நிதி நிறுவனச் சுருட்டல்கள்

Image result for chit fund cheat

எறும்புகளின் சேமிப்பை
எரிமலைகள்
விழுங்கித் தீர்க்கின்றன.

வாழ்க்கை வெயில்
வந்து சேரும் முன்,
பனித்துளிகளை
பூக்களே
திருடித் தின்கின்றன.

வயிற்றுக்கான போராட்டத்தில்
வறியவனின் நம்பிக்கைகளை
சில
கொள்ளிவாய்ப் பிசாசுகள்
கொள்ளையிடுகின்றன.

பாவம்,
இவர்கள் இறக்கிவைத்த
பாரம்,
இவர்கள் மேல்
பாறாங்கல் ஏற்றிப் போகிறது.

இவர்களின்
இமைகளுக்குள் குதித்து
கனவுகளைத்
திருடிச் செல்கின்றன
சில
பேராசைப் பிணங்கள்.

ஒவ்வோர் பூக்களாய்
சிறகு வலிக்க
தேடிச் சென்று,
அடைகளில் அடைத்துவைத்த
தேனை
காட்டு நரிகள்
கடித்துக் குதறுவதில்
கண்ணில் இரத்தம் வடிகிறது.

இந்த வயிற்றுக் கூட்டத்தின்
கழுத்துகளில்
வறுமைக் கோடு முடிச்சிட,
நம்பிக்கையின் நட்டெலும்பை
சுரண்டல்
சுத்தியல்கள் உடைக்கின்றன.

எப்படித் தான்
மனசு வருகிறதோ ?

பட்டினிச் சிறகுகளைப்
பிடுங்கி
சுய காற்றாடிகள் செய்ய ?

கண்ணீ­ரைப் பிழிந்தெடுத்து
சுய
அணைகளில் நீர்தேக்க.

புரிந்து கொண்டால்
நல்லது.

இவர்கள்
மனிதர்களை அறுத்து
செய்து குவிப்பதெல்லாம்
சுய நிம்மதியைப் பூட்டும்
சவப்பெட்டிகள் என்பதை.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s