♥
அடுத்தவர் வாழ்க்கை
அமைதியாய்க் கழிவதாகக்
கருதிக் கொள்கிறது
ஒவ்வொருவர் வாழ்க்கையும்.
ஒப்பீடுகளின்
உரசல்களால்
எரிந்து கொண்டிருக்கின்றன
உறவுகளின் காப்பீடுகள்.
அழுகையையும்
இயலாமையையும் புதைக்க
எல்லோரும்
தேடுகின்றனர்
சதுர அடிகளில் சில அறைகள்.
திரைச் சீலைகளும்
தாழிட்ட சன்னல்களும்
மம்மிகளை
உள்ளுக்குள் நிறைத்து
பூங்காக்களை
வாசல் வழியே அனுப்பிக் கொண்டிருக்கின்றன
எப்போதேனும்
ஆறுதல் தேடி
அடுத்த வீட்டுக் கிணற்றடியில்
அமரும் பெண்களும்,
எதேச்சையாய்
பார்களில் சந்தித்துக் கொள்ளும்
ஆண்களும்,
கண்டு கொள்கின்றனர்
தமது குடும்ப வாழ்வின் மகத்துவத்தை