இசை : சஞ்சே, பாடல் : சேவியர்
ஓ.
ரீங்காரமா
மன தீரத்திலே சுரமா
ஓ
ஸ்ருங்காரமா
இரு பாதத்திலே வரமா
இது தாம் தோம் எனும்
புது நர்த்தனமோ
இனி மேடைகளின் தடமோ
இது சாந் தம் எனும்
புது கீர்த்தனமோ
இசை ஓடைகளின் இடமோ
நாத வடிவமோ
இறையே நீ
பாத வடிவமோ
உருவே நீ
வேத வடிவமோ
எதுவாகிலும் பாத வந்தனம் யாம் தந்தோம்
சப்தம் ஆடினோம்
சேர்ந்தொரு
வர்ணம் ஆடினோம்
பதமும் தில்
லானா ஆடினோம்
இருபாதமும் வாட ஆடினோம் நாடி ஆடினோம்
கால் சலங்கையில்
ஸ்ருங்காரம் சிரிக்கும்
ஹாஸ்யங்கள் தெறிக்கும்
கண்
பாவத்தில் வியக்கும்.
கை அசைகையில்
பதாகம் பிறக்கும்
வராகம் நடக்கும்
காங் கூலமும் முறைக்கும்.
நர்த்தமாட வரவா
விரலால் அர்த்தமாட வரவா
விழியால் சத்தமாட வரவா
முத்ர மொத்தமாட வரவா
கூத்து ஆட வரவா
துடி கொடக் கூத்து ஆட வரவா
அல்லிய ஆட்டமாட வரவா
இசையைக் கட்டியாட வரவா ?
ஃ
ஆடல் கலைதனில் யாவும் அடக்கம்
பூமி அடங்குமே
மேளம் முடிகையில் தேகம் முடியும்
ஜீவன் மடியுமே
கையின் வழி தனிலே நயனமாய்
கண்ணின் வழி தனிலே மனமுமாய்
மனதின் வழியினிலே ப்பாவமாய்
ப்பாவ வழி தனில் ரசமுமாய்
ஃ