சிறு கதை : தற்காப்புத் தலைவலி

police.jpg

 போலீஸ் குடியிருப்புக்குள் பயங்கர நிசப்தம். பொழுது இன்னும் விடியவில்லை.

கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு மெதுவாய் கதவு திறந்து பார்த்தான் ஆன்றணி  .

வெளியே, சக தொழிலாளி ஜேம்ஸ்? நின்றிருந்தார்.

வாப்பா ஜேம்ஸ்.. என்ன காலங்காத்தால ? கேட்டுக் கொண்டே கதவை முழுசாய்த் திறந்த ஆன்றணி க்கு வயது 40 இருக்கும். ஆனால் 32 க்கு மேல் சத்தியம் பண்ணிச் சொன்னால் கூட யாரும் நம்பமாட்டார்கள். போலீஸ் அதிகாரி. அதற்கே உரிய கம்பீரம். துணிச்சல், நேரான பார்வை.

காவல் துறையில் “அதிரடிப்படை” எனும் பிரிவில் பணிபுரிகிறார். எப்போதெல்லாம் கலவரங்கள் நடக்கிறதோ அப்போதெல்லாம் ஆயுதம் ஏந்தி கலவரத்தை அடக்க வேண்டிய பணி.

இன்று வரைக்கும் ஐந்து காசு கூட லஞ்சம் வாங்கியதில்லை. இதை வெளியே சொன்னால், பொழைக்கத் தெரியாதவன், இவன் எல்லாம் லஞ்சம் வாங்கலேன்னா நாட்டுல லஞ்சம் ஒழிஞ்சுடும் பாரு, என்று சக போலீஸ் காரர்களும், “ஆமாம் வெளிப்பார்வைக்கு நல்லவன், அப்பப்போ நல்ல தொகையா சுருட்டுவான்னு நினைக்கிறேன்” என்று பக்கத்து வீட்டுக்காரர்களும் திட்டுவதை ஒரு காதில் வாங்கி மறு காதில் விடுபவன்.

ஏன் அவ்வப்போது மனைவியே சொல்வதுண்டு, ம்…ம்… பக்கத்து வீட்டுல பிரிட்ஜ் வாங்கியிருக்காங்க, அவங்களுக்கு நல்ல வருமானம் போல இருக்கு என்று. அப்போதெல்லாம் கண்டிப்பான ஒரு பார்வை பார்ப்பார், அவ்வளவு தான். அதற்குமேல் அவருடைய மனைவி எதுவும் பேசுவதில்லை.

கமிஷனர் உங்களை உடனே பார்க்கணும்ன்னு சொன்னாரு. கமிஷனரா ? எதுக்காம் ? … புரியாமல் தாடையைச் சொறிந்தார் ஆன்றனிஎனக்குத் தெரியல, ஆனா கமிஷனர் ரொம்ப பதட்டமா இருக்காராம். கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி நடந்த ஷூட்டிங் விஷயமான்னு தெரியல.

இப்போது ஆன்றணிக்கு விஷயங்கள் புரியத் துவங்கின.

ஆறு மாதங்களுக்கு முன்னால், பெசண்ட் நகர் பீச் பக்கமாக ஒரு ஊர்வலம் திடீரென்று கலவரமாக வெடித்தது. என்ன செய்தும் கலவரத்தை அடக்க முடியவில் லை.கூட்டம் பேருந்தைக் கொளுத்துவதும், கடைகளை உடைப்பதுமாய் அட்டகாசம் செய்து கொண்டிருந்தது. அப்போது ஆன்றனி தான் அதிரடிப்படை பொறுப்பில்
இருந்தான். ஷூட்டிங் ஆர்டருக்காக காத்திருந்து காத்திருந்து கண்முன்னால் நடந்த கொடுமைகளை எல்லாம் கையில் மிஷின் கண்னோடு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நிகழ்ச்சி நினைவுக்குள் விழுந்தது.

காவல் துறை வெளியிலிருந்து பார்ப்பதற்குத் தான் நன்றாக இருக்கும், உள்ளே கண்டிப்பாக நிலமை மிகவும் மோசம். மாதச் சம்பளம் வாங்கும் குமாஸ்தா வேலை போல போலீஸ் வேலையைப் பார்ப்பவர்கள் தான் அதிகம். விறைப்பாய் நின்று சல்யூட் அடிப்பதும், ஷூட்டிங் ஆர்டர் கிடைக்கவில்லையென்றால் ஆயிரம் பேர்
செத்தாலும் பக்கத்திலிருந்து பிணங்களைப் பாதுகாப்பதும் தான் போலீஸ் வேலை.

காவல் துறைக்குள் நுழையும் போது இருக்கும் வேகம் எல்லாம் உண்மையான அதன் முகம் கண்டு ஆறிப் போய்விடும். இரவு முழுவதும் ரோந்து சுற்றி, ஏதோ ஒரு இடத்தில் படுத்து கொசுக்கடி வாங்கி தூக்கம் இல்லாமல் கஷ்டப்படுவது கான்ஸ்டபிள் நிலையிலிருப்பவர்கள் மட்டும் தான். உயரதிகாரிகளெல்லாம் மந்திரிகளை விட அதிகமாகவே பந்தா விடுபவர்கள்.

ஏதாவது பிரச்சனை என்றால் கான்ஸ்டபிள்களைக் கடிந்து கொள்வதும், பெருமை என்றால் தானே சிரிப்புடன் ஏற்றுக் கொள்வதும் தான் உயரதிகாரிகளின் வேலையே !!!. கடை நிலைக் காவலர்கள் எல்லாம், கார்ப்பரேஷன் தண்ணிக்கு குடத்தோடு அலைந்து, அவ்வப்போது வரும் 300 ரூபாய் பயணப்படிக்கு எழுத்தாளர் முன் வரிசையாய் நின்று, வெயிலில் கருகி, மழையில் நனைந்து விடுப்பே இல்லாமல் வேலை செய்யும் நடுத்தர மக்கள் தான். எல்லோருடைய கத்தல் களையும் கேட்டு உள்ளத்துக்குள் எரிந்து கொண்டிருக்கும் சாதாரன மக்கள் தான்.

யாருங்க ? காலைல ? டியூட்டி ஏதாவது வந்திருக்கா ? கேட்டபடியே படுக்கைஅறையிலிருந்து எட்டிப் பார்த்தாள் ஷைலஜா ஆன்றனியின் மனைவி. இன்னும் தூக்கம் கலையாத கண்கள். மகள் ரம்யா இன்னும் தூங்கிக் கொண்டிருந்தாள் போர்வையைக் கடித்தபடி.

ம்.. கமிஷனருக்கு என்னைப் பாக்கணுமாம்… போய் பாத்துட்டு வரேன்.

என்னங்க மறுபடியும் எல்லாத்தையும் துருவித் துருவி விசாரிக்கப் போறாங்களா ?
பயமா இருக்குங்க .. என்ற மனைவியைப் பார்த்து லேசாகச் சிரித்துவிட்டு, பிரேக் பாஸ்ட் ரெடிபண்ணி வை சாப்பிட வரேன், என்றபடி கொடியில் கிடந்த சட்டைஒன்றை எடுத்து மாட்டி விட்டு கிளம்பினார் ஆன்றனி

இதுவரைக்கும் நான்கு விசாரணைக்கமி?ன் போட்டாயிற்று. டி.ஐ.ஜி஢, ஐ.ஜி஢, கமிஷனர், உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் என்று எல்லா மட்டத்தினரோடும் பேசியாகிவிட்டது. இப்போது மீண்டும் ஒரு அழைப்பு. எதற்கென்று தெரியவில்லை. இருந்தால் மேல் மட்டத்தில் இருக்கவேண்டும், இல்லையேல் கடைசி நிலையில் இருக்கவேண்டும் இல்லாவிட்டால் பிரச்சனைதான். இதைப்பண்ண நீ யார் ? என்று மேல்மட்டம் மிதிக்கும். உனக்கு வேறு வேலை இல்லையா என்று கீழ் மட்டம் கேலிபேசும்.

அந்த கலவரம் … அதை இப்போது நினைத்தாலும் மனசு துடிக்கிறது. சாலையோரம் நின்று கொண்டிருந்த எல்லா அப்பாவி ஜனங்களின் தலையிலும் இரத்தக்காயம்… பெண்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடுகிறார்கள். கையில் துப்பாக்கியோடு உத்தரவுக்குக் காத்திருக்கும் அதிரடிப்படையினர்.

என்ன செய்வதென்று தெரியாமல், கையிலிருந்த துப்பாக்கியை யாராவது வாங்கி திருப்பிச் சுட்டுவிடக் கூடாதே எனும் கவலையில் இறுகப் பிடித்துக் கொண்டிருந்தபோது தான் அது நடந்தது. கண்முன்னால் தன்னோடு பணிபுரியும் ஒரு காவல் துறை அதிகாரியை ஓட ஓட விரட்டிக் கொண்டிருந்தது ஐந்து பேர் அடங்கிய ஓர் அரிவாள் கும்பல்.

ஒரு மனிதனை பொறுமையின் எல்லை வரை துரத்தினால் பிறகு என்ன தான் செய்ய முடியும், பொறுமையைத் துறப்பதை விட ?. இதற்கு மேலும் பொறுக்க முடியாது.
“என்ன வந்தாலும் இந்த மண்ணு மேல தான்” என்னும் வழக்கமான வார்த்தைய மனசுக்குள் நினைத்துக்கொண்டு கையிலிருந்த நவீன துப்பாக்கியை எடுத்து, அந்த கும்பலைச் சேர்ந்த ஒருவனின் நெஞ்சுக்கு நேராய் நீட்டினார் ஆன்றனி.

அந்த கும்பல் அசரவில்லை ஏதோ சுதந்திரப்போராட்ட வீரர்களைப் போல நெஞ்சு நிமிர்த்தி நின்று முறைத்தார்கள். ஆன்றனி சுட்டார், சரியாக … மிகச் சரியாக… முதலின் நின்றவனின் மார்பு நோக்கி…எங்கிருந்து தான் அந்த காமிரா கண்சிமிட்டியது என்று தெரியவில்லை. தோளில் பையோடு ஒரு பத்திரிகைக் காரன், கூட்டத்துக்கிடையே நழுவுவது தெரிந்தது.

கமிஷனர் அலுவலகம் முன் தன்னுடைய பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தார் ஆன்றனி உள்ளே உட்கார்ந்திருந்த கமிஷனர் முன் விரைப்பாய் நின்று சல்யூட் அடித்தார்.

வா ஆன்றனி உட்காரு.

பரவாயில்லை சொல்லுங்க சார்.

இத பாரு ஆன்றனி., நிலமை ரொம்ப இக்கட்டாயிடுச்சு. பத்திரிகைக் காரன் ஒருத்தனால தான் இந்த பிரச்சனையே பூதாகரமாச்சு…. நான் சொல்றது உனக்குப் புரியுதுன்னு நினைக்கிறேன்… அந்த ஷூட்டிங் இஷ்யூ பத்தி தான் பேசிட்டிருக்கேன்… இப்போ வேற வழியே இல்லை. நீ ஒத்துக் கிட்டு தான் ஆகணும். பெரிய பிரச்சனை எதுவும் இல்லாம நான் பாத்துக்கறேன். ஒரு வாரமோ, இரண்டு வாரமோ சஸ்பெண்ட் ல இருக்க வேண்டி
வரும் அவ்வளவு தான். உங்களுக்கு நான் என்ன ஹெல்ப் வேணும்னாலும் பண்றேன். தயவு செய்து ஒத்துக்குங்க. ஒரே ஒரு ஸ்டேட் மெண்ட் எழுதிக் கொடுங்க போதும்.

சார்… நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியுது.. ஆனா என்ன பண்றது. நான் தான் சுடவே இல்லையே. சுட்டிருந்தா நான் ஏன் கவலைப்படப் போறேன். சாரி ..சார் என்னால எந்த ஸ்டேட்மெண்டும் எழுதித் தர முடியாது.

ஆன்றனி, வீணா முரண்டு பிடிக்காதீங்க, சுட்டது நீங்க தான். நான் ஷூட்டிங் ஆர்டர் தராம நீங்க சுட்டது சட்டப்படி குற்றம். அதுல ஒரு உயிர் வேற போயிருக்கு. இதுக்கெல்லாம் பதில் சொல்ல வேணுமா வேண்டாமா ? கமிஷனர் குரலில் கொஞ்சம் இறுக்கம் கூடியிருந்தது.

சார் உங்களுக்கே தெரியும், அன்னிக்கு சுட்டது நான் தான். அன்னிக்கே நான் உங்க கிட்டே வந்து உண்மையைச் சொன்னேன். நீங்க என்ன சொன்னீங்க ?  போலீஸ் சுட்டதா சொன்னா பிரச்சனை பெரிசாகும், கலவரத்துல செத்துட்டான்னு சொல்லு ன்னு .
சொன்னேன்.

டிபார்மெண்ட் ல எல்லா தோட்டாக்களையும் திருப்ப ஒப்படைச்சதா ஒப்பமிடச் சொன்னீங்க செய்தேன்.

அன்றைக்கு நீங்க உண்மையை எதிர் கொள்ள பயந்தீங்க, ஏன்னா அன்னிக்கு ?஥ஷூட்டிங் ஆர்டர் தர ஧வண்டியது நீங்க. ஆனா தரல. பத்திரிகைக் காரன் ஏதோ போலீஸ்காரன் தான் சுட்டான்னு பேப்பர்ல போட்டான்.. நல்லவேளை போட்டோ வில சுடப்பட்டவன் மட்டும் தான் இருந்தான். அன்னிக்கு மட்டும் நான் சுடலேன்னா கண்டிப்பா நம்ம போலீஸ் டிபார்ட்மெண்ட்ல இரண்டு உயிராவது போயிருக்கும்.

குருவி சுடறதுக்குத் தான் போலீஸ் துப்பாக்கின்னு ஊர் கேவலமா பேசி இருக்கும். ஆனா இப்போ ஏதோ ஒரு அரசியல் ரெளடி தான் செத்துப் போயிருக்கான். ஒரு கலவரத்தை அடக்கினதுக்காக, டிபார்ட்மெண்ட் ஆட்களோட உயிரைக் காப்பாதினதுக்காக நான் தண்டனை அனுபவிக்க முடியாது சார். ஒரு நல்ல காரியம் செய்த திருப்தி தான் எனக்கு இருக்கு, இந்த பிரச்சனைல நான் பலிகடா ஆக முடியாது.
இனிமே நான் ஒத்துக்கிட்டா, எப்படி அன்னிக்கு மொத்த தோட்டாவையும் திருப்பிக் கொடுத்தே ? அப்படின்னா நீ தீவிரவாதியா ? இல்லை விடுதலைப்புலி கூட உனக்கு நெருங்கிய தொடர்பான்னு கேட்டு ஜெயில்ல போடுவாங்க.

நீங்க மத்தவங்க போடற சல்யூட்டை வாங்கிட்டு காவல்துறையிலே களையெடுப்பேன் னு பேட்டி குடுப்பீங்க. அதெல்லாம் என்னால முடியாது சார். உங்களுக்கும் எனக்கும் தெரிஞ்ச உண்மை… நமக்குள்ளே செத்துப்பேயிடறது தான் நல்லது. இன்னும் நாலு விசாரணைக் கமிஷன் வரட்டும், அன்னிக்கு அதிரடிப்படைல நான் இருந்தேங்கிற காரணத்துக்காக நான் எல்லாருக்கும் பதில் சொல்றேன். மற்ற படி … என்னை மன்னிச்சிடுங்க. ஆன்றனி நீளமாய் பேசி நிறுத்தினான்

ஆன்றனி யார் கூட பேசறீங்கங்கிறதை மறந்துட்டு பேசறீங்க… நான் உன்னோட உயர் அதிகாரி. கமிஷனர் குரலில் தோல்வி தூண்டிவிட்ட கோபம் தெறித்தது.

அப்படின்னா இனிமேலாவது இந்த கீழதிகாரி கிட்டே கெஞ்சுறதை நிப்பாடுங்க சார்…

சொல்லிவிட்டு விறைப்பாய் சல்யூட் ஒன்றை அளித்துவிட்டு வெளியேறி நடக்கத் துவங்கினார் ஆன்றனி

வெளியே நன்றாக விடிந்திருந்தது.

சதியும், வலியும், சிலுவை மரணமும்

அனைவருக்கும் உயிர்ப்புப் பெருவிழா நல் வாழ்த்துக்கள்

voorpilatus.jpg


சதி ஆலோசனை முற்றம்.

கயபா என்னும் தலைமைக் குருவின் மாளிகை முற்றத்தில் தலைமைக் குருக்கள், மக்களின் மூப்பர்கள், மறைநூல் வல்லுனர்கள் எல்லோரும் ஒன்று கூடினார்கள்.

‘இயேசுவை நாம் ஏதாவது செய்தாக வேண்டும். இந்த மூன்று ஆண்டு கால இடைவெளியில் அவனுடைய புகழ் எல்லா இடங்களிலும் பரவி விட்டது. இந்த நிலை நீடித்தால் நமக்குக் கொஞ்ச நஞ்சம் மிஞ்சியிருக்கும் பெயரும் அடியோடு போய்விடும். இப்போதே மக்கள் இயேசுவின் பின்னால் தான் அலைகிறார்கள். நாம் ஏதாவது செய்தாக வேண்டும்’

‘ஏதாவது அல்ல. அவரை ஒழித்துக் கட்ட வேண்டும். பல முறை மிரட்டிப் பார்த்தாயிற்று. மசியவில்லை’

‘பல முறை கல்லெறிய முயன்றோம் அகப்படவில்லை’

‘பல தடவை கேள்விகளால் குடைந்து அவனுடைய நற்பெயரைக் கெடுக்கப் பார்த்தோம். அது அவனுக்குப் புகழ்சேர்ப்பதாகவே முடிந்து விட்டது…’

‘இனி இந்தமாதிரி பூச்சாண்டி வேலைகளெல்லாம் பயன்படாது. நேராக அரசின் உதவியுடன் அவனை இழுத்துக் கொண்டு போய் சிறையில் தள்ள வேண்டியது தான். முடிந்தால் அங்கேயே அவன் கதையை முடிக்க வேண்டும்’

‘அரச காவலர்களைக் கொண்டே நாம் இந்த செயலைச் செய்யவேண்டும். நம்மால் இது முடியும் என்று தோன்றவில்லை.’

‘ஆமாம் அவனோடு பன்னிரண்டு பேர் இருக்கிறார்கள். அவர்கள் அவனுக்காக உயிரையும் கொடுக்கும் முரடர்கள். காவலர்கள் வந்தால் தான் அவனைப் பிடிக்கவும், அவர்களைச் சமாளிக்கவும் முடியும்’
சதி முற்றம் இயேசுவின் மீதான எரிச்சலில் சூடாகிக் கிடந்தது.

‘சரி.. அதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன்..’ தலைமைக் குரு சொன்னார்.

‘அவனைப் பிடிக்க நான் ஏற்பாடு செய்கிறேன். ஆனால் காவலர்களுக்கு இயேசுவை அடையாளம் தெரிந்திருக்க நியாயமில்லை. எனவே நீங்கள் யாராவது ஒருவர் சென்று இயேசுவை அடையாளம் காட்டுங்கள். மிச்சத்தை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.’

‘யா….யார் அவனை அடையாளம் காட்டுவது ? அவனைப் பிடிக்கத் தான் போகிறோம் என்று தெரிந்தால் ஏதாவது மாயம் மந்திரம் செய்து பிடிக்கப் போகின்றவர்களைக் குருடாக்கினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. நான் மாட்டேன்…’

‘என்னாலும் முடியாது…’

‘வேறு யாரையாவது தான் தேட வேண்டும்’… ஆளாளுக்குத் தயங்கினார்கள்.

‘சரி.. நான் ஒருத்தனைப் பிடித்துக் கொண்டு வருகிறேன். அவன் இயேசுவைக் காட்டிக் கொடுப்பான். சரிதானே ?’

‘யாரவன் ?’

‘யூதா? இஸ்காரியோத்து !’

‘யூதாஸ் ? அவன் இயேசுவின் சீடனாயிற்றே ! உனக்கென்ன பைத்தியமா ?’

‘பைத்தியம் தான். ஆனால் எனக்கல்ல யூதா?தக்கு. சாதாரணப் பைத்தியமல்ல, பணப் பைத்தியம். கொஞ்சம் வெள்ளிக் காசைக் காட்டினாலே விஷயம் முடிந்து விடும்’

‘நி?மாவா சொல்றே ?’

‘அந்த கவலையை என்னிடம் விட்டு விடு. அவனுக்கு கொஞ்சம் வெள்ளிக்காசை எறிவோம். மீன் நிச்சயம் மாட்டும்’

அவர்களுடைய சதித் திட்டம் விரும்பிய திசையில் முன்னேறிக் கொண்டிருந்தது.

‘இது தான் வியூகம். பாஸ்கா விழா இன்னும் கொஞ்ச நாளில் வரப்போகிறது. அந்த விழா நமக்கு வெற்றி விழாவா இருக்கவேண்டும். அதற்கு முன்னாலேயே இயேசு சாகவேண்டும். அவர் இரவு நேரங்களில் எங்காவது செபம் செய்யப் போவது வழக்கம். அந்த நேரம் பார்த்து அவரைப் பிடிக்க வேண்டும். !’

‘ஏன் இராத்திரி ? காலையில் இங்கே தானே சுற்றிக் கொண்டிருப்பார். அப்போது பிடிக்கலாமே ?’

‘முட்டாள் தனமாக உளறாதே.. காலையில் அவனைச் சுற்றி நூற்றுக் கணக்கில் ஆட்கள் இருப்பார்கள் அவரை நெருங்குவது கடினம். இரவு வேளை தான் இந்த மாதிரி விஷயங்களுக்குக் கட்சிதம். அதிலும் குறிப்பாய் அதிகாலை வேளையென்றால் கன கட்சிதம்’

‘சரி… அப்படியே செய்வோம்.. நீ போய் யூதாசைப் புடி. நான் போய் காவலர்களைத் தயாராக்குகிறேன். சரி… அரசவையில் என்ன காரணம் சொல்லப் போகிறோம் ?’

‘இவன் தன்னைக் கடவுளின் மகனாக்கிக் கொண்டான். அது நம்முடைய யூதகுல மக்களுக்கு எதிரானது. இதனால் நகரில் மிகப்பெரிய குழப்பம் வரப் போகிறது. மக்கள் ஆளாளுக்கு வெட்டிக்கொண்டு சாகப்போகிறார்கள். இவனை உயிருடன் விட்டால் நாடு கலவர பூமியாகிவிடும். எனவே இவனை தண்டிக்கவேண்டும். எப்படி ?’ சொன்னவன் முகத்திலிருந்த குரூரப் புன்னகை அனைவர் உதடுகளிலும் ஊர்ந்தது.

ஒரு மாபெரும் சதித் திட்டம் அங்கே கன கட்சிதமாய் உருவாகியது !

9.jpg

அதே நேரத்தில் இயேசு தன்னுடைய சீடர்களுடன் இரவு உணவு அருந்துவதற்காக ஒரு வீட்டின் மேல் மாடியில் அமர்ந்தார்.

‘நாம் இணைந்து உண்ணும் கடைசி பாஸ்கா விருந்தல்லவா இது ! எனவே இதை மிகவும் சிறப்பானதாகக் கொண்டாடவேண்டும்’ இயேசு புன்னகையுடன் சொன்னார்.

‘கடைசி விருந்தா ? என்ன சொல்கிறீர்கள் ?’ சீடர்கள் திகைப்புடன் கேட்டார்கள்.

‘ஆம்… இன்னும் சிறிது காலமே என்னைக் காண்பீர்கள். பின்னர் சிறிது காலம் என்னைக் காண மாட்டீர்கள். பின்பு மீண்டும் என்னைக் காண்பீர்கள்’ இயேசு சொன்னார்.

‘இயேசுவே எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.. என்ன சொல்கிறீர்கள் ? எங்களை விட்டு விட்டு வேறெங்கேனும் செல்கிறீரோ ?’

‘ஆம். என் தந்தையிடம் செல்கிறேன்.’ இயேசு சொல்ல சீடர்கள் இன்னும் அதிகமாய்க் குழம்பினார்கள். ஒருவேளை இயேசு போதனைகளைக் கொஞ்ச காலம் நிறுத்தி வைத்துவிட்டு தன்னுடைய தந்தையுடன் சில நாட்கள் செலவிடப் போகிறார் போலிருக்கிறது என்று சீடர்கள் தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டனர்.

‘இன்னும் ஏன் முணுமுணுப்பு. நான் ஏற்கனவே உங்களிடம் சொல்லியிருக்கிறேன். இதோ நான் என்னுடைய உயிரை பகைவர்களின் கையில் ஒப்படைக்கும் நேரம் வந்துவிட்டது’

‘பகைவர் கையிலா ? உமது உயிரா ? அதெல்லாம் நடக்காது. நாங்கள் பன்னிரண்டு பேரும் உமக்குப் பக்க பலமாய் இருப்போம்’ சீடர்கள் சொன்னார்கள்.

‘பக்க பலமாகவா ? நீங்களா ? என்னைக் காட்டிக் கொடுப்பவனே உங்களில் ஒருவன் தானே !’ இயேசு சொல்ல சீடர்கள் அதிர்ந்தார்கள்.

‘இயேசுவே என்ன சொல்கிறீர் ? யாரைச் சொல்கிறீர் ? நானா ?’

‘நானா ?’

‘நான் காட்டிக் கொடுக்கவே மாட்டேன்…’ யூதாசும் தன் பங்குக்குச் சொல்லி வைக்க, இயேசு யூதாந?ப் பார்த்துப் புன்னகைத்தார்.

பின்பு இயேசு யாருமே எதிர்பாராத ஒரு காரியத்தைச் செய்தார். ஒரு துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து முழங்காலைத் தரையில் ஊன்றி சீடரின் பாதத்தருகே குனிந்தார். சீடர் திடுக்கிட்டார்

‘க…கடவுளே என்ன இது ? எ..என் காலருகே ….’

‘நான் உங்கள் பாதங்களைக் கழுவப் போகிறேன்..’

‘ஐயோ கடவுளே.. இதென்ன விளையாட்டு… வேண்டாம். நீர் என் பாதத்தைத் தொடக்கூடாது.’ சீடர் அதிர்ச்சியுடன் காலைப் பின்னால் இழுத்தார்.

‘இல்லை. நான் உன்னுடைய பாதங்களைக் கழுவ வேண்டும். இல்லையேல் உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை !’

சீடர்கள் ?தம்பித்தார்கள். இயேசு ஒவ்வொருவராக அனைவருடைய பாதங்களையும் கழுவி, இடையில் கட்டியிருந்த துண்டால் துடைத்தார்.
சீடர்கள் கூசினார்கள்.

யோவானின் காலருகே வந்தபோது,’ கடவுளே என் கால்களைக் கழுவ வேண்டாம். வேண்டுமானால் தலையில் தண்ணீர் ஊற்றும்.’ யோவான் உளறினார்.

‘குளித்து விட்டவன் கால்களைக் கழுவினாலே போதும்’ இயேசு சொல்லிக் கொண்டே அவருடைய காலையும் கழுவினார்.

எல்லா சீடர்களின் கால்களையும் கழுவி முடித்த இயேசு அவர்களைப் பார்த்து,’ நான் ஏன் உங்கள் பாதங்களைக் கழுவினேன் தெரியுமா ?’ என்று கேட்டார்

‘தெரியாது..’

‘பணி வாழ்வுக்கு முக்கியமானது பணிவு. உங்களில் தலைவனாக இருக்க விரும்புபவன் எல்லோருக்கும் தொண்டனாக இருக்க வேண்டும்..’ இயேசு சொன்னார்.

‘அதைச் சொன்னால் போதுமே கடவுளே.. நீரே எங்கள் கால்களைக் கழுவ வேண்டுமா ?’

‘கடவுளாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினேன் என்றால் நீங்களும் அந்தப் பணிவைக் கடைபிடியுங்கள்’ இயேசு அமைதியாய்ச் சொன்னார். பின் கைகளைச் சுத்தம் செய்துவிட்டு உணவருந்த அமர்ந்தார்.

இயேசு அப்பத்தை எடுத்து விண்ணகத் தந்தையிடம் செபித்தார். பின்பு அதைப் பிட்டு தம்முடைய சீடர்களுக்குக் கொடுத்து
‘இது என்னுடைய உடல். இதை உண்பதன் மூலம் என்னுடன் நீங்கள் ஒரு புதிய உடன்படிக்கையைச் செய்து கொள்கிறீர்கள்’ என்றார்.

பின் திராட்சை இரசம் இருந்த கிண்ணத்தை எடுத்து செபித்து சீடர்களுக்குக் கொடுத்து,’ இது என்னுடைய இரத்தம் ! இதைக் குடிப்பதன் மூலம் நீங்கள் உடன்படிக்கையை உறுதி செய்து கொள்கிறீர்கள்.’ என்றார்.

அப்பமும் இரசமும் பகிர்ந்தளிக்கப் பட்டது. அனைவரும் உண்டார்கள்.

‘யூதா?… உன்னைப் பார்த்தால் ஏதோ அவசர வேலை இருப்பது போல் இருக்கிறதே..’ இயேசு கேட்டார்.

‘ஆ..ஆம். கடவுளே… எ…எனக்கு ஒருவரைப் பார்க்க வேண்டியிருக்கிறது..’ யூதாஸ் தடுமாறினான்.

‘போ யூதா?. செய்யவேண்டியவற்றைத் தாமதப்படுத்தாமல் செய்’ இயேசு அவனை அனுப்பி வைக்க சீடர்களிடையே சலசலப்பு.

‘அமைதியாய் இருங்கள். நடக்கப் போவது எல்லாமே எனக்குத் தெரியும். இதுவரை நீங்கள் கவலையில்லாமல் இருந்தீர்கள். இனிமேல் வலிகளின் காலம். பணப்பையும், தேவையான பொருட்களும், ஆயுதங்களும் உங்களுடன் இருக்கட்டும். ஏனென்றால் இனிமேல் நீங்கள் தான் உங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்’ இயேசு சொன்னார்.

பேதுரு நடப்பவற்றையனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார். ‘இயேசுவே நீர் என்ன சொல்கிறீர் ? ஏன் இப்படியெல்லாம் பேசுகிறீர் ?’

‘பேதுரு ! எல்லோரும் என்னை விட்டு விட்டு ஓடி விடப் போகிறீர்கள்.  அதைத் தான் சொன்னேன்’

‘கடவுளே… எல்லோரும் உம்மைவிட்டு ஓடிப் போனாலும் நான் ஓடிப் போக மாட்டேன்’ பேதுரு உறுதியுடன் சொன்னார்.

‘பேதுரு… என்னருமை சீடனே. நாளை விடியற்காலையில் கோழி கூவும் முன் நீ என்னை மூன்று முறை மறுதலித்துப் பேசுவாய் !’ இயேசு சொல்ல பேதுரு மறுத்தார்.

‘கண்டிப்பாக அப்படி நடக்காது. உம்முடன் சேர்ந்து உயிர் விட்டாலும் விடுவேனே தவிர உம்மை மறுதலிக்கவே மாட்டேன்’

‘பேதுரு. வருந்தாதே. நீ மறுதலிப்பாய். ஆனால் அதன்பின்பு மனம் மாறி என்னுடைய பணியைத் தொடர்ந்து செய்’ இயேசு சொல்ல பேதுரு மீண்டும் மறுத்தார்
‘இல்லை கடவுளே… உம்மை மறுதலிக்கமாட்டேன். மரணமடைய நேர்ந்தாலும் மறுதலிக்கமாட்டேன்’. எல்லா சீடர்களும் அவ்வாறே சொன்னார்கள்

இயேசு புன்னகைத்தார்

0

 இயேசு அங்கிருந்து கெத்சமெனி என்னும் தோட்டத்துக்கு வந்தார். அது ஒலிவமலையில் இருந்தது.

கெத்சமெனி அழகான தோட்டம். தனிமையாய் செபம் செய்வதற்கு உகந்த இடம். இயேசு தன்னுடன் பேதுரு, யாக்கோபு மற்றும் யோவானை அழைத்துக் கொண்டு தோட்டத்துக்குள் சென்றார். மற்ற எட்டு சீடர்களும் தோட்டத்தில் ஒரு இடத்தில் தங்கி இளைப்பாறினார்கள். யூதாஸ் மட்டும் அங்கே இல்லை.

யூதாஸ் அந்த நேரத்தில் பகைவர்களின் பாசறையில் இருந்தான் !

‘யூதாஸ்… நாங்கள் இயேசுவைப் பிடிக்கப் போகிறோம். நீ அவரை படை வீரர்களுக்கு அடையாளம் காட்டவேண்டும். அதற்கு என்ன கூலி எதிர்பார்க்கிறாய் ?’ தலைமைக் குரு ஒருவர் கேட்டார்.

‘எவ்வளவு தருவீர்கள் ?’

‘முப்பது வெள்ளிக்காசுகள் !’

‘போதும். நான் இயேசுவைக் காட்டித் தருகிறேன்.’

‘இரவாக இருக்கிறது. எனவே நீ அவரைத் தொட்டு இவர் தான் இயேசு என்று அடையாளம் காட்டவேண்டும். நாங்கள் அவரைப் பிடித்துக் கொள்வோம்’ அவர்கள் சொல்ல யூதா? உள்ளுக்குள் சிரித்தான். இயேசுவைப் பிடிக்கப் போகிறீர்களா ? மடையர்களே எத்தனை முறை நீங்கள் அவரைக் கொல்லப் பார்த்தீர்கள். அவர் உங்கள் கைகளுக்கு அகப்படாமல் மறைந்து போனது தெரியாதா ? நான் காட்டிக் கொடுத்தாலும் நீங்கள் அவரைப் பிடிக்கும் முன் அவர் உங்களிடமிருந்து தப்பி விடுவார்.

‘யூதா? என்ன பதிலையே காணோம் ?’

‘தொட்டு என்ன ? அவரை நான் கட்டிப் பிடித்து முத்தமிடுகிறேன். நீங்கள் அவர் தான் இயேசு என்று அறிந்து கொள்ளுங்கள்’ யூதாஸ் சொன்னான். சும்மா இவர் தான் இயேசு என்று சொல்வதற்கே எனக்கு முப்பது வெள்ளிக் காசுகளா ! அவனுடைய மனம் குதூகலித்தது.

‘ஆனால் ஒன்று…’ யூதாஸ் சொன்னான்.

‘என்ன ?’

‘பணத்தை நீங்கள் முதலிலேயே எனக்குத் தந்து விட வேண்டும். இயேசுவை காட்டிக் கொடுப்பது மட்டும் தான் என் வேலை. அவரைப் பிடிப்பது உங்கள் பாடு.’ யூதாஸ் சொல்ல அவர்கள் சம்மதித்தார்கள்.

பணம் கை மாறியது.

அதே நேரத்தில் இயேசு கெத்சமெனி தோட்டத்தில் செபித்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம் செபித்தபின் திரும்பி வந்து சீடர்களைப் பார்த்தார். எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள்
‘தூங்காதீர்கள். விழித்திருந்து செபியுங்கள். இந்த இரவு மிகவும் கடினமானது..’ இயேசு சொல்ல அவர்கள் கண்களைக் கசக்கினார்கள்.

இயேசு மீண்டும் செபிக்கச் சென்றார். அவருடைய மனம் கடும் போராட்டத்திலும், வலியிலும் ஆழ்ந்தது
‘தந்தையே… நீர் என்னை அனுப்பிய பணியை நான் முடித்து வைக்கும் வலிமையைத் தாரும். நீர் விரும்பினால் இந்தத் துன்பத்தின் பாத்திரம் என்னை விட்டு அகன்று போகும். ஆனாலும் என்னுடைய விருப்பமல்ல, உம்முடைய விருப்பமே நிறைவேறட்டும்’ இயேசு செபித்தார். அவருடைய வியர்வை இரத்தத் துளிகளாய் தரையில் விழுந்து தெறித்தது. வேதனையின் பாரம் கண்களில் தெரிந்தது.

திரும்பி வந்து சீடர்களைப் பார்க்க, அவர்கள் மீண்டும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களை மீண்டும் எழுப்பினார்.
‘என்னுடன் ஒருமணிநேரம் கூட விழித்திருந்து செபிக்க உங்களால் முடியவில்லையா ?’ இயேசுவின் குரலில் வருத்தம் தெரிந்தது. மீண்டும் அவர் செபிக்கச் சென்றார்.

செபித்துவிட்டு மூன்றாம் முறையாகத் திரும்பி வந்தார். இப்போது இயேசுவின் முகம் தெளிவடைந்திருந்தது. நடக்கப் போவதை எதிர்கொள்ளும் வலிமையை அவருடைய செபம் அவருக்கு வழங்கியிருந்தது. சீடர்களோ அப்போதும் தூங்கிக்கொண்டு தான் இருந்தார்கள். இயேசு அவர்களை எழுப்பினார்.

‘உங்கள் மனம் வலிமையானது தான். ஆனால் உடல் வலுவற்றது. சோதனைகளைக் கடக்க வேண்டுமானால் செபம் செய்யவேண்டியது மிகவும் அவசியம். சரி.. சரி… எழுந்திருங்கள். நாம் செல்ல வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது. மானிட மகனைக் காட்டிக் கொடுப்பவன் நெருங்கிவிட்டான்.’ இயேசு சொல்ல சீடர்கள் புரியாத முகங்களுடனும், சோர்வுற்ற இமைகளுடனும் விழித்தார்கள்.

அப்போது பெரும் மக்கள் கூட்டம் ஒன்று வாள்களோடும், தடிகளோடும் தீப்பந்தங்களோடும் அவர்களை நோக்கிவந்து கொண்டிருந்தது. அவர்களுக்கு முன்னால் வந்து கொண்டிருந்ததான் யூதாஸ்.

‘ராபி…. நீர் வாழ்க’ யூதாஸ் புன்னகையுடன் இயேசுவைக் கட்டிப் பிடித்து முத்தமிட்டான்.

judas.jpg

‘தோழா… முத்தமிட்டா மனுமகனைக் காட்டிக் கொடுக்கிறாய் ?’ இயேசு கேட்க யூதாஸ் திடுக்கிட்டான்.

‘நீங்கள் யாரைத் தேடி வந்திருக்கிறீர்கள் ?’ இயேசு கூட்டத்தினரைப் பார்த்துக் கேட்டார்.

‘இயேசுவை ‘

‘நான் தான் அவர்’

இயேசு சொன்னதும் அவருடைய குரலில் இருந்த உறுதியைக் கண்ட படை வீரர்கள் பின் வாங்கினார்கள்.

‘என்னைத் தானே தேடி வந்திருக்கிறீர்கள். வாருங்கள். என்னைப் பிடிப்பதற்கு எதற்கு இத்தனை வாள்கள், தீப்பந்தங்கள், படை வீரர்கள். நான்தான் தினமும் கோயிலில் போதித்து வருகிறேன், மக்களோடு உரையாடுகிறேன்… ‘ இயேசு சொல்ல படைவீரர்கள் மீண்டும் தயங்கினார்கள்.

யூதா? அந்தக் கூட்டத்தை விட்டு மெல்ல நழுவினான்.

படைவீரர்களோடு வந்திருந்த தலைமைக் குருக்கள். ‘ பிடியுங்கள் அவனை… ஏன் தயங்குகிறீர்கள்’ என்று சொல்லி படைவீரர்களைத் தூண்ட படைவீரர்கள் முன்னே சென்று இயேசுவைப் பிடித்தார்கள்.

அவ்வளவுதான் இயேசுவுடன் இருந்த ஒரு சீடர் தன்னுடைய வாளை உருவி படைவீரனின் காதை வெட்டினான். வெட்டப்பட்டக் காது தரையில் தெறித்துப் போய் விழுந்தது.

இயேசு அந்தச் சீடரைக் கடிந்து கொண்டார்.
‘உன் வாளை உறையிலே போடு. வாள் எடுப்பவன் வாளால் மடிவான். இவர்களைத் தாக்க வேண்டுமென்று தான் தந்தையிடம் சொன்னால் வினாடி நேரத்தில் இவர்களைத் தவிடு பொடியாக்கும் படையை அவர் எனக்குத் தருவார். நிகழ வேண்டியவை நிகழத்தான் வேண்டும்.’ என்று சொல்லிய இயேசு, அந்தக் காதை எடுத்து வெட்டுப் பட்ட இடத்தில் வைக்க அது ஒட்டிக் கொண்டது.

படைவீரன் அதிர்ந்தான். கொலைசெய்வதற்காக வந்தோம் என்று தெரிந்தும் கூட இயேசு தன்னைக் குணமாக்கினாரே என்பதை நினைக்க நினைக்க அவன் உள்ளுக்குள் கூனிக் குறுகினான். இந்த வேலையே வேண்டாம் என்று சொல்லி வாளை வீசி விட்டு கூட்டத்தை விட்டு வெளியேறினான்.

மற்ற படை வீரகள் எல்லோருமாகச் சேர்ந்து இயேசுவைப் பிடித்துச் சங்கிலியால் பிணைத்தார்கள்.

இயேசு பிடிபட்டதைக் கண்ட சீடர்கள் சிதறி ஓடினார்கள். படை வீரர்கள் அவர்களைத் துரத்தினார்கள். மரித்தாலும் உம்முடன் வருவேன் என்று சொன்ன பேதுருவையும் அங்கே காணவில்லை ! அவரும், யோவானும் தலையில் முக்காடிட்டுக் கொண்டு தூரத்தில் நின்று இயேசுவை என்ன செய்கிறார்கள் என்று பதட்டம் வடியும் கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

voorpilatus.jpg

தலைமைக்குரு கயபா வின் முன்னிலையில் இயேசு நிறுத்தப்பட்டார்.

நேற்றுவரை சுதந்திரப் பறவையாக போதித்துக் கொண்டிருந்த இயேசு இன்று சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு கயபாவின் முன்னிலையில் நின்று கொண்டிருக்கிறார். ஆனாலும் அவருடைய கண்களில் இருந்த உறுதி கலையவில்லை.

பேதுரு தலைக்கு முக்காடிட்டுக் கொண்டே மெல்ல மெல்ல காய்பாவின் மாளிகைக்குள் வந்து இருட்டான ஒரு இடத்தில் மக்களோடு மக்களாக அமர்ந்து நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

‘சாட்சிகளைத் தயார் செய்து விட்டீர்களா ?’ சத்தமில்லாமல் அருகிலிருந்த தலைமைச் சங்கத்தான் ஒருவனின் காதில் கிசுகிசுத்தார் காய்பா.

‘ஆட்களை அனுப்பியிருக்கிறோம். எத்தனை செலவானாலும் பரவாயில்லை என்று சொல்லியிருக்கிறோம். எப்படியும் சாட்சிக்கு ஆட்கள் கிடைத்து விடுவார்கள்’

‘காதும் காதும் வைத்த மாதிரி எல்லாம் நடக்க வேண்டும். மக்களிடையே மத வெறி அடங்கி விடாமல் பார்த்துக் கொள்வது தான் முக்கியம்.’

‘அதையெல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். அவனுடைய சீடனையே அவனுக்கு எதிராகத் திருப்பினோமே… சாட்சிகளைப் பிடிப்பதா பெரிய வி?யம் ?’

‘ம்… இரண்டு சாட்சிகள் வேண்டும். இரண்டு பேரும் ஒரே போல ஒரே குற்றச் சாட்டைச் சொல்லவேண்டும். அது தான் சட்டம். அதை நினைவில் கொள்ளுங்கள்’ காய்பா கிசுகிசுத்தான்.

‘மக்களுக்காக ஒருத்தன் சாவது நல்லது என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்களே. அது இன்று நடக்கவேண்டும். அதற்கு என்ன தேவையோ அதைத் தயாராக்கும் பொறுப்பை என்னிடம் விட்டு விடுங்கள்’ காய்பாவும் தலைமைக்குருவும் கிசுகிசுப்பாய் பேசினார்கள்.

இயேசு அமைதியாக நின்றார்.

பேதுரு முற்றத்தில் அமர்ந்து நடப்பவற்றை அனைத்தையும் நடுங்கும் உடலோடு பார்த்துக் கொண்டிருந்தார்.

‘ஏய்… நீ அவனோடு இருந்தவன் தானே ‘ திடீரென தனக்குப் பின்னால் எழுந்த குரலினால் நிலைகுலைந்து போய் நிமிர்ந்தார் பேதுரு.

‘என்ன சொன்னீர்கள் ?’

‘நீ.. இயேசுவோடு இருந்த மனிதர்களில் ஒருவன் தானே ?’

‘நானா… இயேசுவோடா ? ம்… அவர் யாரென்றே எனக்குத் தெரியாது’ பேதுரு பயத்துடன் மறுத்து தன்னுடைய தலையை வேறு பக்கமாய்த் திருப்பிக் கொண்டார்.

அப்போது இயேசுவுக்கு முன்னால் சாட்சிகள் தயாராய் வந்து நின்றார்கள்.

‘இவன் கடவுளுடைய திருக்கோயிலை இடித்து அதை மூன்று நாளில் கட்டியெழுப்ப முடியும் என்று சொன்னான். இது நாற்பது ஆண்டுகள் பாடுபட்டு இந்த ஆலயத்தைக் கட்டியவர்களுக்கு இவன் செய்யும் அவமரியாதை. கோயிலை இடியுங்கள் என்று சொன்னது அவர் கடவுளுக்கே செய்த அவமரியாதை. நம் கடவுளை இழிவு படுத்திய இவனுக்கு மரண தண்டனை தான் சரியான தீர்ப்பாக முடியும்’ ஒருவன் சொல்லி முடித்தான். மறக்காமல் கனக்கும் பையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான்.

‘இவன் கடவுளின் மகனாமே…. கடவுள் தான் இவனை மேலிருந்து கீழே அனுப்பினாராம். நம் கடவுளையும் இவனையும் ஒன்றென்று சொல்லி நம்முடைய நம்பிக்கைகளை எல்லாம் தகர்ந்து மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளான் இவன்’ பணப்பை இரண்டாமவனையும் பேச வைத்தது.

பேதுரு திக் திக் மனதுடன் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார். இயேசு திடீரென சங்கிலிகளை உடைத்துக் கொண்டு சட்டென்று மறைந்துவிடுவார் என்றே இமைகளை மூடாமல் பார்த்துக் கொண்டே இருந்தார்.

‘ஏய்ய்… நீ…’ பேதுருவின் பின்னால் ஒரு முரட்டுக் குரல்.

பேதுரு சர்வநாடியும் ஒடுங்கிப் போய் திரும்பினார்.

‘நீ… அவருடன் இருந்த சீடர்களில் ஒருவன் தானே ? உன்னை நான் அவரோடு பார்த்திருக்கிறேனே ?’ ஒருவன் பேதுருவிடம் கேட்டான்.

‘நானில்லையப்பா அது. வேறு யாராவது இருக்கும். அவர்கள் எல்லாரும் தான் ஓடிவிட்டார்களே.’ பேதுரு சமாளித்தார்.

‘ஆனால் உன்னைப் போலவே ஒருவன் அவனோடு சுற்றிக் கொண்டிருந்தான்…’

‘இ..இருக்கலாம். ஆனால் அது நானில்லை. அவனோடு சுற்றிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் வேலையற்றவர்கள். நான் அப்படியல்ல..’ பேதுரு சக?மாய் சொல்ல முயன்று தோற்றுப் போய் செயற்கையாய்ப் புன்னகைத்தார்.

அவன் சந்தேகம் அகலாதவனாகச் சென்றான்.

ஏறக்குறைய ஒரு மணி நேரம் கடந்திருக்கும். இயேசு குற்றவாளிபோல நின்று கொண்டிருந்தார். நேரம் அதிகாலையை நெருங்கிக் கொண்டிருந்தது.

மூன்றாம் முறையாக ஒரு நபர் பேதுருவின் அருகே வந்து தீப்பந்த வெளிச்சத்தில் அவரை உற்றுப் பார்த்தார்.

‘நீ கலிலேயன் தானே ? அந்த இயேசுவின் சீடர்களில் ஒருவன் தானே ? உண்மையைச் சொல்’ அவனுடைய குரலில் மெலிதான கோபம் இருந்தது.

maruthalippu.jpg

‘நானா ? அந்த மனிதனோடா ? இல்லவே இல்லை. ‘ பேதுரு அவசர அவசரமாக மறுத்தார்.

தொலைவில் நின்றிருந்த இயேசு பேதுரு இருந்த திசை நோக்கி மெல்ல தலையைத் திருப்பினார்.

அப்போது வெளியே சேவல் கூவும் சத்தம் கேட்டது.

சேவலில் குரலைக் கேட்டதும் பேதுருவின் உள்ளம் உடைந்தது.
‘சேவல் கூவும் முன் என்னை மூன்று முறை மறுதலிப்பாய்.. ‘ என்று பேதுருவிடம் இயேசு சொல்லியிருந்த வார்த்தைகள் பேதுருவின் உள்ளத்துக்குள் ஈட்டிகளாய்ப் பாய்ந்தன. அவருடைய கண்களும், மனமும் கலங்கியது. உடனே வெளியே சென்ற பேதுரு கண்ணீர் விட்டுக் கதறி அழுதார்.

உள்ளே… இரவு முழுவதும் தலைமைக் குருக்களும், மறைநூல் அறிஞர்களும் சாட்சிகளைக் காசுகொடுத்து வாங்கியும் யாரும் உருப்படியாய் சாட்சி சொல்லவில்லை. ஒத்த சாட்சிகள் வரவேயில்லை.

அத்தனை சாட்சிகள் தனக்கு எதிராக வீசப்பட்டபோதிலும் இயேசு அமைதியாக நின்றிருந்தார். இயேசுவைப் பிடித்தாயிற்று, இந்தமுறை நழுவவிட்டால் இனிமேல் இவரைப் பிடிப்பதுகூட நடக்காமல் போகலாம் எனவே எப்படியாவது இயேசுவுக்குத் தண்டனை வாங்கித் தந்தேயாகவேண்டும் என்று முடிவெடுத்த தலைமைக்குரு மெல்ல எழுந்தார். தன் தொண்டையைக் கனைத்துக் கொண்டார்.

‘இத்தனை பேர் உனக்கு எதிராகச் சாட்சி சொல்கிறார்களே. மறுத்துச் சொல்ல எதுவும் இல்லையா ? அமைதியாய் நீ நிற்கிறாய் என்றால் எல்லா குற்றச்சாட்டுகளையும் ஒப்புக் கொள்கிறாய் என்று பொருள். தெரியும் தானே’ தலைமைக்குரு ஆரம்பித்தார்.

இயேசு அப்போதும் மெளனம் சாதித்தார்.

தலைமைக்குருவின் பொறுமை எல்லை மீறியது.

‘சரி.. ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல். நீ கடவுளின் மகனாகிய மெசியாவா ?’ தலைமைக்குரு துருப்புச் சீட்டுக் கேள்வியை எடுத்து இயேசுவின் முன்னால் விரித்தான்.

‘ஆம். நான் கடவுளின் மகனாகிய மெசியா தான். மானிட மகன் கடவுளின்  வலப்பக்கத்தில் வீற்றிருப்பதையும், வானமேகங்களின் மீது வருவதையும் நீங்கள் காண்பீர்கள்’ இயேசுவின் குரல் உறுதியுடன் ஒலித்தது.

தலைமைக்குரு தன்னுடைய மேலுடையைக் கிழித்தான். ‘இதோ… நீங்களே கேட்டீர்களே. நம்முடைய கடவுளை இவன் பழித்துரைத்ததை நீங்களே கேட்டீர்களே. இனிமேல் சாட்சிகள் எதற்கு ? இவனை என்ன செய்வது ? நீங்களே சொல்லுங்கள்’ தலைமைக்குரு கொக்கரித்தான். அவனுடைய உள்ளம் இயேசுவை மாட்ட வைத்த களிப்பில் துள்ளியது.

‘கடவுளைப் பழித்தவனை வேறு என்ன செய்வது ? கொலை தான்’ கூட்டம் பதிலளித்தது.

‘பளார்…’ எங்கிருந்தோ ஒரு முரட்டுக் கரம் இயேசுவின் முகத்தைத் தாக்கியது.

‘இறைவாக்கினராகிய மெசியாவே… உம்மை அடித்தவனுடைய பெயரை தீர்க்கத் தரிசனமாய்ப் பார்த்துச் சொல்லுங்கள் பார்ப்போம்’ ஏளனக் குரல்கள் எழுந்தன.

பின்புறமிருந்து இயேசுவின் முதுகில் வலிமையான கரங்கள் தாறுமாறாய் இறங்கின. அவருடைய முகத்தின் மீது எச்சில் உமிழப்பட்டது. கால்கள் அவருடைய உடம்பின் மீது நீண்ட நாளைய வைராக்கிய வெறியுடன் உதைத்தன. இயேசு நிலை தடுமாறி விழுந்தார்.

‘இறைமகனே… விழுவது உமக்கு அழகா ?’

‘என்ன இது ? கடவுளின் மகனுக்கு தன்னுடைய கைக்கட்டை அவிழ்க்கக் கூட முடியவில்லையா ?’

‘கடவுளின் மகனுக்கு வலிக்காதே… நன்றாக அடியுங்கள்’ ஏளனக் குரல்கள் அறை முழுவதும் ஒலித்தன. காய்பாவின் முன்னிலையிலேயே இயேசு தாறுமாறாய் அடிக்கப்பட்டார். அவருடைய உதடுகள் கிழிந்து இரத்தம் வழிந்தது. உடலெங்கும் வலிமையான அடிகளை வாங்கிய வலி.

தங்கள் ஆத்திரத்தை இத்தனை நாள் அடக்கி வைத்திருந்த அத்தனை விரோதக் கைகளும் இயேசுவை அடித்தன. தங்கள் தலைமைக்கு எதிராக எச்சரிக்கைக் குரல்களை எழுப்பிய இயேசுவை அத்தனை தலைவர்களும் நையப் புடைத்தனர். இயேசு அமைதிகாத்தார்.

‘விடியும் போது இவனை ஆளுநர் பிலாத்துவிடம் கூட்டிக் கொண்டு போகவேண்டும். அதன்பின்பு இவனுக்கு என்ன தீர்ப்பு கிடைக்கும் என்பது தெரியாது. எனவே இப்போது தான் நமக்கு வாய்ப்பு. நன்றாக அடியுங்கள். இவன் ஒருவேளை விடுதலை செய்யப்பட்டால் கூட நாளை இவன் நமக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசக்கூடாது.’ தகவல் பரிமாறப்பட்டது. இயேசுவின் உடலெங்கும் இரத்தக்காயங்கள்.

itho-manithan.jpg

‘ஏய்… விஷயம் தெரியுமா ? இயேசு நன்றாக மாட்டிக் கொண்டார். அவரை தலைமைக்குருக்களும், மற்றவர்களும் சேர்ந்து கயபாவின் முன்னிலையில் வைத்து அடித்து உதைக்கிறார்கள்’ ஒருவன் சொல்ல திடுக்கிட்டுத் திரும்பினான் அவன்.

யூதாஸ் இஸ்காரியோத்து.  இயேசுவை முத்தமிட்டுக் காட்டிக் கொடுத்த இயேசுவின் சீடன்.

‘என்ன சொல்கிறாய் ? இ..இ…இயேசுவை அடிக்கிறார்களா ?’ யூதாசின் குரல் பிசிறடித்தது.

‘அடியா ? மரண அடி. இப்படி ஒரு அடியை அவன் வாழ்நாளில் வாங்கியிருக்கவே முடியாது. அப்படி ஒரு அடி ! ‘

‘அவருடைய சீடர்களெல்லாம் கூட இல்லையா ? மக்கள் யாரும் அவருக்கு ஆதரவாய் பேசவில்லையா ?’ யூதா? பதட்டமானான்.

‘ஆதரவா ? ஆதரவு அளித்தவர்களெல்லாம் பயந்து ஓடிவிட்டார்களே. நான் கொஞ்ச நேரம் தான் நின்றேன். அதற்குமேல் நிற்கமுடியவில்லை.  இயேசுவை அடிப்பதைப்போல இன்னொருவரை இதுவரை யாரும் அடித்ததேயில்லை.’

‘உண்மையாகவா சொல்கிறாய் ? இயேசு தப்பிக்கவில்லையா ? அதெப்படி ? அவர்… அவர்…’ யூதாஸ் தடுமாறினான்.

‘நாளை அவர் கொல்லப்படுவது நிச்சயம் என்று பேசிக்கொள்கிறார்கள்.’

‘ஐயோ… தப்பு செய்து விட்டேனே…’ யூதாஸ் எழுந்தான்.

‘ஏய்… என்ன ஆச்சு ?’

‘இல்லை… இயேசுவை நான் தான் அடையாளம் காட்டினேன். அவர் கண்டிப்பாகத் தப்பித்து விடுவார் என்றல்லவா நினைத்தேன். ஐயோ…. பெரும் தப்பு செய்துவிட்டேன். எப்படியாவது அவரை விடுவிக்க வேண்டும்…’ யூதாஸ் லஞ்சமாய் வாங்கியிருந்த பணமுடிப்பையும் எடுத்துக் கொண்டு ஒரு தலைமைக்குருவைப் பார்க்க ஓடினான்.

யூதாசின் மனம் பதட்டத்தில் துடித்தது. தவறிழைத்துவிட்டோ மே என்று அவருடைய உள்ளம் கதறி அழுதது. இத்தனை நாள் கூடவே இருந்துவிட்டு இப்படிக் கடைசியில் நானே துரோகியாகிவிட்டேனே. அரற்றியபடியே ஓடிய யூதா? ஆலயத்தில் அமர்ந்திருந்த தலைமைக்குருவின் முன்னால் வந்து விழுந்தான்.

‘ஐயா…. இயேசு ஒரு பாவமும் அறியாதவர். அவரைக் காட்டிக் கொடுத்து நான் மிகப்பெரிய பாவம் செய்துவிட்டேன்….’ யூதா? மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க அவசர அவசரமாய்ச் சொன்னான்.

‘அதனால் எங்களுக்கென்ன ?’

‘ஐயா… அது என்னுடைய தவறு. இதோ நீங்கள் தந்த பணம் அப்படியே இருக்கிறது. இதைப் பெற்றுக் கொண்டு இயேசுவை விட்டு விடுங்கள்’ யூதாஸ் கெஞ்சினான்.

‘விட்டு விடுவதா ? உன்னுடைய வேலை முடிந்துவிட்டது. இனிமேல் உன்னுடன் எனக்கென்ன பேச்சு. போய்விடு..’ தலைமைக்குரு தலையைத் திருப்பினார்.

‘ஐயா… அப்படிச் சொல்லாதீர்கள். அவரை அடிக்கிறார்களாம், கொல்லப்போகிறார்களாம். எல்லாம் என்னால் தானே… இந்தப் பணம் எனக்கு வேண்டாம். இது பாவப்பட்ட பணம். இதை வாங்கிக் கொள்ளுங்கள். இதற்கு மேலும் பணம் வேண்டுமென்றால் நான் தருகிறேன். பெற்றுக் கொண்டு தயவு செய்து இயேசுவை விட்டு விடுங்கள்’ யூதா? விடாமல் கெஞ்சினான்.

‘யோவ்… வெளியே போகிறாயா இல்லையா ? உனக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. போய்விடு’ குரு கத்தினார்.

‘இதோ… வெள்ளிக் காசுகள். எனக்கு இவை வேண்டாம். கேவலம் பணத்துக்காக ஒரு மாமனிதனைக் காட்டிக் கொடுத்துப் பாவம் செய்துவிட்டேன்…’ அழுது கொண்டே யூதா? தன்னிடமிருந்த பணப்பையை ஆலயத்தினுள் வீசி எறிந்தான். வெள்ளிக்காசுகள் ஆலயம் முழுவதும் சிதறின.

யூதாஸ் அதற்குமேல் அங்கே நிற்கவில்லை. குற்ற உணர்வு அவனைத் துரத்தியது. இயேசுவைக் காட்டிக் கொடுத்த குற்ற உணர்வுடன் இனிமேல் வாழமுடியாது என்று முடிவெடுத்த யூதாஸ் கண்ணீர் விட்டழுதான்.

‘இயேசுவே என்னை மன்னியும்.’ அவனுடைய உதடுகள் விடாமல் முணுமுணுக்க யூதாஸ் தூக்கில் தொங்கினான் ! உயிர் விட்டான்.

நன்றாக வாழவேண்டுமென்று லஞ்சமாய் வாங்கிய பணம் ஆலயத்துக்குள் சிதறிக் கிடந்தது. தலைமைக்குரு அவற்றைப் பொறுக்கினார்.

‘இதைக் காணிக்கைப் பெட்டியில் போடாதீர்கள். ஏனென்றால் இது இரத்ததுக்கான விலை. எனவே வேறு ஏதாவது செய்யுங்கள்’ ஆலய நிர்வாகிகளிடம் தலைமைக்குரு சொன்னார்.

 ‘இதை வைத்து ஒரு குயவன் நிலத்தை வாங்குவோம். அன்னியரை அடக்கம் செய்வதற்குரிய ஆலய நிலமாக அது இருக்கட்டும்.’ நிர்வாகிகள் முடிவெடுத்தார்கள்.

அவர்கள் ஒரு நிலத்தை வாங்கினார்கள். அதை இரத்த நிலம் என்று அழைத்தனர்.

0

மறுநாள் விடியற்காலையில் இயேசு ஆளுநன் பிலாத்துவின் முன்னிலையில் நிறுத்தப்பட்டார்.

பிலாத்து இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தான். இயேசு பெரிய குற்றவாளியல்ல என்பதை அவன் அறிந்திருந்தான். குருக்களும், மறைநூல் வல்லுனர்களும், பரிசேயர்களும் இயேசுவிடம் வெறுப்படைந்திருப்பதையும், பொறாமை கொண்டிருப்பதையும் கூட பிலாத்து அறிந்திருந்தான். எனவே எப்படியாவது இயேசுவுக்குக் குறைந்த பட்ச தண்டனையை வழங்கி விடுவித்துவிட வேண்டும் என்று மனதில் நினைத்தான்.

‘நீ யூதர்களின் அரசனா ?’ பிலாத்து இயேசுவைப் பார்த்துக் கேட்டான்.

‘அரசன் என்பது நீர் சொல்லும் வார்த்தை. உண்மைக்குச் சான்று பகர்வதே எனது பணி’ இயேசுவின் குரலில் பயமோ நடுக்கமோ இருக்கவில்லை.

‘உன்மீது இத்தனைக் குற்றச் சாட்டுகள் கூறுகிறார்களே. அதற்கு நீ என்ன பதில் சொல்கிறாய் ?’

இயேசு மெளனமாய் இருந்தார்.

‘என்ன அமைதியாய் இருக்கிறாய் ? நான் நினைத்தால் உன்னை விடுவிக்கவும் முடியும், கொல்லவும் முடியும் தெரியாதா ?’ பிலாத்து அரச தோரணையில் சொன்னான்.

‘என் மேல் உமக்கிருக்கும் அதிகாரம் எல்லாம் விண்ணகத்தில் இருக்கும் என் தந்தை தந்தது தான். இல்லையேல் உனக்கு என்மீது எந்த அதிகாரமும் இருக்காது’ இயேசு சொன்னார்.

பிலாத்து வியப்புற்றான். அவனுக்கு முன்னால் இதுவரை வந்திருந்த கைதிகள் எல்லாம் தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக மண்டியிடுபவர்களாகவே இருந்தார்கள். இயேசு தான் மரணத்தைத் துச்சமென மதித்து அமைதி காக்கிறார். அல்லது அதிகாரமாய் பேசுகிறார். பிலாத்து யோசித்துக் கொண்டிருக்கும்போதே பிலாத்துவின் மனைவி பிலாத்துவை தனியே அழைத்தாள்.

‘இந்த மனிதனை ஒன்றும் செய்யாதீர்கள். இவனைக் குறித்து நான் கனவு கண்டேன். இவர் பெரிய இறைவாக்கினர் தான். இவர் கடவுளின் மகன் தான். இவரை விட்டு விடுங்கள்’ பிலாத்துவின் மனைவி சொல்லச் சொல்ல பிலாத்து உள்ளுக்குள் குழம்பினான்.

திரும்பி வந்து மக்கள் கூட்டத்தினரின் முன்னால் நின்ற பிலாத்து
‘இவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லை’ என்றான். எப்படியும் இயேசுவை விடுதலை செய்துவிட வேண்டும் என்னும் எண்ணம் இப்போது அவனுக்குள் வலுத்திருந்தது.

‘குற்றம் இல்லையா ? கலிலேயா துவங்கி, யூதேயா வரை மக்களைக் கெடுத்து மக்களை கலவரத்துக்காய்த் தூண்டி விடும் இந்த மனிதனிடம் குற்றம் இல்லையா ?’ குருக்கள் தூண்டிவிட மக்கள் கத்தினார்கள்.

‘ஓ.. இவன் கலிலேயனா ?’ பிலாத்து கேட்டான்.

‘ஆம்…’

‘அடடா.. அப்படியானால் இவன் எருசலேமில் ஆட்சிசெய்யும் ஏரோது மன்னனின் அதிகாரத்துக்கு உட்பட்டவன். இவனை அங்கே அனுப்புங்கள்’ பிலாத்து நழுவினான்.

இயேசு ஏரோதின் முன்னிலைக்கு இழுத்துச் செல்லப்பட்டார்.

ஏரோது இயேசுவைக் கண்டதும் மகிழ்ந்தான். இயேசு எருசலேம் நகரில் மிகவும் பிரபலமடைந்திருந்ததால் ஏரோது இயேசுவைப்பற்றி அதிகம் கேள்விப்பட்டிருந்தான். எப்படியாவது இயேசுவைக் காணவேண்டும், அவருடைய அற்புதங்கள் சிலவற்றைக் கண்ணால் காணவேண்டும் என்று அவன் ஆசைப்பட்டிருந்தான்.

‘நீர் தான் இயேசுவா … ‘ ஏரோது நகைப்புடன் கேட்டான்.

இயேசு மெளனமாய் இருந்தார்.

‘நீ நிறைய அற்புதங்கள் செய்தாயாமே.. கொஞ்சம் செய்து காட்டு பார்ப்போம். எனக்கும் பொழுது போகும்’ ஏரோது சிரித்தான்.

கூட வந்திருந்த மறைநூல் அறிஞர்கள், குருக்கள் எல்லோரும் இயேசுவின் மேல் குற்றம் சுமத்திக் கொண்டே இருந்தார்கள்.

இயேசு எதற்கும் பதில் சொல்லவில்லை.

‘நீ செத்தவனை உயிர்ப்பித்தாயாமே ? இங்கே உயிரோடு இருக்கும் யாரையாவது செத்துப் போகச் செய் பார்க்கலாம் ‘

‘பிசாசைத் துரத்தினாயாமே… உன் கைகளைக் கட்டியிருக்கும் சங்கிலியை உடைத்துவிடு பார்க்கலாம்’

‘என்ன கடவுளின் மகனை சங்கிலியால் கட்டமுடியுமா ?’ ஏரோதின் ஏளனப் பேச்சுகள் கூட்டத்தினரை ஆரவாரம் செய்ய வைத்தன.

‘இவன் கடவுளின் மகனல்லவா ? இவனுக்கு ஒரு நல்ல பட்டாடையை உடுத்துங்கள்’ ஏரோது சொல்ல படைவீரர்கள் அவருக்குப் பட்டாடை ஒன்றை அணிவித்தார்கள்.

இயேசு அவர்கள் முன்னிலையில் ஓர் ஏளனச் சின்னமாக நின்றார். இயேசுவின் பொறுமையும் அமைதியும் ஏரோதின் மனதைக் குழப்பின. ஒருவேளை இவர் இறைவாக்கினராய் இருப்பாரோ ? என்னும் குழப்பம் அவருக்குள் எழுந்தது. நமக்கு ஏன் வம்பு என்று ஏரோது நினைத்தான்.

‘இதோ… இவனை பிலாத்துவிடமே கூட்டிக் கொண்டு போங்கள். அவர் சொல்லும் தண்டனையை இவருக்கு வழங்குங்கள்’ ஏரோது சொன்னான்.

2.jpg

கூட்டத்தினர் சளைக்கவில்லை. இயேசுவை இழுத்துக் கொண்டு மீண்டும் பிலாத்துவின் முன்னிலையில் நிறுத்தினார்கள்.

இயேசு மீண்டும் தன்னிடத்தில் அழைத்துவரப்பட்டதைக் கண்ட பிலாத்து வருந்தினான். அவன் தலைமைக்குருக்களையும், ஆட்சியாளர்களையும் அழைத்தான்.

‘இதோ.. இந்த மனிதனிடத்தில் நீங்கள் சாட்டும் குற்றச் சாட்டுகள் எதையும் நான் காணவில்லை’

‘இல்லை. இவன் குற்றவாளிதான். இதோ, இத்தனை மக்கள் கூறுகிறோமே. அவர்கள் பதில் சொன்னார்கள்’

‘நீங்கள் தான் சொல்கிறீர்கள். ஆனால் என்னுடைய விசாரணையிலோ, ஏரோது மன்னனின் விசாரணையிலோ எதுவும் தெரியவில்லை. எனவே இவனைத் தண்டித்து விடுவிப்பேன்’ பிலாத்து சொன்னான்.

‘விடுவிப்பதா ? முடியாது. இவன் மரணதண்டனை அனுபவிக்க வேண்டும்’ அவர்கள் உறுதியாய்ச் சொன்னார்கள்.

அவர்கள் வெளியே சென்று மக்களிடையே இயேசுவைக் கொல்லவேண்டுமெனக் கத்துங்கள் என்று மக்களைத் தூண்டினார்கள். அவர்களுக்குத் தேவையானவற்றைக் கொடுப்பதாக வாக்களித்தார்கள். இயேசுவின் ஆதரவாளர்களை அவர்கள் கூட்டத்துக்கு வெளியே தள்ளினார்கள்.

பிலாத்து மீண்டும் இயேசுவை விசாரித்தான்.

திடீரென பிலாத்துவுக்கு ஒரு யோசனை. அவர்களுடைய வழக்கப்படி பா?கா விழாவின் போது கைதி ஒருவரை விடுதலை செய்யலாம். குறைந்த குற்றம் செய்த ஒரு மனிதனை விடுதலை செய்வது வழக்கம். அப்போது சிறையில் அதிபயங்கரக் கொலை குற்றவாளி ஒருவன் இருந்தான். அவன் பெயர் பரபா.

அவனோடு ஒப்பிட்டால் இயேசு செய்ததாகச் சொல்லப்படுபவையெல்லாம் வெறும் சாதாரண குற்றங்கள் தான். எனவே பரபாவை விடுதலை செய்யவா இயேசுவை விடுதலை செய்யவா என்று கேட்போம். மக்கள் கண்டிப்பாக இயேசுவைத் தான் கேட்பார்கள் என்று பிலாத்து நினைத்தான். அவனுடைய முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை பிறந்தது.

‘அமைதி… அமைதி…’ பிலாத்து மக்கள் முன்னிலையில் எழுந்து நின்றான்.

கூட்டம் அமைதியானது.

‘உங்களுக்கு நான் ஒரு கடைசி வாய்ப்பு தருகிறேன். நல்ல முடிவு எடுங்கள். பா?கா விழாவை முன்னிட்டு நான் ஒரு கைதியை விடுதலை செய்யப் போகிறேன். நன்றாகக் கேளுங்கள். பரபா என்னும் கொலையாளியைப் பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரியும். மாபெரும் கலகக் காரன். கொலையாளி. அவனை நான் விடுதலை செய்வதா ? இதோ இந்த குற்றமற்ற இயேசுவை விடுதலை செய்வதா ? சொல்லுங்கள்’ பிலாத்து கேட்டான்.

‘பரபாவை…. ‘ கூட்டத்தினரைக் கத்த வைத்தனர் கூட்டத்தில் கலந்திருந்த குருக்களின் ஆதரவாளர்கள்.

‘என்ன பரபாவையா ? அவன் எப்படிப்பட்ட குற்றவாளி தெரியுமா ? அவனையா விடுதலை செய்யவேண்டும்’ பிலாத்து மீண்டும் கேட்டான்.

‘ஆம். பரபாவை விடுதலை செய்தால் போதும். இயேசுவை விடுவிக்க வேண்டாம்’ கூட்டம் கத்தியது.

பிலாத்து குழம்பினார். ‘அப்படியானால் உங்கள் இயேசுவை நான் என்ன செய்வது ?’

கூட்டத்தினர் ஒருவினாடி மெளனமானார்கள்.

‘சிலுவையில் அறையும்’ ஒரு குரல் ஓரமாய் ஒலித்தது. அந்த ஒலியைப் பிடித்துக் கொண்டே பல ஒலிகள் உயர்ந்தன. சில வினாடிகளில் கூட்டத்தினர் ஒரே குரலில் கத்தத் துவங்கினார்கள்

‘சிலுவையில் அறையும்… சிலுவையில் அறையும்…. சிலுவையில் அறையும்….’

பிலாத்து தளர்ந்து போய் ஆசனத்தில் அமர்ந்தான்.

‘இவனைக் கொண்டு போய் சித்திரவதை செய்து கூட்டி வாருங்கள்’ பிலாத்து அரைமனதுடன் ஆணையிட்டான்.

படைவீரர்கள் இயேசுவைச் சித்திரவதைக் கூடத்துக்கு இழுத்துச் சென்றார்கள்.

இரும்புச் சங்கிலிகள், முள்கம்பிகள், இரும்பு உருண்டைகள் என்று கையில் கிடைத்த ஆயுதங்களயெல்லாம் வீரர்கள் கைகளில் எடுத்துக் கொண்டார்கள். இயேசு அவர்கள் முன்னிலையில் நிராயுதபாணியாய் நின்றார்.

இயேசுவைச் சங்கிலியால் கட்டி ஒரு தூணில் பிணைத்த வீரர்கள் அவரை அடிக்கத் துவங்கினார்கள். முள்கம்பிகள் அவருடைய முகத்தையும் உடம்பையும் இழுத்துக் கிழித்தன. சங்கிலிகளும் கூர்மையான முள் சாட்டைகளும் இயேசுவின் உடம்பில் இரத்தக் கோடுகளை வரைந்தன. இயேசு வலியால் துடித்தார். ஆனாலும் மனம் தளரவில்லை.

வீரர்கள் தங்கள் கை ஓயும் வரை இயேசுவை அடித்தார்கள். இயேசு இரத்த வெள்ளத்தில் மிதந்தார்.

பின் அவர்கள் அவருக்கு ஒரு சிவப்பு அங்கியை அணிவித்து
‘யூதரின் ராஜாவே வாழ்க…’ என்று சொல்லிக் கொண்டே எட்டி உதைத்தார்கள். இயேசுவின் காயமான உடம்பு மண்ணில் உருண்டது.

அவர்கள் கூர்மையான முட்களினால் ஒரு கிரீடத்தைப் பின்னி இயேசுவின் தலையில் வைத்தார்கள். தலையில் வைத்த கிரீடத்தின் மேல் தடிகளால் அடித்தார்கள். முட்கள் அவருடைய தலையைத் துளைத்தன. நெற்றியைக் கிழித்தன. தலை இரத்தத்துக்குள் அமிழ்ந்தது.

சித்திரவதை முடிந்து இயேசுவைத் தூக்கிக் கொண்டு மக்களின் முன்னிலையில் நிறுத்தினார்கள் படைவீரர்கள்.

‘பாருங்கள். இதோ மனிதன். ‘ பிலாத்து சொன்னான்.

‘சிலுவையில் அறைய ஆணையிடும்’ மக்கள் கத்தினார்கள்.

‘சிலுவையில் அறையக் கூடிய அளவுக்கு இவனிடம் நான் குற்றம் ஏதும் காணவில்லை. எனவே இவனை விட்டுவிடப் போகிறேன்’ பிலாத்து மீண்டும் சொன்னான்.

‘குற்றம் இல்லையா ? எங்களுக்கு ஒரு நியாயப் பிரமாணம் உண்டு. இவன் கடவுளின் மகன் என்று பிரகடனப் படுத்தினான். எனவே இவன் சாகவேண்டும்’ அவர்கள் குரலுயர்த்தினார்கள்.

பிலாத்து இதைக் கேட்டு இன்னும் அதிகமாக வருந்தினான். ஒருவேளை இவர் கடவுளின் மகனாக இருப்பாரோ ? என்ற கவலையும் அவரைப் பிடித்துக் கொண்டது.

‘இவன் செய்த குற்றம் என்ன ?’ பிலாத்து குரலை உயர்த்தினார்.

‘சிலுவையில் அறையும்… சிலுவையில் அறையும்…’ மக்கள் விடாமல் கத்திக் கொண்டே இருந்தார்கள்.

இயேசுவை விடுவிப்பது சாத்தியமில்லை என்பது பிலாத்துவுக்குப் புரிந்தது. இயேசுவை விடுவிக்க நினைக்கும் தன்னுடைய முயற்சி பெரும் கலவரத்தை நோக்கிப் போவதை அறிந்த பிலாத்து கூட்டத்தினர் முன்னிலையில் தண்ணீரை எடுத்து ‘இவனுடைய இரத்தப் பழியில் எனக்குப் பங்கில்லை. நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று கூறி தன்னுடைய கைகளைக் கழுவினான்.

‘இவனுடைய இரத்தப்பழி எங்கள் மேலும், எங்கள் பிள்ளைகள் மேலும் விழட்டும்’ என்று மக்கள் பதில் சொன்னார்கள்.

‘சரி… இவனை உங்கள் விருப்பம்போலச் செய்ய அனுமதிக்கிறேன்’ பிலாத்து சொல்ல மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.

பரபா விடுதலை செய்யப்பட்டான்.

இயேசு சிலுவை மரணத்துக்காய் தீர்ப்பிடப்பட்டார்.

mul-mudi.jpg

அதன்பின் இயேசுவைச் சிலுவையில் அறைவதற்கான வேலைகள் மும்முரமாகின. பாரமான சிலுவை ஒன்று வாங்கிவரப்பட்டது. அதை இயேசுவின் தோள்மீது சுமத்தி கொல்கொதா என்று அழைக்கப்பட்ட மலையை நோக்கி நடக்கவைத்தார்கள். கொல்கொதா என்பதற்கு மண்டைஓடு என்பது பொருள்.

படைவீரர்கள் கூட்டத்தினரை விலக்கி வழிஏற்படுத்த, நடக்கவே வலுவில்லாத குற்றுயிரான நிலையில் இயேசு பாரமான சிலுவையைச் சுமந்து கொண்டு மலையை நோக்கி நடந்தார்.

இயேசுவால் நடக்க முடியவில்லை. தடுமாறி விழுந்தார்.

படைவீரர்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த சாட்டையால் அவரை அடித்தார்கள். இரண்டு பேர் அவரை எழுப்பி விட மீண்டும் சிலுவை அவருடைய தோளில் போடப்பட்டது.

இயேசு அரண்மனை வளாகத்தை விட்டு வெளியே வந்தார். வெளியே பாமரமக்கள் ஏராளமானோர் குழுமியிருந்தார்கள். இயேசுவின் தீவிர சீடர்கள் தலைமறைவாகிவிட்டிருக்க, இயேசுவின் போதனைகளில் ஈர்க்கப்பட்ட பாமர மக்கள் அவருக்காகக் கண்ணீர் விட்டார்கள்.

இயேசு தொடர்ந்து நடந்தார்.

இருபுறமும் பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதார்கள்.

இயேசு தன்னிடம் எஞ்சியிருந்த வலிமையை எல்லாம் ஒன்று திரட்டி பேசினார்.
‘எருசலேம் மகளிரே… எனக்காக அழாதீர்கள். உங்களுக்காகவும், உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்’.

சொன்ன இயேசு மீண்டும் தடுமாறித் தரையில் விழுந்தார். பூமி அவருடைய இரத்தத்தைக் கொஞ்சம் துடைத்துக் கொடுத்தது.

மீண்டும் எழுந்தார். தொடர்ந்து நடந்தார். இயேசுவால் நடக்க முடியவில்லை. கொல்கொதா மலை இன்னும் தொலைவில் இருந்தது.

இயேசு மூன்றாவது முறையாகக் கீழே விழுந்தார். இனிமேல் எழும்புவதற்கு உடம்பில் வலு இல்லை. சிலுவையை யாராவது ஒருகை தூக்கி விட்டால் நன்றாக இருக்குமே, இயேசுவின் பார்வையில் தன்னுடைய பாரத்தைச் சுமக்கும் தோள்கள் ஏதாவது தென்படுகிறதா என்ற ஏக்கம்.

‘இவனால் சிலுவையைத் தூக்கிக் கொண்டு நடக்க முடியாது. என்ன செய்யலாம் ?’

‘யாரையாவது பிடித்து சிலுவையைச் சுமக்கச் செய்வோம், இல்லையேல் இவன் மலையை அடையும் முன் மரணத்தை அடைந்துவிடுவான்’

படைவீரர்கள் பேசிக் கொண்டே சுற்றுமுற்றும் பார்த்தார்கள். சீரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் அவர்களுடைய கண்களில் தட்டுப்பட்டான்.

‘ஏய்… நீ யார்..’

‘நான் சீமோன். சீரேன் ஊரைச் சேர்ந்தவன். எனக்கு இந்த மனிதனைத் தெரியாது… நான் ஒன்றும் அறியாதவன்’ அவன் பயந்து நடுங்கினான்.

‘எங்கிருந்து வருகிறாய்’

‘வயலில் வேலை செய்துவிட்டு வருகிறேன்’

‘சரி… சரி.. வந்து இவனுடைய சிலுவையைச் சுமந்து கொண்டு வா…’

‘ஐயா… என்னை விட்டுவிடுங்கள். வேறு யாரையாவது அழையுங்கள்’ சீமோன் நழுவப் பார்த்தார்.

அவர்கள் அவரைக் கட்டாயப் படுத்தி சிலுவையைச் சுமக்க வைத்தார்கள். இயேசுவுக்காகச் சிலுவையைச் சுமந்தான் சீமோன் !.

4.jpg

கொல்கொத்தா மலை இயேசுவின் வருகைக்காகக் காத்திருந்தது. குற்றவாளிகளின் இரத்தம் சுமந்து சுமந்து அழுக்காகிக் கிடந்த கொல்கொதா மலையில் இயேசுவின் இரத்தத் துளிகள் விழுந்தன.

இயேசுவையும் சிலுவையையும் மலையுச்சியில் கொண்டுபோய் போட்டார்கள்.

இயேசுவை மட்டும் சிலுவையில் அறையாமல் அவருடன் இரண்டு குற்றவாளிகளையும் சிலுவையில் அறைந்து குற்றவாளிகளோடு குற்றவாளியாக அவரை நிற்கவைக்கவேண்டும் என்று ஏற்கனவே அலுவலர்கள் முடிவு செய்திருந்தார்கள். அந்த இரண்டு குற்றவாளிகளும் கூட இப்போது கொல்கொதா மலையுச்சியில் வந்து சேர்ந்தார்கள்.

இயேசுவுக்கு திராட்சை இரசத்தில் கசப்பைக் கலந்து ஒருவன் குடிக்கக் கொடுத்தான். இயேசு அதைக் குடிக்கவில்லை.

பெரிய நீளமான ஆணிகள் தயாராய் இருந்தன.

இயேசு சிலுவையில் கிடத்தப்பட்டார். அவருடைய கைகளை இழுத்து மரத்தோடு சேர்ந்து ஆணிகளால் அறைந்தார்கள்.

பார்த்துக் கொண்டிருந்த கூட்டம் வீறிட்டு அலறியது. இயேசு வலியால் துடித்தார். இயேசுவின் கால்கள் இரண்டையும் சேர்த்து பாதங்களைத் துளைத்தபடி நுழைந்தது மூன்றாவது நீளமான ஆணி. சொல்லமுடியாத வலி இயேசுவைத் துடிதுடிக்க வைத்தது. தனக்கு ஆதரவாய்ப் பேச யாராவது வருவார்களா என்று இயேசுவின் கண்கள் பார்த்தன. கடைசிவரை யாரும் வரவேயில்லை.

“யூதர்களின் அரசன்” என்னும் குறிப்பைத் தாங்கிய பலகை, சிலுவையில் இயேசுவின் தலைக்கு மேலாக அறையப்பட்டது.

சிலுவை மரம் நேராக நிமிர்த்தப்பட்டது !

cross2.jpg

‘மோசே பாலைவனத்தில் வெண்கலப் பாம்பை உயர்த்தியது போல மானிடமகனும் உயர்த்தப் படவேண்டும்’ இயேசு சொல்லியிருந்த வார்த்தைகள் அவருடைய சீடர்களின் மனதுக்குள் எதிரொலித்தன.

இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின் கழற்றி வைக்கப்பட்டிருந்த இயேசுவின் அங்கியை யார் சொந்தமாக்குவது என்று படைவீரர்களுக்குள்ளே தர்க்கம். அந்த அங்கி மேலிருந்து கீழ் வரை ஒரே துணியால் உருவாக்கப்பட்டிருந்தது.

‘நான் தான் மூத்த வீரன்.. எனக்குத் தான் இந்த ஆடை வேண்டும்’

‘நான் தான் இவனை அதிகமாய்த் துன்புறுத்தினேன். எனக்குத் தான் இந்த ஆடை !’

‘இவனை ஆணியில் அறைந்தது நான் தான்… எனக்குத் தான் இந்த ஆடை வேண்டும்’ அவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டார்கள்.

‘இந்தச் சண்டை முடியப்போவதில்லை. ஒன்று செய்யலாம். நம்முடைய பெயர்களையெல்லாம் எழுதிச் சீட்டுப் போடலாம். யாருடைய பெயர் வருகிறதோ, அவருக்கே இந்த ஆடை… என்ன சொல்கிறீர்கள் ?’ ஒருவர் கேட்க, மற்றவர்கள் வேறு வழியின்றி ஒத்துக் கொண்டார்கள்.

‘என் ஆடைகளைத் தங்களுக்குள் பகிந்து கொண்டார்கள். என் உடை மீது சீட்டுப் போட்டார்கள்’ என்று மறைநூலில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகள் அதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களின் உள்ளத்துக்குள் எதிரொலித்தன.

இயேசுவின் வலப்புறமும் இடப்புறமும் இரண்டு கள்வர்கள் சிலுவையில் அறையப்பட்டு தொங்கினார்கள்.

‘திருக்கோயிலை இடித்து மூன்றாவது நாளில் கட்டுவோனே. இந்த மூன்று ஆணிகளின் கட்டுகளிலிருந்து உன்னை விடுவித்துக் கொள்’

‘பிறரை விடுவித்த மகானே… உன்னை விடுவிக்கத் தெரியவில்லையா ?’

‘இப்போது நீ சிலுவையிலிருந்து இறங்கி வா. உன்னை நாங்கள் கடவுளாக ஏற்றுக் கொள்கிறோம்’

சிலுவைக்குக் கீழே இருந்தவர்கள் இயேசுவை நோக்கி இகழ்ந்தார்கள்.

‘தந்தையே இவர்களை மன்னியும். இவர்கள் தாங்கள் செய்வது என்னவென்பதை அறியாமல் செய்கிறார்கள்’ இயேசுவின் உதடுகள் மன்னிப்பை வேண்டின.

இயேசுவின் இடப்பக்கத்தில் அறையப்பட்டிருந்த கள்ளனும் இயேசுவைப் பார்த்து,’ நீர் கடவுளின் மகனானால் நீரும் விடுதலையாகி என்னையும் விடுவியும்’ என்றான்.

அப்போது அவருடைய வலப்பக்கத்தில் அறையப்பட்டிருந்தவனோ
‘நீ இன்னும் திருந்தவில்லையா ? நாம் குற்றம் செய்தோம் தண்டனை அனுபவிக்கிறோம். இவர் குற்றமே செய்யாதவர். நாம் தண்டனை பெறுவது நியாயம். ஆனால் இவர் கடவுளின் மகன். தண்டனைக்குரியவரல்ல. எனவே நீ இயேசுவை இகழாதே.’ என்று கூறிவிட்டு இயேசுவின் பக்கமாய்த் திரும்பி
‘இயேசுவே என் தவறுகளை மன்னித்து என்னையும் உமது விண்ணரசில் சேர்த்துக் கொள்ளும்’ என்றான்.

இயேசு அவனிடம்,’ நீ என்னுடன் வான்வீட்டில் நிச்சயம் இருப்பாய்’ என்றார்.

நண்பகல்.

திடீரென நாடெங்கும் இருள் பரவியது. வெயில் கொளுத்த வேண்டிய நண்பகலில் நாடே இருண்டதைக் கண்ட மக்களும், தலைவர்களும் பதட்டமடைந்தார்கள். அந்த இருள் மூன்று மணி வரை நீடித்தது.

சிலுவை மரத்துக்குக் கீழே இயேசுவின் தாயார் சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும் தன் அன்பு மகனை உயிருக்குள் இரத்தம் வழிய உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அவளுடைய உடலும் உள்ளமும் ஒட்டுமொத்தமாய் சோர்ந்துபோய் வலியால் துடித்துக் கொண்டிருந்தது.

இயேசு தன் தாயைப் பார்த்தார். அருகிலே நின்றிருந்த தன் சீடரைப் பார்த்தார்.

தன் தாயை நோக்கி

‘அம்மா….’ என்று அழைத்தார்.

6.jpg

தாய் கதறினாள். அவளால் ஏதும் பேச முடியவில்லை. மரணத்தின் விளிம்பில் தொங்கிக் கொண்டிருக்கும் மகனை ஏறிட்டுப் பார்க்கவும் அவளால் முடியவில்லை.

‘அம்மா… அதோ உன் மகன்’ என்று சீடரை நோக்கிக் கூறினார்.
பின் சீடரை நோக்கி
‘இதோ உன் தாய்…’ என்றார். சீடர் கண்ணீருடன் தலையாட்டினார்.

‘தாகமாய் இருக்கிறேன்’ இயேசுவின் குரல் சிலுவை உச்சியிலிருந்து மெல்லியதாய் விழுந்தது.

படைவீரர்கள் உடனே கடற்காளானைக் காடியிலே தோய்த்து ஒரு ஈட்டியில் குத்தி அவரிடம் நீட்டினார்கள். அவர் அதைக் குடிக்கவில்லை. அவருடைய ‘தாகமாயிருக்கிறேன்’ என்னும் வார்த்தையின் பொருளை உணர்ந்து கொள்ளுமளவுக்கு படைவீரர்கள் பக்குவமடைந்திருக்கவில்லை.

காலை ஒன்பது மணியளவில் சிலுவையில் அறையப்பட்ட இயேசு பிற்பகல் மூன்று மணிவரை சிலுவையில் தொங்கினார்.

மூன்று மணியளவில் இயேசு உரத்த குரலில் கத்தினார்
‘ஏலி…ஏலி…லெமா சபக்தானி…’. என் இறைவா என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர் ? என்பதே அதன் பொருள். சிலுவையின் கீழ் அதைக் கேட்டுக் கொண்டிருந்த இயேசுவின் சில ஆதரவாளர்கள் கண்ணீர் விட்டார்கள்.

படைவீரர்களோ சிரித்தார்கள்.

‘ஏய்.. இவன் இறைவாக்கினர் எலியாவைக் கூப்பிடுகிறானா ?’

‘ஒருவேளை எலியா வந்து இவரைக் காப்பாற்றுவாரோ ?’

‘பார்ப்போம்… ஒருவேளை ஏதாவது சுவார?யம் நிகழலாம்…’

என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள்.

‘தந்தையே… உமது கைகளில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்’ இயேசு உரத்த குரலில் மீண்டும் கத்தினார். அதைச் சொன்னதும் இயேசுவின் தலை சாய்ந்தது.

இயேசு உயிர்விட்டார் !

அதே நேரத்தில் எருசலேம் தேவாலயத்தின் திரை மேலிருந்து கீழாக இரண்டாகக் கிழிந்தது. அங்கே கூடியிருந்த குருக்களும், மறைநூல் அறிஞர்களும் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள்.

பாறைகள் வெடித்துச் சிதறின. பெரும் மலைகள் பிளந்தன. பல கல்லறைகள் திறந்தன. இறந்த பலருடைய உடல்கள் உயிருடன் எழும்பின !

கொல்கொத்தா மலையில் சிலுவையருகே நின்றிருந்த படைத்தலைவர்களும் படைவீரர்களும் நடு நடுங்கினார்கள். மலையே கவிழ்ந்து விடுவதுபோல ஆடியது.

இயேசுவைப் பழித்தவர்கள் எல்லாம்
‘இ…இவர் உண்மையிலேயே இறைவாக்கினர் தான்’ என்று நடுக்கத்துடன் சத்தமிட்டார்கள்.

திருட்டு : உண்மை கலந்த கதை

station.jpg

ஐயோ… என் பையைக் காணோமே…. என் பையைக் காணோமே…
விடியற்காலை நாலு மணிக்கு இரயிலில் கேட்ட கதறல் குரலுக்கு எல்லோரும் எழுந்து விட்டார்கள். இரயில் விழுப்புரத்தைத் தாண்டி வந்து கொண்டிருந்தது.

கதறிக்கொண்டே அங்கும் இங்கும் ஓடி எல்லா இருக்கைகளின் அடியிலும் தவழ்ந்து தவழ்ந்து தேடிய அந்த அம்மாவுக்கு குறைந்த பட்சம் ஐம்பது வயதாவது இருக்கும். ஒட்டிய தேகம், கலைந்த தலை, சாயம்போய் ஆங்காங்கே கிழிவதற்குத் தயாராய் இருக்கும் சேலை. அதற்கு சற்றும் சம்பந்தமில்லாத வண்ணத்தில் ஜாக்கெட்.

என்னம்மா … என்ன இருந்துது பைல ? எங்கே வெச்சிருந்தே ? நல்லா போய் தேடிப்பாரு. இப்படியா தூங்கறது ட்ரெயின்ல ? ஆளாளுக்கு ஏதோதோ சொல்ல அந்தம்மா அழுகை இன்னும் அதிகமாகியது.

ஊரில இருந்து சென்னைக்கு வரங்கய்யா… என் பொண்ணு கல்யாணத்துக்காக ஊர்ல இருந்த உழவு மாட்டையும் நிலத்தையும் வித்து நகையும் பணமும் கொண்டு வந்தேன். பத்தாயிரம் ரூபாயும், பத்து பவுன் நகையும் இருந்துது பைல. நேற்று முழுக்க அலைச்சலுங்க. அதான் கொஞ்சம் அசந்துட்டேன். அப்படியும் தலகாணி மாதிரி வெச்சி தான் தூங்கினேன். எந்த பாவி பய எப்போ எடுத்தான்னு தெரியலையே. ஐயா… தேடிப்பாருங்கையா…. புண்ணியமா
போவும். யாராச்சும் எடுத்திருந்தா குடுங்கையா… கால்ல விழறேன்… அந்த அம்மாவின் புலம்பலும் அழுகையும் இரயில் பெட்டியை நிறைத்தது.

சிலர் மீண்டும் போர்வைக்குள் நுழைந்து தூங்க, சில நல்லெண்ணம் கொண்டோர் பெட்டியில் தேடவும், யாராவது வந்தாங்களா என்று விசாரிக்கவும் துவங்கினர். அதற்குள் டி.டி.ஆருக்கு தகவல் போக, டி.டி.ஆர் வந்து சேர்ந்தார்.

யாருக்கும்மா பொட்டி காணோம் ?
‘ஐயா எனக்குதான்யா… பொட்டி எல்லாம் இல்லை. பைதான்யா.. அதுக்குள்ள பத்தாயிரமும், பத்துபவுன் நகையும் இருந்துதுய்யா… எப்படியாவது தேடிப்புடிச்சு குடுங்கையா …’ நேரம் செல்லச் செல்ல கிடைக்காமல் போய்விடுமோ என்னும் நினைப்பிலேயே அந்த அம்மாவின் அழுகை அதிகமானது.

பேரென்னம்மா ?
‘பொன்னம்மா’
இவ்ளோ நகை பணம் எல்லாம் எடுத்துட்டு வரே… ஒரு சங்கிலி கொண்டு வந்து கட்டி வைக்க வேணாம் ? கூட யாரும் வரலயா ?

‘ஐயா யாரும் வரலீங்க… நான் மட்டும் தான். இந்த பணம் இல்லேன்னா என் பொண்ணு வாழ்க்கை போயிடுங்க…’ பொன்னம்மா நிறுத்தாமல் அழுதாள்.

களவு போன பொருள் கிடைக்கிறது குதிரைக்கொம்பும்மா…. முணுமுணுத்துக் கொண்டே ஒவ்வோர் இருக்கை இருக்கையாய் நடந்து கொண்டிருந்த டி.டி.யாரிடம் ஒருவர் கிசுகிசுத்தார்.
‘சார்… பையைத் திருடினவனை நான் பார்த்தேன். பார்க்க ஸ்டுடண்ட் மாதிரி இருக்கானே ஐம்பத்து ஒன்பதாம் எண் இருக்கைல… அவன் தான் சார் எடுத்தவன் நான் பார்த்தேன்…நான் சொன்னதா சொல்லிடாதீங்க….’ கிசுகிசுத்துவிட்டு திரும்பிக் கொண்டார் அவர்.

டி.டி.ஆர்… ஏதும் தெரியாதவர் போல எல்லோரிடமும் கேட்டுக்கொண்டே அவனிடமும் விசாரித்தார். அவன் ஏதும் தெரியாதது போல பேச… டி.டி.ஆர் அகன்றார்.

அதன்பின் வி?யங்கள் ரகசியமாக நடந்தன. பொன்னம்மா அழுதுகொண்டு அங்குமிங்கும் அலைய, டி.டி.ஆர் செங்கல்பட்டு இரயில்வே காவல் நிலையத்துக்கு ரகசிய தகவல் அனுப்பி, இரயில் வண்டி செங்கல்பட்டு வந்ததும் சாதாரண உடையில் வந்த காவலர்கள அவனை அமுக்கி வெளியே போட்டதில் உண்மையை ஒத்துக் கொண்டான் அவன். பொன்னம்மாவுக்கு போன உயிர் வந்ததுபோல் இருந்தது.

வாயில மண்ணுவிழுந்த பயலே நீ நல்லா இருப்பியா… உன்னை கள்ளி வெட்டிச் சாரி போக…. என்று அவளுடைய பாஷையில் சபித்துக் கொண்டே கிடைத்த பையை பரபரப்பாய் பிரித்துப் பார்த்து எல்லாம் சரியாய் இருக்கிறது என்றதும் எல்லா தெய்வங்களையும் மனசுக்குள் நினைத்து நன்றி சொல்லி இருக்கையில் வந்து அமர்ந்தாள்.

அப்போது … இன்ஸ்பெக்டர் கூப்பிட்டார்.
‘வாம்மா… ஸ்டேசன் வா… கம்ப்ளெயிண்ட் எழுதி குடு’

‘ஐயா… கம்ப்ளெயிண்ட் எல்லாம் வேண்டாங்கய்யா…. ஏதோ பாவி மவன் தெரியாம எடுத்துட்டான். அதான் கிடச்சுடுச்சுல்லீங்களா ? போகட்டும் நாசமாப் போறவன்… நம்ம கம்ளெயிண்ட் குடுத்தா படிச்ச முடியாம போயிடும் இல்லையா ?’
பொன்னம்மாவுக்குள்ளிருந்த கிராமத்து இதயம் பேச, திருடியவன் கூட ஏகத்துக்கு குற்ற உணர்வை முகத்தில் வாங்கி தலை கவிழ்ந்தான்.

‘ஏம்மா…. உன்னோட லெக்சரை எல்லாம் ஸ்டேசன்ல வெச்சுக்கோ… வா… சீக்கிரம்…  டிரையின் கிளம்பப் போவுது’ இன்ஸ்பெக்டர் கத்தினார்.

‘ஐயா… என்கிட்டே இருக்கிற டிக்கெட்டை வெச்சு வேற ட் ரெயினில போவ முடியுமுங்களா ?’ அப்பாவியாய்க் கேட்டுக் கொண்டே இறங்கிய பொன்னம்மாவைப் பார்த்து சக பயணிகள் பரிதாபப் பட்டனர்.

‘அவ்வளவுதான் அந்த போலீஸ்காரங்க இருக்கிற பத்துல ஒண்ணையாவது புடுங்காம விடுவானுகளா ?’
‘ஆதாயம் இல்லாம எவன் ஆத்தோட போவான் ?’
‘ பாவம் கிழவி…’

‘சரி பரவாயில்லை… தொலைஞ்ச பணம் கிடச்சுதே..’
ஆளாளுக்கு ஏதேதோ பேசிக் கொண்டார்கள். வண்டி நகர்ந்தது.

***

பொன்னம்மா ஸ்டேசன் வாசலில் காத்திருக்கத் துவங்கி இரண்டு மணி நேரமாகிவிட்டது.  அதற்குள் பையைத் திருடிய பையனை ஸ்ட்டியோடு நிற்க வைத்து போட்டோ  எடுக்கவும், கைரேகைகளை எடுக்கவும் ஆரம்பித்திருந்தது ரெயில்வே போலீஸ்.

அவனும் அவன் பாகத்துக்கு கெஞ்சினான். ‘ஐயா… தெரியாம செஞ்சுட்டேங்க. இதான் முதல் தடவை. எங்க அப்பா அம்மா தெரிஞ்சா அவமானத்துல செத்தே போயிடுவாங்க. தயவு செஞ்சு விட்டுடுங்கய்யா… இனிமே இந்தமாதிரி பண்னவே மாட்டேன். என் படிப்பும் வாழ்க்கையும் போயிடும்யா…’

இன்ஸ்பெக்டர் அவனுடைய கழுத்தைப் பிடித்து தள்ளினார்.

‘திருட்டு நாய்ங்க எதுதான் இப்படி பேசாம இருந்திருக்கு… சும்மா கிட… ‘

‘யோவ் ரைட்டர் எங்கய்யா… இன்னும் காணோம். அவனை இங்கே வரச்சொல்லு…. சீக்கிரம் எப்ஃஐஆர் தயார் பண்னணும்..’

‘கிழவிக்கு ஏதாச்சும் வேணுமா கேளு…’

‘ஆமா எஸ்பி எங்கய்யா.. புடிக்கவே முடியலை… வெளியூர் போயிருக்காரா என்ன ?… பழனி… அவரோட செல்நம்பர் என்ன ?’

இன்ஸ்பெக்டர் பரபரப்பாய் இருந்தார்.

பழனி எஸ்பியுடைய செல்போன் நம்பரை கிழிந்து கிடந்த பேப்பர்களிடையே இருந்து துடைத்து எடுத்து நீட்டினார்.

‘ஐயா… எஸ்பி… இருக்காருங்களா ? நான் செங்கல்பட்டு ரெயில்வே இன்ஸ்பெக்டர் தங்கதுரை பேசறேன்’

‘சொல்லுய்யா… என்ன வி?யம் ?’

‘சார்… இன்னிக்கு காலைல ஒரு தெஃட் ஐ புடிச்சுட்டோ ம் சார். சுமார் ஐம்பதாயிரம் மதிப்புள்ள பொருட்களை ரிக்கவர் பண்ணிட்டோ ம்..’

‘நல்லது… விட்டுடாதே… ஏற்கனவே உங்க ஸ்டேசன் மேல ஏகப்பட்ட பிளாக் மார்க். நிறைய கேஸ் பெண்டிங். நீங்க ரெயில்வே திருடங்களுக்கு சப்போர்ட் பண்றமாதிரி எல்லாம் புகார் வந்திருக்கு. அதனால் இந்த மேட்டரை ரொம்ப பெரிசு பண்ணு.. அப்போ தான் நம்ம டிப்பார்ட் மெண்ட் மேல கொஞ்சமாச்சும் மக்களுக்கு மரியாதை இருக்கும்’

‘ அதனால தான் பார்ட்டியை ஸ்டேசனுக்கு வரச்சொல்லி கம்ப்ளெயிண்ட் எழுதி வாங்கிட்டிருக்கேன் சார்’

‘ம்ம்… அதைப் பண்ணு முதல்ல. ஆமா… யாரு அக்யுஸ்ட். அதே ஏரியாவா ?

‘ இல்ல சார்… விருதுநகர் பக்கத்துல உள்ள ஒரு பையன்’

‘ அதானே பார்த்தேன்.. நம்ம ஏரியான்னா… உங்களால புடிக்க முடியாதே…. போன மாசம் ஏழு கேஸ் ! உங்களுக்குத் தெரியாம நடந்திருக்காது. ஆனா எனக்கு எதுவும் வரலை. நான் இங்கே திருச்சில இருக்கிறதனால எனக்கு எதுவும் தெரியாதுன்னு நினைச்சுடாதே…’ எஸ்பி தனக்கு மாமூல் வராத வெறுப்பை வெளிக்காட்டினார்.

‘ அப்படியெல்லாம்…. ‘

‘ போதும்யா… ரொம்ப இழுக்காதே. இந்த கேசை ஸ்டிராங்கா புரஜக்ட் பண்ணு. திருட்டு நடந்த மூணு மணி நேரத்துல திருடனைப் பிடித்து ரயில்வே போலீஸ் சாதனை ந்னு நியூஸ் குடு. …சரியா… ‘

‘அப்படியே செய்யறேங்கையா… ‘ என்று சொல்லி போனை வைத்த இன்ஸ்பெக்டர். போனைவைப்பதற்காகவே காத்திருந்தது போல, வைத்தவுடன் அந்த காவலர்களுக்கே உரிய ….பய என்னும் கெட்டவார்த்தையை மந்திரம் போல உரைத்தார்.

மதியம் மணி இரண்டைக் கடந்தபோது இன்ஸ்பெக்டர் பொன்னம்மாவை அழைத்தார்.

‘வாம்மா… வந்து இங்கே ஒரு கையெழுத்து போடு….’

பொன்னம்மா பெருவிரலை நீட்டினாள்….
‘கம்ப்ளெயிண்ட் போட்டாச்சுங்களா ஐயா… நான் இப்போ கிளம்பலாமா ?’ என்று கூறிக் கொண்டே பையைத் தொட்டாள்.

‘என்னம்மா… புரியாம பேசறே. இப்போ தான் கம்ப்ளெயிண்ட் போட்டிருக்கு… இனிமே இதை கோர்ட்டுக்கு கொண்டு போயி விசாரணை பண்ணிட்டு உங்க கிட்டே பொருளை எல்லாம் குடுப்பாங்க. நீ இப்போ போ…. போயிட்டு இரண்டு வாரம் கழிச்சு வா… என்னிக்கு கோர்ட்டுக்கு போகணும்ன்னு சொல்றேன்’ இன்ஸ்பெக்டர் சொல்லச் சொல்ல இடிந்து போய் உட்கார்ந்தாள் பொன்னம்மா.

‘ஐயா… பொண்ணுக்கு கல்யாணம் வெச்சிருக்கேங்கய்யா… பணத்தையும் நகையையும் குடுத்துடுங்கய்யா.. எந்த கோர்ட்டுக்கு வேணும்ன்னாலும் நான் வரேன்’

‘என்ன புரியாம பேசறே. அதெல்லாம் ரூல்ஸ் படி தாம்மா நடக்கும்.. நீ இப்போ போயிட்டு இரண்டு வாரம் கழிச்சு வா. எல்லா நகையையும் தனித்தனியே எடை போட்டு கணக்கு எழுதணும். இருக்கிற பணத்தை எல்லாம் கணக்கு காட்டணும்… எத்தனை வேலையிருக்கு… போ…உன்பணத்தை யாரும் முழுங்கிடமாட்டாங்க’ என்று இன்ஸ்பெக்டர் சொல்ல.. எதுவும் புரியாமல் வெளியே வந்தாள் பொன்னம்மா.

அதன்பின் இரண்டு வாரங்கள் கழிந்து பொன்னம்மா செங்கல்பட்டு ஸ்டேசனுக்கு வந்து காவல் இருக்க…

‘இந்த திருட்டு நடந்தது விழுப்புரம் ஏரியாம்மா.. அதனால விழுப்புரம் ஸ்டேசனுக்கு நாங்க கேசை மாற்றியிருக்கோம். கேஸ் செலவுக்கெல்லாம் உன் கிட்டேயிருந்து ஆயிரம் ரூபாய் எடுத்திருக்கோம். யாரு கேட்டேலும், பத்து பவுன் நகை ஒன்பதாயிரம் ரூபாய்ன்னு சொல்லு… இல்லேன்னா உனக்கு ஒண்ணும் கிடைக்காது’ என்று இன்ஸ்பெக்டர் அவளை விழுப்புரம் அனுப்பினார்.

பொன்னம்மா… அழுதுகொண்டே விழுப்புரம் ஸ்டேசனுக்கு ஓட…
‘இன்னும் கேஸ் கட்டு இங்கே வரலேம்மா…’ என்று நாட்கணக்கில்  விழுப்புரம் ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் இழுத்தடிக்க, பொன்னம்மா அங்கும் இங்கும் ஓடி ஓடி வாரங்கள் மாதங்களாக…. ஒருவழியாக கேஸ் விழுப்புரத்துக்கு வந்தது.

இன்ஸ்பெக்டர் அழுதுகொண்டிருந்த பொன்னம்மாவிடம் சலனமே இல்லாமல் சொன்னார்.
‘ அம்மா… கேஸ் முடியறதுக்கு எப்படியும் இரண்டு மூணுவருசம் ஆகும். அதுவரைக்கும் உங்க நகைகளையும் பணத்தையும் கோர்ட் லாக்கர்ல தான் வெச்சிருப்பாங்க…. நீங்க கேஸ் ஆரம்பிச்ச பிறகு உங்க சாட்சியைச் சொல்லிட்டு நகைகளை வாங்கிட்டு போயிடலாம். ஆனா அந்த நகைகளை எல்லாம் கோர்ட் எப்போ கேட்குகோ அப்போ கொண்டு வந்து காட்டணும். அதை விக்கவோ, மாற்றவோ கூடாது. பணத்தோட நம்மரை எல்லாம் நோட் பண்ணி வெச்சிருக்காங்க. அதனால பணம் எல்லாம் கோர்ட்ல தான் இருக்கும் அது கேஸ் முடிஞ்சதுக்கு அப்புறம் தான் தருவாங்க….’

‘அப்போ என் பொண்ணு கல்யாணம்….. ‘ என்று ஏங்கிய பொன்னம்மா கண்கள் இருண்டு
போய், நடை தளர்ந்து ஸ்டேசன் வாசலிலேயே சாய்ந்தாள்.

பணம் இல்லாமல் பொன்னம்மாவின் மகளுடைய கல்யாணம் நின்று போனதும், அந்த அவமானம் தாங்காமல் பொன்னம்மாவின் கணவர் தற்கொலை செய்து கொண்டதும், ஒருவருடம் கடந்தபின்னும் இன்னும் பொன்னம்மா விழுப்புரம் கோர்ட் வாசலில் வெயிலில் அழுது கொண்டிருப்பதையும், கேஸ் என்பதே குறைந்த பட்சம் ஐந்து வருடம் என்பதை அறியாமல் வாரம்தோறும் அவள் மனசாட்சியே இல்லாத தலைமை கிளார்க்கிடம் அழுது
புலம்புவதையும் எழுதுவதற்குரிய மனவலிமை எனக்கு இல்லாததால் இந்தக் கதை இத்துடன் முடிவடைகிறது

நாளை இந்த வேளை : அறிவியல் புனைக் கதை

light.jpg

‘நம்பவே முடியவில்லை. நிஜமாவா சொல்றீங்க ?’ அந்த ஆராய்ச்சி நிலையத்தின் தலைமை அதிகாரி திகைப்புடன் கேட்டார். அவருடைய விழிகளில் திகிலும் ஆச்சரியமும் சரி விகிதத்தில் கலந்திருந்தது.

‘ஆமா சார். இதுக்கு எந்த கம்யூட்டர் சிப்? ம் தேவையில்லை. எந்தவிதமான அறிவியல் கருவிகளும் தேவையில்லை. கடவுள் அதி அற்புதமாய்ப் படைத்திருக்கின்ற மனிதனின்  மூளையே போதும்’ சித்தார்த் பெருமையுடன் சொன்னான்.

‘இப்படி ஒரு யோசனை உங்களுக்கு எப்படி வந்தது ? அதுவே ஆச்சரியமாக இருக்கிறது’ அதிகாரி கண்களில் இருந்த வியப்பில் ஒருதுளி கூட குறையாமல் பேசினார்.

திடீரென நம்ம வீட்டுக்கு விருந்தாளி வரப்போறாருன்னு தோணும். பார்த்தா தூரத்துச் சொந்தக்காரங்க யாராவது வந்து நிப்பாங்க. யாரோ நமக்குப் போன் பண்ணப் போறாங்கன்னு நினைப்போம், அப்போ பார்த்து யாராவது போன் பண்ணுவாங்க. இப்படி நடக்கிற அனிச்சைச் செயல்களோட காரணத்தைத் தான் கடந்த பல வருடங்களா ஆராய்ச்சி செய்திட்டே இருந்தேன். அதோட வளர்ச்சி தான் என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கு.

‘இன்னும் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்..’

சொல்றேன். நம்ம மூளை ஒரு அற்புதம். அதோட போட்டி போட நம்முடைய எந்த அறிவியல் கருவிக்கும் வலு இல்லை. உண்மையைச் சொல்லணும்ன்னா மூளையை விட சிறப்பானதா நாம எதையும் கண்டுபிடிக்கவேயில்லை.

அடுத்த நிமிடம் ஏதோ நடக்கப் போகுதுன்னு நமக்குச் சொல்ற அந்த வேலையை மூளையோட ஒரு குறிப்பிட்ட பாகம் தான் செய்யுது. அந்த இடத்திலே தான் என்னோட ஆராய்ச்சி ஆரம்பமாச்சு.

அந்த பாகத்துல மூளைக்கு ஏற்படக் கூடிய மாற்றங்களை இன்னும் கொஞ்சம் அதிகப் படுத்தினா, அதாவது அந்த எண்ணம் தோன்றும் போது ஏற்படக் கூடிய அதிர்வலைகளை அதிகப்படுத்தினா, அடுத்த நிமிடம் ங்கிறது அதிகமாகி அடுத்த மணி நேரத்துல என்ன நடக்கும்ங்கிறதை நாம கண்டு பிடிக்க முடியும். அப்படித் துவங்கின
ஆராய்ச்சியோட வளர்ச்சி தான் இப்போ அடுத்த நாள் என்ன நடக்கும்ங்கிறதை கண்டு பிடிக்கக் கூடிய நிலமைல வளர்ந்திருக்கு.

‘ஆச்சரியமா இருக்கு சித்தார்த். பெருமையாவும் இருக்கு. அப்போ நாளைக்கு என்ன நடக்குதுங்கிறதை நாம் இன்னைகே தெரிஞ்சுக்க முடியும் இல்லையா ?’

‘நிச்சயமா !. நாளைக்கு நடக்கிறதை அறிந்து கொள்ளக் கூடிய வகைல ஒரு மனித மூளையைத் தயாராக்கி வைத்திருக்கிறேன். அதுதான் இப்போதைய வெற்றி. இதையே இன்னும் பெரிய அளவில் விரிவுபடுத்தினா, இந்த நாள் என்பது வாரம், மாதம், வருடம் என்ற நிலைக்கு நீட்டிக்க முடியும் என்பது தான் என்னுடைய நம்பிக்கை’

‘வாட்… மனித மூளையைத் தயாராக்கி வைத்திருக்கீங்களா ?. இது நம்ம விதிகளுக்கு எதிரானது. மனிதனை ஆராய்ச்சிக்கு உட்படுத்துவதற்கு முன் விலங்குகளை ஆராய்ச்சில உட்படுத்தினீங்களா ? ‘ அதிகாரியின் கண்களில் திகில் அதிகமானது.

‘மன்னிக்கணும். நாளைக்கு என்ன நடக்கும்ங்கிறதை விலங்குகள் அறிந்து கொண்டாலும் அதை நமக்குச் சொல்லக் கூடிய அறிவு அவற்றுக்குக் கிடையாது இல்லையா ?.  அதனால இந்த ஆராய்ச்சில விலங்குகளை ஈடுபடுத்திப் பார்க்கவில்லை. அப்படிப் பார்ப்பதால் நமக்கு எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. என்னுடைய உதவியாளர் நாதனைத் தான் ஈடுபடுத்தியிருக்கிறேன்’ சித்தார்த் அமைதியாகச் சொன்னான்.

மனிதர்களை ஆராய்ச்சிக்கு உட்படுத்துவதற்கு முன்பாக நீங்கள் உயர்மட்டக் குழுவிடம் அனுமதி வாங்கியிருக்க வேண்டும். ஏதானும் தவறு நடந்திருந்தால்…’ அதிகாரியின் குரல் கோபமடைந்தது.

‘மன்னியுங்கள். என்னுடைய ஆராய்ச்சியில் உங்களுக்கு எப்போதுமே நம்பிக்கை இருந்ததுண்டு. மனித ஆராய்ச்சி என்று சொல்லும்போது நிச்சயமாக நம்முடைய குழு அதை அனுமதிக்காது. அதனால் தான் அதைப்பற்றி குழுவுக்குத் தெரிவிக்காமல் உங்களிடம் தனிப்பட்ட முறையில் பேசிக் கொண்டிருக்கிறேன்’ சித்தார்த் குரலை தாழ்த்திப் பேசினான்.

அதிகாரி என்ன சொல்வதென்று தெரியாமல் கையிலிருந்த பேனாவை உள்ளங்கையில் வைத்து இருகைகளாலும் உருட்டினார்.

‘சார். இதனால் நம்முடைய நாட்டுக்குக் கிடைக்கப் போகும் பலன் கொஞ்ச நஞ்சமல்ல. நாளைக்கு காஷ்மீர் செல்லும் பிரதமரின் உயிருக்கு உத்தரவாதம் இருக்குமா ? நாளை ஏதேனும் விமானம் சியர்ஸ் டவர்சை தகர்க்குமா, எதிர்பாராத நிலநடுக்கம் எங்கேனும் நிகழுமா ? என்பதையெல்லாம் நம்மால் கண்டு பிடிக்க முடியும். ஏன் நாளைக்கு எத்தனை மில்லி மீட்டர் மழை பெய்யுங்கிறதைக் கூட நம்மால கண்டுபிடிக்க முடியும்.’

‘எதை வச்சு சொல்றீங்க ?’

‘நீங்க இந்த ஆராய்ச்சிக்கு அனுமதி அளிப்பீங்கங்கறது எனக்குத் தெரியும். அதை வெச்சுத் தான் நான் உங்க கிட்டயே பேசிட்டு இருக்கேன்..’ சித்தார்த் மெல்லிய புன்னகையுடன் சொன்னான்.

‘ஓ… காட்… இதுலே இருக்கக் கூடிய பிரச்சனைகளையும், விளைவுகளையும் பற்றி யோசித்துப் பார்த்தீர்களா ?’ அதிகாரி வேகம் குறைக்காமல் கேட்டார்.

‘என்ன பிரச்சனை வரும் என்று எதிர்பார்க்கிறீர்கள் ?’ சித்தார்த் முகத்தில் மெல்லிய கேள்விகள் முளைத்தன.

நாளைக்கு இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் ல யார் ஜெயிக்கப் போறாங்க, நாளைக்கு எந்த குதிரை பந்தயத்துல ஜெயிக்கும் ஏன் நாளைக்கு எந்த லாட்டரிக்குப் பரிசு விழும்கிறது கூட கண்டுபிடிக்க முடியுமே ? அப்படின்னா அதை வெச்சு பெட் கட்டி பணம் சம்பாதிக்கலாம். இதை ஒரு உதாரணத்துக்குத் தான் சொல்றேன். வாழ்க்கையோட சுவாரஸ்யமே நமக்கு இல்லாம போயிடுமே சித்தார்த்.

‘சார்.. நாம இதை எல்லா மூளையிலேயும் செய்யப் போறதில்லை. சில நம்பிக்கைக்குரிய,
நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் தம்மை அர்ப்பணிக்கக் கூடிய, சிலருக்குத் தான் நாம் இந்த மாற்றத்தைச் செய்யப் போறோம். இதையே வேற விதமா யோசிக்கலாமே சார். இப்படி ஒரு வசதி இருந்திருந்தா, நாம கோட்சே கையிலிருந்து காந்தியைக் காப்பாற்றியிருக்கலாம், பாதுகாவலன் கைலயிருந்து இந்திராகாந்தியைக் காப்பாற்றியிருக்கலாம்.. ஏன், சுனாமியிலிருந்து ஆயிரக்கணக்கான மக்களைக் காப்பாற்றியிருக்கலாமே…’

‘சரி… லீவ் நாள் அதுவுமா இன்னிக்கு அவசரமா என்னைக் கூப்பிட்டுப் பேசிட்டிருக்கீங்களே.. என்ன விசயம் ?’ அதிகாரி என்ன சொல்வதென்று தெரியாத மனநிலையில் கேட்டார்

‘சார்… மிகவும் அதிர்ச்சிகரமான விஷயம் ஒண்ணு நாளைக்கு நடக்கப் போகுது. நாளைக்கு நாம அனுப்பப் போற ராக்கெட் கிளம்பற பத்தாவது நிமிசமே செயலிழந்துபோய் கடல்ல விழப் போகுது. இந்த ராக்கெட் கிளம்பாம இருந்தால் நமக்கு ஏற்படக் கூடிய கோடிக்கணக்கான ரூபாய் இழப்பை நாம தடுத்திடலாம். நான் இதை இப்போ யார் கிட்டேயும் சொல்ல முடியாது. ஆனா நீங்க நினைச்சா… ஐ.எஸ்.ஆர்.ஓ தலைமையைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொல்ல முடியும்’

‘நோ..நோ…நோ… அது முடியாது சித்தார்த். நான் என்ன சொல்லித் தடுப்பேன். காரணம் கேப்பாங்க, விளக்கம் கேப்பாங்க, நான் பதில் சொல்லியாகணும். பிள்ளையை பிக்னிக் அனுப்பாதீங்கன்னு சொல்றமாதிரி ஈசியா நான் இதைச் சொல்ல முடியாது’ அதிகாரி தலையை வேகவேகமாய் ஆட்டிப் பேசினார்.

‘அதுக்கும் வழி சொல்றேன் சார்’ சித்தார்த் புன்னகைத்தான்.

‘என்ன வழி’

‘சார். ராக்கெட் ஏன் பழுதடையுதுங்கிற விஷயம் கூட தெரியும் சார்’ சித்தார்த் சொல்ல அதிகாரி தளர்ந்து போய் பேசினார் ‘சித்தார்த்.. உன்னுடைய கண்டுபிடிப்பை நினைச்சா பயமா இருக்கு. ‘

‘இதுல பயப்பட ஒண்ணுமே இல்லை சார். அணு ஆயுதங்களை தேசத்தோட மடியிலே கட்டி வெச்சிருக்கோம், தற்கொலைப்படைகளை நாட்டோ ட எல்லைகளிலே உலவ விட்டிருக்கோம், அதைவிடப் பயமூட்டக் கூடிய விஷயம் இதுல எதுவுமே இல்லை சார்’

‘சரி.. ராக்கெட் செயலிழக்கக் காரணம் என்ன ? தொழில் நுட்பக் கோளாறா, இல்லை வேறேதும் காரணமா ?’

‘சார்.. நான் அதோட காரணத்தைச் சொன்னா நீங்க சிரிப்பீங்க.’

‘சொல்லுங்க. சிரிக்காம இருக்க டிரை பண்றேன்’

‘சார்.. ராக்கெட்ல வரப்போறது பெரிய தொழில் நுட்பக் கோளாறு எதுவும் இல்லை. சின்ன புரோக்ராமிக் குளறுபடி தான். அதுவும் வேரியபிள் டிக்ளரேஷன் எறர்’

‘என்ன சொல்றே… சின்ன வேரியபிள் டிக்ளரேஷன் எரர் ராக்கெட்டை செயலிழக்கச் செய்யுமா ? புரியும்படியா சொல்’

‘சொல்றேன் சார். இன்னும் நம்ம ஆராய்ச்சிக் கூடத்துல ஃபோர்ட்ரான் புரோக்ராம் லாங்குவேஜ் தான் பயன்படுத்தறாங்க. அதுல ராக்கெட்டோ ட டைரஷனை தீர்மானிக்கக் கூடிய ஒரு வேரியபிள் லெங்க்த் சின்னதா குடுத்திருக்காங்க. ராக்கெட் எல்லையைத் தாண்டறதுக்கு முன்னாடியே அந்த வேரியபிள் ஓவர் புளோ ஆகி ரீசெட் ஆகப் போகுது. அதுக்கு அப்புறம் அது பாசிடிவ் வேல்யூவுக்குப் பதிலா நெகட்டிவ் வேல்யூவுக்குப் போகும். அப்போ ராக்கெட்டோ ட டைரஷன் மேலே போறதுக்குப் பதிலா கீழே வரும்’ சித்தார்த் சொல்லச் சொல்ல அதிகாரி திகைத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தார்.

‘எ..என்னால எதையும் நம்பவே முடியலை சித்தார்த். அப்படியெல்லாமா தப்பு பண்ணுவாங்க ?’ அதிகாரியின் குரல் குழறியது.

‘எனக்கே அதிர்ச்சியா தான் இருந்தது. காரணத்தைக் கேட்டபோது. ஆனா அதுதான் உண்மை. நீங்க நினைச்சா மட்டும் தான் இந்த ராக்கெட் புறப்படறதைத் தடுக்க முடியும்’ சித்தார்த் சொன்னான்.

‘உனக்கு எப்படித் தெரியும் ? . விஞ்ஞான ரகசியங்கள் வெளியே போகுதா ? ந்னு ஆயிரத்தெட்டு கேள்விகள் வரும் சித்தார்த்…’ அதிகாரி இழுத்தார்.

‘உங்ககிட்டே நான் விஷயத்தைச் சொல்லிட்டேன். இனிமே உங்க கைல தான் சார் இருக்கு எல்லாமே’ சித்தார்த் சொல்லி விட்டு அமைதியானான்.

இதை எப்படிச் சொல்லி எப்படி அவர்களுக்குப் புரியவைப்பது என்னும் கவலையில் தலையில் கைவைத்து அமர்ந்தார் அதிகாரி.

மறுநாள் காலை 7.45 மணி.

சித்தார்த்… என்னால அவர்களைக் கன்வின்ஸ் பண்ணவே முடியவில்லை. எத்தனையோ தடவை ராக்கெட் அனுப்பியிருக்கோம், அதே டீம் தான் வர்க் பண்ணியிருக்கு, நாட்டுல ஜனாதிபதி துவங்கி, கன்யாகுமரி கிராமம் வரைக்கும் ராக்கெட் லாஞ்ச் பத்தி தான் பேசிட்டிருக்காங்க… இது கண்டிப்பா சக்சஸ் தான் ஏதாச்சும் கனவு கண்டுட்டு உளறாதீங்க. உங்க டிப்பார்ட்மெண்ட் வேற எங்க டிப்பார்ட்மெண்ட் வேற ந்னு சொல்லிட்டாங்க.

‘அப்படின்னா…’ சித்தார்த் திகைப்புடன் கேட்டான்.

‘இன்னிக்கு எட்டு மணிக்கு ராக்கட் லாஞ்ச் பண்ண போறாங்க’

‘சார்….’ சித்தார்த் சோர்வுடன் அமர்ந்த போது அவனுடைய செல்பேசி கிணுகிணுத்தது.

‘எஸ்..’

‘சார் நான் தான் நாதன் பேசறேன்.’

‘சொல்லு நாதன் ஏதாச்சும் தகவல் இருக்கா ?’

‘ஆமா சார்.. இன்னிக்கு சாயங்காலம் நல்ல மழை பெய்யப்போகுது.

‘இது தானா… இதுக்குப் போய் ஏன் அவசரமா கூப்பிட்டே ?’

‘அது மட்டும் இல்லே சார். திடீர்ன்னு தலை வலிக்குது. நாளைக்கு என்ன நடக்குதுங்கிறதை என்னால கணிக்க முடியலை. மழை சாயங்காலம் ஆறுமணிக்கு ஆரம்பிச்சு பத்து மணி வரைக்கும் விடாம பெய்யும். நகரத்துல எல்லாமே ஸ்தம்பிக்கும். அதுக்குமேல யோசிக்க முடியலை. நம்ம ஆராய்ச்சில ஏதோ பிரச்சனைபோல தோணுது’ நாதனின் குரலில் இருந்த பதட்டத்தை சித்தார்த் வாங்கிக் கொண்டபோது

“எதிர்ப்பாராத விதமாக சற்று முன்னர் கிளம்பிய ராக்கெட் பழுதடைந்து கடலில் விழுந்தது” என்று தொலைக்காட்சி தற்போது வந்த செய்தியை ஒளிபரப்பிக் கொண்டிருந்தது.

சித்தார்த் திரும்பி அதிகாரியைப் பார்க்க, அவர் வெலவெலத்துப் போய் எதுவும் செய்ய இயலாதவராய் நடுங்கும் கீழுதட்டைக் கடித்தார்.

மாலை ஆறுமணி.

சொல்லி வைத்தார்போல கொட்டத் துவங்கியது மழை. அதிகாரி நேரத்தோடு வீடு போய்விட்டிருந்தார்.

சித்தார்த்தும், நாதனும் ஆராய்ச்சிக் கூடத்தில் அமர்ந்திருந்தார்கள்.

‘நாதன். நீ பதட்டப்படறமாதிரி ஒண்ணும் இல்லை. இந்த ஆராய்ச்சி மூளையை எதுவும் செய்துவிடாது. சில மாற்றங்கள் மட்டும் தான் செய்யும். உன்னால் சாதாரணமாக இருக்க முடிகிறது தானே…’

‘அதுல ஏதும் பிரச்சனை இல்லை.. ‘

மழை விடாமல் பெய்து கொண்டே இருந்தது.

நாதனும் சித்தார்த்தும் ஆரவாரமாகப் பெய்து கொண்டிருந்த  மழையையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

‘நாம கண்டுபிடிச்சும், நம்மால ராக்கெட்டைக் காப்பாத்த முடியவில்லை. இந்த ஆராய்ச்சி அங்கீகரிக்கப் பட்டால் மட்டுமே நம்முடைய பேச்சுக்கு மரியாதை இருக்கும். அதற்குரிய முயற்சிகளை நாளைக்கே துவங்கப் போறேன்’ சித்தார்த் பெருமூச்சுடன் சொல்ல நாதன் புன்னகைத்தான்.

‘இதனால என்னுடைய உயிருக்கு ஏதும் ஆபத்து வந்துவிடாதே ?’ நாதன் இலட்சத்து மூன்றாவது முறையாகக் கேட்டான்.

‘இத்தனை வருடமா என்னுடன் ஆராய்ச்சியில் இருந்தும் நீ இப்படிக் கேட்கிறாயே’ சித்தார்த் அதே பதிலை சொல்லி நாதனின் தோளில் கைவைத்தான்.

திடீரென்று… வானத்தில் தோன்றிய மின்னல் ஒன்று கணநேரத்துக்கும் குறைவான நேரத்தில் அவர்களை நோக்கிப் பாய்ந்தது. சுதாரித்து நிமிர்வதற்குள் அவர்கள் பற்றியிருந்த கம்பி அந்த மின்சாரத்தை அப்படியே வாங்கி அவர்களுக்குக் கொடுக்க இருவரும் மரணத்துக்குள் விழுந்தார்கள்.

உள்ளே கடிகாரம் அடிக்கத் துவங்கியது. பத்து மணி !

0

கவிதைத் தொகுப்பு

p.jpg

சார். இதெல்லாம் என்னோட கவிதைகள் சார். இதை ஒரு புத்தகமா போடணும்ன்னு தான் ஒவ்வொரு பதிப்பகமா ஏறி இறங்கிட்டிருக்கேன். யாருமே முன் வர
மாட்டேங்கறாங்க. நீங்க தான் மனசு வெச்சு இதை ஒரு புத்தகமா போடணும். தன் கையிலிருந்த ஒரு கட்டு கவிதைகளை பதிப்பாசிரியர் பாலராஜன் முன்னால் வைத்தான் மூர்த்தி.

‘மூர்த்தி. கேள்விப்படாத பேரா இருக்கே ? ஏதாச்சும் புனைப்பெயர்ல கவிதைகள் எழுதறீங்களா ?’ பாலராஜன் கேட்டார்

இல்லை. என்னோட சொந்தப் பெயர்ல தான் எழுதறேன். பத்திரிகைகள்ல அதிகமா பிரசுரம் ஆனதில்லை.

‘ம்.. அதான் புதுப் பெயரா இருக்கேன்னு கேட்டேன். சரி.. இதுக்கு முன்னாடி புக்ஸ் ஏதாச்சும் போட்டிருக்கீங்களா ?’

‘இல்லை சார். இது தான் முதல் புத்தகம். நாலஞ்சு வருசமா எழுதின கவிதைகள்ல மிகச் சிறந்த கவிதைகள் மட்டும் தான் இதுல வெச்சிருக்கேன். நல்லா இருக்கும் சார். படிச்சு பாருங்களேன்’ சொல்லிக் கொண்டே மூர்த்தி ஒரு கவிதையை எடுத்து பாலராஜனின் முன்னால் நீட்டினான்.

பாலராஜன் அதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்பதை அவருடைய முகமே காட்டியது. தினத்தந்தியின் கடைசிப் பக்கத்தில் வரும் சினிமா விளம்பரத்தைப் பார்ப்பது போல பார்த்தார்.

‘உங்களுக்கு சொந்த ஊர் எது ?’ மூர்த்தியின் பேச்சிலிருந்தே அவர் சென்னையைச் சேர்ந்தவர் இல்லை என்பது தெரிந்திருக்க வேண்டும். பால ராஜன் கேட்டார்.

என்னோட சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டத்துல ஒரு கிராமம். சின்ன வயசில இருந்தே கவிதைகள் மேல மிகப்பெரிய ஈடுபாடு. நிறைய சிற்றிதழ்களில் கவிதைகள் எழுதியிருக்கேன். எப்படியாவது ஒரு புத்தகம் போடணும்ங்கிறது தான் என்னோட இலட்சியமே. மூர்த்தி படபடப்பாய் பேசினான்.

சரி நான் மேட்டரை படிச்சுப் பாக்கறேன் நீங்க அடுத்த வாரம் வந்து பாருங்களேன். பாலராஜன் சொல்ல மூர்த்தி அவசர அவசரமாய் பதில் சொன்னான்.
‘நான் புத்தகம் போடறதுக்காக ஊருல இருந்து சென்னைக்கு வந்திருக்கேன். ஒரு வாரமா நண்பன் கூட தங்கி இருக்கிறதனால அவன் கூட கொஞ்சம் முகம் சுளிக்க ஆரம்பிச்சுட்டான். என்கிட்டே தனியா தங்கற அளவுக்குப் பணமும் இல்லை. இன்னும் ஒருவாரம் நான் இங்கே தங்க முடியாது சார். நாம இன்னிக்கே பேசி முடிவு பண்ணிடலாமே சார்’

‘புக் போடறதெல்லாம் ஒரு நாள் சமாச்சாரம் கிடையாது. மேட்டரை டைப் பண்ணணும், லேயவுட் டிசைட் பண்ணணும், அட்டைப்படம் பண்ணணும், புரூஃப் ரீடிங் பண்ணணும்… அதுக்கெல்லாம் நாளாகுமே. அது மட்டும் இல்லே. இப்பல்லாம் நாங்க அதிகமா கவிதைப் புத்தகம் போடறதில்லை. நீங்க வேற ஏதாவது பதிப்பகத்தைப் போய் பாருங்களேன். பாலராஜன் சொல்ல மூர்த்தி பதட்டமடைந்தான்

ஐயோ.. அப்படிச் சொல்லாதீங்க சார். ஒரு வாரமா ஒவ்வொரு பதிப்பகமா ஏறி இறங்கிட்டு இருக்கேன் சார்.  யாரும் ஒத்துக்கலை.  என்னோட கனவு மனசை விட்டு வெளியே வந்து நடமாடணும் சார். அது உங்க கைல தான் இருக்கு. மூர்த்தி கெஞ்சும் குரலில் சொன்னான்.

நான் உன்னை டிஸ்கரேஜ் பண்றதுக்காக இதைச் சொல்றதா நினைக்காதீங்க, இப்பொல்லாம் கவிதை புக் மார்க்கெட்ல விக்கிறதில்லை. ஒருசில கவிஞர்களைத் தவிர மத்தவங்களோட புக் சுத்தமா விக்கறதில்லை. பிரபலமான கவிஞர்களோட புக்ஸ் கூட நூறோ இருநூறோ தான் விக்குது. இந்த சூழ்நிலைல நாங்க எப்படி கவிதைப் புத்தகம் போடறது ? முன்னாடியாவது லைப்ரரி ஆர்டர் கிடைச்சிட்டிருந்துது. இப்போ கவிதைப் புத்தகம்ன்னா லைப்ரரி ஆர்டர் கிடைக்கிறதே இல்லை. அதனால நாங்க கவிதைப் புத்தகம் போடறதில்லை. பாலராஜன் நழுவினார்.

சார் அப்படிச் சொல்லாதீங்க சார். இந்த ஒரு புத்தகம் மட்டும் போடுங்க சார். நல்லா விக்கும். கண்டிப்பா இதைப் படிக்கிறவங்க எல்லாம் நல்லா இருக்குன்னு தான் சொல்லுவாங்க. மூர்த்தி தன் படைப்புகளின் மீது வைத்திருந்த அதீத நம்பிக்கைக்கு வார்த்தை வடிவம் கொடுத்தான்.

உன் கவிதை நல்லா இல்லேன்னு நான் சொல்லலை. ஆனா பிசினஸ் ந்னு வரும்போ அது எனக்கு நஷ்டம். கவிதைக்குப் பதிலா சமையல் குறிப்புகளோ, அழகாய் இருப்பது எப்படி ங்கற மாதிரி புத்தகமோ, இல்லேன்னா ஏதாவது மத சம்பந்தமான புக்கா இருந்திருந்தா கூட நான் சரின்னு சொல்லியிருப்பேன். கவிதை புக்குக்கெல்லாம் நிறைய செலவாகும். போடற காசை எடுக்கவும் முடியாது.

பாலராஜனின் தீர்மானமான முடிவைக் கேட்ட மூர்த்தி உடைந்து போய் உட்கார்ந்தான். தமிழிலக்கியத்தின் மீதான ஆர்வம் அவனுடைய நெஞ்சை அழுத்தியது. சற்று நேரம் மெளனமாக இருந்தவன் பேசினான்.

இந்த புத்தகம் போடறதுக்கு எவ்வளவு செலவாகும் சார் ?

டெமி சைஸ்ல எட்டு ஃபாரம் வர மாதிரி ஒரு புத்தகம் போடணும்ன்னா குறைஞ்சது இருபதாயிரம் ரூபா ஆயிடும். நாங்க ஆயிரத்து இருநூறு காப்பி போடுவோம்.

இருபதாயிரமா ? மூர்த்தி கண்களை விரித்துக் கேட்டான்.

ஆமா. குவாலிட்டில நாங்க காம்ப்ரமைஸ் பண்றதில்லை. தமிழ்நாட்ல இருக்கிற எல்லா கடைகள்லயும் நம்ம புக் இருக்கும். நீங்க கூட பாத்திருப்பீங்களே பின்னட்டைல கழுகு படம் போட்டு “பறவை பதிப்பகம்” ந்னு போட்ட புத்தங்களை. அது நம்ம புக் தான். பாலராஜன் சொன்னார்.

சார். இந்த புக் எப்படியாவது வெளிவரணும் சார். ஆனா அவ்வளவு பணம் எங்கிட்டே சத்தியமா இல்லை சார். மூர்த்தி சொன்னான்.

முழு பணத்தையும் எழுத்தாளன் கிட்டே இருந்து நாங்க வாங்க மாட்டோ ம். எழுத்தாளனுடைய படைப்பை நாங்க மதிக்கிறோம். கவிதை எழுதறது சாதாரண விஷயமா என்ன ? பாதி பாதி போட்டு புத்தகம் கொண்டு வருவோம். இருநூற்றைம்பது காப்பி உங்களுக்கே தரோம். ஒரு புக் ஐம்பது ரூபான்னு பார்த்தா இருநூற்றைம்பது புத்தகங்களை விற்றா உங்களுக்கு பன்னிரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் கிடைக்கும். அட்லீஸ்ட் இருநூறு புத்தகங்களை விற்றா கூட போட்ட பணத்தை எடுத்துடலாம். என்ன சொல்றீங்க ? பாலராஜன் கேட்டார்.

மூர்த்திக்கு எப்படியாவது புத்தகம் வெளிவந்தால் போதும் என்றிருந்தது. அவனுடைய கவிதைத் தொகுதி தமிழகம் முழுவதும் உள்ள கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருப்பது போன்ற தோற்றமே அவனுக்குள் பெரிய சிலிர்ப்பை உண்டாக்கியது.

என்கிட்டே இப்போ நாலாயிரம் ரூபாய் தான் சார் இருக்கு. மீதி ஆறாயிரம் ரூபாயை நான் ஊருக்கு போய் அனுப்பி தரேன். நீங்க புத்தகம் போடுங்க. நல்லா வரணும் சார் இந்த புக். இது எனக்கொரு நல்ல பெயரை வாங்கித் தரமாதிரி இருக்கணும். மூர்த்தி சொல்லிக் கொண்டே கவிதைகளை அவரிடம் கொடுத்தான்.

அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாதீங்க. புக் பிரமாதமா வரும். எல்லா புத்தகக் கண்காட்சிகளிலயும் உங்க புக் கண்டிப்பா இருக்கும். எல்லா ஊருலயும் உங்க புக் இருக்கும். சரி.. புத்தகத்தோட பின் அட்டைல போடறதுக்கு உங்க போட்டோ  ஒண்ணு குடுங்க. பாலராஜன் கேட்டார்.

மூர்த்தி தன்னுடைய சட்டைப்பையில் வைத்திருந்த பாஸ்போர்ட் சைஸ் போட்டோ  ஒன்றை எடுத்து அவரிடம் நீட்டினான். அதை வாங்கி கவிதைகளோடு சேர்த்து ஒரு காக்கி நிறக் கவரில் போட்டு வைத்தார் பாலராஜன்.

மூர்த்தி தன்னிடமிருந்த நாலாயிரம் ரூபாயை பாலராஜனின் கைகளில் கொடுத்த்பின் அவனுடைய சட்டைப்பையில் கன்னியா குமரி வரை சென்று சேர்வதற்கான பணம் மட்டுமே மிஞ்சியிருந்தது.

சார். புத்தகம் நல்லா வரணும் சார். நல்ல அட்டைப்படமா போடுங்க. என்று மீண்டும் ஒருமுறை விண்ணப்பம் வைத்து விட்டு, பதிப்பகத்தாரின் முகவரி, தொலைபேசி எண்களை தன்னுடைய கிழிந்துபோன சின்ன டைரியில் குறித்து வைத்துக் கொண்டு விடைபெற்றான் மூர்த்தி.

அன்று இரவே அரசுப் பேருந்து பிடித்து வீட்டுக்குச் சென்ற மூர்த்தி பணத்துக்கு என்ன செய்வதென்று யோசித்தான். அவனை நம்பி யாரும் பணம் கொடுப்பதாகத் தெரியவில்லை. தெரிந்த நண்பர்களிடமெல்லாம் கேட்டுப் பார்த்தான். அவர்கள் பத்தாயிரம் ரூபாய் செலவழித்துப் புத்தகம் போடப்போகும் நண்பனை மனநோயாளி போல பார்த்தார்கள்.

இரவு.

மூர்த்திக்குத் தூக்கம் வரவில்லை. தன்னுடைய ஓட்டு வீட்டின் பின் புறமிருந்த கிணற்றடியில் வந்து அமர்ந்தான். வீட்டின் பின்புறம் கம்பீரமாய் நின்று கொண்டிருந்த பனை மரங்களில் நிலவொளி விழுந்து வழுக்கிக் கொண்டிருந்தது. தாத்தா பனையேற்றுத் தொழில் செய்து வந்தவர். அவர்காலத்து வரலாற்றை பேரனுக்குச் சொல்லும் வரலாற்றுச் சின்னங்கள் போலத் தோன்றின அந்தப் பனைமரங்கள். பழைய காலமாக இருந்திருந்தால் இந்த பனை ஓலைகளில் கவிதை எழுதி ஓலைச் சுவடியாக மாற்றியிருக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த மூர்த்தியின் மனதில் ஒரு பளிச்.

இரண்டு நாட்களில் மூர்த்திக்குத் தேவையான ஆறாயிரம் ரூபாய் கிடைத்து விட்டது. வீட்டின் பின்புறம் கம்பீரமாய் நின்றிருந்த பனைமரங்கள் மூர்த்தியின்கைகளில் கரன்சிக் காகிதங்களாகிவிட்டிருந்தன. சில சோகங்களோடு சமரசம் செய்து கொண்டால் தான் சில சந்தோசங்களைச் சொந்தம் கொள்ள முடியும் என்று நினைத்துக் கொண்டான். அன்றே அந்த பணத்தை டி.டியாக மாற்றி பதிப்பகத்துக்கு அனுப்பினான்.

கிராமத்துப் பனை மரத்தின் வாசனையைச் சுமந்து கொண்டு தன் கைகளில் வந்து சேர்ந்த ஆறாயிரம் ரூபாய்க்கான செக்கை மகிழ்ச்சியோடு பற்றினார் பாலராஜன். அருகில் அமர்ந்திருந்த முருகேஷ் சிரித்தார்.

நீங்க பலே ஆள் தான் சார். ஆளுக்குத் தக்கபடி பேசி பத்தாயிரம் ரூபாயை வாங்கிட்டீங்களே.

பேசத் தெரியாதவனால பிசினஸ் பண்ண முடியாதே. சரி. இந்த கவிதைகளை எல்லாம் கலைவாணி செண்டர்ல குடுத்து டைப் பண்ண சொல்லு. பனைமர வாசனை ந்னு டைட்டில் வெச்சிருக்கான். அதுக்கு ஏத்தமாதிரி ஏதோ ஒரு படத்தைப் போட்டு லேயவுட் பண்ன சொல்லிடு. அதுக்கு ஒரு எழுநூற்றைம்பது ரூபா குடுத்துடு.

அதெல்லாம் தெரியும் சார். எத்தனை கவிதை புக் போட்டிருப்போம் ! முன்னூறு காப்பி பிரிண்ட் பண்ணணும். அதுல இருநூற்றைம்பது காப்பி கிராமத்துல இருக்கிற மூர்த்திக்கு அனுப்பிடணும் அப்படி தானே ? முருகேஷ் சிரித்தபடியே கேட்டார்.

ஆமா. முன்னூறு காப்பி போட்டா போதும். சென்னைல நாம வழக்கமா கொடுக்கிற ஒரு கடைக்கு மட்டும் பத்து புத்தகம் அனுப்பு. பத்து காப்பி நம்ம கடைல வெச்சுடு. மொத்தம் ஒரு ஐயாயிரம் ரூபா செலவாகும். மிச்சத்தை நம்ம லாபக் கணக்குலே சேர்த்துடு. அப்படியே லைப்ரரி ஆர்டருக்கும் இரண்டு காப்பி அனுப்பு. ஒருவேளை லைப்ரரி ஆர்டர் கிடைச்சா இன்னொரு அறுநூறு காப்பி பிரிண்ட் போட்டு லைப்ரரிக்கு அனுப்பிடலாம், இன்னும் கொஞ்சம் காசு பாக்கலாம். பாலராஜன் சிரித்துக் கொண்டே சொன்னார்.

இந்த விஷயங்களை எதுவும் அறியாத மூர்த்தி, தன்னுடைய கவிதைப் புத்தகம் ஆயிரத்து இருநூறு பிரதிகளாகச் சிறகடித்து தமிழகம் முழுவதும் பறப்பது போலக் கனவு கண்டு கொண்டே வீட்டுக் கொல்லையில் உலாவிக் கொண்டிருந்தான். பனைமரத்தை எல்லாம் வெட்டிக் கொண்டு சென்றிருந்தார்கள். பனை மரங்கள் நின்ற இடங்களில் அவை நின்றதற்கான அடையாளமாக கொத்துக் கொத்தாய் வேர்கள் வெளித்தெரிய பள்ளங்கள் உருவாகியிருந்தன.

நடந்து கொண்டிருந்த மூர்த்தியின் பாதத்தில் பனைமர ஆல் ஒன்று சுருக்கென்று குத்தியது.

சேவியர்

வெள்ளக்காரன் சாமி ( த சண்டே இந்தியனில் – எனது சிறுகதை )

ch1.jpg
‘வெள்ளக்காரன் சாமி இறந்துட்டாராம்’ – பரக்குன்று கிராமத்தின் தெருக்களில் இந்த செய்தி பரவியபோது தெருக்களை ஒருவித சோக இருள் கவ்விக் கொண்டது. கடையிலிருந்த முதியவர்களின் நினைவுகளெல்லாம் பழைய நாட்களை நோக்கி ஓடியிருக்க வேண்டும் அவர்களுடைய கண்களில் ஒரு திடீர்ச்சோகம் பற்றிக் கொண்டது.

சந்தையிலும் அந்த செய்தி கூறு வைத்த மீன்களிடையே பரவியது. சில பெண்கள் கதறியழத் துவங்கினார்கள். பலர் உச்சுக் கொட்டினார்கள். சந்தையின் வியாபாரச் சந்தடிகளிலும் ஒருவித கனத்த மௌனம் வந்து தொற்றிக் கொண்டது.

சற்று நேரத்துக்கெல்லாம் அந்த செய்தி வயல்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்களிடமும், ரப்பர் மரங்களிடையே வேலை செய்து கொண்டிருந்தவர்களிடமும், மரச்சீனி தோட்டங்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்களிடமும் மின்னலென பரவியது.

ஒட்டுமொத்த கிராமத்தையும் ஒருவிதமான நிறமற்ற சோகம் வந்து சூழ்ந்து கொண்ட அதே வேளையில் பரக்குன்றிலிருந்த அந்த கிறிஸ்தவ ஆலயத்தில் துக்க மணி அடித்தது. தாசையன் தன்னுடைய வெள்ளைத் தாடியை மெதுவாகத் தடவியபடி வீட்டில் திண்ணையில் அமர்ந்திருந்தார். அவருடைய கண்களில் குதித்து விடத் தயாராய் காத்திருந்த கண்ணீர் துளிகளிடையே கடந்த காலம் விரிந்தது.

பரக்குன்று !. குமரி மாவட்டத்தின் ஒரு குக்கிராமம். கேரளாவுக்கும் தமிழகத்துக்கும் இடையே நசுக்கப்பட்ட நிலையில் இருந்த அந்த கிராமத்தை ஒருகாலத்தில் கண்டெடுத்தவர் அந்த வெள்ளக்காரச் சாமி என்று கிராமத்தினரால் அன்புடன் அழைக்கப்படும் ஜேம்ஸ் தொம்மர் தான்.

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பதுகளில் ஜெர்மன் நாட்டைச் சார்ந்த ஜேம்ஸ் பரக்குன்று கிராமத்துக்குள் நுழைந்தபோது அது வெறும் காட்டுப் பகுதியாய் மட்டுமே இருந்தது. பரந்து விரிந்த குன்றுகள் இருந்த இடம் பரக்குன்று என்று அழைக்கப்பட்டதாய் காரணப் பெயர் சொன்னார்கள். மேல் துண்டு அணியாத கிராமத்து வாசிகள்.

கிராமத்தில் நிலம் வைத்திருந்த சமூகத்தினர் நிலமில்லாத, வசதியில்லாத ஏழைகளை கொத்தடிமைகள் போல நடத்தி வந்த நிலை ஜேம்ஸ் கண்களை வருத்தியிருக்க வேண்டும். இந்த சமூக ஏற்றத்தாழ்வை சமன்படுத்த ஏதேனும் செய்யவேண்டும் எனும் ஏக்கம் அவருக்குள் முளைத்தது.

தான் பரக்குன்று பகுதியில் குடியேற வேண்டுமெனில் ஒரு ஆலயம் வேண்டுமென்று நினைத்தார் அவர். அது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. ஆலயம் வந்துவிட்டால், ஜேம்ஸ் அங்கே பணியாற்றத் துவங்கினால் தங்களுடைய பிடி தளர்ந்துவிடும் என்றும், அவர்களை கொத்தடிமைகளாக நடத்தும் வாழ்க்கை நின்றுவிடும் எனவும் கருதிய சமூகத்தினர் அதை தீவிரமாக எதிர்த்தார்கள்.

அப்போது அந்த இடத்தில் ஒரு ஆலயம் கட்ட ஆதரவு தெரிவித்தவர்களில் ஒருவர் தான் தாசையன். கிராமத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவு தினமும் நடந்தே கேரளாவில் சென்று படித்தவர் அவர். சுருங்கக் கூறின் கிராமத்தில் பள்ளிப்படிப்பை முடித்திருந்தவர் அவர் ஒருவரே.

ஜேம்ஸ் ஆலயம் கட்ட ஆதரவு தெரிவித்த மக்களை அழைத்து கூட்டம் போட்டார். அவருடன் மொழிபெயர்ப்பாளர் ஒருவரும் உடனிருந்தார்.

‘இங்கே ஒரு ஆலயம் அமைக்க வேண்டுமென்று விரும்புகிறேன். அதற்கு உங்களுடைய உதவி வேண்டும். இந்த ஆலயம் இந்தியக் கலாச்சாரத்தின் அடிப்படையில் அமையும். எல்லா மதத்தினரும் இந்த ஆலயத்துக்கு வரலாம். இந்த ஆலயம் இந்த கிராமத்தின் வளர்ச்சிக்கு நாம் செய்யும் முதல் முயற்சி. இந்த முயற்சி வெற்றி பெற்றால், இந்த கிராமத்தின் வளர்ச்சிக்கான அனைத்து முயற்சிகளையும் நான் செய்வேன்’ ஜேம்ஸ் கூறினார்.

ch2.jpg

சாமி… இங்கே கோயிலு கட்டறது பயங்கர கஷ்டம். ஏமான் மாருவ அதுக்கு ஒத்துக்க மாட்டினும். பிரச்சனை பண்ணுவினும்.

ஏன் பிரச்சனை பண்ணுவார்கள் என நினைக்கிறீர்கள் ?

ஜேம்ஸ் தொம்மரின் கேள்விக்கு கிராம மக்களிடம் சரியான பதில் இல்லை. ஆனாலும் அவர்களுக்குள் ஒரு அச்சம் இருந்தது. தாழ்ந்த நிலையிலேயே தங்களை நினைத்து வந்த சமூகத்தினருக்கு இயல்பாகவே இருக்கும் அச்சமே அது என்பது ஜேம்ஸ் க்குத் தெரிந்திருக்க வேண்டும்.

நீங்கள் போய் மக்களிடம் சொல்லுங்கள். இது ஊருக்கான ஆலயம். இந்த ஆலயம் கட்டினால் இங்கே ஒரு பள்ளிக்கூடம் கட்டுவேன். கிறிஸ்தவர்கள், இந்துக்கள் என்றெல்லாம் பாகுபாடு இல்லாமல் கிராம மக்கள் அனைவருக்கும் பள்ளிக்கூடத்தில் இலவசமாய் படிக்க அனுமதி உண்டு என எல்லோடுக்கும் சொல்லுங்கள். ஜேம்ஸ் சாதுர்யமாகப் பேசினார்.

கிராமத்துப் பெண்களைத் தான் அந்த செய்தி முதலில் வசீகரித்தது. தங்கள் பிள்ளைகளும் படிக்க முடியும், அதுவும் இலவசமாய் படிக்க முடியும் என்னும் செய்தி அவர்களுக்குள் ஒரு இனிப்பான மழையாய் பொழிந்தது. பெண்களைக் கவர்ந்த செய்தி ஆண்களை சம்மதிக்க வைத்தது.

கிராமத்தில் ஆலயம் கட்டும் பணி துவங்கியது. கிராமத்து மக்களின் உழைப்பைக் கொண்டே அந்த ஆலயம் எழும்பத் துவங்கியது. உழைக்கும் மக்களுக்கும், அவர்களுடைய குடும்பத்துக்கும் ஊதியத்தின் பெரும்பகுதி கோதுமையாக வழங்குவதென முடிவு செய்யப்பட்டது !

இளைஞர்கள், பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் என பாகுபாடின்றி மக்கள் வேலையில் ஈடுபட்டனர். பாறையை உடைத்து கற்கள் கொண்டு வரப்பட்டன, மண் ஆழமாகத் தோண்டப்பட்டது, கொட்டாங்குச்சியை எரித்து அதிலுள்ள சாம்பலைக் கொண்டு கருப்பு நிறத்தில் பெயிண்ட் போன்ற கலவை தயாராக்கப்பட்டது. ஆலயம் வேகமாக வளர்ந்தது.

எதிர்பார்த்த அளவுக்கு எதிர்ப்புகள் இல்லாதது ஜேம்ஸ் தொம்மரை கொஞ்சம் ஆனந்தமும் வியப்பும் அடையச் செய்தது. இரவு வேளைகளில் நிகழ்ந்த ஓரிரு மிரட்டல் சம்பவங்களைத் தவிர ஏதும் அசம்பாவிதங்கள் இல்லை. ஜேம்ஸ் தன்னுடைய முதல் திட்டம் வெற்றியடைந்ததில் மகிழ்ந்தார். அவருடைய முதல் திட்டம் ஆலயமாக இருக்கவில்லை. மக்களின் ஒற்றுமையாக இருந்தது !

‘தாசையா.. சாமிக்க அடக்கத்துக்கு போகல்லியா ?’ குரல்கேட்டு நிமிர்ந்தார் தாசையன்.  கீழ விளை தங்கராஜ் நின்றிருந்தான்.

‘எதுக்கு அடக்கத்துக்கு போயி ? ‘ தாசையன் குரலில் விரக்தி தெரிந்தது.

‘ஏன் அப்படி சொல்றே ? சாமிக்கு நீயின்னா உயிரு.. நீயும் போவலேன்னா நல்லா இருக்காது’

தாசையன் பதில் சொல்லவில்லை. அவருடைய நினைவுகள் பழைய காலத்துக்குள்ளேயே அலைந்து திரிந்தன.

‘சாமி.. கோயிலு கட்டியாச்சு. ஆனா.. பூசைக்கு ஆள் இல்ல. வெறும் கொறச்சு பேரு தான் வராங்க. என்ன செய்யலாம் ?’ தாசையன் கேட்க ஜேம்ஸ் புன்னகைத்தார்.

‘இது சினிமா இல்லை மக்கள் முண்டியடித்துக் கொண்டு வர. வருபவர்கள் வரட்டும். முதலில் அவர்களுக்கு ஒரு பள்ளிக்கூடம் கட்ட வேண்டும்.. அப்புறம் பார்க்கலாம் மற்ற விஷயங்கள்’ ஜேம்ஸ் குரலில் இருந்த உறுதியினால் விரைவிலேயே ஒரு ஓலை கொட்டகை பள்ளிக்கூடமாக உதவியது.

‘திரு இருதய ஆலயம்’  பக்கத்திலேயே பள்ளிக்கூடம் ஆரம்பமானது.

பள்ளிக்கூடத்துக்கும் பிள்ளைகள் இல்லை. சிறுவயதிலேயே பிள்ளைகளை வயலுக்கும், காட்டுக்கும் அனுப்பி காசு வாங்கிப் பழக்கப்பட்ட பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கூடம் செல்ல அனுமதிக்கவில்லை.

பள்ளிக்கூடம் வரும் பிள்ளைகளுக்கு சீருடை, புத்தகங்கள்,மதிய உணவு இலவசம். ஜேம்ஸ் மக்களைக் கெஞ்சினார்.

ஒரு சில பிள்ளைகள் வந்தார்கள். எதிர் பார்த்த கூட்டம் வரவில்லை. தெருக்களில் ஏராளம் சிறுவர்கள் அலைந்து திரிந்தார்கள். பலர் செங்கல் சூளைகளுக்கு மண் எடுக்கப் போனார்கள்.

‘பள்ளிக்கூடம் வரும் பிள்ளைகளுடைய வீட்டுக்கு கோதுமை தருவேன்’ ஜேம்ஸ் அறிவித்தார். அந்த அறிவிப்பு மக்களைக் கொஞ்சம் வசீகரித்திருக்க வேண்டும். மாணவர்கள் வந்தார்கள்.

பள்ளிக்கூடம் ஆரம்பிக்கப்பட்ட மகிழ்ச்சி ஜேம்ஸ் முகத்தில் மிளிர்ந்தது.

தினமும் மாலையில் கிராமத்து மலைகளில் ஏறி அனைத்து குடிசைகளையும் சென்று சந்தித்து அவர்களுடன் உண்டு, அவர்கள் கஷ்டங்களைக் கேட்பது அவருடைய பணி. அந்த வீடு சந்திப்பு நிகழ்ச்சி ஜேம்ஸ்க்குள் ஒரு பொறியை எழுப்பியது.

பெரும்பாலானோர் பனையேற்றுத் தொழில் செய்கிறார்கள். ஆனால் அதற்குரிய ஊதியம் இல்லை. ஏமான்மார் நிர்ணயிக்கும் குறைந்த பட்ச ஊதியமே கிடைத்தது. விற்பனை செய்யுமிடத்திலும் சரியான வருவாய் இல்லை. இதற்கு ஏதேனும் செய்ய வேண்டும். ஜேம்ஸ் யோசித்தார்.

‘ஊரில் ஒரு பனஞ்சீனி ஆலை அமைப்போம். நான் அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்கிறேன். ஜெர்மனியிலிருந்து பனஞ்சீனி ஆலைக்குரிய உபகரணங்கள் கொண்டு வருவோம். ‘ ஜேம்ஸ் மக்களிடம் சொல்ல மக்கள் ஆனந்தமடைந்தார்கள்.

பனஞ்சீனி ஆலையும் சில வருடங்களில் அமைந்தது.

பனஞ்சீனி ஆலை அமைத்த போதுதான் ஜேம்ஸ் தொம்மரை பிரச்சனைகள் விஸ்வரூமபமெடுத்துத் தாக்க ஆரம்பித்தன.  கிராம மக்களின் உழைப்பை மூலதனமாகக் கொண்டு சுரண்டல் சாலைகளாய் வியாபித்திருந்த செங்கல் சூளைகளும் விவசாய நிலங்களும், பனையேறும் தொழிலும் முதலாளி வர்க்கத்தின் கைப்பிடியிலிருந்து நழுவி ஒரு சமத்துவ சமுதாயத்துக்குள் விழுமோ எனும் பயம் முதலாளிகளை ஆக்கிரமித்தது.

ஜேம்ஸ் எல்லாரையும் கிறிஸ்தவராக்குகிறான். உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பாழாகும், நமது ஆதிக்கம் அற்றுப் போகும். வெளிநாட்டுப் பணம் கொண்டு வந்து இந்துக்களை அழிப்பான், இந்துக் கோயில்கள் இடிப்பார்கள் என்று ஒரு புரளியைப் பரப்பிவிட்டார்கள்.

புரளிக்கு புரவியை விட வேகம் அதிகம். அது மிக வேகமாகப் பரவி, ஊரில் இருந்த ஒற்றுமையின்  வேர்களில் கோடரியாய் இறங்கியது.

ஊருக்குள் விஷயம் விஷமாய் பரவிக் கொண்டிருந்தபோது பனம் ஓலை மடலை மூலதனமாகக் கொண்டு ஒரு நார் ஆலை உருவாக்கும் சிந்தனையில் அமர்ந்திருந்தார் ஜேம்ஸ்.

பனை மரங்களிலிருந்து கிடைக்கும் பனை ஓலை பாயாகவும், பனை ஓலை கூடைகளாகவும், கடவங்களாகவும் மாறிக்கொண்டிருக்க ஓலையின் அடிப்பாகமான மடல் மட்டும் வெறும் விறகாய்ப் போவதை விரும்பாமல் அதை முதலீடாகக் கொண்டு நாற்றாலை ஒன்றை நிறுவவேண்டும் என்பது அவருடைய அடுத்த கட்ட சிந்தனையாய் இருந்தது.

‘தாசையா….’  தங்கராஜ் மீண்டும் மௌனத்தைக் கலைத்தான்.

‘போயிட்டு வா தாசையா… சாமியோட ஆவி உன்னைப் பாக்காம வருத்தப்படும்…’ தங்கராஜ் மீண்டும் சொன்னான்.

சற்றுநேரம் தங்கையனைப் பார்த்துக் கொண்டிருந்த தாசையன் சாணம்  மெழுகியிருந்த திண்ணையிலிருந்து கீழிறங்கினார். கயிற்றில் கிடந்த டவலை எடுத்து முகத்தைத் துடைத்தார். உள்ளறைக்குச் சென்று வேட்டியைக் கட்டிக் கொண்டார். ஒரு சட்டையை எடுத்து மாட்டினார்.

‘டேய்.. சாமிக்க அடக்கத்துக்கு போறேன்’ உள்பக்கம் நோக்கி குரல் கொடுத்தார் தாசையன். மனைவியை ‘டேய்’ என்று அழைப்பதே அவருடைய வழக்கமாய் இருந்தது.

‘சுங்காங்கடையில இல்லியா அடக்கம் ? அங்க வரைக்கும் போறியளா ? எப்ப வருவிய ? ‘ மனைவி சமையல் கட்டிலிருந்து குரல்கொடுத்தார். தாசையன் பதில் ஏதும் சொல்லாமல் முற்றத்தில் இறங்கி நடந்தார்.

சரளைக் கற்கள் காலை குத்தும் உணர்வு கூட இல்லாமல்  அந்த ஒற்றையடிப் பாதையில் நடந்து ஓடையைத் தாண்டி ரோட்டுக்கு வந்தார் தாசையன். ரோடு என்றால் பெரிய ரோடு இல்லை. சற்றே அகலமான ஒரு ஒற்றையடிப் பாதை. எப்போதாவது ஒரு பஸ் வந்து போகும். அதையும் அவ்வப்போது குழித்துறை ஆற்றிலிருந்து மணல் அள்ளிக்கொண்டு வரும் லாரியின் சத்தத்தையும் தவிர்த்தால் நிசப்தமான சாலை.

இரண்டு குடிசைக் கடைகள், ஓலைக் கூரையுடனும் இரண்டு பாட்டில்களில் சர்பத் மற்றும் நாரங்காய்கள், கூரையில் தொங்கவிடப்பட்டிருக்கும் ஒரு குலை வாழைப்பழத்தோடு யாருடைய வருகைக்கோ காத்திருக்கும். சந்தை வேளைகளில் வெற்றிலையோ, பழமோ, நாரங்கா வெள்ளமோ செலவாகும் வாய்ப்பு உண்டு.

தாசையன் அந்தக் கடைகளின் பின்புறம் வழியாக நடந்தார்.

கடைகளுக்குப் பின்புறம் கிடந்தது சிதிலமடைந்த கட்டிடம் ஒன்று. அந்தக் கட்டிடத்தின் அருகே வந்து சற்று நேரம் மௌனமாய் இருந்தார் தாசையன். கட்டிடத்திற்கு உள்ளே குப்பைக் கூளங்கள் நிறைந்து வழிந்தன. பல்லியும் ஓணானும் சுதந்திரமாய் ஓடிக்கொண்டிருந்த கட்டிடத்திற்குள் நுழைந்தார் தாசையன். ‘திரு இருதய பனஞ்சீனி ஆலை’ போர்ட் முக்கால் வாசி எழுத்துக்கள் அழிந்து போயிருக்க மிச்சம் மீதியுடன் விழுந்து கிடந்தது.

அதற்கு அந்தப் பக்கமாய் இருந்தது உடைந்து மண்ணோடு மண்ணாக பனம்தும்பு ஆலை. பனை மட்டையிலிருந்து நார் தயாரிக்கும் இடம்,

‘தாசையா.. எந்த கஷ்டம் வந்தாலும். இந்த தொழிற்சாலைகள் முடங்கிவிடக் கூடாது. நமது மக்களின் வியர்வையை ஏதோ முதலாளி உறிஞ்சிக் கொழுக்கக் கூடாது. அதுக்குத் தேவை இந்த தொழிற்சாலைகள். நம்ம மக்கள் அவர்களுடைய வியர்வைக்கு ஏற்ற கூலியைப் பெற்வது மட்டுமல்ல, நியாயமான வருவாயையும் பெறவேண்டும் அதுக்கு இந்த இரண்டு தொழிற்சாலைகளும் இரண்டு கண்களாக இருக்க வேண்டும்’ ஜேம்ஸ் சாமியார் சொல்வது தாசையனின் காதுகளில் எதிரொலித்தது.

‘இந்த சாமியால நமக்கு பெரிய பிரச்சனை. ஏமான் மாரு யாரையும் வேலைக்கு வரவேண்டாம்ன்னு சொல்றாங்க. சாமி வேணும்ன்னா சாமி கிட்டே போங்க. எங்க கிட்டே வரவேண்டான்னு விரட்டுறாங்க. நமக்கு வேலை முக்கியம். சாமிக்க பேச்சைக் கேட்டா நாம ஒருநாள் பட்டினி கிடக்க வேண்டியது தான்’  ஊரில் எதிர்ப்புக் குரல் எழுந்தது.

‘ஆமா.. இந்த சாமி ஒரு நாள் போயிடுவாரு. அப்புறம் நாம என்ன பண்றது ?’

‘பேசாம இவரை இந்த இடத்துல இருந்து மாற்றிடலாம். கோட்டாறு மறைமாவட்டத்துக்குச் சொன்னா அவங்க இவரை மாத்திடுவாங்க’

இருபது வருடங்கள் பரக்குன்று மக்களின் வளர்ச்சிக்காக சுயநலமின்றி உழைத்த ஜேம்ஸ் தொம்மருக்கு எதிராக கிராமத்தில் தங்கள் பிரதிநிதிகளை வலுவாக உருவாக்கியிருந்தார்கள் முதலாளிகள்.

பேச்சு வலுவடைந்தது. ஊர் இரண்டு குழுவாக மாறியது. ஜேம்ஸ் பரக்குன்றில் இருக்க வேண்டுமா வேண்டாமா என்று விவாதங்கள் அனல் பறந்தன. கிராமத்தில் இருந்த ஒற்றுமைக்கு ஒரு பேரிடியாக வந்தது அந்த பிரச்சனை.

இந்த விவாதங்களினால் மனமுடைந்து போன ஜேம்ஸ் ஊருக்கு மத்தியில் வந்து நின்றார்.  ஊர் மக்களைப் பார்த்து பேச ஆரம்பித்தார்.

‘ஊரின் அடிப்படை வசதிகளுக்காக மட்டுமே நான் போராடினேன். பள்ளிக்கூடம் இன்று எட்டாம் வகுப்பு வரை இருக்கிறது. நூற்பாலை இருக்கிறது, பனஞ்சீனி ஆலை இருக்கிறது. நான் நினைத்த எல்லாம் இருக்கிறது. ஆனால் ஒன்றைத்தவிர. அது தான் ஊர் மக்களின் ஒற்றுமை. ஆலயம் கட்டியபோது உங்களுக்கு இருந்த ஒற்றுமை, பனஞ்சீனி ஆலை உருவாக்கிய போது உங்களுக்கு இருந்த ஒற்றுமை, பள்ளிக்கூடம் கட்டியபோது உங்களுக்கு இருந்த ஒற்றுமை இப்போது இல்லை. நான் ஒற்றுமையை விரும்புபவன்.  ஒற்றுமைக்குப் பங்கம் என்னால் தான் வருகிறது என்றால் நான் இங்கே இருக்கமாட்டேன்’

ஜேம்ஸ் தொம்மர் சொல்ல அவருடைய ஆதரவாளர்கள் குரல்கொடுத்தனர்.

‘நீங்க ஏஞ்சாமி போணும். நீங்க போவண்டாம். கிறுக்குப் பயலுவ ஏதாச்சும் சொல்லுவினும்’

ஜேம்ஸ் இடைமறித்தார்,’ இல்லை. அடுத்த ஞாயிற்றுக் கிழமை உங்கள் பங்கிலிருந்து விடைபெறுகிறேன். வேறொரு பங்குப் பணியாளர் உங்களிடம் வருவார். இது என்னுடைய இறுதி முடிவு. இது சம்பந்தமாக இனிமேல் ஊரில் எந்தப் பேச்சும் எழவேண்டாம்’

சொல்லிவிட்டு ஜேம்ஸ் கூட்டத்தினரிடமிருந்து விலகினார். கூட்டத்தினரிடம் சலசலப்பு. மகிழ்ச்சியும், அழுகையுமாக அந்த கூட்டம் கலைந்தது.

இல்லம் சென்ற ஜேம்ஸ் கண்ணீர் விட்டார். தலை குனிந்து தன்னுடைய பணிகள் பாதியிலேயே நின்று விட்டதற்காகவும். தான் செய்த பணிகளுக்காக கடைசியில் கிடைக்கும் அவமரியாதைகளுக்காகவும் அவருடைய உள்ளம் வெகுவாக வலி கண்டிருந்தது.

‘சாமி…’ பாதிரியார் கண் திறந்து பார்க்க முன்னால் தாசையன்.

‘வா.. தாசையா… ‘

‘சாமி.. நீங்க நிஜமாவே போறீங்களா ?’

‘ஆமா… என்னால ஊருக்கு பிரச்சனை வேண்டாம். நான் சுங்கான்கடை பக்கத்துல இருக்கிற துறவியர் மடத்துக்குப் போகிறேன். இந்த கிராமத்திலேயே சாகும் வரை இருந்து, இறந்து, இதே பங்குக்குச் சொந்தமான கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்படணும்னு நினைச்சேன். ஆனா அது முடியல… ‘ ஜேம்ஸ் சொல்லச் சொல்ல அவருடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது.

‘தாசையா… என்ன இங்க வந்திருக்கே ? சாமிக்க அடக்கத்துக்கு போகலையா ‘ மீண்டும் ஒரு குரல் தாசையனை நிகழ்காலத்துக்கு இழுத்து வந்தது.

தாசையன் ஜேம்ஸ் கட்டிய ஆலயத்தின் பின் பக்கமாக அமைந்திருந்த கல்லறைத் தோட்டத்தில் நின்றிருந்தார். கல்லறைத் தோட்டத்தின் இடது ஓரமாக நின்ற செம்பருத்திச் செடியின் அருகே அமர்ந்து கைகளால் கல்லறை அளவுக்கு ஒரு சதுரம் வரைந்து கொண்டிருந்தார்.

தாசையன் நிமிர்ந்தார். ‘ஆமா.. இன்னிக்கு ஜேம்ஸ் சாமியாரோட அடக்கம் இல்லையா.. அதான் வந்திருக்கேன் ‘ எதிரே நின்றிருந்த சினேகப்பூ
நெற்றி சுருக்கினாள்.

‘சாமியாரோட அடக்கம் அங்கே சுங்காங்கடையில. அவரை இங்கே அடக்கம் செய்யக் கூடாதுன்னு பங்கு மக்கள் ஏற்கனவே சொல்லியிருந்தாங்களே.. ‘ சினேகப்பூ சொன்னாள்.

‘ம்.. அது நம்ம மக்கள் அவருக்குக் காட்டிய நன்றிக்கடன். அவருடைய உடலை அவங்க எங்கே வேணும்ன்னாலும் அடக்கம் செய்யட்டும். ஆனா அவரு அடக்கம் செய்யப்பட விரும்பிய இடம். இதோ.. நான் வரைஞ்சிருக்கிற இந்த சதுரம் தான்’

சினேகப்பூ புரியாமல் பார்த்தாள்.

நான் சாமியாரை இங்கே அடக்கம் பண்ணிட்டிருக்கேன். அவரோட உயிர் இங்கே தான் உலவிட்டிருக்குன்னு என்னோட உள் உணர்வு சொல்லுது. அவரை நான் மானசீகமா இங்கே அடக்கம் பண்றேன். அவர் விரும்பிய இடத்தில.. அதற்குமேல் சொல்ல முடியாமல் தாசையன் விம்மினார்.

காற்று வேகமாக வீச ஊசியிலை மரங்கள் அடந்த அந்த கல்லறைத் தோட்டம் துயரம் கூட்டியது. மரங்களுக்கிடையே அவர் கட்டிய ஆலயம் மௌனமாய் நின்றிருந்தது

காணவில்லை ( சிறுகதை )

poo.jpg

‘இங்கே தானே வெச்சிருந்தேன். எங்கே போச்சு ? காலைல கூட இருந்துதே’ கண்ணன் கத்திய கத்தலில் பயந்து போய் ஓடி வந்தாள் வளர்மதி.

‘என்னங்க ? என்ன வெச்சிருந்தீங்க ? கொஞ்சம் சத்தம் போடாம சொல்றீங்களா ? ‘

‘ஐநூறு ரூபாய் நோட்டு ஒண்ணு. இங்கே டி.வி பக்கத்துல தான் வெச்சிருந்தேன். காலைல ஆபீஸ் போற அவசரத்துல எடுக்க மறந்துட்டேன். இப்போ பாத்தா காணோம்.’ கண்ணன் எரிச்சல் பட்டான்.

‘நானும் ஆபீஸ் போயிட்டு இப்போதான் வந்தேன். எனக்கென்ன தெரியும் நீங்க காசு எங்கே வெக்கிறீங்கன்னு. உங்களோட ஞாபக சக்தி தான் எனக்குத் தெரியுமே. வேற எங்கயாவது வெச்சிருப்பீங்க. பதட்டப்படாம போய்த் தேடுங்க. வளர்மதி சொன்னாள்.

‘என்னோட ஞாபக சக்தி பத்தி நீ லெக்சர் குடுக்க வேண்டாம். காலைல வெச்ச காசைக் கூடவா நான் மறந்து போவேன் ? ஏன் மூணு வருஷத்துக்கு முன்னாடி கட்டிகிட்ட உன்னை இன்னும் மறக்கலை இல்லையா ?’ கண்ணன் பொரிந்தான்.

‘சரி. நீங்க போய் டீ சாப்பிடுங்க. நான் தேடிப்பாக்கிறேன். வேற எங்கயும் போகாது உங்க பணம். உங்க சட்டை பாக்கெட்டிலோ, பாண்ட் பாக்கட்டிலயோ தான் இருக்கும்.’ வளர்மதி கண்ணனை சமாதானப் படுத்தினாள்.

இல்ல மதி. எனக்கு நல்லா நினைவிருக்கு. காலைல சட்டை மாத்தும்போ பாக்கெட்ல இருந்த ஐநூறு ரூபாயை எடுத்து இங்கே வெச்சேன். எனக்கு அந்தப் பொண்ணு மேல தான் சந்தேகம்.

வேலைக்காரப் பொண்ணைச் சொல்றீங்களா ?

ஆமா.

பாவங்க அவ. காலைல இருந்து ராத்திரி வரைக்கும் வேலை பாக்கிறா. நம்ம வீட்டுக்கு வந்து மூணு மாசம் ஆச்சு. எத்தனையோ தடவை என்னோட வளையல்களையும், மோதிரங்களையும் எல்லாம் கழற்றி அங்கே இங்கேன்னு போட்டு வைப்பேன். ஆனா இதுவரைக்கும் ஒண்ணும் காணாம போனதில்லை. பால் பாக்கெட் வாங்கற மீதி இரண்டு ரூபாயைக் கூட அவ தொடறதில்லை. அவளுக்கு அந்த புத்தி எல்லாம் வரும்ன்னு தோணல.

‘ஆமா. நீ வேலைக்காரிக்கெல்லாம் சப்போர்ட் பண்ணுவே. புருஷனை மட்டும் கரிச்சி கொட்டுவே.’ கண்ணனுடைய எரிச்சல் மீண்டும் கிளர்ந்தெழுந்தது.

‘ஆமா. உடனே அப்படி சொல்லுங்க. நான் வேலைக்காரியைத் தானே கல்யாணம் பண்ணியிருக்கேன். அவளுக்கு சப்போர்ட் பண்ண ? ‘வளர்மதியும் லேசாக எரிச்சல் பட்டாள்.

‘சரி. நீயே சொல்லு. நாம மூணுபேரும் தான் வீட்ல இருக்கோம். நீயும் எடுக்கமாட்டே வேற யாரும் உள்ளே வரவும் முடியாது. காக்கா வந்து தூக்கிட்டு போச்சுங்கற கதையை எங்கிட்டே சொல்லப் போறியா ? வேலைக்காரியை வேலைக்காரியா வெச்சுக்கணும். அவளுக்கு நீ ரொம்ப இடம் குடுத்துட்டே.’ கண்ணன் கொஞ்சம் சுருதி குறைத்துச் சொன்னான்.

ஒன்பதாம் கிளாஸ் வரைக்கும் படிச்சிட்டு, படிக்க வசதியில்லாததனால வீட்டு வேலை செய்ய வந்த பொண்ணு அவ. திருட்டு புத்தியெல்லாம் அவளுக்கு வரும்ன்னு எனக்குத் தோணலை. அவ வீட்டில ஆறுபேரு, அதுல நாலுபேரு இவளை விட சின்னவங்க. அப்பா அம்மா கூலி வேலை செய்து வீட்டு வாடகையும் கட்டி, இத்தனை பிள்ளைங்களுக்கு சாப்பாடும் போட முடியாததனால அவ வேலை செய்றா. அவளை நாம காரணம் இல்லாம தப்பு சொல்லக் கூடாது. வளர்மதி சொன்னாள்.

நம்ம கூட சரிசமமா வீட்டு ஹால்ல வந்து உக்கார்றா, சும்மா சும்மா டி.வி பாக்கறா. எல்லா ரூம்லயும் ஏறி இறங்கறா, இப்படியெல்லாம் அவளுக்கு ரொம்ப உரிமை குடுக்கக் கூடாது. வேலைக்காரியை வேலைக்காரியோட இடத்துல வைக்கணும். எல்லா வீட்லயும் இப்படியா செய்றாங்க ? வேலைக்காரியை அடுக்களைல தானே தங்க வெக்கிறாங்க. அப்படித் தான் இருக்கணும். நாம ஆபீஸ் போனதும் முன்பக்க கேட்டையும், பின் பக்க கேட்டையும் பூட்டி சாவியை எடுத்துட்டு போகணும். அவ வீட்டுக்கு உள்ளே தான் இருக்கணும். அது தான் முறை.

அது சரி.. அவ தான் வீடு முழுசும் துடைச்சு வெக்கிறா. நீங்க என்னடான்னா வீட்டுக்கு வந்த உடனே காபி கேக்கறீங்க, பிரிட்ஜ்ல தண்ணி பாட்டில் இல்லேன்னா கத்தறீங்க, சன்னல் ஓரமா தூசு இருந்தா எகிறிக் குதிக்கிறீங்க. அவ சின்னப் பொண்ணு தானே. போன வருசம் வரை அவளுக்கு இப்படி வேலை செய்ய வேண்டி வரும்ன்னு தோணி இருக்குமா ? ஸ்கூல் பையை மாட்டிட்டு சந்தோசமா பிள்ளைங்க கூட சுத்திட்டு இருந்திருப்பா இல்லையா ? படிச்சு நல்ல வேலை வாங்கணும்ன்னு ஆசை இருந்திருக்கும் இல்லையா ? வளர்மதி அவளுக்காகப் பரிந்து பேசினாள்.

நான் இவ்வளவு சொன்னதுக்கு அப்புறமும், சரி அவ கிட்டே ஒரு வார்த்தை கேப்போம்ன்னு தோணலை இல்லையா உனக்கு ? எனக்கு அட்வைஸ் பண்றதும், என்னை குற்றம் சொல்றதுமே உனக்கு வேலையாப் போச்சு. சரி போகட்டும். இன்னிக்கு ஐநூறு, நாளைக்கு ஆயிரம், அப்புறம் ஒருநாள் யாரும் இல்லாத நேரமா பார்த்து வீட்டைத் தொடச்சு எடுத்துட்டு போயிடுவா. அப்போதான் உனக்குப் புரியும் நான் சொல்றது. கண்ணன் சொல்லிவிட்டு சோபாவில் சாய்ந்தான்.

உள்ளே சமையலறையில் நின்றுகொண்டு இவர்களுடைய உரையாடலை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ரமா வால் அழுகையைக் கட்டுப் படுத்த முடியவில்லை. வீட்டின் பின்புறம் சென்று சுவரில் முகத்தைச் சாய்த்துக் கொண்டாள். மூச்சுக்கு முன்னூறு தரம் கேட்பவர்களிடமெல்லாம் தன்னுடைய ஐயாவைப் பற்றிப் பெருமையாகப் பேசிக் கொண்டிருக்கும் என்னையா சந்தேகப் படுகிறார்கள் ? வீட்டில் என்னை ஒரு தங்கையைப் போல பார்த்துக் கொள்கிறார்கள் என்று அம்மாவிடம் ஆனந்தக் கண்ணீரோடு சொல்வேனே எல்லாம் பொய்யா ? நான் வேலைக்காரி தானா எப்போதுமே ? அவர்களிடம் அன்பாகப் பழகினால் அது எல்லை மீறுவதா ? ரமா தலையைக் குனிந்து நின்று அழுதாள்.

அவளுடைய மனசுக்குள் பள்ளி விட்டு வீட்டுக்கு வரும் சாயங்கால நேரமும், தம்பிகளோடு அரட்டையடித்து, கிடைப்பதை உண்டு கதை பேசி கிண்டலடிக்கும் தருணங்களும் வந்து நிறைந்தன. அம்மாவின் மடியில் தலை வைத்து அழவேண்டும் போலிருந்தது அவளுக்கு.

அம்மா என்ன செய்வாள் பாவம். ஆறு பிள்ளைகளை  வளர்த்த வேண்டுமே. அம்மா சம்பாதித்தது இந்த பெரிய குடும்பம் தான். பொருளாதாரத்தை மறந்து விட்டுப் பார்த்தால் எந்த விதமான சந்தோசங்களுக்கும் குறைவில்லாத குடும்பம். பணம் மட்டும் இல்லாத வாழ்க்கை எவ்வளவு கஷ்டமானது. கடவுள் ஒரு பொட்டி நிறைய பணத்தை வீட்டுக்குள் கொண்டு வந்து தந்தால் எப்படி இருக்கும் ? ஸ்கூலுக்குப் போய் வந்து, சந்தோசமாக உண்டு விளையாடி இருந்திருக்கலாம். ரமாவின் மனதுக்குள் ஏதோதோ எண்ணங்கள் வந்து வந்து மோத அவள் கண்கள் நிற்காமல் வழிந்தன.

‘ரமா….’ வளர்மதி கூப்பிட்டாள்.

கண்களில் வழிந்த கண்ணீரை அவசர அவசரமாய் துடைத்துக் கொண்டே வீட்டுக்குள் ஓடி வந்தாள் ரமா. ஹாலுக்குள் கால் வைக்கும்போது கூசியது. நான் இந்த இடத்துக்குத் தகுதியில்லாதவள் என்னும் எண்ணம் முதன் முறையாக அவளுக்குள் ஓடியது. அந்த எண்ணமே அவளுக்குள் இருந்த எல்லா சோகங்களையும் தூண்டி விட்டிருக்க வேண்டும். கண்கள் மீண்டும் கலங்கின.

‘நான்.. எடுக்கலேம்மா…’ அதற்குமேல் அவளால் பேசமுடியவில்லை. தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள்.

வளர்மதி திடுக்கிட்டாள். இந்தக் காட்சியை எதிர்பார்க்காத கண்ணனும் ஒருவினாடி திகைத்தான்.

ஏய்.. ஏன் அழறே. இப்போ யார் உன்கிட்டே என்ன கேட்டாங்கன்னு அழறே. டீ போடணும் அதுக்காகத் தான் கூப்பிட்டேன். அழாதே. அவங்க ஏதோ வேலை நெருக்கடியில வந்திருப்பாங்க அதனால ஏதாச்சும் சொல்லுவாங்க. நீ அதையெல்லாம் பெருசா எடுத்துக்காதே. ஆமா… உன் அக்காவுக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்தாங்களே என்ன ஆச்சு ? பேச்சை திசை திருப்பும் நோக்கில் கேட்டாள் வளர்மதி.

‘அவங்க பத்தாயிரம் ரூபா கேட்டாங்க. அவ்வளவு பணம் அம்மா கிட்டே இல்லை. அதனால ….’ ரமா நிறுத்தினாள்.

‘அதனால….’

‘அக்கா.. ஒருத்தர் கூட போயிட்டாங்க…’ ரமா தலைகுனிந்தாள்.

‘ஐயோ. அம்மா என்ன சொன்னாங்க ?’

‘அம்மா தான் ஓடிப் போக சொன்னாங்க. நம்ம கிட்டே பணம் இல்லேம்மா. உன்னை நல்ல ஒரு இடத்துல கட்டி கொடுக்க வசதியில்லாதவளாயிட்டேன். அதனால போயிடுன்னு சொன்னாங்க..’ ரமாவின் கண்களில் மீண்டும் கண்ணீர்.

வளர்மதியும், கண்ணனும் அதிர்ந்து போனார்கள். அந்த அம்மா இப்படி ஒரு முடிவெடுக்க எவ்வளவு வருத்தப்பட்டிருப்பார்கள், எவ்வளவு அழுதிருப்பார்கள் என்பதை நினைக்க நினைக்க கண்ணன் நிலைகுலைந்தான்.

‘சரி.. நீ போய் ரெண்டு டீ போடு’ வளர்மதி சொல்லி விட்டு சோபாவில் அமர்ந்ததும் காலிங்பெல் அழைத்தது.

கண்ணன் கதவைத் திறந்து வெளியே வந்தான்.

வெளியே கார்பெண்டர் பாலாஜி.

பாலாஜியைப் பார்த்ததும் தான் கண்ணனின் மனசுக்குள் சட்டென்று நெருப்புப் பொறி ஒன்று விழுந்தது. அந்த ஐநூறு ரூபாய் இவருக்குத் தானே கொடுத்தேன் காலையில் ! நெருப்பை மிதித்து விட்டது போலாயிற்று கண்ணனுக்கு. மிகப்பெரிய தவறு செய்து விட்ட உணர்வில் தலையை ஆட்டினான். பாலாஜி கையில் கொண்டு வந்திருந்த பில்லை கண்ணனின் கையில் கொடுத்துவிட்டு நகர்ந்தான்.

உள்ளே வந்த கண்ணனுக்குள் குற்ற உணர்வு தலைதூக்கியது. கொஞ்சம் நிதானமாய் யோசித்திருக்கலாம். அல்லது அவசரப்பட்டு வார்த்தைகளைக் கொட்டாமலாவது இருந்திருக்கலாம். தனக்குக் கீழே இருப்பவர்களை மரியாதையுடன் அணுகும் மனநிலை ஏன் எனக்கு இல்லாமல் போய்விட்டது ? பணம் இல்லாதவர்கள் எல்லாம் திருடர்கள் என்னும் முட்டாள்தனமான எண்ணம் ஏன் எனக்குள் எழுந்தது ?  நம்பிக்கையின்மையில் உழலும் நானல்லவா கேவலமானவன்.

கண்ணனின் குழப்பமான உடல் அசைவுகளைக் கவனித்த வளர்மதி கேட்டாள், ‘என்னங்க ஆச்சு ? ஒரு ஐநூறு ரூபாய்க்கா இப்படி யோசிக்கிறீங்க ? வேணும்ன்னா ரமாவை வேலையை விட்டு அனுப்பிடலாம்’

வேண்டாம்…வேண்டாம். பாவம் சின்னப் பொண்ணு. ஏதேதோ பேசிட்டேன். வழக்கம் போலவே தப்பு எம்மேல தான். ஏன் தான் இப்படி எல்லா விஷயங்களையும் மறந்து தொலைக்கிறேனோ ? கண்ணன் இரண்டு கைகளையும் பிணைத்து பின்னந்தலையில் வைத்து அழுத்தினான்.

என்ன சொல்றீங்க.

கார்ப்பெண்டருக்கு நான் தான் காலைல அந்த ஐநூறு ரூபாயைக் குடுத்தேன். கண்ணன் மெதுவாகச் சொல்ல வளர்மதி புன்னகைத்தாள்.

அதான் நான் அப்பவே சொன்னேன். கேட்டீங்களா ? சரி.. பணக் கவலை தீர்ந்திடுச்சு இல்லே ?

புதுக் கவலை வந்திருக்கு மதி. நான் ரமாவை அப்படி திட்டியிருக்கக் கூடாது. அவ சந்தோசமா வீட்டுக்குள்ள ஓடியாடிட்டிருந்தா. அவளை ரொம்பவே தப்பா சொல்லிட்டேன். அதான் எனக்கு இப்போ கவலையாயிருக்கு. கண்ணன் மெதுவாய் சொல்லி முடிக்கவும் ரமா இரண்டு டம்ளர்களில் டீயுடன் அவர்கள் முன்னால் வந்து நின்றாள்.

‘வா ரமா.. இங்க வந்து உட்காரு..’ கண்ணன் அழைத்தான்.

ரமா அமைதியாக நின்றாள்.

‘ரமா.. என்னை மன்னிச்சுடு. நான் தான் அந்த பணத்தை நம்ம பாலாஜி கிட்டே குடுத்திட்டேன். ஆபீஸ் போற பரபரப்புல அதை மறந்தே போயிட்டேன். அதை மறந்துட்டு உன்னை ஏதேதோ பேசிட்டேன். என்னை மன்னிச்சுடு.’ கண்ணன் சொன்னதும் பதறினாள் ரமா.

‘என்னய்யா இப்படியெல்லாம் பேசறீங்க.. நீங்க என்னை திட்டலாம்…’ ரமா உடைந்த குரலில் சொன்னாள்.

‘ஐயான்னு கூப்பிடாதே ரமா. இனிமே என்னை அண்ணா ந்னே கூப்பிடு. இதை உன் வீடு மாதிரி நினைச்சுக்கோ. இனிமே எந்த சந்தர்ப்பத்துலயும் நான் உன்னை சந்தேகப் பட மாட்டேன்.’ ஒரு வேலைக்காரச் சிறுமியிடம் பேசுகிறோம் என்றெல்லாம் நினைக்காமல் மனசு திறந்து அமைதியாக தவறை முழுவதுமாய் ஒப்புக்கொண்ட மனநிலையில் பேசினான் கண்ணன்.

நீங்க எப்பவுமே இப்படிதான். அந்த எல்லை இல்லேன்னா இந்த எல்லை. இரண்டு எக்ஸ்ட்டிரீம் மெண்டாலிடி. கன்னா பின்னான்னு திட்டறது, தப்புன்னு தெரிஞ்சா மொத்தமா சரண்டர் ஆகிடது.  சொல்லிய வளர்மதி சிரித்தாள்.

‘ஆரம்பிச்சுட்டியா உன்னோட வேலையை’ கண்ணன் சொல்ல, ரமா சற்று முன் நடந்த சண்டையை முழுவதும் மறந்து விட்டு புன்னகைத்தாள்

கசப்புப் பதனீர்

palm.jpg 
விஷயம் தெரியுமா உங்களுக்கு ? என்றபடி வந்தாள் செல்லம்மாள்.
செல்லம்மாளுக்கு எப்படியும் 60 வயதிருக்கும். ஒரு சாயம் போன சேலை. எந்த நிறத்தில் எப்போது வாங்கியதென்று தெரியாத ஒரு இரவிக்கை. தினமும் நடக்கிற விஷயம் தான் இது. காலையில் ரேடியோ கேட்பது போல செல்லம்மாவின் செய்தியை பக்கத்து வீட்டிலிருப்போரெல்லாம் கேட்டாக வேண்டும். தினமும் சந்தையில் காய்கறியும், மீனும் வாங்கும் போதே காற்றுவாக்கில் வரும் எல்லா செய்திகளையும் கேட்டு வீட்டுக்கு வந்து ஒலிபரப்புவது தான் செல்லமாவின் முக்கியமான பொழுதுபோக்கு.

என்ன சமாச்சாரம் கொண்டு வந்திருக்கே இன்னிக்கு ?
கேட்டுக்கொண்டே முழங்கையால் நெற்றியில் இருந்த வியர்வையைத் துடைத்த சொர்ணத்துக்கு 45 வயது இருக்கும். இன்னும் கண்ணாடி போட வேண்டி வராத தீர்க்கமான பார்வை. கையில் பதனீர் காய்ச்சுவதற்கான பெரிய தகரப் பாத்திரம். நேற்று பதனீர் காய்ச்சிய பிசுபிசுப்பை சாம்பல் தொட்டு தேங்காய் சவுரி கொண்டு தேய்த்துக்கொண்டிருந்தாள் சொர்ணம்.

எப்படி மனுஷனோட ஆயுசு பொட்டுண்ணு போயிடுதுண்ணு நினைச்சாலே பயமா இருக்கு. நேத்திக்கு வரைக்கும் கல்லு மாதிரி இருக்கிற மனுஷன் இன்னிக்கு பொசுக்குண்ணு போயிடறான். காலைல பேசிகிட்டு இருக்கிறவங்க மறுநாள் பாத்தா பேச்சி மூச்சில்லாம கிடக்கிறாங்க. இதெல்லாம் விதி. மனுஷன் எவ்வளவு சம்பாதிச்சு என்ன புண்ணியம், காலம் வரும்போ காலணா கூட எடுக்காம போய்க்க வேண்டியது தான்.

எப்போதுமே செல்லமா இப்படித்தான், சொல்லவேண்டிய விஷயத்தை நேரடியாகச் சொல்வதில்லை, பலமான பீடிகை அது இது என்று ஏதாவது பேசிவிட்டுத் தான் சொல்வாள்.

சரி நீ இப்போ விஷயத்தைச் சொல்லு.. என்ன ஆச்சு ? கேட்டுக்கொண்டே வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்தாள் சொர்ணம்.

நம்ம தெக்கேத் தோட்டத்து பாலம்மா புருஷன் தங்கப்பன் செத்துப் போயிட்டானாம் பனையில இருந்து விழுந்து…

செல்லம்மா சொல்லி முடிக்கவில்லை, சொர்ணம் திடுக்கிட்டுத் திரும்பினாள்…

எப்போ ?…எப்படியாம் ?

இன்னிக்கு காலைப் பனை ஏறப் போனப்போ தான் நடந்துதான். பனைத்தாவல் சமயத்துல பிடி நழுவிடுச்சுண்ணு சொல்றாங்க. என்ன நடந்துதுண்ணு யாருக்கும் சரியா தெரியல. ஏதோ சத்தம் கேட்டு ஓடிப்போயி பாத்திருக்காங்க. அப்போ தான் பேச்சு மூச்சில்லாம கீழே கிடந்திருக்காரு மனுஷன். அதுக்குள்ள எல்லாம் முடிஞ்சு போயிருச்சு. மூத்த பையன் பாண்டில பனை ஏறப் போயிருக்கானாம், அவனுக்கு தகவல் சொல்ல போயிருக்காங்க, அவன் வந்ததுக்கு அப்புறம் தான் அடக்கம் இருக்கும்.

சொர்ணத்தின் நெஞ்சுக்குழிக்குள் அம்மி வைத்தது போல் ஒரு பாரம். தங்கப்பனுக்கும் அவளுக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் அந்த மரணம் ஒருவித கிலியை ஏற்படுத்தி விட்டது. காரணம் அவள் புருசன் பொன்னனுக்கும் பனைஏற்றுத் தொழில் என்பது தான்.

அவனும் பனைத் தாவலில் பிரசித்தம். அருகருகே நிற்கும் இரண்டு நெட்டைப்பனைகளை தனித்தனியே ஏறுவதற்குப் பதிலாக ஒரு மரத்தில் ஏறி பூ சீவி கலையம் கட்டியபின், கத்தியை இடுப்பில் கட்டியிருக்கும் பாளையில் போட்டுவிட்டு, ஒருமரத்தின் ஓலை வழியாக நடந்து பக்கத்து மரத்தை அடைந்து விடுவார்கள், இதைத் தான் பனைத்தாவல் என்று சொல்வார்கள். பொன்னன் இதில் பிரசித்தம். பொன்னனுக்கு இப்போது 55 வயதாகிறது. இன்னும் கட்டுக் குலையாத கம்பீரம். பிள்ளை மேல் வைத்திருக்கும் பாசம். மனைவியைக் கடிந்து கொள்ளாத மனசு. இதெல்லாம் தான் நெட்டைப்பனை உசரத்துக்கு பொன்னனை சொர்ணத்தின் மனசுக்குள் நிறுத்தியிருந்தது.

சொர்ணத்தின் திருமண சமயத்தில் , 50 பனை ஒரே மூச்சில் ஏறுவான் பையன், அந்திப்பனை ஏறுவான் என்றெல்லாம் பெருமையாக சொல்லித்தான் திருமணம் செய்து வைத்தார்கள். அப்போதெல்லாம் எத்தனை பனைமரம் ஏறுகிறான் என்பதை வைத்துத் தான் புருசனுடைய வீரமே கணக்கிடப் பட்டது. இப்போது அதெல்லாம் இல்லை. ஏதோ கொஞ்சம் குடும்பங்கள் தான் பனை ஏறும் தொழில் செய்கின்றன.

பொன்னனுக்கு வைராக்கியம். பனைஏற்றுத்தொழிலின் மேல் அவனுக்கு பக்தி இருந்தது. காலையில் நான்குமணிக்கெல்லாம் எழுந்து பனை ஏறக்கிளம்பிவிடுவான். செல்லாயி கையால் பால் கலக்காத ஒரு தேயிலை தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டால் தூக்கமெல்லாம் போய்விடும். ஒரே பையன் தாசப்பன், அவனை நெஞ்சின் மேல் படுக்கவைத்துத் தான் தூங்குவான். அவனை ஒரு வாத்தியாராக்க வேண்டும் என்பதுதான் பொன்னனுடைய ஒரே கனவாக இருக்கிறது. அதற்காக அவனை எந்த வேலையும் செய்ய சொல்வதில்லை. தாசப்பனுக்கும் அந்த உணர்வு இருந்தது. எப்போதும் குடிசைக்கு வெளியே இருக்கும் புளியமரத்தடியில் அமர்ந்து ஏதாவது படித்துக் கொண்டிருப்பான்.

இந்த விஷயம் கேள்விப்பட்டதிலிருந்து சொர்ணத்துக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. எப்படியாவது பாழாய்ப்போன இந்த வேலையை நிறுத்தச் சொல்லவேண்டும். எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக பனையேறுவதை மறந்து கொண்டிருக்கிறார்கள், இவருக்கு மட்டும் எதுக்கு இந்த வீம்பு ? விட்டுத் தொலைக்க வேண்டியது தானே ? ஒழைக்கிறதுக்கு உடம்புல தெம்பிருக்கிற வரைக்கும் விறகு வெட்டியாவது பொழைக்கலாம். மனசுக்குள் சொல்லிக் கொண்டாள் சொர்ணம்.

இதொன்றும் புதியதில்லை, ஒருமுறை பாதிப் பனைஏறிக்கொண்டிருக்கும் போது பனை ஏறுவதற்காகக் காலில் போட்டுக் கொள்ளும் திளாப்புக் கயிறு அறுந்துபோக பனை மரத்தைக் கட்டிக் கொண்டு வழுக்கி கீழே விழுந்ததில் மார்பு முழுவதும் இரத்தக் காயம். பனைமரத்தின் கூரிய வளையங்கள் ஆழமாக கிழித்திருந்தன. அப்போதே கண்ணீர் தீருமட்டும் அழுதுப் பார்த்தாள். மனுசன் கேட்பதாக இல்லை.

தாசப்பனும் ஓரிருமுறை சொல்லி இருக்கிறான், நான் வேணும்னா வேலைக்குப் போறேன்பா.. நீ இந்த வயசு காலத்துல கஷ்டப்பட வேண்டாம் என்று. அப்போதெல்லாம் சிரித்துக் கொண்டே , ” நீ வாத்தியானாகிற நாளைக்கு அப்புறம் நான் பனையேற மாட்டேண்டா”… அதுவரைக்கும் நீ படி, நான் தொழில் பாக்கறேன். அவ்வளவும் சொல்லிவிட்டு போய்விடுவார். அதற்குமேல் பேச்சை வளர்த்துவதும் அவருக்குப் பிடிப்பதில்லை.

சொர்ணத்துக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்திப்பனை ஏற மாலையில் 5 மணிக்கு தான் போவார்கள், எப்போதாவது கொஞ்சநேரம் பிந்திவிட்டால் என்ன ஆச்சோ, ஏதாச்சோ என்று ஈரல் குலை நடுங்கும். வாசலில் மண்ணெண்ணை விளக்கேற்றி பார்த்திருப்பாள். அப்படி பொழுது தப்பி பொன்னன் வீட்டுக்கு வரும் போதெல்லாம் கள் வாசனையோடு தான் வருவான். சீவி விட்ட பனம் பூவோடு சேர்ந்து கட்டிவைக்கும் கலையத்தில் சுண்ணாம்பு தேய்த்துவைத்தால் சேர்வது பதனீராகும், இல்லையேல் அது கள்ளாக மாறிவிடும். கள் குடித்துவிட்டு பொன்னன் எப்போதுமே பனையேறுவதில்லை, கடைசிப்பனையில் அவ்வப்போது கள் பானை வைப்பதுண்டு, எல்லா பனையும் ஏறி முடித்தபின் கடைசியாக அந்தபனையில் ஏறி கள் இறக்கி அவ்வப்போது குடிப்பான்.

செல்லாயியின் வார்த்தைகள் தான் சொர்ணத்தை மிகவும் பாதித்ததென்றில்லை, அந்த கவலை அவளுக்கு எபோதுமே இருந்து வந்ததால், இன்றைய நிகழ்ச்சி அவளை மிகவும் பாதித்தது. பதனீர் காய்ச்சி அதை தேங்காயின் கண் பாகம் இருக்கின்ற சிரட்டைகளில் இலைவைத்து அதில் ஊற்றி , கருப்புக்கட்டி செய்துகொண்டிருந்தபோது பொன்னன் வரும் சத்தம் கேட்டது.

நிமிர்ந்து பார்த்தாள் … அவள் கண்கள் கலங்கியிருந்தன.
ஏன் அப்படிப் பார்க்கறே ? நேரத்தோடு வீட்டுக்கு வந்திருக்கிறேனே ? கருப்புக்கட்டி வியாபாரமெல்லாம் அடிமாட்டு விலைக்குப் போயிடுச்சாம் அதனால இந்த வாரம் சந்தைக்கு போகவேண்டாம். அடுத்தவாரம் பாத்துக்கலாம், பேசிக்கொண்டே பொன்னன் இடுப்பிலிருந்த பாளையையும் தோளிலிருந்த திளாப்பையும் கழற்றி கூரையில் தொங்கவிட்டான்.

விஷயம் கேள்விப்பட்டீங்களா ? தங்கப்பன்…… சொர்ணத்தால் முழுதாக சொல்ல முடியவில்லை.
ம்.. கேள்விப்பட்டேன். என்ன ஆச்சுண்ணு தெரியல. அவன் ரொம்ப நாளா கட்டிப் புடிச்சு ஏறுற மரம் அவனை கீழே விட்டுடுச்சு. மெலிதான சோகம் படர விட்டுக் கொண்டே சொன்னான் பொன்னன்.

நான் சொல்றதை கேக்கறீங்களா ? நாளையில இருந்து பனை ஏற போக வேண்டாமே ?
நம்ம நினைச்சா வேற வேலையா பாக்க முடியாது ? எத்தனை பேரு ஏமான் சாரோட வயலில வேலை பாக்கறாங்க ? அவரோட மரக்கடையில விறகு வெட்டறாங்க ? சொல்லிவிட்டு பார்த்தாள் சொர்ணம்.

அதெல்லாம் எதுக்கு சொர்ணம். எத்தனை வருஷமா இந்த வேலை பாக்கறேன்.
எல்லா தொழில்லயும் கஷ்டம் இருக்கு. ஒரு டிரைவர் விபத்துல செத்து போயிட்டா எல்லாரும் வண்டி ஓட்டுற தொழிலை விட்டுடுவாங்களா ?
போன மாசம் ஆத்துச் சுழில சிக்கி ஒரு சின்னப் பையன் கூட செத்து போயிட்டான். பாவம். விதி முடிஞ்சுட்டா போய் சேந்துட வேண்டியது தான். அதுக்காக பயந்துட்டு தொழிலுக்கு போகாம இருக்கலாமா சொர்ணம் ? நீ கவலைப்படாதே எனக்கு ஒண்ணும் ஆகாது.

எனக்கு பூவோடயும் பொட்டோ டயும் போய்ச்சேரணும், அதான் ஆசை. இந்த கஷ்டத்தை எல்லாம் என்னால பாத்துட்டு இருக்க முடியாது சாமி… என் தலையில் அவன் என்ன எழுதி இருக்கானோ ? சமையல் கட்டில் சொர்ணம் புலம்பிக்கொண்டிருந்தாள்…

முற்றத்திலிருந்த கயிற்றுக்கட்டிலில் வந்து உட்கார்ந்த பொன்னனுக்கு தொண்டை அடைத்தது. பாவம் தங்கப்பன், எத்தனை வருஷமாய் பனை ஏறுகிறான். சின்னவயதிலிருந்தே என் கூட பனையேறும் தொழில் தொடர்வது அவன் மட்டும் தான். காலையில் முதல் பனையில் ஏறியவுடனே சத்தம் போட்டு பேசுவான் பக்கத்து பனையிலிருக்கும் என்னைப் பார்த்து.. ஒரு தோழனாய், தொழில் செய்யுமிடத்தில் ஒரு பேச்சுத் துணையாய் எல்லாமாய் இருந்தவன் தான் தங்கப்பன். அவன் மரணம் இதுவரை சொல்லாத ஏதோ ஒரு வலியையும், சிறு பயத்தையும் பொன்னப்பனின் மனசில் விதைத்தது.

“அவனுக்கு இந்த நிலை வந்திருக்கக் கூடாது”. காய்ப்பேறிப் போன கைகளை ஒருமுறை பிசைந்துவிட்டு காதுமடலில் சொருகி வைத்திருந்த பீடி எடுத்து பற்ற வைத்து விட்டு தனக்குள்ளே சொல்லிக் கொண்டான் பொன்னன். பையனை எப்படியும் வாத்தியானாக்க வேண்டும். அதோடு இந்த செத்துப்பிழைக்கும் பனையேற்றுத் தொழிலையும் விட்டுவிடவேண்டும்.
இதுவரை இதமாக இருந்த அந்த கயிற்றுக் கட்டில் முதல் முறையாக முதுகைக் குத்துவதாகத் தோன்றியது பொன்னனுக்கு.

விபத்து

accident.jpg
மதியம் மணி ஒன்று. அந்த அமெரிக்கச் சாலை தன் மேல் போர்த்தப் பட்டிருந்த பனி ஆடையை இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாய்த் தண்ணீராய்க் கழற்ற ஆரம்பித்திருந்தது. வெயில் அடித்தாலும் விறைக்க வைக்கும் குளிர் காற்றில் நிரம்பியிருக்க, வாகனங்கள் மணிக்கு நூற்றுச் சொச்சம் கிலோமீட்டர்கள் என்னும் வேகத்தில் பாய்ந்து கொண்டிருந்தன. தன்னுடைய டயோட்டா காரை ஓட்டிக் கொண்டிருந்தான் விமல். அருகிலேயே விக்னேஷ். பின் இருக்கையில் சாய்வாய் அமர்ந்திருந்தார்கள் ஆனந்தியும், ஹேமாவும்.

கார் உள்ளுக்குள் கதகதப்பாய் வெப்பக் காற்றை நிறைத்துக் கொண்டு மணிக்கு நூற்றுப் பத்து கிலோமீட்டர் எனும் வேகத்தில் பறந்து கொண்டிருந்தது. ஆனந்தியின் மனசு முழுதும் அந்த கதை பற்றிய எண்ணங்களே ஓடிக் கொண்டிருந்தன. பொதுவாகவே ஒரு கதை எழுத பத்து நாட்களாவது எடுத்துக் கொள்வாள் ஆனந்தி. தன்னுடைய கதைகள் சாதாரண விஷயங்களைச் சொன்னாலும் அதில் ஒரு நேர்த்தி இருக்க வேண்டும் என்பதே அவளுடைய பிடிவாதக் கொள்கை.

இப்படித்தான், சேரி வாழ் குடும்பம் ஒன்று ஒரு மழைநாள் இரவில் படும் அவஸ்தையை எழுதுவதற்காக ஒரு மழைநாள் இரவு முழுதும் சேரியிலேயே படுத்துவிட்டு வந்தாள். இரயில்வே பிளார்பாரக் கடைவைத்திருப்பவனைப் பற்றி எழுத வேண்டுமென்று ஒரு நாள் பிளாட்பாரத்தில் கடை விரித்தாள். ஆனால் அந்தக் கதைகள் எங்கும் பிரசுரமாகவில்லை. அவளுடைய கதைகள் பல அங்கீகரிக்கப்பட்டதில்லை. அதற்காய் ஆனந்தி வருத்தப்படுவதுமில்லை. “நான் செடி மாதிரி. பூக்களை பூப்பிப்பது மட்டுமே எனக்குப் பிரியமான பணி. யாரும் பறித்துக் கொள்ளவில்லையே எனும் கவலையோ, யாரும் பாராட்டவில்லையே எனும் பதட்டமோ எனக்குக் கிடையாது” என்பாள்.

“பாட்டுச் சத்தத்தை கொஞ்சம் குறைத்து வை விமல் . பின் சீட்டில் உட்கார்ந்தால் தலையில் சம்மட்டியால் அடிப்பது போல இருக்கிறது” என்றபடியே ஆனந்தி காரின் ஜன்னலைத் திறந்தாள். காரில் ஏதோ ஒரு ஸ்பானிஸ் பாடல் அலறிக்கொண்டிருந்தது. குளிர் காற்று வேக வேகமாக முகத்தில் மோதியது. உள்ளே இருந்த வெப்பக் காற்றை எல்லாம் வினாடி நேரத்தில் விழுங்கிவிட்டு உள்ளுக்குள் குளிர் நிறைத்தது. கொஞ்ச நேரம் மூச்சை அடைக்கும் அந்த வேகக் காற்றில் சுகம் பிடித்தாள் ஆனந்தி. அதிக நேரம் ஜன்னலைத் திறந்து வைக்க அந்த பனிக்குளிர் இடம் தராததால் மீண்டும் மூடினாள். அவள் மனம் முழுதும் இப்போது எழுதிக் கொண்டிருக்கும் கதையைப் பற்றிய சிந்தனைகளே நிறைந்திருந்தன.

ஒரு காதல் கதை. காதலுக்கு காதலன் வீட்டில் எதிர்ப்பு. ஆனால் குறிப்பிடத்தக்க காரணம் எதுவும் இல்லை. காதலனோ பிடிவாதமாய் காதலியைத் தான் மணம் செய்வேன் என்கிறான்.தீறுதியில் காதலன் வீட்டா ஒத்துக் கொள்கிறார்கள். காதலி அமெரிக்கா செல்கிறாள். ஒரு விபத்து நடக்கிறது. விபத்தில் காதலி ஊனமாகிறாள். காதலைத் தடுக்க காரணம் தேடிக்கொண்டிருக்கும் காதலனின் பெற்றோருக்கு அந்த விபத்து ஒரு காரணமாகிறது. இது தான் கதை. இதில் காதலியாக ஆனந்தி. காதலனாக கிரி.

கிரியை நினைக்கும் போதெல்லாம் ஆனந்திக்குக் கவிதை எழுதத் தோன்றும். ஆனாலும் அவள் எழுதுவதில்லை. ” கவிதை எழுதினால் அது சாதாரணக் காதல், நூற்றுக்கு தொன்னூற்றொன்பது பேர் காதலித்தால் கவிதை தானே எழுதுகிறார்கள் இல்லையா கிரி ?”  என்பாள். ஆனால் கிரி அதற்கு நேரெதிர். ஒவ்வோர் சந்திப்புக்கும் ஒவ்வொரு கவிதை எழுதுவான். கிரியும் ஆனந்தியைப் போல ஒரு மென்பொருள் நிறுவனத்தில் தான் பணிபுரிகிறான். யார் மீதும் வராத காதல் ஆனந்தி மீது வந்ததற்கான வலுவான காரணத்தை கிரியாலும், காதலாலும் சொல்ல முடியவில்லை !. அதை விசாரிக்க இருவரும் விசாரணைக் கமிஷன் அமைத்துக் கொண்டதும் இல்லை. அது தானே காதல் ?

ஆனந்தி அமெரிக்கா வந்த அந்த நள்ளிரவில் விமான நிலையத்தில் பெருமையும், கண்ணீரும், வலியும் கலந்த பார்வை ஒன்றை கிரியின் கண்களில் கண்டபோது ஆனந்திக்கு இந்த மூன்று மாதப் பயணம் முள் காடாய் உறுத்தியது. என்ன செய்வது ? இப்போது போக மாட்டேன் என்றால், பிறகு எந்த வாய்ப்பும் தரமாட்டார்களாம் அலுவலகத்தில். எப்படியும் இந்த மூன்று மாதம் பொறுத்துத் தான் ஆக வேண்டும். அதற்குப் பின் திருமணம். கிரியின் பெற்றோர் மீண்டும் முருங்கை மரம் ஏறும் முன் அது நடக்க வேண்டும். என்னதான் கிரியுடன் சேர்ந்து பதிவுத் திருமணம் பண்ணிக் கொள்ள முடியும் என்றாலும், கூட்டுக் குடும்ப சூழலில் நடக்கும் திருமண வாழ்க்கையே வேண்டும் என்னும் பிடிவாதக் குணம் அவளுக்கு.

ஆனந்தியின் கதைகளின் முதல் வாசகன் கிரி தான். கிரியின் கவிதைகளின் முதல் ரசிகை அவள்.
” என்ன ஆனந்தி எந்தக் கதைகளை எழுதினாலும், அந்த களத்துக்குள்ளே போய் தான் எழுதறே… முத்தம் பற்றி ஒரு கதை எழுதேன் .. நான் களம் அமைத்துத் தரேன்”… அவ்வப்போது சீண்டுவான்.
“ஆமா… இப்போ முத்தம் பற்றி எழுது முத்தத்துக்கு ஏற்பாடு பண்றேன்னு சொல்லுவே… அப்புறம் குழந்தை பற்றி எழுதுண்ணு சொல்லுவே…” சொல்லி முடிக்கும் முன் வெட்கப் படுவாள் ஆனந்தி.

” ஏன் ? முத்தம் பற்றி எழுதுறது என்ன தப்பு ஆனந்தி ? பிழையா எழுதினாலும் இனிக்கிற ஒரே கவிதை முத்தம் தான் தெரியுமா ? ” – கண் சிமிட்டுவான் கிரி.
“ஆமா.. ஆமா… ஏதாவது பேசியே சமாளிச்சுடு. நான் முத்தம் பற்றி எழுதினாலும்… குழந்தையின் முத்தம் பற்றி தான் எழுதுவேன்”… சிரிப்பாள் ஆனந்தி.
” நம்ம குழந்தையா ? ” – மீண்டும் சிணுங்கலாய் அபினயம் காட்டிச் சீண்டுவான் கிரி.

நினைவுளில் மூழ்கிப் போய் மெலிதாய் புன்னகைத்தாள் ஆனந்தி. கதைக்கு கதாநாயகன் ரெடி, கதாநாயகி ரெடி, களம் ரெடி.. இனிமேல் அந்த விபத்து தான் பாக்கி. இதுவரை எந்த விபத்தையும் நேரடியாய் பார்த்ததில்லை ஆனந்தி. கதைக்கு அந்த விபத்து தான் முக்கியம் என்பதால் கதையின் அந்தப் பாகத்தை ஜீவனோடு எழுதவேண்டும். என்ன செய்வது என்று தெரியவில்லை. யோசனையில் மூழ்கினாள் ஆனந்தி.

“விமல் கொஞ்சம் மெதுவா போயேன்… ரோடெல்லாம் ஒரே ஈரமா இருக்கு…” ஹேமா மூன்றாவது முறையாகச் சொன்னாள்.
” வேணும்ன்னா சீட் பெல்ட் போட்டுக்கோ ஹேமா… இங்கே நான் நாலு வருஷமா கார் ஓட்டறேன். ஒரு சின்ன துரும்புக்கு கூட சேதம் வருத்தியதில்லை. கவலைப் படாதே”.. விமல் சிரித்தான்.

“பயம்ன்னு இல்லே… ரோடு ஈரமா இருக்கிறதனால சொன்னேன். ” ஹேமா முனகினாள்.
“ஆமா, நாம எந்த எக்சிட் எடுக்கணும் ?” விமல் விக்னேஷ் பக்கமாய் திரும்பிக் கேட்டான்.

அமெரிக்காவில் பிரீவே எனப்படும் சாலைகளில் நிறுத்தங்கள் கிடையாது. வேகம் அதிகபட்சம் நூற்றுப் பத்து கிலோமீட்டர்கள் என்று அறிவிப்புப் பலகைகள் மைல் க்கு ஒரு முறை சொல்லும். ஆனாலும் வாகனங்கள் நூற்று முப்பது, நூற்று நாற்பது என்று மதிக்காமல் ஓடும். குறைந்தபட்ச வேகமே எப்படியும் எண்பது, தொண்ணூறு கிலோ மீட்டர்கள் இருக்கும். வேகம் அளவுக்கு அதிகமாகிப் போனால் ஆங்காங்கே கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக் காத்திருக்கும் போலீசாரிடம் கப்பம் கட்ட வேண்டியது தான். இங்கே கப்பம் கட்டும் பணத்தில் ஊரில் நல்லதாய் இரண்டு டி.வி.எஸ் வாங்காலாம்.

இந்த பிரிவே க்கள் பெரும்பாலும் இரண்டு அல்லது மூன்று லேன் வசதியோடு, ஒரு வழிப்பாதையாக இருக்கும். அதிக பட்ச வேகக் காரர்கள் இடப்பக்கமும், வேகம் குறைவாய் ஓட்டுபவர்கள் வலப்பக்கமும் செல்ல வேண்டும் என்பது சட்டம். எந்த ஊருக்குப் போகவேண்டுமென்றாலும், இந்த பிரீ வே யிலிருந்து பிரிந்து செல்லும் ஒரு ரோட்டை பிடித்தாக வேண்டும். ஒவ்வொரு பிரிந்து செல்லும் சாலைக்கும் ஒவ்வொரு எண் இருக்கும். அந்த எண் தெரியாவிட்டால் திக்குத் தெரியாத காட்டில் அலைய வேண்டியது தான். சாலை ஓரங்களில் ஆள் நடமாட்டம் அறவே இருக்காது.

“எந்த எக்சிட் எடுக்கவேண்டும்” என்ற விமலின் கேள்விக்கு பதில் சொல்ல விக்னேஷ் வரைபடத்தை புரட்டினான்.
” சீக்கிரம் பாருப்பா…. நாம முன்னூற்று ஒன்பதிலே இருக்கிறோம்…” விமல் பாடலில் சத்தத்தை குறைத்துக் கொண்டே சொன்னான்.
விக்னேஷ் வரைபடத்தின் மீது விரலை ஓட்டியபடியே….. ” நாம் முன்னூற்றுப் பத்தில் நுழைய வேண்டும் ” என்பதற்குள் கார் முன்னூற்றுப் பத்தை வெகுவாக நெருங்கியிருந்தது.

சட்டென்று காரை வலப்புறமாய் திருப்பி வெளியேறும் சாலையை அடைவதற்குள் காரின் வேகத்தைக் குறைக்க முடியாமல் போக, சாலையின் மேலும், சாலை ஓரங்களிலும் கிடந்த பனி காரின் டயரை இறுக்கமாய் பற்றிக் கொள்ள மறுத்து கைகளைவிரிக்க, கார் அந்த பிரீ வேயில் ஒரு சுற்று சுற்றி எதிர் பக்கமாய் திரும்பி நிராயுதபானியாய் நின்றது. காரை நோக்கி இராட்சச வேகத்தில் வண்டிகள் பாய்ந்து வந்தன.

நிலமையின் வீரியம் காரிலிருப்பவர்களுக்குப் புரிந்து அலற ஆரம்பிப்பதற்குள் அசுர வேகக் கார் ஒன்று வேகமாய் மோதி இவர்கள் காரை இடது ஓரத்துக்குள் தள்ளியது. அங்கிருந்து இன்னொரு கார் மோத, வலப்பக்கமாய் உருண்டது. என்ன நடக்கிறது என்பதை உணரும் முன் வாகனம் தன் அத்தனை பக்கங்களிலும் மூர்க்கத்தனமான மோதல்களைப் பெற்று ஓரமாய் தூக்கி வீசப்பட்டது.

பக்கத்துக் காரில் இருந்தவர்கள் போன் செய்திருக்க வேண்டும். விபத்து நடத்து மூன்று நிமிடங்கள் முழுதாய் முடியும் முன் அந்த இடம் முழுவதும் போக்கு வரத்து நிறுத்தப்பட்டு காவல்துறை வண்டிகளும், ஆம்புலன்ஸ்களுமாய் நிறைந்திருந்தன.

*

ஆனந்தி கண்களைத் திறந்தாள். சுற்றிலும் மங்கலாய் உருவங்கள். விமல் தான் முதலில் கண்களில் தட்டுப் பட்டான்.
” ஆனந்தி … “… மெதுவாக அழைத்துக் கொண்டே விமல் ஆனந்தியை நெருங்கினான்.
” மத்தவங்க எல்லாம்…. எப்படி இருக்காங்க… ?” ஆனந்தியின் தொண்டையில் வார்த்தைகள் பலவீனமாய் வெளிவந்தன.
தான் எத்தனை நாளாய் மயக்கத்தில் இருக்கிறேன் என்ற கேள்வி ஆனந்தியின் உள்ளுக்குள் மெல்ல உருண்டது.

” யாருக்கும் ஒரு பிரச்சனையும் இல்ல ஆனந்தி. ஐயாம் வெரி சாரி…   இப்படியெல்லாம் ஆகும்ன்னு நினைச்சுக் கூட பாக்கல. எல்லாத்துக்கும் நான் தான் காரணம் ” விமலின் கண்கள் கலங்கின.
” அதெல்லாம் ஒண்ணுமில்லை விமல் யாருக்கும் எதுவும் ஆகல இல்லே…” இன்னும் வார்த்தைகள் பலம் பெறாமல் தான் வந்தன.
” ஹேமா எங்கே ? “என்றபடியே வலது கையைத் தூக்கிய ஆனந்தி ஏகமாய் அதிர்ந்தாள். அவளுடைய கை முழங்கையோடு முடிந்து போயிருந்தது.
அதிர்ச்சியின் உச்சம் உள்ளத்தைத் தாக்க …. உள்ளுக்குள் ஏதோ ஒன்று உருள மீண்டும் மயக்கத்துக்குள் போனாள் ஆனந்தி.

*

“அப்பா…”- கிரி அப்பாவை மெதுவாக அழைத்தான்.
அப்பா திரும்பினார்.
” ஆனந்திக்கு விபத்து நடந்திடுச்சுப்பா…. அதுல.. ஆனந்தியோட கை…….” அதற்கு மேல் பேச முடியாமல் கிரியின் கண்கள் கலங்கின.

ஒரு நிமிடம் அமைதியாய் அமர்ந்திருந்த அப்பா பேச ஆரம்பித்தார்,
” கேள்விப் பட்டேன்….  எல்லாம் கேள்விப் பட்டேன். என்ன பண்ன முடியும் ? எல்லாம் நடக்கணும்னு இருக்கு…. கல்யாணத்துக்கு அப்புறம் இது நடந்திருந்தா நான் என்ன செய்திருக்க முடியும். இந்த நேரத்துல இதைக் காரணம் காட்டி காதலை முறிக்கிற அளவுக்கு நான் ஒண்ணும் மனசாட்சி இல்லாதவன் இல்லை… நிச்சயித்தபடியே திருமணம் நடக்கும். கவலைப்படாதே. அவளுக்கு போன் பண்ணி ஆறுதல் சொல்லு”…
சொல்லிவிட்டு கண்மூடிய அப்பாவை ஆச்சரியமாய்ப் பார்த்தான் கிரி.

” இல்லேப்பா. ஒரு கை இல்லாத பொண்ணு கூட வாழறது பிராக்டிக்கலா எனக்கு சரியாப் படல. நீங்களும் அதையே சொல்லுவீங்கன்னு எதிர்பார்த்தேன். ஆனா நீங்க நேர்மாறா சொல்லிட்டீங்க. காதலிச்சப்போ வேண்டாம்ன்னு சொன்னீங்க, நான் கேக்கல. இப்போ வேணும்ன்னு சொல்றீங்க… அதையும் என்னால கேக்க முடியல” . என்னை மன்னிச்சுடுங்கப்பா. என்ற மகனை அதிர்ச்சியாய்ப் பார்த்தார் அப்பா.

முடிவு தெரியாத நிலையில் ஆனந்தி இன்னும் மயக்கத்தில் இருந்தாள். அவளுடைய கதை  ஒரு விபத்தைச் சந்தித்த அதிர்ச்சியில் முடிவுறாமல் கிடந்தது.

*

அவன்

 
கடிகாரம் சத்தமிட்டு அழைத்தது. நல்ல தூக்கம், போர்வையை விலக்கப் பிடிக்கவில்லை விக்னேஷிற்கு. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கினால் நன்றாக இருக்கும். கால்வாசி கூட விரியாத இமைகளின் வழியே சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தான் விக்னேஷ். ஆறு மணி. இன்னும் ஒரு பத்து நிமிடம் தூங்கலாம், யோசனையோடு  போர்வையை நன்றாகப் போர்த்தி கைகளைக் கட்டிக் கொண்டி பக்கவாட்டில் சுருண்டு படுத்தவனை தட்டி எழுப்பினான் அவன்.

எரிச்சலோடே கண் விழித்தான் விக்னேஷ். அவனே தான். கொஞ்ச நாட்களாகவே அடிக்கடி வந்து தொந்தரவு செய்து விட்டு, காணாமல் போய்விடுகிறான். யாராய் இருப்பான் ? திடுப் பிடுப் என வருகிறான், ஏதேனும் குளறுபடி செய்கிறான், பிறகு சமாதானம் சொல்லிவிட்டு போயே போய்விடுகிறான். யோசித்துக் கொண்டே மீண்டும் கண்களை மூடியவனின் போர்வையை இழுத்தெறிந்துவிட்டுச் சிரித்தான் அவன். காலையிலேயே குளித்துவிட்டான் போல, தூய்மையான ஆடை உடுத்திருந்தான். ஆடைகளில் ஏதோ ஒரு மெல்லிய நறுமணம்.

“எழுந்திரு… எட்டுமணிக்கு உனக்கு அலுவலகத்தில் கான்பரன்ஸ் கால் இருக்கிறது.. மறந்து விட்டாயா ? ” . ஒரு கையில் காபியை உறிஞ்சிக் கொண்டே கேட்டான் அவன்.
” அதெல்லாம் எனக்குத் தெரியும், ஏழரைக்கு வண்டியை உதைத்தால் அது எட்டுமணிக்கு என்னை அலுவலகத்தில் விட்டு விடும்.. நீ என்னை விட்டு விடு பிளீஸ்… இன்னும் ஒரு அரை மணி நேரம் மட்டும் தூங்குகிறேன்”… கெஞ்சல் குரலில் கேட்டான் விக்னேஷ்.

” அதெல்லாம் முடியாது விக்னேஷ்… எட்டுமணிக்கு மீட்டிங் என்றால், நீ ஏழரைக்காவது அங்கே இருக்க வேண்டும். இன்னிக்கு டிராபிக் எப்படி இருக்குமோ ? வழியிலே என்னென்ன பிரச்சனை இருக்குமோ ? ஒண்ணும் தெரியாது.. எழும்பு எழும்பு…” கையில் மிச்சமிருந்த சில தண்ணீர் துளிகளை விக்னேஷின் முகத்தில் உதறிக் கொண்டே சொன்னான் அவன்.

விக்னேஷ் எழுந்தான். ஒருகையில் பிரஷோடும், இன்னொரு கையில் டவலோடும் குளியலறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டே யோசித்தான். யார் இவன் ? என் மனசாட்சியா ? இல்லையே அவன் பார்ப்பதற்கு என்னைப் போல இல்லையே ? அழகாக இருக்கிறானே ? மனசாட்சியாய் இருக்க வாய்ப்பு இல்லை.
ஒருவேளை பேயோ ? ம்ஹூம்…. பேய்க்கு கால் இருக்குமா என்ன ?. யோசித்துக் கொண்டே குளித்து முடித்து வெளியே வந்தான் விக்னேஷ்.

அவன் இன்னும் அங்கே தான் உட்கார்ந்திருந்தான். ” அதான் நான் ரெடியாகி வந்துட்டேன்ல.. நீ கிளம்பு” விக்னேஷ் தான் சொன்னான் குரலில் இருந்தது என்ன உணர்ச்சி என்று அவனுக்கே புரியவில்லை.

” அதெல்லாம் இல்லை… நீ ஏதாவது சாப்பிட்டுட்டு விட்டுக் கிளம்பு.. அதுக்கப்புறம் நான் போறேன்..” பிடிவாதமாய் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
” இவ்வளவு அக்கறையா பேசறியே… நீ எனக்கு ஒரு டீ போட்டு தந்திருக்கலாமே ? ” விக்னேஷின் கேள்விக்கு ஒரு சின்ன சிரிப்பை மட்டுமே கொடுத்துவிட்டு தொலைக்காட்சியில் சானலை மாற்றினான் அவன்.

“யாரோ கதவை தட்டறாங்க பாரேன்” சொன்னான் அவன். அவன் சொல்லி முடித்த அடுத்த வினாடி கதவு தட்டப்பட்டது. விக்னேஷ் சென்று கதவைத் திறந்தான். மாமா ! கோயமுத்தூரிலிருந்து மாமா வந்திருக்கிறார். கூடவே மாமா பெண் வித்யாவும்.

” வாங்க மாமா… வா… வாங்க வித்யா…” உள்ளே அழைத்தான். உக்காருங்க. என்ன ஆச்சரியம் ? சென்னைல ஏதாவது விசேஷமா மாமா ? காரணம் இல்லாம சென்னைக்கு வர மாட்டீங்களே ? சிரித்துக் கொண்டே கேட்டான் விக்னேஷ்.

விசேஷம் என்ன பெரிய விசேஷம் விக்னேஷ் ? . வித்யாவுக்கு இன்னிக்கு இங்க ஒரு கல்லூரில நேர்முகத் தேர்வு. அதுக்குத் தான் வந்தேன். காலேஜுக்கு பக்கத்துல தானே உன் வீடு..அப்படியே உன்னையும் ஒரு பார்வை பாத்துட்டு போலாம்ன்னு வந்தேன்.
மாமா ஸ்நேகத்தோடு சொல்லி நிமிர்ந்ததும், முந்திரிக் கொட்டை மாதிரி அவன் பேசினான்…
” ஓ… இண்டர்வியூ டைம் வர்ற வரைக்கும் போரடிக்குமேன்னு இங்கே வந்தீங்களா ? “.
மாமா வுக்கு திக் என்றது.
” என்ன விக்னேஷ் இப்படி சொல்லிட்டே ? ஏன் எங்களுக்கு வெளியே இருந்தா  நேரம் போகாதா ? ” மாமா குரலில் கொஞ்சம் கோபம் தெரிந்தது.

” நான் என்ன சொல்லிட்டேன் மாமா ? அவன் தானே சொன்னான்… அதுக்காக ஏன் என்னைத் திட்டறீங்க ? ” விக்னேஷ் மன்னிப்புக் கேட்கும் குரலில் சொன்னான்.
” அவனா ? யாரு விக்னேஷ் ? நீ தனியா தானே இருக்கே இங்கே ? வேற யாராவது இருக்காங்களா என்ன ? ” சொல்லி விட்டு சுற்றுமுற்றும் பார்த்தார் மாமா.

” அதோ டி.வி பார்த்துட்டு இருக்கானே அவன் தான் சொன்னான் மாமா ..” விக்னேஷ் காட்டிய திசையில் அவன் இன்னும் உட்கார்ந்து சிரித்துக் கொண்டிருந்தான்.
” என்ன விக்னேஷ்.. விளையாடறியா ? அங்கே யாருமே இல்லையே ? .. ” மாமாவின் குரலில் கொஞ்சம் ஆச்சரியமும், கொஞ்சம் கிண்டலும் கலந்திருந்தது. விக்னேஷின் கண்களைப் பார்த்தார்.
” என்ன ராத்திரி சரியா தூங்கலயா ?…” சொல்லிவிட்டு மீண்டும் ஒருமுறை சிரித்தார்.

” அதை விடுங்க மாமா… நின்னுட்டே இருக்கீங்களே.. வாங்க உட்காருங்க.. என்ன சாப்பிடறீங்க ? ” இயல்புக்கு வந்த விக்னேஷ் கேட்டான்.
” எங்களுக்கு எதுவும் வேண்டாம் விக்னேஷ்.. காலைல தான் சென்னை வந்தோம். வந்த உடனே முதல் வேலையா ஹோட்டல்ல போய் ஒரு கட்டு கட்டிட்டோ ம்ல” சொல்லி விட்டுச் சிரித்தார் மாமா.

விக்னேஷுக்கு குழப்பமாய் இருந்தது. இன்னும் அவன் அங்கே உட்கார்ந்து சிரித்துக் கொண்டும், டி. வி சானலை மாற்றிக் கொண்டும், ஓரக் கண்ணால் வித்யாவை அளந்து கொண்டும் இருந்தான். மாமாவோ யாருமே இல்லை என்கிறார். அப்படியானால் அவன் யார் ? என் கண்ணுக்கு மட்டும் தான் தெரிகிறானா ? எனக்கு ஏதேனும் வியாதியா ? மனநிலை பாதிக்கப் பட்டிருக்கிறேனா ? நினைக்க நினைக்க குழப்பமாக இருந்தது விக்னேஷிற்கு.

“என்ன விக்னேஷ்.. ஏதோ யோசனை போல இருக்கு ?.. ஏதாவது சொல்லேன் ” மாமா தான் சிந்தனைகளைக் கலைத்தார்.
” ஒண்ணுமில்லே மாமா… சொல்றதுக்கு .. அதான் யோசித்திட்டு இருந்தேன்… நீங்க சொல்லுங்க மாமா … என்ன விசேஷம்  ஊர்ல ? ” கேள்வியை மாமா பக்கமாய் திருப்பி வைத்தான் விக்னேஷ்.
” ஒண்ணுமில்லை விக்னேஷ்… எல்லாருமே நல்லா இருக்காங்க. நினைச்சது எதுவும் நடக்கமாட்டேங்குது… இவளுக்கு இந்த ஒரு சீட் மட்டும் கிடைச்சா நல்லா இருக்கும்… ” சொன்னார் மாமா. கண்களில் ஏதோ ஏமாற்றம்.

” நினைக்காததைப் பற்றி ஏன் மாமா பேசறீங்க நாம மரணத்தைப் பற்றி பேசலாமா ? அது தான் கண்டிப்பா நடக்கப் போற விஷயமாச்சே ” – ஐயோ… அவன் தான் குறுக்கிட்டு கேட்டான் கேட்டுவிட்டு சிரித்தும் விட்டான்.
மாமா திரும்பினார்.. கண்களில் வண்டி வண்டியாய் கோபம்.
” என்ன விக்னேஷ்.. உனக்கு என்ன ஆச்சு ? உன் பேச்சே சரியில்லை இன்னிக்கு. உனக்கு  பிடிக்கலேன்னா சொல்லிடு நாங்க போயிடறோம்…” மாமா சொல்லிவிட்டு வித்யாவைப் பார்த்தார். விக்னேஷ் என்ன சொல்வதென்று தெரியாமல் இரண்டு கைகளாலும் முகத்தைப் பொத்திக் கொண்டு குனிந்தான்.
மனதுக்குள் கோபமும், அவமானமும் பீறிட்டுக் கிளம்பியது.

“வாங்க உட்காருங்க…. சாப்பிட்டுக் கொண்டே சாவைப் பற்றி பேசலாம் ” அப்படின்னு சொன்னா ஏன் ஆச்சரியப் படறீங்க ? சாவு ஒரு நிகழ்வு தானே அதைப் பற்றி பேசறதுக்கு ஏன் பயப்படறீங்க ? ” அவன் தான் மறுபடியும் கேட்டான். விக்னேஷ் இன்னும் குனிந்து தான் இருந்தான். நிமிரப் பிடிக்கவில்லை அவனுக்கு.

” நல்ல ஒரு விஷயத்துக்கு வந்திருக்கும்போ ஏன் அபசகுனமா பேசறே ? வயசுக் கோளாறா விக்னேஷ் ? ” மாமா கேட்பது மெலிதாக காதில் விழுந்தது. அதற்கு அவன் ஏதோ பதில் பேச ஆரம்பித்தான். விக்னேஷ் நிமிரவேவேயில்லை.

” இல்லே மாமா… மரணம் என்பதைத் தவிர வேற எதையும் நீங்க உறுதியா சொல்ல முடியாது இல்லையா ?.. வித்யாவுக்கு இடம் கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம்… ஆனா ஒவ்வொருவருக்கும் சாவு என்பது கண்டிப்பா நடக்கும்.. கேள்வி ஒண்ணே ஒண்ணு தான்… எப்போ ? எப்போ ? எப்போ ? . அதனால நடக்காததைப் பற்றியே பேசிப் பேசி நடக்கலயேன்னு வருத்தப் படறதை விட நடக்கப் போறதைப் பற்றிப் பேசலாமேன்னு தான் அப்படி ஆரம்பிச்சேன்… ”

” உனக்கு ஏதோ மனக் கோளாறு விக்னேஷ்.. நீ இனிமே தனியா தங்கறது நல்லதில்லை. உன் வீட்ல சொல்றேன்.. ஏதாவது பசங்க கூட சேர்ந்து தங்கு.. அது தான் நல்லது… வண்டி ஓட்டும்போ பார்த்து ஓட்டு” மாமாவின் குரலில் கோபத்தோடு கொஞ்சம் கிண்டலும் கலந்திருந்தது.

” எனக்கு பைத்தியம் ந்னு நேரடியா சொல்லுங்களேன். ஏன் கவலைப் படறீங்க ? மாமா ? ” சிரித்தான் அவன்.

” நான் அப்படியெல்லாம் சொல்லலை விக்னேஷ். நீ ரொம்ப நெகட்டிங் ஆவே யோசிக்கறே.. இது நல்லதில்லை. மனசைப் பாதிக்கும் ” மாமா சொன்னார்.

” நான் மட்டும் தான் மாமா… பாசிட்டிவ் ஆ திங்க் பண்றேன். சாவு வராதுண்ணு யோசிக்கிறது தான் நெகட்டிங் திங்கிங். நான் பாசிட்டிங் ஆ தான் பேசறேன். அது மட்டுமில்லை மாமா… வண்டி ஓட்டும்போ இடிச்சுடுவோமோங்கற பயம் கலந்த நெகட்டிங் திங்கிங் தான் நம்மை கவனமா வண்டி ஓட்டச் செய்யும் இல்லையா ? ” அவன் சொல்லிவிட்டு சிரித்தான்.

மாமா விருட் என்று எழுந்தார். அவனுடைய பதிலை விட அந்த சிரிப்பு தான் மாமாவைக் காயப் படுத்தியிருக்க வேண்டும்.
“வர்றேன் விக்னேஷ் நேரமாச்சு”  ஒற்றை வரியில் பதில் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். விக்னேஷ் இன்னும் தலையை நிமிர்க்கவில்லை. வித்யாவிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவனோ இன்னும் சிரித்துக் கொண்டே இருந்தான்.

மாமா கதவை அடைத்த சத்தத்தில் உறவு கொஞ்சம் பலவீனப் பட்டிருப்பது போல் தெரிந்தது விக்னேஷிற்கு. விக்னேஷ் நிமிர்ந்தான். கண்கள் இரத்தச் சிவப்பாகி இருந்தன. கோபத்தின் அத்தனை சக்திகளையும் திரட்டி அவனை நோக்கிக் கத்தினான்…
” உனக்கென்ன பைத்தியமா ? ஏன் இப்படி என் மாமாவை விரட்டினாய் “. விக்னேஷின் விரல்களெல்லாம் நடுங்கின, உதடுகள் துடித்தன, மூச்சுக் காற்று ஒழுங்கில்லாமல் அலைந்தது.

அவன் சிரித்துக் கொண்டே சொன்னான். ” அடே மடையா…. தன்னோட பொண்ணை உனக்கு கட்டி வைக்கணும்ங்கிறது மாமா வோட எண்ணம்.
அவ வேற இங்கே தங்கி படிக்க போறாளாம். வருசக் கணக்கா… புரியுதா ? நான் அவங்களை துரத்தாம இருந்தா அவ உங்கூடவே சுத்திட்டு இருந்திருப்பா… மனசுல ஆசையும் வளத்திருப்பா…  அப்புறம் நீ காதலிச்சிட்டு இருக்கிற ஜோதியோட கதி என்ன ஆவறது ? ”

” இல்லை …. அது உண்மையா இருக்காது. அப்படியே அது உண்மையா இருந்தாலும் இது தான் வழியா அதுக்கு ? என்ன தான் இருந்தாலும்… வீட்டுக்கு வந்தவங்களை இப்படி பேசி துரத்தினது  தப்பு தப்பு தப்பு…. நீ முதல்ல வெளியே போ.. இனிமேலும் உன் முகத்துல முழிக்க நான் விரும்பல… சும்மா நீயா எதையெதையோ கற்பனை பண்ணிட்டு உன் வாய்க்கு வந்ததைப் பேசிட்டே… இனிமே இதை நான் எப்படி சரிபண்ணப் போறேனோ ? ” விக்னேஷ் கோபம் குறையாமல் கையில் இருந்த புத்தகத்தைத் தூக்கி அவன் மேல் வீசினான்.

சிரித்துக் கொண்டிருந்த அவன் எழும்பினான். சிரிப்பை நிறுத்தினான். கண்களில் கொஞ்சமாய் கோபம். நேரடியாக விக்னேஷின் முகத்துக்கு முன்னால் வந்து நின்றான்.

” வாயை மூடுடா.. நான் செய்ததெல்லாம் சரி தான். எந்த தப்பும் கிடையாது… பாரு நேரம் ஏழரை… இப்போ வண்டியை கிளப்பினால் தான் எட்டுமணிக்கு நீ ஆபீஸ் போக முடியும். சும்மா என்னை கத்தற வேலையெல்லாம் வெச்சுக்காதே கொன்னுடுவேன்… நான் சொன்னதுல எந்த தப்பும் இல்லைன்னு நினைச்சுக்கோ…. எது வந்தாலும் பார்த்துக்கலாம் கிளம்பு..”
சொல்லிவிட்டு டி.வி ரிமோட்டை சோபாவில் விட்டெறிந்துவிட்டு காற்றில் கரைந்து காணாமல் போனான் அவன்