பிச்சையிடுதல்

திருநங்கையர்
நெருங்கி வருகையில்
விரைவிலேயே துரத்திவிட
விரல்களின்
முளைக்கின்றன காசுகள்.

நிறுத்தத்தின்
ஏற்றப்பட்ட கார் கண்ணாடிகள்
பரட்டைத் தலை
சிறுவர்களால்
அழுக்காகாமல் தடுக்க
அவசரச் சில்லறைகள்.

தொட்டு விடுவார்களோ
எனும்
திடுக்கிடலின் விளைவாக
தொழுநோயாளிகளுக்கு
ஓரிரு ரூபாய்கள்.

மனித நேயம்
இல்லாதிருப்பதன்
அறிகுறியாகவும் இருக்கலாம்
பிச்சையிடுதல்

நன்றி : கல்கி

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

17 comments on “பிச்சையிடுதல்

  1. இந்தப் பக்கம் வந்து ரொம்ப நாலாகுது அண்ணா… கவிதை நிதர்சனமாக உள்ளது… இரசித்தேன்….

    Like

  2. “மனித நேயம் இல்லாதிருப்பதன் அறிகுறியாகவும் இருக்கலாம்
    பிச்சையிடுதல்” migavum arthamulla varigal..

    Yendru panam manithanai aatkondatho..andre..manithargalidaye manitha neyam vatri poivittathu…

    Like

  3. PisShsai Enpathu
    Koshsai Alla – Koodopavar
    KoodukKum ManaThu
    KooNaa ThiRun Thaal
    NiraiVuThaan NidSayam-KaanpaThu
    VaakKajin MélNilai
    EnpaThey UnnMaijin Mudvu.

    ++K.Siva(France)++

    Like

  4. பிச்சையிடுதலின் உள்மன அழுக்கை அப்பட்டமாக சொல்கிறது கவிதை

    வாழ்த்துக்கள் நண்பா

    விஜய்

    Like

  5. //விரைவிலேயே துரத்திவிட விரல்களின் முளைக்கின்றன காசுகள்//
    //அழுக்காகாமல் தடுக்க அவசரச் சில்லறைகள்//
    //திடுக்கிடலின் விளைவாக தொழுநோயாளிகளுக்கு ஓரிரு ரூபாய்கள்//
    உண்மைதான்… (இதுவும் கல்கியில் வந்த உங்கள் ஆக்கமா சேவியர்?)

    மனிதநேயம் கவலைக்கிடமான நிலையில் படுக்கையில் சுருண்டு கிடக்கிறது…. தட்டியெழுப்பி வைத்தியம் பார்க்கவேண்டும்!

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.