கவிதை : எனக்கும், உனக்கும்….

வெற்றிகள் உனக்கு
சிற்பங்கள் பரிசளிக்கலாம்
ஆனால்
தோல்விகள் மட்டுமே உனக்கு
உளிகள் வழங்கும்
என்பதை உணர்ந்து கொள்.

ழை
நதி
விதை
விழுவதால் எழுபவை இவை.
நீ மட்டும் ஏன்
விழுந்த இடத்தில்
உனக்கு நீயே
கல்லறை கட்டுகிறாய்.

ன் சுவடுகள்
சிறை பிடிக்கப்படலாம்
உன் பாதைகள்
திருடப்படலாம்
பயப்படாதே
பாதங்களைப் பாதுகாத்துக் கொள்.

நீ
வெற்றி பெற்றதாய் நினைக்கும்
பல இடங்களில்
தோல்வி தான் அடைந்திருப்பாய்
நீ
தோற்றுப் போனதாய் நினைக்கும்
பல தருணங்களில்
வெற்றி தான் பெற்றிருப்பாய்
உணர்ந்து கொள்
நீ
தோல்வியடைந்தது வாழ்க்கையிலல்ல
புரிதலில்.

ன் வழிகளெங்கும்
தூண்டில்கள் விழித்திருக்கலாம்
நீந்த முடியாதபடி
வலைகள் விரித்திருக்கலாம்
தண்ணீராய் மாறி தப்பித்துக் கொள்
தங்கமீனாய்
தான் இருப்பேனென
தர்க்கம் செய்யாதே !

காட்டாறு கரை புரண்டு வருகிறதா
நாணலாய் மாறு
புயல்க்காற்று புறப்படுகிறதா
புல்லாய் மாறு
தொட்டாச் சிணுங்கியாய் இருப்பதும்
பச்சோந்தியாய் மாறுவதும்
தப்பில்லை
மனித நேயத்தை
நீ
மறுதலிக்காத வரை !

9 comments on “கவிதை : எனக்கும், உனக்கும்….

  1. //உமக்கு நீர்தான் சமம்!

    கொன்னு கொலையா பிச்சுட்டிங்க அய்யா!

    இன்னும் இன்னும் எதிர்பார்த்து!

    //

    நன்றி நண்பரே…

    Like

  2. //வாழ்க்கையென்பதே பொறுமையும்…பொறுத்தலும்…வளைந்து கொடுத்தலுமே!
    அப்போதுதான் வாழ்க்கை மகிழ்வாகிறது….
    அதில் தான் மனிதநேயமும் மறுதலிக்கப்படாமல் காக்கப்படுகிறதென நினைக்கிறேன்….//

    பளிச் என சொல்லியிருக்கிறீர்கள்.
    //

    எவ்விடையம் சொல்லினும்,
    கடைசியில் முத்தாய்ப்பாய் நல்லதொரு செய்தியையும் கொடுத்துச் செல்வீர்கள்!
    நன்றி சேவியர்//

    நன்றி ஷாமா 🙂 விரிவான கருத்துக்கும், வருகைக்கும்.

    Like

  3. //சேவியர்,

    குறுங்கவிதைகளை மிக அருமையாக கைவரப்பெற்றிருக்கிறீர்கள். அனைத்து கவிதைகளும் நல்லதொரு உத்வேகத்தை தருகின்றன.

    முதல் கவிதையின் கரு ஏற்கனவே பலரால் எழுதப்பட்டதுபோல் எனக்கு தோன்றுகிறது
    //

    நன்றி கிருஷ்ணசாமி. வருகைக்கும், கருத்துக்கும் நன்றிகள்.

    Like

  4. //உமக்கு நீர்தான் சமம்!

    கொன்னு கொலையா பிச்சுட்டிங்க அய்யா!

    இன்னும் இன்னும் எதிர்பார்த்து!

    (பின் குறிப்பு: கொஞ்சம் வேலை காரணமாக வர இயலவில்லை)

    /

    ரொம்ம்ம்ம்ப நன்றிங்க 😀

    Like

  5. //உன் வழிகளெங்கும்
    தூண்டில்கள் விழித்திருக்கலாம்
    நீந்த முடியாதபடி
    வலைகள் விரித்திருக்கலாம்
    தண்ணீராய் மாறி தப்பித்துக் கொள்
    தங்கமீனாய்
    தான் இருப்பேனென
    தர்க்கம் செய்யாதே !//

    உமக்கு நீர்தான் சமம்!

    கொன்னு கொலையா பிச்சுட்டிங்க அய்யா!

    இன்னும் இன்னும் எதிர்பார்த்து!

    (பின் குறிப்பு: கொஞ்சம் வேலை காரணமாக வர இயலவில்லை)

    Like

  6. சேவியர்,

    குறுங்கவிதைகளை மிக அருமையாக கைவரப்பெற்றிருக்கிறீர்கள். அனைத்து கவிதைகளும் நல்லதொரு உத்வேகத்தை தருகின்றன.

    முதல் கவிதையின் கரு ஏற்கனவே பலரால் எழுதப்பட்டதுபோல் எனக்கு தோன்றுகிறது.

    Like

  7. //தோல்விகள் மட்டுமே உனக்கு உளிகள் வழங்கும்//

    அருமை சேவியர்!…..
    ஆமாம்…. தோல்வி எம் வாழ்வைச் சிதைப்பதில்லை….
    மாறாக உளி கொண்டு செதுக்குகிறது!…….

    //தோல்வியடைந்தது வாழ்க்கையிலல்ல, புரிதலில்.//

    ஆஹா…..உண்மை!……..

    //தண்ணீராய் மாறி தப்பித்துக் கொள்//

    நல்ல கற்பனை வளம்!……..

    //காட்டாறு கரை புரண்டு வருகிறதா நாணலாய் மாறு
    புயல்க்காற்று புறப்படுகிறதா புல்லாய் மாறு
    தொட்டாச் சிணுங்கியாய் இருப்பதும் பச்சோந்தியாய் மாறுவதும்
    தப்பில்லை
    மனித நேயத்தை நீ மறுதலிக்காத வரை !//

    வாழ்க்கையென்பதே பொறுமையும்…பொறுத்தலும்…வளைந்து கொடுத்தலுமே!
    அப்போதுதான் வாழ்க்கை மகிழ்வாகிறது….
    அதில் தான் மனிதநேயமும் மறுதலிக்கப்படாமல் காக்கப்படுகிறதென நினைக்கிறேன்….
    எவ்விடையம் சொல்லினும்,
    கடைசியில் முத்தாய்ப்பாய் நல்லதொரு செய்தியையும் கொடுத்துச் செல்வீர்கள்!
    நன்றி சேவியர்!

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.