கவிதை : வரங்கள், தேவதைக் கரங்கள்…


எதிர்ப்பில்லாத காதலை
நான் பார்த்ததில்லை.

மண்ணுக்கும் வேருக்கும்
இருக்கும் இறுக்கம்
வேலிகளுக்கு புரிவதில்லை.

பலரும்
பயம் கொள்வதெல்லாம்
பார்வையாளர்களைப்
பார்த்துத் தான்.

நான் மகிழ்கிறேன்.

உன்

நேசம் பெய்யும்
நெஞ்சுக் கூட்டில்
ஒதுங்க முடிந்ததில்,
உண்மையாகவே மகிழ்கிறேன்.

இன்றுவரை என் இதயத்தின் ஆழத்தை
உனக்குக் காட்டியதில்லை.
உன்னைப் பற்றிய என் கனவுகளை
உனக்குள்
ஒளிபரப்பு செய்ததுமில்லை.

ஆனாலும் உனக்குத் தெரியும்.
நான் உன்
நிழலைக் கூட காதலிக்கிறேன்.

என் ரத்தத்தில்
சிவப்பு இரத்த அணுக்களை விட
உன்
நினைப்பு அணுக்கள் தான் அதிகம்.

என் கண்களில்
நீ சொல்லியதும்
நான் சொல்லாததுமான
கவிதைகள் தான் அதிகம்.

நம்
தேனிலவுக் காலத்தின்
ஓர்
தேய் நிலா வெளிச்சத்தில்
உனக்கு
என் காதலைச் சொல்லவேண்டும்.

சுற்றிலும் கடல் வேலியிட்ட
ஓர்
தீவுக்குள்
உன்னைக் கொஞ்சம் கொஞ்ச வேண்டும்..

முடிவு தெரியாத ஓர் சாலையில்
பிரியாத கரங்களுடன்
ஏதோ பேசி
நடக்கவேண்டும்.

கொஞ்சமாய் ஊடல்.
நிறையவே கூடல்.
என்று
என் அணுக்களெங்கும்
செதுக்கி வைத்திருந்த ஆசைகள்
சீனப் பெருஞ்சுவரை சிறிதாக்கும்.

என்ன செய்வது ?
கடலுக்குள் வலை விரிப்பவனும்
காதலுக்குள் அகப்படுபவனும்
கன்னங்களில்
காண்பதெல்லாம் உப்பு நீர் தானே.

ஜென்மங்கள் மேல் எனக்கு
நம்பிக்கை இல்லை !
அப்படி ஒன்று இருந்தால்.
வினாடி நேரமும் பிரியாத உறவாய்
நீ எனக்கு வேண்டும்..
எனக்கு மட்டுமாய் !!

நான் வேண்டும் வரம்
இது ஒன்று தான்,
தேவதை வந்தபின்
கேட்காமலேயே கிடைக்காதா
வரங்களின் கரங்கள் !

14 comments on “கவிதை : வரங்கள், தேவதைக் கரங்கள்…

 1. //நம் தேனிலவுக் காலத்தின்
  ஓர் தேய் நிலா வெளிச்சத்தில்
  உனக்கு என் காதலைச் சொல்லவேண்டும்.//

  ரொம்ப அழகு!

  //என்ன செய்வது ?
  கடலுக்குள் வலை விரிப்பவனும்
  காதலுக்குள் அகப்படுபவனும்
  கன்னங்களில் காண்பதெல்லாம் உப்பு நீர் தானே.//

  அழகான…ஆழமான… உண்மையான உவமான உவமேயம்!

  Like

 2. KaaTHal EénNum Théén KadaLil, MuulKiTh ThiLaikKum ParuVamThaan, ThééNil MukaThThai MunVaithThu,IlangKaliJil Inpam ThannaiTh ThaanThéédi, Amirtham Thannil AlaKooluka, AanaPayanai AlkooLuka, Anpup Pirapéé OnRinaiThu NanRuKuudik KaliThaThanaal, KadaLil MuulKi Muththamidda , NiyamThanNai YaarMarpPaar, UppilUrainTha UdaLiRan(2)Dum OnaRaaYaan PinaaLéé, Uppai UnaRaaUdaLiRandum,Pinaivin Kalippai MarannThaaLum UnrvinAlaiKal VidDiDumaa?, UdaiVaal Enna ThalarnThidumaa?, IThuvéé Enthan Mééjik KuutRu.” UPPAI UPPU PURAM THALAA” + K.SIVA+(Fr)

  Like

 3. “சுற்றிலும் கடல் வேலியிட்ட
  ஓர்
  தீவுக்குள்
  உன்னைக் கொஞ்சம் கொஞ்ச வேண்டும்” அழகான வரிகள்….

  Like

 4. முடிவு தெரியாத ஓர் சாலையில்
  பிரியாத கரங்களுடன்
  ஏதோ பேசி
  நடக்கவேண்டும்.

  கொஞ்சமாய் ஊடல்.
  நிறையவே கூடல்.
  என்று
  என் அணுக்களெங்கும்
  செதுக்கி வைத்திருந்த ஆசைகள்
  சீனப் பெருஞ்சுவரை சிறிதாக்கும்.

  NICE LINNES ………….

  Like

 5. முடிவு தெரியாத ஓர் சாலையில்
  பிரியாத கரங்களுடன்
  ஏதோ பேசி
  நடக்கவேண்டும்.

  கொஞ்சமாய் ஊடல்.
  நிறையவே கூடல்.
  என்று
  என் அணுக்களெங்கும்
  செதுக்கி வைத்திருந்த ஆசைகள்
  சீனப் பெருஞ்சுவரை சிறிதாக்கும்.

  NICE LINNES ………….

  //

  நன்றி பத்மபிரகாஷ்.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.