கவிதை : மரணம் நடந்த வீதி

சத்தமிட்டு
கால்களைக் கட்டிக் கொண்டு
கதறி அழுது
புலம்பியது சுற்றம்.

கதறி அழாதவர்கள்
அன்பு குறைந்தவர்களாய்
கருதப்பட்டார்கள்.

திரட்டிய
கண்ணீர் துளிகளை
முந்தானைகளில் சேமித்து
கூட்டம்
கடந்த பின்,

ஜாமங்களின்
குறட்டை ஒலிகளையும்
மீறி
இருட்டின் விழிகளிலிருந்து
விழுந்து கொண்டிருந்தன
மெளனமான கண்ணீர் துளிகள்.

மின்மினிப் பூச்சிகளின்
மெல்லிய வெளிச்சத்தில்
பளீரிட்டது
இறந்து போனவரின்
கண்ணீர் விழிகள்.

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

21 comments on “கவிதை : மரணம் நடந்த வீதி

 1. எத்தனை முறைதான் உங்களைப் பாராட்டுவது?…. 🙂
  பாராட்டாமல் இருக்க ஒரு சந்தர்ப்பம் தாருங்களேன் சேவி ப்ளீஸ்! 🙂
  உணர்வைத் தொடுகிறது சேவி….

  மெளனமான கண்ணீர்த்துளிகளுக்கு இறந்த கண்ணீர்த்துளிகள் ஆறுதல் கூறுவது நெஞ்சைத் தொடுகிறது!….
  வாழ்த்துகள் உங்கள் கவிப் பயணம் தொடர!

  Like

 2. எதிர்கவுஜை

  ஏன் என் கணவனே?
  ஒரு அரை மணிநேரம்
  தாமதித்திருக்கக் கூடாதா!
  அப்படி என்ன அவசரம்?
  போய்ச் சேர்வதற்கு?
  ஆக்கப் பொறுத்தவன்
  தின்னப் பொறுக்கவில்லையே!
  நீ தின்னாமல் சாகவில்லை,
  தின்னவிடாமலும் செத்துவிட்டாய்…

  ச்சீய்… உன் கட்டை வேகாமல் போகட்டும்…

  இவள் – நீ பட்டிணியாய் விட்டுச் சென்ற உன் மணைவி

  Like

 3. விஜய்…. உன்னுடைய படைப்புகளில் மிதக்கும் அங்கதச் சுவை நான் எப்போதுமே ரசிப்பது ! நன்றி 🙂

  Like

 4. அன்பு நண்பரே !

  என்ன அருமையான வரிகள்
  உங்கள் கவிதை சாலையை விட்டு
  என் விழி பாதங்கள்
  வெளி வர மறுக்கின்றன..

  ஒவ்வொரு கற்களும்
  பதமாக அடுக்க பட்டிருக்க
  அற்புதமான பயணம் ……….

  ஜாமங்களின்
  குறட்டை ஒலிகளையும்
  மீறி
  இருட்டின் விழிகளிலிருந்து
  விழுந்து கொண்டிருந்தன
  மெளனமான கண்ணீர் துளிகள். (miga miga arumai)

  Like

 5. very nice kanniruku evalavu vilakkam thara mudiumanu na ethir pakkala sir……….valthukal melum pala padaippukalai padaikka………..

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.