கவிதை : காதல் வேண்டுதல்

கடற்கரையில்
பூங்காக்களில்
ஆளில்லாத
பேருந்து நிறுத்தங்களில்

எங்கும் சந்திக்க முடிகிறது
காதலர்களை.

பெரும்பாலும்
வெட்கக் குமிழ்களை
உடைத்துக் கொண்டோ ,

கைரேகை
நீளங்களை
அளந்து கொண்டோ ,

கவித்துவமாய்க்
கொஞ்சிக் கொண்டோ ,

பொய்யாய்
சினந்து கொண்டோ ,
அனைவருமே
ஆனந்தமாய் இருக்கிறார்கள்.

இந்தக் காதல் எல்லாம்
தோற்றுப் போய்விடின்
எத்துணை நன்றாய் இருக்கும் ?

“சேர்ந்திருந்தால்
சுகமாய் வாழ்ந்திருப்போம்”
என்னும்
நம்பிக்கைகளாவது
மிச்சமிருக்கும்.

பிடித்திருந்தால் வாக்களிக்கலாமே !

Advertisements

33 comments on “கவிதை : காதல் வேண்டுதல்

 1. உண்மையான வார்த்தைகள் நான் இந்த உணர்வை அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்………..

  Like

 2. உண்மையான வார்த்தைகள் நான் இந்த உணர்வை அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்
  //

  🙂 வாழ்த்துகள் 😉

  Like

 3. உன்னை மறக்க நினைத்து
  உயிரை துறக்க நினைத்து
  கிணற்றின் மேல் ஏறி நின்றால் -உள்ளிருக்கும்
  மீன்களும் உன்னை தான் விசாரிக்கின்றன …..

  இது என்றோ நான் எழுதிய வரிகள். உம் கவிதை வரிகள் என் பழைய கிறுக்கல்களை கிளறி பார்கின்றன… அருமை அய்யா !!

  Like

 4. //உன்னை மறக்க நினைத்து
  உயிரை துறக்க நினைத்து
  கிணற்றின் மேல் ஏறி நின்றால் -உள்ளிருக்கும்
  மீன்களும் உன்னை தான் விசாரிக்கின்றன …..

  //

  அசத்தறீங்க அபர்ணா ! வாவ்…

  Like

 5. Excellent varikal …………… Owesome…………Great…….

  சுகமாய் வாழ்ந்திருப்போம்”
  என்னும்
  நம்பிக்கைகளாவது
  மிச்சமிருக்கும்.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s