0
மேடையில்
ஏற்றி வைக்கிறோம்
எல்லோரும்
அவரவர் மெழுகுவர்த்திகளை.
வெளிச்சத்தில்
வித்தியாசம் காணப்படவில்லை,
உன் வெளிச்சம்
என் வெளிச்சம்
என
பிரிக்கவும் இயலவில்லை.
ஆனாலும்
கடைசியில்
அடையாளம் கண்டு
எடுத்துச் செல்கிறோம்
அவரவர் மெழுகுவர்த்திகளை !
0