அப்பா….


காயங்களைக்
காலங்கள் ஆற்றிவிடும் என்பது
மெய் என்று
எல்லோரையும் போல்
நம்பிக்கொண்டிருந்தேன்.

ஆறு வருடங்கள்
என்கிறது நாள்காட்டி,
நூறு வருடங்களின்
பொதி சுமந்த பாரம் நெஞ்சில்.

வருடங்களின் கரைதல்
துயரங்களின்
கரையேறுதலை இன்னும்
கற்றுத் தரவில்லை.

இன்றும் கிராமத்து
ஓட்டு வீட்டின் முற்றங்களில்
அப்பாவின் சுவடுகளை
நினைவுக் கைகள்
தழுவத் துடிக்கின்றன.

என்
தொலைபேசி அழைப்பில்
பதறியடித்து ஓடிவந்த
பாதச் சுவடுகளல்லவா அவை !

பழுதடைந்த படிகளில்
பாதம் பதிக்கையில்
உள்ளறையிலிருந்து
பரவசத்துடன் ஓடிவருகிறது
அப்பாவின் குரல்.

எனக்குப் பசியெடுப்பதை
என்
வயிறு அறியும் முன்
அறிந்த குரலல்லவா ?

விரல் பிடித்து நடந்த
வரப்புகளில்
அப்பாவின் மூச்சுக்காற்றை
ஆழமாய் இழுத்துத்
தேடித் தேய்கிறது நுரையீரல்.

மரணப் படுக்கையில் கூட
என்
வருகை தேடி
பாரம் இழுத்த மூச்சல்லவா !

அவருடைய கட்டிலின் ஓரங்களில்
இன்னும்
மிச்சமிருக்கும் கைரேகையை
விரல்கள்
அனிச்சைச் செயலாய்
அரவணைத்துக் கசிகின்றன.

ஒரு முறையேனும்
பாதம் தொட்டு
அருகிருக்கத் தவித்து
குதிக்கும் கண்ணீரும்
புகைப்படப் பூக்களருகே
இயலாமையால் விசும்புகின்றன.

வெயில்க் கழுகுகள்
கொத்திக் கிழிக்கும்
நகரத்து வியர்வை வீதிகளிலும்
அப்பாவின் குளிர்ச்சியை
மனம்
மீண்டெடுத்துத் தவிக்கிறது.

இலைகளில்லா
என் தோட்டத்துச் செடிகளில்
கிளையுதிர் காலம்
இன்னும் நிற்கவே இல்லை.

அவரோடு வாழும் கனவுகள்
கனவுகளாகிப் போனதால்,
கனவுகளிலேனும்
அவருடன் வாழும் கனவே
இப்போதென்
கலையாத கனவாய் !

பிடித்திருந்தால் வாக்களிக்கவும்…

36 comments on “அப்பா….

  1. இழந்த என் தந்தையை நினைவூட்டியது. மனம் விட்டு அழுகிறேன்.

    Like

  2. அவரோடு வாழும் கனவுகள்
    கனவுகளாகிப் போனதால்,
    கனவுகளிலேனும்
    அவருடன் வாழும் கனவே
    இப்போதென்
    கலையாத கனவாய் !

    உள்மனதின் உண்மையான ஏக்கம்…….
    அப்பாவ ரொம்ப மிஸ் பண்றேன்…..

    Like

  3. //மரணப் படுக்கையில் கூட
    என் வருகை தேடி
    பாரம் இழுத்த மூச்சல்லவா !

    நான் கொஞ்சம் கொஞ்சம் அதிர்க்ஷ்டசாலி. கடைசி பயணதில் அப்பாவின்
    பக்கதில் நான்…நினைவுகளொடு

    Like

  4. மரணத்தை
    மறுக்க முடிவதுமில்லை
    மரித்தவரை
    மறக்க முடிவதுமில்லை

    மீண்டும்
    வலியுண்ட நெஞ்சோடு
    வாழ்க்கைப் பயணம்…

    Like

  5. *

    இலைகளில்லா
    என் தோட்டத்துச் செடிகளில்
    கிளையுதிர் காலம்
    இன்னும் நிற்கவே இல்லை.

    *

    தந்தையின் இழப்பை அழுத்தமாய்ச் சொல்லும் கவிநயம் மிக்க வரிகளுக்குப் பாராட்டுகள் சேவியர்

    Like

  6. A fantastic one which read after a long days.. it made me crying immediately after read it..
    thanks a lot for given such a good

    Like

  7. //என் அப்பாவின் நியாபகங்கள் என் மனத்திரையில்…இன்று அவர் உடலால் மறைந்து விட்டார். ஆனால் இன்னும்
    என் அப்பாவின் வாசனை மறுபடியும் என்னால் உணரமுடிகிறது.
    அப்பா என்னுடனே இருக்கிறார்.
    “I LOVE U APPA”..! “Miss U” …!
    ரொம்ப நாளைக்கு அப்புறம் மனம் லேசாகும் அளவுக்கு அழுதேன். மறுபடியும் வாழ்கை சக்கரத்தில் ஓட தயாராக வேண்டும். அப்பாவின் கனவை நிறைவேற்ற.

    //

    முத்து… மனம் கனமானது ! நன்றி.

    Like

  8. //A fantastic one which read after a long days.. it made me crying immediately after read it..
    thanks a lot for given such a good…

    //

    நன்றி ஆனந்தகுமார் உணர்வுகளோடே பயணித்தமைக்கு….

    Like

  9. //எம்மிடம் விட்டுச் சென்ற என் அப்பாவின் நினைவுகளுடன் சிறகடிக்கிறேன்….
    நன்றி சேவியர்!//

    நினைவுகள் வலியானவை, வலிமையானவை 😦

    Like

  10. //மரணப் படுக்கையில் கூட
    என் வருகை தேடி
    பாரம் இழுத்த மூச்சல்லவா !

    அவருடைய கட்டிலின் ஓரங்களில்
    இன்னும் மிச்சமிருக்கும் கைரேகையை
    விரல்கள் அனிச்சைச் செயலாய்
    அரவணைத்துக் கசிகின்றன.//

    எம்மிடம் விட்டுச் சென்ற என் அப்பாவின் நினைவுகளுடன் சிறகடிக்கிறேன்….
    நன்றி சேவியர்!

    Like

  11. A fantastic one which read after a long days.. it made me crying immediately after read it..
    thanks a lot for given such a good…

    Like

  12. …………………………………
    ……………………………………..
    …………………………………………
    ?????????????????????????????????????????????????

    No words anna…….

    Like

  13. என் அப்பாவின் நியாபகங்கள் என் மனத்திரையில்…இன்று அவர் உடலால் மறைந்து விட்டார். ஆனால் இன்னும்
    என் அப்பாவின் வாசனை மறுபடியும் என்னால் உணரமுடிகிறது.
    அப்பா என்னுடனே இருக்கிறார்.
    “I LOVE U APPA”..! “Miss U” …!
    ரொம்ப நாளைக்கு அப்புறம் மனம் லேசாகும் அளவுக்கு அழுதேன். மறுபடியும் வாழ்கை சக்கரத்தில் ஓட தயாராக வேண்டும். அப்பாவின் கனவை நிறைவேற்ற.

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.