கவிதை : கனவுகளின் கூடாரம்


இத்தனை அழகாய்
எப்படிச் சிரிக்கிறாய் ?
அந்த
செப்படி வித்தையைச் சொல் என்றால்
மறுபடி சிரிப்பில்
சொக்க வைக்கிறாய்.

கால்களைச் சுற்றிக் கொள்ளும்
சுவர்க்கமாய்,
இதயத்தைப் பற்றிக் கிடக்கின்றன
உன் நினைவுகள்.

கனவுகளின் கூடாரத்தில்
நீயிருப்பதால்
என்
காரிருள் வானங்களுக்கும்
வெளிச்சம் கிடைக்கிறது.

என்
நினைவுகளின் வழியெங்கும்
நீயிருப்பதால்
என்
இரவுப் படுக்கைக்கும்
தூக்கம் தொலைகிறது.

இரவுக்கும் பகலுக்கும்
இடைப்பட்ட தூரம்
நீ.

பகலுக்கும் இரவுக்கும்
இடப்பட்ட தூரமும்
நீ.

உன்
கரங்களுக்குள் கைதியாகும்
ஆசை
கிளை விடுகையில்
போதி மரத்துக்கு
ஞானம் பிறக்கிறது.

பிடித்திருந்தால் வாக்களிக்கவும்

20 comments on “கவிதை : கனவுகளின் கூடாரம்

 1. kavingarey enna eppade colakettinga ungal kavithigal ovondur ovoru ragam ungal varigaley oru kuzhnthian vazhkai solevedukerathu nandre kavingarey anbudan BALU

  Like

 2. enna kavingarey eppade coleketinga ungal kavithigal ovondrum ovoru ragam
  entha kavithi oru kuzhanthien vazhkiai arumiaga solgerathu nandre kavingarey anbudan BALU

  Like

 3. எப்பவும் குழந்தையாய் குழந்தை மனதோடு வாழமுடியாதுதான்.ஆனால் மனதில் புழுதிபடிய விடாமல் பார்த்துக்கொள்ளலாம்.

  குழந்தைகள் அருகில் நாங்களும் ஒரு குழந்தையாகிவிடுகிறோம்.
  இது அற்புத போதிமரம்தான் அண்ணா !

  Like

 4. போதிமரப் புலவரே”!…
  எது எப்படியோ,…. உங்கள் கவிதைக்குள் நாங்கள் “கைதி”யாகி விடுகிறோம்!…வாழ்த்துகள் சேவி!

  Like

 5. //enna kavingarey eppade coleketinga ungal kavithigal ovondrum ovoru ragam
  entha kavithi oru kuzhanthien vazhkiai arumiaga solgerathu nandre kavingarey anbudan BALU

  //

  நன்றி நண்பர் பாலு.. 🙂 ரொம்ப நாளா ஆளையே காணோம் 🙂

  Like

 6. இந்த இன்றைய வாழ்க்கைமுறை அழகாக படம் பிடிக்கப்பட்டு இருக்கிறது .இது ஒருவகையில் பிழையான வாழ்க்கைமுறை இதிலிருந்து விடுபட முயலாமல் இருப்பதை சரிஎன்று ஏற்று கொள்ள சொல்லுவதும் ஏற்றுகொள்ளுவதும் இந்த குமுகத்தை முடமாக்குமே யன்றி வேறல்ல .

  Like

 7. //இந்த இன்றைய வாழ்க்கைமுறை அழகாக படம் பிடிக்கப்பட்டு இருக்கிறது .இது ஒருவகையில் பிழையான வாழ்க்கைமுறை இதிலிருந்து விடுபட முயலாமல் இருப்பதை சரிஎன்று ஏற்று கொள்ள சொல்லுவதும் ஏற்றுகொள்ளுவதும் இந்த குமுகத்தை முடமாக்குமே யன்றி வேறல்ல .//

  மிக்க நன்றி. அருமையான பின்னூட்டம்.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.