கவிதை : இதுவும் பழசு.

 

நான்
இப்போது எழுத நினைத்த
கவிதையை
யாரேனும்
எழுத நினைத்திருக்கலாம்.

நான்
நேற்று எழுதிய கவிதையை
யாரேனும்
என்றோ எழுதியிருக்கலாம்.

யாரும் எழுதவில்லை என
நான்
வார்த்தைகளால்
கோத்து வைத்த கவிதையை,
என்றேனும்
ஓர் செல்லரித்த ஓலைச் சுவடி
சுமந்து கனத்திருக்கலாம்.

வெளிக்காட்டாத
டைரிகள் ஏதேனும்
அவற்றை
ஒலிபரப்பு செய்யாமல்
ஒளித்து வைத்திருக்கலாம்.

இல்லையேல்,
மனசுக்குள் மட்டுமாவது
யாரேனும்
முனகிப் பார்த்திருக்கலாம்.

எனக்கே எனக்கான
என்
அனுபவக் கவிதைகள் கூட,
ஏதேனும்
கிராமத்துத் திண்ணைகள்
அனுபவித்து உரையாடியிருக்கலாம்.

எதுவும்
புதிதென்று என்னிடம்
எதுவுமே இல்லை.

எல்லாமே
நேற்றின் நீட்சிகள்,
இல்லையேல்
துண்டிக்கப்பட்ட
கடந்தகாலக் காற்றின்
இணைப்புகள் மட்டுமே.
0

4 comments on “கவிதை : இதுவும் பழசு.

  1. //நம்மை தான்டி செல்லும் அத்தனையும் இரந்தகாலம் ஆனால் நாம் மட்டும் நிகழ்காலதிலும் இரந்தகால சுவடியுடன்
    என்பதை அழகாக‌ சொல்கிர‌து இன்த‌ க‌விதை!
    /

    நன்றி சலீஹா, வருகைக்கும் கருத்துக்கும்.

    Like

  2. நம்மை தான்டி செல்லும் அத்தனையும் இரந்தகாலம் ஆனால் நாம் மட்டும் நிகழ்காலதிலும் இரந்தகால சுவடியுடன்
    என்பதை அழகாக‌ சொல்கிர‌து இன்த‌ க‌விதை!
    saleeha

    Like

  3. //காற்று தவழ்ந்து வருவதை நிறுத்தும்வரை….
    பூக்களெல்லாம் மலர்வதை நிறுத்தும்வரை….
    கடலலை கரையை முத்தமிடுவதை நிறுத்தும்வரை….
    நிலவுமகள் வானுலா வருவதை நிறுத்தும்வரை…….
    மாலைச்சூரியன் கடல்கன்னி மடிவிழுவதை நிறுத்தும்வரை…..
    ஒருவரின், “நேற்று”..”இன்று”..”நாளைய” எண்ணங்கள் இன்னொருவரில் பிரதிபலித்துக் கொண்டேயிருக்கும்,
    இயற்கை எம்மோடு இணைந்திருப்பதால்!//

    சூப்பர்…. 🙂

    Like

  4. அருமை சேவியர்!….
    அழகாகக் கூறியிருக்கிறீர்கள்!…..

    காற்று தவழ்ந்து வருவதை நிறுத்தும்வரை….
    பூக்களெல்லாம் மலர்வதை நிறுத்தும்வரை….
    கடலலை கரையை முத்தமிடுவதை நிறுத்தும்வரை….
    நிலவுமகள் வானுலா வருவதை நிறுத்தும்வரை…….
    மாலைச்சூரியன் கடல்கன்னி மடிவிழுவதை நிறுத்தும்வரை…..
    ஒருவரின், “நேற்று”..”இன்று”..”நாளைய” எண்ணங்கள் இன்னொருவரில் பிரதிபலித்துக் கொண்டேயிருக்கும்,
    இயற்கை எம்மோடு இணைந்திருப்பதால்!

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.