கவிதை : அதிகாலை எழில் தேவதை

அதிகாலைக்கு முன்பே
சந்தையில்
அலைபவர்களுக்குத் தெரியும்
தொலைக்கும்
அதிகாலைத் தூக்கம்
எத்தனை புனிதமானதென்பது.

வலுக்கட்டாயமாய்
இமைகளைப் பிரித்து வைத்து
படிக்க முயலும்
மாணவர்களுக்கும்
தெரிந்திருக்கக் கூடும்.

இருளில் மட்டுமே
துழாவித் திரியும்
கூர்க்கா விழிகளும்,
மழை உலுக்கி எழுப்பிய
குடிசை வீடுகளும்
அறிந்திருக்கக் கூடும் அதனை.

உன்
அமைதியான தூக்கத்தை
ரசிப்பதற்காகவே
எழும்பும் எனக்கு மட்டும்
புரியவே இல்லை
அதிகாலைத் தூக்கம்
அத்தனை அற்புதமா ?

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்.

28 comments on “கவிதை : அதிகாலை எழில் தேவதை

  1. //அடடா.. நான் நினைத்து சொல்ல இயலாத வார்த்தைகளை லட்டு மாதிரி போட்டுருகீங்களே. உண்மையிலே நீர் “செந்நாப்புலவர்” தான்..! I Love it.

    //

    நன்றி ஆனந்த் ராஜ்.

    Like

  2. ////உன் அமைதியான தூக்கத்தை ரசிப்பதற்காகவே
    எழும்பும் எனக்கு மட்டும் புரியவே இல்லை
    அதிகாலைத் தூக்கம் அத்தனை அற்புதமா?//
    ரசிக்கின்றவர்களிடமிருந்து மட்டுமே வெளிவரும் வார்த்தை இது…அற்புதம் கவிஞரே!

    //

    நன்றி சகோதரி..

    Like

  3. /அதிகாலை இந்த வார்த்தையை படித்ததும் நீங்கள் கூறிய ஒரு செய்தி என் நினைவில் வந்தது…..:-)
    நினைவுள்ளதா???

    //

    மன்னிக்கவும்.. நான் மறதிக்காரன் ! 🙂

    Like

  4. //அற்புதம்….

    அது அதிகாலை தூக்கம்…

    அற்புதமோ அற்புதம்…..

    மனதிற்கு இனியவரின்

    அதிகாலை தூக்கத்தை,

    ரசிப்பது……………..

    //

    அப்படி சொல்லுங்க !

    Like

  5. அற்புதம்….

    அது அதிகாலை தூக்கம்…

    அற்புதமோ அற்புதம்…..

    மனதிற்கு இனியவரின்

    அதிகாலை தூக்கத்தை,

    ரசிப்பது……………..

    Like

  6. அதிகாலை இந்த வார்த்தையை படித்ததும் நீங்கள் கூறிய  ஒரு செய்தி என் நினைவில் வந்தது…..:-)
    நினைவுள்ளதா???

    Like

  7. //உன் அமைதியான தூக்கத்தை ரசிப்பதற்காகவே
    எழும்பும் எனக்கு மட்டும் புரியவே இல்லை
    அதிகாலைத் தூக்கம் அத்தனை அற்புதமா?//
    ரசிக்கின்றவர்களிடமிருந்து மட்டுமே வெளிவரும் வார்த்தை இது…அற்புதம் கவிஞரே!

    Like

  8. அடடா.. நான் நினைத்து சொல்ல இயலாத வார்த்தைகளை லட்டு மாதிரி போட்டுருகீங்களே. உண்மையிலே நீர் “செந்நாப்புலவர்” தான்..! I Love it.

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.