திருநங்கையர்
நெருங்கி வருகையில்
விரைவிலேயே துரத்திவிட
விரல்களின்
முளைக்கின்றன காசுகள்.
நிறுத்தத்தின்
ஏற்றப்பட்ட கார் கண்ணாடிகள்
பரட்டைத் தலை
சிறுவர்களால்
அழுக்காகாமல் தடுக்க
அவசரச் சில்லறைகள்.
தொட்டு விடுவார்களோ
எனும்
திடுக்கிடலின் விளைவாக
தொழுநோயாளிகளுக்கு
ஓரிரு ரூபாய்கள்.
மனித நேயம்
இல்லாதிருப்பதன்
அறிகுறியாகவும் இருக்கலாம்
பிச்சையிடுதல்
நன்றி : கல்கி
I like this
why dont you provide a sharing facebook link
thanks
LikeLike
//விரைவிலேயே துரத்திவிட விரல்களின் முளைக்கின்றன காசுகள்//
//அழுக்காகாமல் தடுக்க அவசரச் சில்லறைகள்//
//திடுக்கிடலின் விளைவாக தொழுநோயாளிகளுக்கு ஓரிரு ரூபாய்கள்//
உண்மைதான்… (இதுவும் கல்கியில் வந்த உங்கள் ஆக்கமா சேவியர்?)
மனிதநேயம் கவலைக்கிடமான நிலையில் படுக்கையில் சுருண்டு கிடக்கிறது…. தட்டியெழுப்பி வைத்தியம் பார்க்கவேண்டும்!
LikeLike
மிக மிக நன்று.
LikeLike
Top Class…romba nalla kavithai….
LikeLike
பிச்சையிடுதலின் உள்மன அழுக்கை அப்பட்டமாக சொல்கிறது கவிதை
வாழ்த்துக்கள் நண்பா
விஜய்
LikeLike
PisShsai Enpathu
Koshsai Alla – Koodopavar
KoodukKum ManaThu
KooNaa ThiRun Thaal
NiraiVuThaan NidSayam-KaanpaThu
VaakKajin MélNilai
EnpaThey UnnMaijin Mudvu.
++K.Siva(France)++
LikeLike
“மனித நேயம் இல்லாதிருப்பதன் அறிகுறியாகவும் இருக்கலாம்
பிச்சையிடுதல்” migavum arthamulla varigal..
Yendru panam manithanai aatkondatho..andre..manithargalidaye manitha neyam vatri poivittathu…
LikeLike
இந்தப் பக்கம் வந்து ரொம்ப நாலாகுது அண்ணா… கவிதை நிதர்சனமாக உள்ளது… இரசித்தேன்….
LikeLike
நன்றி விக்கி.
LikeLike
மிக்க நன்றி மகேஷ். அருமையா சொன்னீங்க.
LikeLike
சரியா சொன்னீங்க சிவா. நன்றி.
LikeLike
நன்றி விஜய்.
LikeLike
நன்றி மாம்ஸ்..ஆனந்த். 🙂
LikeLike
நன்றி உமா…
LikeLike
நன்றி ஷாமா…
LikeLike
/I like this
why dont you provide a sharing facebook link
thanks
//
பண்ணிடுவோம்
LikeLike
ippalam miratti pichai edukuranga anna…….avangalum munneritanga……..
LikeLike