இன்டர்வியூ டிப்ஸ் (Interview Tips)

நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுவது மிக எளிது ! பலரும் பயப்படுவது போன்ற கம்ப சூத்திரம் அல்ல அது ! அது எப்படி என்பதை மிக எளிமையாக தமிழில் விளக்கும் ஒரு வீடியோ இது !

பாருங்கள்.. பயனடையுங்கள்.. பகிருங்கள்.

 

Telephonic Interview (தொலைபேசி இன்டர்வியூ) TIPS

தொலைபேசி இன்டர்வியூவில் வெற்றி பெறும் வழிகளை எளிமையாக விளக்கும் வீடியோ !

முகிலே முகிலே

பாடல்   : முகிலே முகிலே
இசை   : சஞ்சே
பாடல் வரிகள்  : சேவியர்
குரல்கள்   : ரோகினி, எம்.சி ஜீவா

ஆல்பம் : பைரவன்  http://www.tamilbadboy.com/bhairavan.zip
தயாரிப்பு : TBB Entertainment, London.

Bhairavan

 பெண்

முகிலே முகிலே
உனைப்போல் எனை
மிதக்கச் செய்வாயா ?

மழையே மழையே
உனைப்போல் எனை
குதிக்கச் செய்வாயா

அடடா மனம் ஓடுதே
கடிவாளம் உடைத் தோடுதே
அடடா உயிர் தேடுதே
மெய்மறந்தேனே
பெண்

கரையைத் தாண்டும் நதியின் விரலாய்
உடலைத் தாண்டி உயிரோடும்
தரையைத் தீண்டும் பறவை இறகாய்
சத்தம் இன்றி சாய்ந்தோடும்

அடடா காற்றிலே
சிலை யார் செய்ததோ
வருடும் கைகளை
யார் கொடுத்ததோ
மெதுவாய் மெதுவாய் முத்தம் தருதோ

ஆண் :

உன் தேகம் கால் கொண்ட நிலவா
உன் பாதம் பூமிக்கு வரமா
உன் கூந்தல் விரல் நீட்டும் இரவா
நீ தேவ இனமா

You can download the song for Free @ http://www.tamilbadboy.com/bhairavan.zip

 

 

பைரவன் – கனவே, மனமே, அழகே

ஆல்பம் : பைரவன்
இசை : சஞ்சே
பாடல் : சேவியர்
குரல் : சதீஷ் & நான்சி
தயாரிப்பு : TBB Entertaninment, London

————————————————————–
ஆண் :

கனவே
மனமே
அழகே

நினைவே
நிஜமே
வரமே

தேன் சிந்தும் நட்சத்திரம் நீ தானா
பூச் சிந்தும் முத்துச் சரம் நீ தானா
தித் திக்கும் தெள் அமுதும் நீ தானா
என்னென்பேன் ?
 
பெண் :

கனவே
மனமே
அழகே

நினைவே
நிஜமே
வரமே

நேசங்கள் ஒன்றை ஒன்று சேராதா ?
நீயென்னைத் தேடி வரக் கூடாதா ?
தேகத்தில் பூப்பறித்தல் ஆகாதா ?
சொல் அன்பே

பெண்

ஏ நெஞ்சே
நான் சொட்டுச் சொட்டாய் நனைந்தேனே
ஏ கண்ணே
ஏன் தொடு வானமாகிறாய்

ஆண்

ஓர் ஆசைக் கடலின் அலையாய் அலைந்தேன்
பேராசைக் கரையில் நுரையாய்க் கிடந்தேன்
தேசத்தின் திசைகள் முழுதும் அளந்தேன்
காதலில் விழுந்தேன்

பெண்

நீருக்குள் மழையாய் காதல் பொழிந்தேன்
வேருக்கும் தெரியா பூக்கள் வளர்த்தேன்
காற்றோடு காற்றாய் நானும் நடந்தேன்
காதலில் எழுந்தேன்

ஆண்

காதல் என்பது முழுநிலவு

பெண்

அதை மறைத்தல் என்பது பகல்கனவு
அது இரவல் ஒளியில் வாழுவது

ஆண்

காதல் என்பது கடலன்பே…..

ஆண்

நீரில் பிம்பம் அலைந்தாலும் – அதைக்
கையால் பிடிக்க முடியாது

பெண்

கனவில் அடைமழை பொழிந்தாலும்
நிலம் நினையாது

ஆண்

தேன் சிந்தும் நட்சத்திரம் நீ தானா
பூச் சிந்தும் முத்துச் சரம் நீ தானா
தித் திக்கும் தெள் அமுதும் நீ தானா
என்னென்பேன் ?

பெண்

நேசங்கள் ஒன்றை ஒன்று சேராதா ?
நீயென்னைத் தேடி வரக் கூடாதா ?
தேகத்தில் பூப்பறித்தல் ஆகாதா ?
சொல் அன்பே

*