கவிதை : காய்க்காத அத்திமரம்

 

 

விரும்பாமலேயே
வாய்த்து விடுகிறது
பலருக்கும்
குழந்தைப் பாக்கியம்.

நாள்காட்டிகளின்
சுட்டுவிரல்
கணக்குகளில் பிசகியோ,

விசாரணைக்குரிய
பாதுகாப்புக்
கவசங்களின் கண்களில்
மண்ணைத் தூவியோ,

மோகத்தின்
முணுமுணுப்புகளில்
மறைந்து போன
எச்சரிக்கை உணர்விலோ,

ஏதோ ஒன்றில்
நழுவி விழுகின்றன
இந்த
மண்ணின் வரங்கள்
சாபங்களாக.

இந்த வானக வரங்களை
சாபங்களாகச் சித்தரிப்போர்
சந்தித்தல் நலம்.

மரத்தில் தொட்டில் கட்டி
கண்களில்
மதகு உடைத்துக் கரையும்
வேண்டுதல் ஒலிகளை.

தமிழிஷில் வாக்களிக்க….

12 comments on “கவிதை : காய்க்காத அத்திமரம்

  1. /பின்னூட்டமிட கவிதையின் வரிகளில் சில அடிக்கோடிடுவார்கள் இங்கே கவிதையின் மொத்த வரிகளையுமல்லவா அடிக்கோடிட தோன்றுகிறது. எல்லா வார்த்தைகளும் நிறைவாய் கவிதையோ சுவையாய். ரசித்து ரசித்து படித்திருக்கிறேன்./

    நன்றி நண்பரே 🙂 சந்தோசம் !

    Like

  2. பின்னூட்டமிட கவிதையின் வரிகளில் சில அடிக்கோடிடுவார்கள் இங்கே கவிதையின் மொத்த வரிகளையுமல்லவா அடிக்கோடிட தோன்றுகிறது. எல்லா வார்த்தைகளும் நிறைவாய் கவிதையோ சுவையாய். ரசித்து ரசித்து படித்திருக்கிறேன்.

    Like

  3. //கவிதை எழுதும் வல்லமை கவிஞர்
    சேவியரிடம் உள்ளது அதனை அனுபவித்து ரசிக்கும் உரிமை நம்மிடம் தேவை//

    நன்றி நண்பரே.. 🙂

    Like

  4. கவிதை எழுதும் வல்லமை கவிஞர்
    சேவியரிடம் உள்ளது அதனை அனுபவித்து ரசிக்கும் உரிமை நம்மிடம் தேவை

    Like

  5. ////இந்த வானக வரங்களை
    சாபங்களாகச் சித்தரிப்போர்
    சந்தித்தல் நலம்.

    மரத்தில் தொட்டில் கட்டி
    கண்களில்
    மதகு உடைத்துக் கரையும்
    வேண்டுதல் ஒலிகளை.//

    அருமையாய் கோர்க்கப்பட்ட வார்த்தைகள். எத்தனை உண்மையும் கூட
    /

    நன்றி எட்வின்

    Like

  6. //மரத்தில் தொட்டில் கட்டி
    கண்களில்
    மதகு உடைத்துக் கரையும்
    வேண்டுதல் ஒலிகளை//

    அருமையான வரிகள் அண்ணா…

    Like

  7. //இந்த வானக வரங்களை
    சாபங்களாகச் சித்தரிப்போர்
    சந்தித்தல் நலம்.

    மரத்தில் தொட்டில் கட்டி
    கண்களில்
    மதகு உடைத்துக் கரையும்
    வேண்டுதல் ஒலிகளை.//

    அருமையாய் கோர்க்கப்பட்ட வார்த்தைகள். எத்தனை உண்மையும் கூட

    Like

  8. //விரும்பாமலேயே
    வாய்த்து விடுகிறது
    பலருக்கும்
    குழந்தைப் பாக்கியம்.

    நாள்காட்டிகளின்
    சுட்டுவிரல்
    கணக்குகளில் பிசகியோ,

    விசாரணைக்குரிய
    பாதுகாப்புக்
    கவசங்களின் கண்களில்
    மண்ணைத் தூவியோ,

    மோகத்தின்
    முணுமுணுப்புகளில்
    மறைந்து போன
    எச்சரிக்கை உணர்விலோ//

    கவிதை, வாழும் காலத்தையும் தன்னோடு பதிவு செய்து கொள்ளல் வேண்டும் என்பார்கள்; இதுபோன்ற கவிதைகள் தான் ‘காலத்தின் வாழ்தலையும்’ பரைசாற்றிச் செல்கிறது சேவியர். அருமை!

    வித்யாசாகர்!

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.