க ஷாமா… உங்களைப் பார்த்து ரொம்ப நாளாச்சேன்னு நினைச்சேன். இரண்டு நாளா வந்து வட்டியும் முதலுமா வாசிச்சு பின்னூட்டமும் இட்டுட்டீங்க.. ரொம்ப நன்றி🙂

  5. அன்பின் சேவியர்

    கற்ப்னைக் குதிரை அதன் வேகத்தின் உச்சத்தில் பறக்கிறது. நிலா மொட்டை மாடியில் வெள்ளைச் சாயம் பூசுகிறது – நிலவைத் தின்ன மேகங்கள் அலைகின்றன – யாரோ முத்தம் கொடுக்கிறேன் என வெறித்தனமாக கடித்ததன் கறுப்பு மிச்சம் – போர்த்திப் போர்த்தி இருந்தாலும் நழுவி நழுவி பிறக்கும் நிலவு மழலை – சிவப்பு ஒளியினை உறிஞ்சி வெள்ளை ஒளியினி பிரசவிக்கும் நிலா – கலைக்கக் கலைக்க வெண்பூக்களை விதைக்கும் மேகங்கள் – இத்தனையும் இரசிக்க இங்கு ஒரு கவிஞன் – இரவினில் மொட்டை மாடியில் படுத்து வானில் நடக்கும் நிக்ழவுக்ளைக் காணும் கவிஞன் எழுதிய அழகுக் கவிதை

    நல்வாழ்த்துகள் சேவியர்

  6. //அன்பின் சேவியர்

    கற்ப்னைக் குதிரை அதன் வேகத்தின் உச்சத்தில் பறக்கிறது. நிலா மொட்டை மாடியில் வெள்ளைச் சாயம் பூசுகிறது – நிலவைத் தின்ன மேகங்கள் அலைகின்றன – யாரோ முத்தம் கொடுக்கிறேன் என வெறித்தனமாக கடித்ததன் கறுப்பு மிச்சம் – போர்த்திப் போர்த்தி இருந்தாலும் நழுவி நழுவி பிறக்கும் நிலவு மழலை – சிவப்பு ஒளியினை உறிஞ்சி வெள்ளை ஒளியினி பிரசவிக்கும் நிலா – கலைக்கக் கலைக்க வெண்பூக்களை விதைக்கும் மேகங்கள் – இத்தனையும் இரசிக்க இங்கு ஒரு கவிஞன் – இரவினில் மொட்டை மாடியில் படுத்து வானில் நடக்கும் நிக்ழவுக்ளைக் காணும் கவிஞன் எழுதிய அழகுக் கவிதை
    //

    சிலிர்ப்பூட்டும் கருத்துக்கு நன்றிகள் ஐயா…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s