கவிதை : ஒரு துளித் தனிமை

 

நேசமாய்த் தான் இருந்தேன்.

ஒவ்வோர் இதழ்களிலும்
மெல்லியத் தழுவல்,
செடியின்
கால்களுக்குக் காயம் தராத
தண்ணீர் பாசனம்.

ஆனாலும்
பூக்கள் புகார் செய்ததில்
என்
தோட்டக்காரன் வேலை
தொலைந்து போய் விட்டது.

எந்தச் சிறகையும்
சிக்கெடுக்கும் நேரத்திலும்
சிதைத்ததில்லை.
எந்த அலகிலும்
முத்தம் இட மறந்ததில்லை.

இருந்தாலும்
அத்தனை பறவைகளும்
என்னை விட்டுப் பறந்து
எங்கோ போய்விட்டன.

நீந்தி வந்து
இரைகொத்தும் என்
நீச்சல் குள மீன்கள் கூட
சத்தமின்றித்
தோணியேறி
அடுத்த ஆற்றுக்கு
அவசரமாய் சென்று விட்டன.

என்னிலிருந்து
நான் பிரிந்த
தனிமை எனக்கு.

என் கிளைகள் எல்லாம்
காய்ந்தாலும்
இன்னும்
மிச்சமிருக்கிறது என்னிடம்
மூன்று தலைமுறைக்கான
விதைகள்.

14 comments on “கவிதை : ஒரு துளித் தனிமை

  1. //அழகான…. இதமான….நேசமான…. கவிதை! சேவியர்.
    ஆனால் தனிமையின் ரணங்கள் வலிக்கின்றது உங்கள் கவிதையில்!//

    நன்றி ஷாமா… தொடர்ந்த வருகைக்கு…

    Like

  2. //நல்லதொரு அருமையான மனநிலையில் எழுதியிருக்கிறீர்கள் சேவியர்.
    உங்கள் கவிதைகளை நீண்ட கால்மாக பின்னூட்டமிடாமல் வாசித்து வருகிறேன். ஏனோ இந்த கவிதைக்கு பின்னூட்டமிட வேண்டுமென்று தோன்றியது.

    வாழ்த்துக்கள்
    //

    மனமார்ந்த நன்றிகள். உங்கள் வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்கும் 🙂

    Like

  3. /////என் கிளைகள் எல்லாம்
    காய்ந்தாலும்
    இன்னும்
    மிச்சமிருக்கிறது என்னிடம்
    மூன்று தலைமுறைக்கான
    விதைகள்///

    அண்ணே, இங்கே நிக்கிறீங்க….
    /

    நன்றி தம்பி 🙂 அப்புறம் நலமா ?

    Like

  4. //அன்பின் சேவியர்

    அருமையான கவிதை – எவ்வளவு தான் அன்பு பாராட்டினாலும் வெறுப்பவர்கள் நிறைந்த உலகம் இது. இருப்பினும் நாம் நம் கடமையைச் செய்வோம் என அன்பு பாராட்டுவது நமது பிறவிக்குணம்

    நல்ல சிந்தனையில் உருவாகிய நல்ல கவிதை
    //

    நன்றிகள்…. அடிக்கடி வாருங்கள். உங்கள் வரவில் தளமே ஜகஜோதியாகிறது 🙂

    Like

  5. அன்பின் சேவியர்

    அருமையான கவிதை – எவ்வளவு தான் அன்பு பாராட்டினாலும் வெறுப்பவர்கள் நிறைந்த உலகம் இது. இருப்பினும் நாம் நம் கடமையைச் செய்வோம் என அன்பு பாராட்டுவது நமது பிறவிக்குணம்

    நல்ல சிந்தனையில் உருவாகிய நல்ல கவிதை

    நல்வாழ்த்துகள் சேவியர்

    Like

  6. ///என் கிளைகள் எல்லாம்
    காய்ந்தாலும்
    இன்னும்
    மிச்சமிருக்கிறது என்னிடம்
    மூன்று தலைமுறைக்கான
    விதைகள்///

    அண்ணே, இங்கே நிக்கிறீங்க….

    Like

  7. நல்லதொரு அருமையான மனநிலையில் எழுதியிருக்கிறீர்கள் சேவியர்.
    உங்கள் கவிதைகளை நீண்ட கால்மாக பின்னூட்டமிடாமல் வாசித்து வருகிறேன். ஏனோ இந்த கவிதைக்கு பின்னூட்டமிட வேண்டுமென்று தோன்றியது.

    வாழ்த்துக்கள்.

    Like

  8. அழகான…. இதமான….நேசமான…. கவிதை! சேவியர்.
    ஆனால் தனிமையின் ரணங்கள் வலிக்கின்றது உங்கள் கவிதையில்!

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.