கவிதை : ஒற்றை மோகம்.


தொட்டு விட விரல்கள்
துடி துடிக்கும்
அருகினில் நீயின்றி
படபடக்கும்
இருவிழி ஓரங்கள்
நீர்துளிர்க்கும்
அதிலும் உன்முகம்
எதிரொளிக்கும்

கனவுக்குள் உன் பிம்பம்
குடை பிடிக்கும்
அதிகாலை போர்வைக்குள்
அடம்பிடிக்கும்
போலியாய் துரத்தினும்
மனம் அதட்டும்
குளியலைறைக் கதவையும்
அதுதிறக்கும்.

நீயின்றி நீயிருப்பாய்
மனம்சிலிர்க்கும்
என்றேனும் பிரிவாயோ
உயிர்வியர்க்கும்
உறவுக்குப் பெயரென்ன
தலைகுழம்பும்
பெயருக்கு தேவையென்ன
உள்வினவும்

எப்போது பூக்கவேண்டும்
செடி அறியும்
தப்பாமல் அதுபூக்கும்
நிலை நிலைக்கும்
இப்போது ஏன்பூத்தாய்
வினா வினவும்
கேள்வியே மூடமடா
மனம் சிரிக்கும்.

அரும்பியதை விரும்பியதை
உயிர் அணைக்கும்
திரும்பியதும் திசையெங்கும்
அனல் அடிக்கும்
உரிமையென உள்நெஞ்சம்
உனை அணைக்கும்
இல்லையென சொல்னால் மெய்
வெந்து தணியும்.

பிடித்திருந்தால் வாக்களிக்கலாமே…

22 comments on “கவிதை : ஒற்றை மோகம்.

  1. தொட்டு விட விரல்கள்
    துடி துடிக்கும்
    அருகினில் நீயின்றி
    படபடக்கும்
    இருவிழி ஓரங்கள்
    நீர்துளிர்க்கும்
    அதிலும் உன்முகம்
    எதிரொளிக்கும்

    நன்றாய் உள்ளது.வாழ்த்துகள்.

    வதிரி.சி.ரவீந்திரன்.

    Like

  2. //இலகுச் சொல்லில் நெஞ்சைத் தொடும் அற்புத வரிகள் ….

    வரிகள் யாவும் அழகு
    உள்சென்று கதவைத்

    //

    மிக்க நன்றி ஷாமா

    Like

  3. நண்பர் புகாரி… நன்றி…. சினிமாவுக்கெல்லாம் பாட்டெழுதவில்லை 😀 சும்மா, உங்க காற்று கொஞ்சம் இந்தப் பக்கம் வீசிச்சு !

    Like

  4. //கனவுக்குள் உன் பிம்பம் குடை பிடிக்கும்//
    //நீயின்றி நீயிருப்பாய் மனம்சிலிர்க்கும்
    என்றேனும் பிரிவாயோ உயிர்வியர்க்கும்//
    //உரிமையென உள்நெஞ்சம் உனை அணைக்கும்
    இல்லையென சொல்னால் மெய் வெந்து தணியும்.//

    இலகுச் சொல்லில் நெஞ்சைத் தொடும் அற்புத வரிகள் …. 🙂

    வரிகள் யாவும் அழகு
    உள்சென்று கதவைத்
    தாளிட்டுக் கொண்டன!

    Like

  5. U r kavidai looks good but try to avoid to describe about woman because v all have the body which produce stools n nothing more than that.

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.