உனக்கான நாள்
வந்தே தீரும்
உன்
தோட்டங்களின் மீது
மழை கூட
பொழிய மறுத்து
பொய்த்துப் போகிறதாம்,
உன் தாவரங்களை
மட்டுமே
கதிரவனும்
தவிர்க்கிறானாம்,
நீ
இட்ட விதைகளை
பறவைகள்
வந்து
கொத்திச் செல்கின்றனவாம்,
உன் தூண்டில்களை
மீன்கள்
அருமையாய்
திருடிச் செல்கின்றனவாம்,
நீ
போகுமிடமெல்லாம்
உனக்காய்
தோல்விகள் மட்டுமே
தோண்டப்பட்டிருக்கின்றனவாம்.
கவலைப் படாதே,
உனக்கான நாள்
வந்தே தீரும்.
மழை இல்லா மண்ணும்
கதிர் விழா தேசமும்
நம்
பிரபஞ்சத்தில் உண்டு.
தோல்விகளின் முடிவு
வெற்றியில் விடியும்,
பறவையின் எச்சம்
பல நேரம்
பழ மரங்களை தருவதில்லையா ?
உன் மேல்
போர்த்தப் படுபவைகளை விட
உன்னுள்
ஆழ்ந்திருப்பவையே
அவசியம் உனக்கு !