குட்டிக் குட்டிக் கவிதைகள்

 

 

 

 

 

சாரி என்றாள்
செல்லமாய்
நன்றி என்றேன் மெல்லமாய்…
சரேலென மோதிக்கொண்ட
அபாயமற்ற
வளைவு ஒன்றில்

 

 _________________________________________________________________________________

 

 

 

நீ
பொய் பேசும்போதெல்லாம்
கண்டு பிடித்து விடுகிறேன்,
எப்போதேனும்
உண்மை பேசும் போதோ
சந்தேகப்படுகிறேன்.

 _________________________________________________________________________________
 

 

 

 

 

உண்மையைக் காட்டும்
கண்ணாடிகளை
யாருமே விரும்புவதில்லை,
எல்லோருக்கும் தேவைப்படுகிறது
அழகாய்க்
காட்டும் கண்ணாடிகள்.
 

  _______________________________________________________________________

   
மொட்டை மாடியில்
தொங்கிக் கொண்டிருக்கிறது
சாயம் போன
பட்டம் ஒன்று,
ஏதோ
சிறுவர்களின் துயரங்களைச் சுமந்தபடி.

 பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

Advertisements

32 comments on “குட்டிக் குட்டிக் கவிதைகள்

 1. //நீ பொய் பேசும்போதெல்லாம்
  கண்டு பிடித்து விடுகிறேன்,
  எப்போதேனும் உண்மை பேசும் போதோ
  சந்தேகப்படுகிறேன்.//

  ஆஹா அருமையான வரிகள்!… சில வரிகளேயாயினும்…. பல எண்ணங்களை அள்ளித் தருகிறது!

  மொட்டை மாடியில் தொங்கிக் கொண்டிருக்கிறது
  சாயம் போன பட்டம் ஒன்று,
  இறந்தகாலத்தின் எண்ணங்களைச் சுமந்தவாறு….

  என்றும் எண்ணத் தோன்றியது சேவியர்…. அனைத்தும் அழகான கவிதைகள்…. வாழ்த்துகள்!

  Like

 2. உண்மையைக் காட்டும்
  கண்ணாடிகளை
  யாருமே விரும்புவதில்லை,
  எல்லோருக்கும் தேவைப்படுகிறது
  அழகாய்க்
  காட்டும் கண்ணாடிகள்………….
  unnmai……………

  Like

 3. UnnMai Eénpathu
  NiLai Yaaji YaaNaThu – AthaNil KaanPaThu
  AlaKéé Anri VééRu
  Thanith YaaJI OnRumMilLai – AvarAvar
  PaarkKum PaarYai YAIIH SaarnThaThu.
  ++= K.Siva(France) =++

  Like

 4. கவிதைகள் நலமாக உள்ளன. வாழ்த்துக்கள்.

  ஆர்.ஈஸ்வரன், வெள்ளகோவில்.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s