கவிதை : வரவேற்பறைக் காட்சிகள்

வரவேற்பறையிலேயே
வைக்கப்படுகிறது
காட்சிப் பொருட்கள்
நிறைந்து வழியும்
கண்ணாடி அலமாரி.

சொல்லாமல் சொல்லும்
பெருமைப் பதக்கங்களும்,
பரிசாய்க் கிடைத்த
பஞ்சுப் பொம்மைகளும்,
வியக்க வைக்கும்
வெளிநாட்டுப் பொருட்களுமாய்.

கவனமாய் அடுக்கப்பட்டிருக்கும்
அதற்குள்
எப்போதும்
இடம்பெறுவதில்லை
தோல்விகளின் சின்னங்களோ,
அவமானங்களின் அறிவிப்புகளோ.

இடப்பற்றாக்குறை
நெருக்கியடிக்கையில்
இடம் பெயரும் பொருட்கள்
தொலைக்காட்சிக்கு மேலும்
இடம் பிடிப்பதுண்டு.

எங்கும் இட ஒதுக்கீடு
கிடைக்காதவை
படுக்கையறை பரணில்
பெட்டிகளுக்குள் பத்திரமாய்.

வரும் குழந்தைகள்
விளையாடக் கேட்பினும்
மூச்சு முட்ட
மூடிக் கிடப்பவை மட்டும்
திறக்கப் படுவதேயில்லை.

உள்ளிருந்து
ஏக்கமாய்ப் பார்த்துக் கொண்டிருக்கும்
பொம்மைகள்
இயலாமையின் உச்சத்தில்

0

பிடித்திருந்தால் கிளிக்குங்கள்…

14 comments on “கவிதை : வரவேற்பறைக் காட்சிகள்

 1. /* எப்போதும்
  இடம்பெறுவதில்லை
  தோல்விகளின் சின்னங்களோ,
  அவமானங்களின் அறிவிப்புகளோ */
  super..

 2. //உள்ளிருந்து ஏக்கமாய்ப்
  பார்த்துக் கொண்டிருக்கும் பொம்மைகள்
  இயலாமையின் உச்சத்தில்//
  முத்தாய்ப்பின் உச்சமாய் கவிதையின் கடைசி வரிகள்….அழகோ அழகு!

 3. அழாகான, கள்ளம்கபடமற்ற கவிதை. சேவியின் சிரிப்பை போலவே.. வாழ்த்துக்கள் தோழா

 4. கவிதையை படித்தேன்….
  கண் முன் விரிந்தது
  வரவேற்பறை……
  சூப்பர்………

 5. //கவிதையை படித்தேன்….
  கண் முன் விரிந்தது
  வரவேற்பறை……
  சூப்பர்………

  //

  நன்றி சகோதரி…

 6. //அழாகான, கள்ளம்கபடமற்ற கவிதை. சேவியின் சிரிப்பை போலவே.. வாழ்த்துக்கள் தோழா

  //

  நன்றி வைகை ரூபன்:)

 7. //உள்ளிருந்து ஏக்கமாய்ப்
  பார்த்துக் கொண்டிருக்கும் பொம்மைகள்
  இயலாமையின் உச்சத்தில்//
  முத்தாய்ப்பின் உச்சமாய் கவிதையின் கடைசி வரிகள்….அழகோ அழகு!

  //

  நன்றி ஷாமா…

 8. நன்று தோழரே…
  \\கவனமாய் அடுக்கப்பட்டிருக்கும்
  அதற்குள்
  எப்போதும்
  இடம்பெறுவதில்லை
  தோல்விகளின் சின்னங்களோ,
  அவமானங்களின் அறிவிப்புகளோ.\\
  ரசித்துப் படித்த வரிகள் இவை.

  தங்களுக்கு பன்முகத் திறமையாளர் விருது வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், விவரங்களுக்கு எமது வலைத் தளத்தைப் பார்க்கவும்.

  -நுண்மதி

 9. I’m sorry. this is not a best place for this requests. but please check this for me.
  vtthuvarakan.blogspot.com/2012/04/blog-post_21.html?m=1
  I was confused. I just wanted to define its category…..

 10. வெளிநாட்டிலிருந்து குழந்தைகளுக்கு வாங்கி வந்த விளையாட்டுப் பொருட்கள் காட்சிப் பொருளாய் கண்ணாடி அலமாரியில் ஆசாகாய் வைக்கப் பட்டுள்ளன (பையன் விளையாடும்போது பொருளை உடைத்து விடுவானாம் )

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s