கவிதை : தனிமைத் திண்ணைகள்

நாட்டில் எங்கும்
திண்ணைகளில்லாத வீடுகள்.

திண்ணை குறித்த
நினைவுகளுக்காக
புகைப்படமெடுக்கும் ஆர்வத்தில்
என்
கிராமக் கரையில் ஒதுங்கினேன்.

அங்கும்
திண்ணைகளின் மேல்
முளைக்க விட்டிருக்கிறார்கள்
இரும்புக் கம்பிகளை.

பாதுகாப்பு குறித்த
பயங்களின் பிராண்டல்களில்
தொலைந்து கொண்டிருக்கின்றன.
திண்ணைகள்.

பாக்கு இடிக்கும் பாட்டிகளும்
பனையேறும் தாத்தாக்களும்
டிஷ்களிளுக்குத் தாவியபின்
தனியே இருந்தாலும்
என்ன தான் செய்யும்
திண்ணைகள்

பிடித்திருந்தால் வாக்களிக்கலாமே