காதல் & நட்பு

காதல்


வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம்
பேசுகிறது நட்பு
வாய்ப்புக் கிடைக்காத போதும்
பேசுகிறது காதல்.

வெட்கத்தில்
உதடு கடிக்காதே கண்மணி,
கொடிகள்
தன் கனியைத் தானுண்பதில்லை !


செடிகளுக்குத் தெரிவதில்லை
காலமும், நேரமும்.
அவள்
பிரிந்து சென்ற
துயரத்தின் காலையிலும்
பூத்துச் சிரிக்கிறது ஸ்நேகமாய் !


கேட்டுப் பெறுவதல்ல முத்தம்
வெட்கத்தில் சிணுங்குகிறாய்
நீ.
கேட்டேனும் பெறவேண்டும் முத்தம்
பக்கத்தில் நெருங்குகிறேன்
நான்.


உடைமாற்றி வருகிறேன்
என
உள்ளே செல்கிறாய் நீ.
சொல்லாமல் சென்றிருக்கலாமே
என்கின்றன
என்
சில்மிஷக் கற்பனைகள்

One comment on “காதல் & நட்பு

  1. நிறைய நாட்களாகி விட்டன இந்த மாதிரிக் கவிதைகளைக் கேட்டு!
    அற்புதம்!
    சிவபாலன் – நியூயார்க்

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.