கலர் கலராய்
வர்ணம் உடுத்திய
மண் பாண்டத்தில்
நுரையாய்ப் பொங்கியது
இலவம் பஞ்சு.
தெர்மோக்கோல் வனப்பில்
மஞ்சள் நிற மினுக்கில்
ஹேப்பி பொங்கல்
சொன்ன
ஹைடெக் கதவின் முன்
சில
ஹேப்பி பெண்கள்.
“வாட்ஸ் போன்கல்”
கடித்துத் துப்பிய
கிளையண்டுக்கு
மாட்டைப் பற்றியும்
மாட்டுச் சாணத்தைப் பற்றியும்
சிரிக்கச் சிரிக்க கான்பரன்ஸினர்
ஆஃப்ஷோர் மேனேஜர்கள்.
தலைப் பொங்கல்
நாலு நாள் லீவ் வேணும்
தலையைச் சொறிந்தவர்களுக்கு
மாட்டுப் பார்வையே
மிஞ்சியது.
ஹேப்பி பொங்கல் guys
டவர்ல தண்ணி ஊத்தி
கொண்டாடுவோம்
மின்னஞ்சல்கள் பறந்தன.
நாளைக்கு நைஸ் பிலிம்யா…
ஈவ்னிங் சன் டீவில
கிளிகள் கிசுகிசுத்துப் பறந்தன.
டவுன்லோட் படம் ஒன்று
டெஸ்க் டாப்பில்
பொங்கல் வாழ்த்து சொன்னது.
மின்னஞ்சல்கள்
டிஜிடல் கரும்பை வினியோகம் செய்தன.
எத்தனை பேருக்குத் தெரியுமோ
பச்சரிசி வாங்க
காசில்லையே என
மடி தடவிக் கவலைப்படும்
கிராமத்து ஜீவனின் பொங்கல் கவலை !
ஃ
பொங்கல் நல்வாழ்த்துக்கள்….
பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்
LikeLike
//எத்தனை பேருக்குத் தெரியுமோ
பச்சரிசி வாங்க காசில்லையே என
மடி தடவிக் கவலைப்படும்
கிராமத்து ஜீவனின் பொங்கல் கவலை !//
இதைப் படித்ததும் எனக்கு ஞாபகம் வந்த பாடல்:
“உன்னைக் கண்டு நான் வாட
என்னைக் கண்டு நீ வாட
கண்ணீரும் கதை சொல்லும் தீபாவளி”
உழவர் திருநாளிலே,
திருநாட்கள் பொருளுடையதாக மாறவேண்டுமாயின்,
“ஜாதி” கொடுமைகளை ஒழித்து,
“உயர்ந்தவர்”…”தாழ்ந்தவர்” பாகுபாடுகளை அகற்றி,
“எல்லோரும் ஒருவரே” எனும் சிந்தனையை முதலில் வளர்த்திடுவோம்…
எல்லோர் வாழ்விலும் இனிமை பொங்க
என் இனிய பொங்கல் வாழ்த்துகள்!
LikeLike
எத்தனை பேருக்குத் தெரியுமோ
பச்சரிசி வாங்க
காசில்லையே என
மடி தடவிக் கவலைப்படும்
கிராமத்து ஜீவனின் பொங்கல் கவலை !
—Really superb
LikeLike
நன்றி கார்த்திகேயன் 🙂
LikeLike
நன்றி ஷாமா…. 🙂
LikeLike
நன்றி திகழ்..
LikeLike
பொங்கல் வாழ்த்து
LikeLike
நன்றி கனீஷ்…
LikeLike
நாம் நமக்கான தமிழ் அடையாளங்களை தொலைத்து விட்டோம். பொங்கல் விழா, சித்திரைத் திருநாள் விழாக்களின் மேன்மைகளும் பெருமைகளும் இப்போது உள்ள என் போன்ற தலைமுறைகளுக்கு அதிகம் தெரியாமல் போய் விட்டது.
பொங்கல் நாள் அன்று வெள்ளை வேட்டி சட்டை உடுத்தி சூரிய உதயத்திற்கு முன்பே தோட்டத்தில் ஈசான்ய மூலையில் காப்பு கட்டி விட்டு வருவது எல்லாம் ஒரு நல்ல அனுபவம்.
இனி என்ன டெக்னாலஜி காலத்தில் மேற்குலகத்தின் திருவிழாக்கள்தான்தான் இங்கு கொண்டாடப்படும். தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் எல்லாம் கிராம விழாக்களில் கரகாட்டம், மாடாட்டம், சிலம்பாட்டம், புலியாட்டம் என நிறைய இருக்கும். இதை எல்லாம் நான் கூட பார்த்து இருக்கிறேன். ஆனால் இப்போது எல்லாம் பார்க்க முடிவது இல்லை. எல்லாம் மாறி விட்டது.
LikeLike
செல்வகுமார் அற்புதமாகச் சொன்னீங்க ! நன்றி !
LikeLike