உன்னிடம் கொஞ்சம்
பேசவேண்டும்.
உன்
அன்றாட அலைச்சல்கள்
நான் அறிகிறேன்.
தண்ர் இல்லாக்
குளியலறைச் சிக்கல்.
படிக்கட்டும் மிச்சமில்லா
பயண மிரட்டல்கள்,
முகத்துக்கு மூன்றடுக்கு
சாயம் பூசும்
சாலைப் புழுதிகள்,
சூரியனை விட
அதிகமாய்ச் சுடும்
ஆட்டோக் கட்டணங்கள்,
மௌனத்தை
சிலுவையில் அறையும்
சத்த ஆணிகள்,
அங்கீகரிக்காமல் அமுக்கப்படும்
அப்பழுக்கற்ற
திறமைகள்,
பொருளாதாரத்
தோலுரிக்கும்
விலைவாசிப் பாம்புகள்,
எல்லாம்.. எல்லாம்
உன்னை நோக்கிப்
பாயும்
கண்கொத்திப் பாம்புகளே.
இத்தனை கழுகுகள்
உன்னைச் சுற்றிப் பறந்தாலும்,
நீ
உன்
நிதானச் சிறகுகளை மட்டும்
முறித்துப் போடாதே.
ஒரு
புன்னகையில் பூமியை
ஏற்றுக் கொள்.
அதற்கு முன்
உன்
இதயத்துக்குச் சொல்லிவை.
வழியில் செல்லும் வலிகளை
வலிய வாங்கி வைக்கும்
சோக வங்கி
ஆகவேண்டாமென்று.
Advertisements