கவிதை : வயதானவர் வாழ்க்கை


தலைப்புச் செய்திகளை
மட்டுமே
அவசரமாய் மேய்ந்து வந்த
கண்கள்,
வரி விளம்பரங்களையும்
விடாமல் படிக்கும்.

தொலைக்காட்சியில்
வானிலை அறிக்கை வருகையிலும்
விரல்கள்
ரிமோட் தேடாது.

ஃபேஷன் சானலின்
எண் மறந்து போகும்
நியூஸ் சேனல் எண்
நினைவில் நிற்கும்.

அதிகாலை மூன்றுமணி
தூங்கப் போகும்
நேரமென்பது மாறி,
தூக்கம் வராமல்
எழும்பும் நேரமென்றாகும்.

இந்தக் கால இசை
சத்தம் என்று
சத்தமாய்ப் பேசும்.

இளமைக் கலாட்டாக்கள்
தவறுகளே என்பது
தெரியவரும்

பேசும் போதெல்லாம்
அறிவுரை முறைக்கும்
தத்துவம் தெறிக்கும்

தூங்கும் முன்
மடித்து வைக்கும்
புத்தகத்தில்
ஆன்மீக வாசனை வீசும்.

கிளிக்-க நினைத்தால் Clickகலாம்….

8 comments on “கவிதை : வயதானவர் வாழ்க்கை

 1. //அதிகாலை மூன்றுமணி தூங்கப் போகும் நேரமென்பது மாறி,
  தூக்கம் வராமல் எழும்பும் நேரமென்றாகும்.//
  ஓய்வு நாற்காலியில், சுகமும் இருக்கும் சுற்றமும் இருக்கும்…
  (இப்போ நேரத்துக்கே நேரமில்லை)

  Like

 2. நல்ல கவிதை. எனினும் முதுமை குறித்த சொல்லப்படாத, சொல்லப்பட வேண்டிய கவித்துவங்கள் நிறையவே இருக்கின்றன. முதுமையின் அனுபவ அடர்த்தி இங்கே வீணடிக்கப்படுகிறது என்பதே உண்மை. அவர்களை கௌரவப்படுத்த வேண்டாம். அவமானப்படுத்தாமல் இருக்கவாவது இன்றைய தலைமுறை முயலலாம். மனித மதிப்பீடுகள் ஒவ்வொன்றாக உதிர்ந்து வரும் காலமிது. முதமை மட்டும் அதற்குத் தப்புமா என்ன?

  Like

 3. அண்ணா…இப்பல்லாம் வயதானவர்கள் கொஞ்சம் புறுபுறுத்துக்கொண்டாலும் மாறியிருக்கிறார்கள்.மெகா சீரியல் எல்லாம் பார்க்கிறார்களே.நல்லதுதானே !

  Like

 4. //அண்ணா…இப்பல்லாம் வயதானவர்கள் கொஞ்சம் புறுபுறுத்துக்கொண்டாலும் மாறியிருக்கிறார்கள்.மெகா சீரியல் எல்லாம் பார்க்கிறார்களே.நல்லதுதானே !

  //

  மெகா சீரியல் பாத்தாலே வயசாயிடுமே 😀

  Like

 5. //முதுமையின் அனுபவ அடர்த்தி இங்கே வீணடிக்கப்படுகிறது என்பதே உண்மை. அவர்களை கௌரவப்படுத்த வேண்டாம். அவமானப்படுத்தாமல் இருக்கவாவது இன்றைய தலைமுறை முயலலாம். மனித மதிப்பீடுகள் ஒவ்வொன்றாக உதிர்ந்து வரும் காலமிது//

  ஒவ்வொரு வார்த்தையிலும் உண்மை !

  Like

 6. //ஓய்வு நாற்காலியில், சுகமும் இருக்கும் சுற்றமும் இருக்கும்…(இப்போ நேரத்துக்கே நேரமில்லை)

  //

  வண்டி ஓட்டி ஓட்டியே வயசாயிடும்போல இருக்கா 🙂

  Like

 7. Dear sons ,OLD IS GOLD.Even after the expiry of the old men such as Sivali Ganesan in acting ,Kannadasan in lyrics, sppech by Anna ,Thiru Vi.Ka.,dedicated services by the politicions such as nehru ,kamaraj.achuthamenon.EMS namuthiri,Sen in W.Bengal ,Morarjee,Lalbaghdhur Sasthri,The great leader for this world GANHIJI. are the best examples who served even after old age.Any how your writings are very nice to give the honour to old people.by DK.

  Like

 8. இளமைக்கும் முதுமை வரும்
  இளமைக்கு முதுமை வர முதுமையின் அருமை அறிய வரும்
  இளமைக்கு நேசம் ஒரு பொழுது போக்கு
  இளமை முதுமையை மறந்து பேசும்
  முதுமை இளமையை நினைத்து இரங்கும்
  முதுமைக்கு நேசம் ஆத்மீகத்தில் இருப்பு

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.