கவிதை : கணினி வேலை !

எழுத்துக்கள் மீது
நடராஜ விரல்கள்
நாட்டியமாடுவதும்,

கையடக்க மெளஸை
கை விரல்களால்
சீண்டிச் சிரிப்பதும்,

மாயப் படங்களில்
மயங்கிக் கிடக்க
இணையப் படிகளில்
தவமிருப்பதும்,

என
கணினி வேலை
எளிதென்பது
பலருடைய கணிப்பு.

உண்மையைச் சொல்வதெனில்
வயல் தேர்வு துவங்கி
அறுவடை வரை,
விவசாயமும்
மென்பொருள் தயாரிப்பும்
ஒன்று தான்.

ஒன்று
உழுது செய்வது
இன்னொன்று
எழுதி செய்வது.

ஒன்று தமிழ் பெயர்களால்
தாலாட்டப் படுவது
ஒன்று
ஆங்கிலப் பெயர்களால்
அறியப் படுவது.

வீடு சென்று சேரும்
இரவு பதினோரு மணி சொல்லும்.
கணினி வேலை என்பது
எளிதானதே அல்ல.

கவலையாய்க் கேட்பார்
காத்திருக்கும் அப்பா.
வேலை ரொம்ப கஷ்டமா ?

சிரித்துக் கொண்டே சொல்வேன்
கம்யூட்டர் வேலைல
கஷ்டம் என்னப்பா கஷ்டம்

பிடித்திருந்தால் கிளிக்கலாமே

 

17 comments on “கவிதை : கணினி வேலை !

  1. இனாமாக கிடைத்தால் அனைத்தும் பிடிக்கும் என்று சொல்லும் காலம் .அருமையான கவிதை. ‘கணினி’ கவிதையில் கிடைக்கும் போது தூக்கிச் செல்ல கடினமா என்ன! கஷ்டம் என்னப்பா கஷ்டம்.

    Like

  2. பாலு,,, நன்றி. வாய்ப்பு வந்தால் பார்க்கலாம். சினிமாவுக்காக அலையும் மனநிலையும், நேரமும் இல்லை 😀

    Like

  3. kavingarey ungalai vaztha enaku thaguthi ellai erunthalum enoda vazthugal nengal cenimavil oru round varalamay please try sir all the best

    Like

  4. //சிரித்துக் கொண்டே சொல்வேன்
    கம்யூட்டர் வேலைல கஷ்டம் என்னப்பா கஷ்டம்//
    “கோமாளியின் நிஜமுகத்தை யாரறிவார்?” 🙂

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.