கவிதை : எங்கே போயிற்றோ ?

 

ஒன்றாம் வகுப்பில்
நான் துடைத்துத் துடைத்தே
உடைந்து போன என்
சட்டம் போட்ட சிலேட்.

கர்ணனா – கும்பகர்ணனா
பேச்சுப் போட்டியில்
பரிசளிக்கப்பட்ட
அந்த பச்சை நிறப் புத்தகம்.

அந்த
முதல் கவிதை பிரசுரமான
பழைய காகிதம்,

என் கல்லூரி கால
கையெழுத்துப் பத்திரிகையின்
முதல் பிரதி,

பரிசு வாங்கித் தந்த
என்
நீளமான கவிதைகள்,

அத்தனை பக்கங்களிலும்
கிறுக்கி வைத்த
என் கால்நூற்றாண்டு
டைரிகள்,

பாட்டி
பிரியும் முன் பிரியமாய்
வாங்கித் தந்த
கை நீளச் சட்டை,

எதுவும்,
எதுவுமே என்னிடம் இல்லை.
கடந்து போன
காலத்தின் கால்வாய்களில்
அவை
கரைந்தே போயின.

நினைத்துப் பார்க்கும் போதெல்லாம்
மனசு
வினாடி நேரம்
நின்று விட்டுத் தான்
நிதானமாகிறது.

என்ன சொல்வது,
எங்கேயோ தொலைத்துவிட்டேன்
கடந்த மாதம்
புது மனைவி
முதன் முதலாய் எனக்குத் தந்த
பிறந்த நாள் வாழ்த்தை.

11 comments on “கவிதை : எங்கே போயிற்றோ ?

  1. //இந்த மனுஷன் சரியான ஆட்டோகிராஃப் பார்ட்டிப்பா… அடிக்கடி பழைய விஷயங்கள ஞாபகப் படுத்திடுறார்… அசை போடுறதும் சந்தோஷம் தானே…. //

    ஐயாவுக்கு நிறைய ஆட்டோகிராஃப் இருக்கு போல, அசை போடறாராம்ல….. 😉

    Like

  2. இந்த மனுஷன் சரியான ஆட்டோகிராஃப் பார்ட்டிப்பா… அடிக்கடி பழைய விஷயங்கள ஞாபகப் படுத்திடுறார்… அசை போடுறதும் சந்தோஷம் தானே…. அதனால சேவியர தாராளமா பொறுத்துக்கலாம் ஹி ஹி 🙂

    Like

  3. //அடடடாடாடாடா…. இங்க தான் நிற்கிறார் சேவியர், “அவரும், அவர் மறதியும்”…. //

    என்ன பண்ண சகோதரி. ஆனாலும், நல்ல வேளை மறந்துட்டேன் என நினைக்க வைக்கின்றன சில நிகழ்வுகள் 😀

    Like

  4. //என்னையும் கொஞ்சம் தாளட்டிவிட்டீர்கள் பழைய நினைவுகளில்.

    மீண்டுமான வாழ்த்துக்களுடனும்
    நன்றிகளுடனும்
    //

    நன்றிகள் மறவன் 🙂

    Like

  5. //அந்த முதல் கவிதை பிரசுரமான பழைய காகிதம்//
    அநேகமான கவிஞர்களின் முதற்பிரசவ கவிதைகள் பழைய காகிதத்தில் தான்….. கொடுத்துவைத்த பழைமை! 😉

    //எதுவும், எதுவுமே என்னிடம் இல்லை.
    கடந்து போன காலத்தின் கால்வாய்களில்
    அவை கரைந்தே போயின.//
    திரும்பிப் பார்க்கையில் நெஞ்சில் கொஞ்சம் ஏக்கத்துடனான சிறு வலி! ம்ம்ம்ம்… 😦

    //என்ன சொல்வது,
    எங்கேயோ தொலைத்துவிட்டேன் கடந்த மாதம் புது மனைவி
    முதன் முதலாய் எனக்குத் தந்த பிறந்த நாள் வாழ்த்தை.//
    அடடடாடாடாடா…. இங்க தான் நிற்கிறார் சேவியர், “அவரும், அவர் மறதியும்”…. ஹா…ஹா…ஹா… 🙂

    Like

  6. என்னையும் கொஞ்சம் தாளட்டிவிட்டீர்கள் பழைய நினைவுகளில்.

    மீண்டுமான வாழ்த்துக்களுடனும்
    நன்றிகளுடனும்,
    V.P.மறவன்.

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.