கவிதை : பின் தொடரும் சிரிப்புகள்.

என்னுடைய
சிரிப்பைப் பார்த்து
கேலியாகச் சிரிக்கிறது
எனது
இன்னொரு சிரிப்பு.

அதுதான் உண்மையென்பது
அதன் வாதம்,
இது தான் உண்மையென்பது
இதன் நியாயம்.

பின்
இரண்டு மூன்றாகி
கூடைக் கணக்காகி
மாலையில்
என்னைப் பின் தொடர்ந்து
துரத்துகின்றன
சிரிப்புப் பேரணிகள்.

எது
உண்மையான சிரிப்பென்று
ஒத்துக் கொள்ள வேண்டுமாம்
நான்.

மாலையில் சிரிக்கிறேன்
வாசலில் நிற்கும்
மழலையைப் பார்த்து.

தீர்ந்து போய் விடுகிறது
பின் தொடர்ந்த
சிரிப்பின் ஒலிகள்

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

Advertisements

26 comments on “கவிதை : பின் தொடரும் சிரிப்புகள்.

 1. போலியான சிரிப்புகளின் மத்தியில் கள்ளம் கபடமற்ற மழலைச் சிரிப்பு!…. அடடா…. அற்புதம்!
  அழகா கூறிட்டீங்க சேவி…. “குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று!” ன்னு. 🙂
  தெய்வத்தைக் கண்டதும் பின்தொடர்ந்த போலிகள் கருகிவிட்டனவோ?! 🙂 ஆஹா பிரமாதம்!

  Like

 2. பிறந்த குழந்தையின் கள்ளமில்லாத சிரிப்பத்தவிர சிரிப்புக்களில்தான் எத்தனை போலித்தனங்கள் !

  Like

 3. பிரதீப் ஆறுமுகம் கார்த்திக்கேயன்

  மிகவும் பிடித்திருந்தது.. நன்றி..

  Like

 4. //பிறந்த குழந்தையின் கள்ளமில்லாத சிரிப்பத்தவிர சிரிப்புக்களில்தான் எத்தனை போலித்தனங்கள் !

  //

  நன்றி ஹேமா.

  Like

 5. ஆயிரம்
  பொய்கள்
  போட்டியிட்டாலும்,

  அவற்றை
  ஜெயிப்பது
  ஒற்றை
  உண்மைதான்……

  Like

 6. //ஆயிரம்
  பொய்கள்
  போட்டியிட்டாலும்,

  அவற்றை
  ஜெயிப்பது
  ஒற்றை
  உண்மைதான்……

  //

  அதானே ! அசத்துங்க..

  Like

 7. Dear son (because I am an old man of 62 age ),your words are so effect that a zen lines will give .There is NO equal to the smile of a child.Even that smile wins the cruel of thinking in a man.Keep it up.By DK

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s