கவிதை : பூவல்ல, பூவல்ல, பெண் அவள் !

தளிர்களில் தழுவலுக்குள்
அரும்பாய்
ஆரம்பித்தலின் போது
ஒரு நிறம்.

மெல்ல மெல்ல
அரும்பின்
கரையுடைத்து
மொட்டாய் மாறினால்
புது நிறம்.

மொட்டின்
கதவுடைத்து
மெல்ல
இதழ் விரித்தலில்
வேறோர் நிறம்.

முழுதாய் மலந்த
காலையிலும்
சோர்வுற்றுச் சற்றே
தலை கவிழ்ந்த மாலையிலும்
கூட
நிறங்கள் மாறி மாறி.

நீ தானே
சொன்னாய்
நான் பூவென்று.

பின் ஏன்
என்
நிறமாற்றங்களை மட்டும்
மரபுக்கு மாறானது
என்கிறாய் ?

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்…

22 comments on “கவிதை : பூவல்ல, பூவல்ல, பெண் அவள் !

  1. அன்பின் இர்ஃபான். உங்களுடைய கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள். உங்களைப் போன்றவர்களின் வாழ்த்துகள் தான் என்னை வாழ வைக்கிறது. நன்றிகள்

    Like

  2. அன்புள்ள சேவியர் “அன்னை” என்ற தங்களின் பதிப்பு வரிக்குவரி என்னை மெய்சிலிர்க வைத்து விட்டது. வளர்க! உங்கள் கவிதை திரன் வாழ்துக்களுடள் R.V.இர்பான்…. திருவள்ளூர்

    Like

  3. தளிர்களில் தழுவலுக்குள்
    அரும்பாய்
    ஆரம்பித்தலின் போது
    ஒரு நிறம்.

    மெல்ல மெல்ல
    அரும்பின்
    கரையுடைத்து
    மொட்டாய் மாறினால்
    புது நிறம்.

    மொட்டின்
    கதவுடைத்து
    மெல்ல
    இதழ் விரித்தலில்
    வேறோர் நிறம்.

    முழுதாய் மலந்த
    காலையிலும்
    சோர்வுற்றுச் சற்றே
    தலை கவிழ்ந்த மாலையிலும்
    கூட
    நிறங்கள் மாறி மாறி.

    நீ தானே
    சொன்னாய்
    நான் பூவென்று.

    பின் ஏன்
    என்
    நிறமாற்றங்களை மட்டும்
    மரபுக்கு மாறானது
    என்கிறாய் ?

    Like

  4. பெண்ணுக்குள் பூவின் நிறமாற்றங்கள்…..
    அடடா… எங்கேயோ செல்கிறது உங்கள் கற்பனை…. வாழ்த்துகள் சேவியர்!

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.