கவிதை : பிரிவுகள் பிரியத்துக்குரியவை !

பிரிவுகளை கொஞ்சம்
பிரியமாய் நேசியுங்களே.

வண்டுத் தேரேறி
பிரிந்து செல்லாத
மகரந்தத் துகள்களுக்கேது
மறுபிறப்பு ?

மேகத்தின் தேகம் விட்டு
பிரிய மறுக்கும்
ஈரத் துளிகளுக்கு
இங்கேது சிறப்பு ?

விதைகளை விட்டு
வெளியேறட்டும் கிளைகள்,

மூங்கிலை விட்டு
வெளியேறட்டும் இசைகள்,

பாறைவிட்டு
வெளிக்குதிக்கட்டும் சிலைகள்,

இதயம் விட்டு
வெளித்தாவட்டும் கலைகள்

தடுக்காதீர்கள்.

முட்டையோடான
பிரிவு
சிறகுச் சரித்திரத்தின்
முதல் சுவடு.

பிரியவிடுங்கள்,
இல்லையேல் பிரித்துவிடுங்கள்,
தொப்புள் கொடியை
யாரும்
தொடரவிடுவதில்லையே !

பிரிவு என்பதே
உறவுக்காகத் தான்,
ஆரம்பப் பாடம்
கருவறை வாசலிலேயே
கண்விழிக்கிறதே.

13 comments on “கவிதை : பிரிவுகள் பிரியத்துக்குரியவை !

  1. காதல் செய்ய தொடங்குபாவனே
    கவிஞன் ஆகிறான்.,.!
    ஏனென்றால்
    அவன் காதலித்தது பெண்னை அல்ல,?
    கவிதையை,

    Liked by 1 person

  2. /கவிதைப் பிரியன் பேசுகிறேன்.

    உண்மையில் இந்த கவிதை எனக்காகவே எழுதியதாக திருடிக் கொள்கிறேன்.
    எந்த தவறும் செய்யாத, அவன் மீது தவறே இல்லாத ஒரு விபத்தில், மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த என் நண்பனின் உயிர் நேற்றுத்தான் பிரிந்தது.
    எதுவும் அசையாமல் கண்ணில் பட்ட எனக்கு, கவிதை எழுதவும் மறந்த எனக்கு, எல்லாம் அமைதியான எனக்கு, இந்த கவிதை மட்டுமே எனக்கே எனக்கானதாய் தோன்றுகிறது. எடுத்துக் கொள்கிறேன் இதயத்தில். மன்னியுங்கள் சேவியர்
    //

    ஒரு நிமிடம் மனம் ஸ்தம்பிக்கிறது 😦

    Like

  3. கவிதைப் பிரியன் பேசுகிறேன்.

    உண்மையில் இந்த கவிதை எனக்காகவே எழுதியதாக திருடிக் கொள்கிறேன்.
    எந்த தவறும் செய்யாத, அவன் மீது தவறே இல்லாத ஒரு விபத்தில், மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த என் நண்பனின் உயிர் நேற்றுத்தான் பிரிந்தது.
    எதுவும் அசையாமல் கண்ணில் பட்ட எனக்கு, கவிதை எழுதவும் மறந்த எனக்கு, எல்லாம் அமைதியான எனக்கு, இந்த கவிதை மட்டுமே எனக்கே எனக்கானதாய் தோன்றுகிறது. எடுத்துக் கொள்கிறேன் இதயத்தில். மன்னியுங்கள் சேவியர்.

    Like

  4. //பிரிவுகளை கொஞ்சம்
    பிரியமாய் நேசியுங்களே.//

    பிரிவுகளைக் கொஞ்சம்
    பிரியமாய் “யோசிக்கிறேன்” :S
    அற்புத சிந்தனை!….அழகிய கவிதை!!…
    “உறவு என்றொரு சொல்லிருந்தால் பிரிவு என்றொரு பொருளிருக்கும்”… ம்..ம்..ம்..ம்.. இயற்கையின் நியதி!…. 😦

    Like

  5. இந்த மாதிரி url எல்லாம் கேட்டா … நான் அந்த பதிவுக்கு பின்னூட்டம் போட மாட்டேங்க..

    ஆனா உங்க கவித நலா இருக்குன்னு சொல்ல தோணுச்சு..

    தொடரவும் 🙂

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.