சுத்தச் சாலைகள்

vespa-517227_640

பேருந்திலிருந்தே
தூக்கி வீசுகிறாய்
மிச்ச உணவுப் பொட்டலத்தை.

அவ்வாறே செய்கிறாய்
பாதி கடித்த
பழத்தையும்.

உன்
மிச்சங்களினால்
அழுக்கு மச்சங்களைப்
பூசிக் கொள்கின்றன
பாதைகள்.

அழுகியவற்றையும்,
தேவையற்றவைகளையும்
கொட்டும்
நீளமான கூவமாக
நினைக்கிறாய் சாலையை.

சுத்தமாக்க வேண்டாமா ?
உன்னால்
சீர் படுத்த இயலாவிடில்
அலைய விடு
ஆறு கோடிக் காக்கைகளை.

நல்ல வேளை
காக்கைகள்
நாகரீகம் கற்றுக் கொள்ளவில்லை
மனிதர்களைப் போல.

0

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s