கவிதை : கீர கீரேய்ய்ய்….

“கீர…கீரேய்….”
தெருவில் ஒலிக்கும்
கீரை ஒலிகள்
குறைந்து விட்டன.

தள்ளு வண்டியில் வரும்
தக்காளியும்,
வேகாத வெயிலில் வரும்
வெங்காயமும்
அத்தி பூத்தார் போல் !

வாசனை விரித்துத் திரியும்
முண்டாசுக் கிழவரின்
பழ வண்டி கூட
பழைய கதையாய்.

சர்வமும்
ரிலையன்ஸ் பிரஷ்களின்
குளிர் சாதனக் கூடுகளில்
அடைகாக்கத் துவங்கியபின்
பார்க்கிங் மட்டுமே
மக்களின்
பிரச்சினையாகிப் போனது

என்ன தான்
செய்து கொண்டிருக்கிறார்களோ
கூடைத் தலைகளில்
கீரை இலைகளில்
நேசம் விற்றுத் திரிந்தவர்கள்.

 

கவிதை பிடித்திருந்தால் வாக்களியுங்கள்.

 

16 comments on “கவிதை : கீர கீரேய்ய்ய்….

  1. ”…கூடைத் தலைகளில்
    கீரை இலைகளில்
    நேசம் விற்றுத் திரிந்தவர்கள்…..”
    ”…பார்க்கிங் மட்டுமே
    மக்களின்
    பிரச்சினையாகிப் போ…”’
    sure nalla karuththu…congratz….

    Like

  2. வாழ்வின் அடையாளங்களைத் தொலைத்து விடாமல் இருக்கும் மனநிலையே உயர்வானது. ரொம்ப நன்றி செல்வகுமார்.

    Like

  3. விவசாயக் குடும்பத்தில் பிறந்த எனக்கு இன்னமும் கிராமம் சென்றால் கீரை விற்கும் வேலை எப்போதாவது இருக்கும்.

    Like

  4. //என்ன தான்
    செய்து கொண்டிருக்கிறார்களோ
    கூடைத் தலைகளில்
    கீரை இலைகளில்
    நேசம் விற்றுத் திரிந்தவர்கள்.//

    அழகிய வரிகள்!… “நேசமே” அருகி வருகிறதென்பதென்னவோ வாஸ்தவம்தான்… கவலையைத் தூண்டி ஏங்கவும் வைக்கிறது… அற்புதம்!… வாழ்த்துகள் சேவியர்!

    Like

  5. //நேசம் விற்றுத் திரிந்தவர்களை கவிதை பாசமாய் நினைவூட்டியது. கொஞ்சமேனும் நானும் என் கிராமத்துக்கு சென்று திரும்பியதைப்போல உணர்ந்தேன், திருப்தி//

    நன்றி சார்….

    Like

  6. நேசம் விற்றுத் திரிந்தவர்களை கவிதை பாசமாய் நினைவூட்டியது. கொஞ்சமேனும் நானும் என் கிராமத்துக்கு சென்று திரும்பியதைப்போல உணர்ந்தேன், திருப்தி.

    Like

  7. நாங்கள் தப்பித்தோம் . அதர்க்குத்தான் கிராமத்தில் வாழ வேண்டும்.

    Like

  8. Pingback: கவிதை : கீர கீரேய்ய்ய்…. | SEASONSNIDUR

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.