பாடல் : முகிலே முகிலே
இசை : சஞ்சே
பாடல் வரிகள் : சேவியர்
குரல்கள் : ரோகினி, எம்.சி ஜீவா
ஆல்பம் : பைரவன் http://www.tamilbadboy.com/bhairavan.zip
தயாரிப்பு : TBB Entertainment, London.
பெண்
முகிலே முகிலே
உனைப்போல் எனை
மிதக்கச் செய்வாயா ?
மழையே மழையே
உனைப்போல் எனை
குதிக்கச் செய்வாயா
அடடா மனம் ஓடுதே
கடிவாளம் உடைத் தோடுதே
அடடா உயிர் தேடுதே
மெய்மறந்தேனே
பெண்
கரையைத் தாண்டும் நதியின் விரலாய்
உடலைத் தாண்டி உயிரோடும்
தரையைத் தீண்டும் பறவை இறகாய்
சத்தம் இன்றி சாய்ந்தோடும்
அடடா காற்றிலே
சிலை யார் செய்ததோ
வருடும் கைகளை
யார் கொடுத்ததோ
மெதுவாய் மெதுவாய் முத்தம் தருதோ
ஆண் :
உன் தேகம் கால் கொண்ட நிலவா
உன் பாதம் பூமிக்கு வரமா
உன் கூந்தல் விரல் நீட்டும் இரவா
நீ தேவ இனமா
You can download the song for Free @ http://www.tamilbadboy.com/bhairavan.zip
///அடடா மனம் ஓடுதே…
கடிவாளம் உடைத் தோடுதே…
அடடா உயிர் தேடுதே…
மெய்மறந்தேனே…///
அருமை… வாழ்த்துக்கள்…
LikeLike
அருமையான கவிதை .பாடலும் கேட்டேன் நன்றாக உள்ளது .போட்டிருக்கும் படமும் சிறப்பு ஆனால் குழந்தைகள் பிடித்திருக்கும் ஆயுதம் ‘பி.ஜே.பி’ யை நினைவுக்கு கொண்டு வருகிறது (அதனை ரசிக்க முடியவில்லை )
LikeLike