ஒருமுழம் அறிவுரை

mermaid-993868_6400

ஒரு முழம்
வலையை வைத்துக் கொண்டு
யாரேனும்
கடலுக்குள்
மீன் தேடுவார்களா ?

இல்லை
அரையடித்
தூண்டில் கயிறு கொண்டு
ஆழ
அணைக்கட்டில்
உறு மீனைத் தேடுவார்களா ?

வெற்றி
கடலில் தான் இருக்கிறது
கால்வாயில்
இல்லை என்பதும்,

வாழ்க்கை
அணையில் தான்
இருக்கிறது
வாய்க்காலில் இல்லையென்பதும்
புரிதலின் பலவீனங்கள்.

இருப்பது
எதுவெனப் புரிதலும்,
புரிந்த பின்
சரியானதைச் செய்தலுமே
வெற்றிக்கான
இரண்டு கட்டளைகள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s