நான்
வளர்த்து வரும்
பூனைக்குட்டிக்கு
இப்போது
புலி நகம் முளைத்திருக்கிறது
அதன்
பற்களில் பல
புலிப்பற்களாகி விட்டன.
முன்பெல்லாம்
மடியிலமர்ந்து கொஞ்சும்.
இப்போதோ
படியிலமர்ந்து உறுமுகிறது.
அதன்
மெல்லிய மின்னல் மீசை
இன்னல்களையே
அள்ளித் தருகிறது.
என்
படுக்கையில் விரித்திருக்கும்
கனவுகளைச்
சுருட்டி வெளியே
எறிய வேண்டுமாம்,
தலை கோதும்
விரல் போதும்
என்றிருந்த என் பூனைக்குட்டி,
கனவுக் கன்றுகளைக் கூட
கட்டக் கூடாதென
கட்டளையிடுகிறது.
கனவுகளை
அவிழ்த்து விட்டு,
பூனையை அனுப்பவேண்டும்.
மீண்டும் வளர்க்க
ஓர்
செல்ல நாய்க்குட்டி
கிடைக்காமலா போய்விடும்.
ஆனாலும்
நினைக்கும் போதெல்லாம்
வலிக்கிறது
பூனை நகக் கீறல்கள்.
*
paiththiyam
LikeLike
//மீண்டும் வளர்க்க
ஓர் செல்ல நாய்க்குட்டி
கிடைக்காமலா போய்விடும்.//
அடடடா…”மாற்றம் தான் என்றும் மாறாதது…” என்பதை நிரூபித்துவிட்டீர்கள்!
வாழ்த்துகள்!
LikeLike
நன்றி ஷாமா… எப்படி இருக்கீங்க ?
LikeLike
நலமாக இருக்கிறேன்…நன்றி!…
நீங்கள் நலம் தானே?
கவிப்பயணம் தொடர வாழ்த்துகள் சேவியர்!
LikeLike
/நலமாக இருக்கிறேன்…நன்றி!…
நீங்கள் நலம் தானே?
கவிப்பயணம் தொடர வாழ்த்துகள் சேவியர்!//
நன்றி ஷாமா 🙂
LikeLike
“தலை கோதும்
விரல் போதும்
என்றிருந்த என் பூனைக்குட்டி,
கனவுக் கன்றுகளைக் கூட
கட்டக் கூடாதென
கட்டளையிடுகிறது.”
உண்மை
LikeLike
super ………..
LikeLike
நன்றி தினகரன்.
LikeLike
மிக்க நன்றி கீதா, உங்கள் ரசனைக்கு.
LikeLike
Super and nice thambi. Thanks for all friends.
LikeLike