கிராமத்து வீட்டின்
வாசல்படிகளில்
அமைதியாய் அமர்ந்திருக்கின்றன
கதைகள்.
படிகளில் அமர்ந்து
பேன் பார்க்கையில்
பாட்டி சொன்னவையாய் இருக்கலாம்.
சிறுகல் பொறுக்கி
பாறை விளையாடுகையில்
சகோதரி சொன்ன
கதைகளாகவும் இருக்கலாம்.
கரிக்கட்டையால் கோடு கிழித்து
படிகளில்
புரண்டு விளையாடுகையில்
தம்பி சொன்னதும் இருக்கலாம்.
குளித்து விட்டுக்
குதித்தோடுகையில்
வழுக்கி விழுந்து உடைந்துபோன
என்
முன் பல்லின் கதையும் அதிலே ஒன்று !
யாரேனும் வந்தமர்ந்தால்
சொல்லி விடும் துடிப்புடன்
எதிர்பார்ப்புகளின் ஏக்கத்தில்
காத்திருக்கின்றன அவை !
நகரத்தில் நடப்பட்டு
ஆண்டுக்கோ ஆவணிக்கோ
கிராமம் திரும்பும் பிள்ளைகளுக்கு
படிகளில் அமர்வது
கௌரவக் குறைச்சலாகி விட்டது.
அவர்கள் உதறிப் போட்ட
செருப்புகளுக்கு அடியில்
நசுங்கியே கிடக்கின்றன
நேசம் சுமந்த
கதைகளின் தொகுப்புகள்.
ஃ
பிடித்திருந்தால் வாக்களியுங்கள்
மனதை நெகிழ்த்தும் அப்பட்டமான உண்மை!…. எங்கு, எப்படி வாழ்ந்தாலும் பாட்டி வீட்டு படிக்கட்டுபோல வருமா?…ஏக்கப் பெருமூச்சு!
உங்கள் வரிகள் ஒவ்வொன்றும் மனதைத் தொடுகிறது!
LikeLike
very very nice brother
LikeLike
மிக்க நன்றி சந்தோஷ்… சந்தோஷம் 🙂
LikeLike
very super manase thotutinga!!!!!!!!!!!!!!!
LikeLike
very very superrrrrrrrrrrrrrrrrrrb
LikeLike
மனமார்ந்த நன்றி செந்தில்…
LikeLike