தலைப்புச் செய்திகளை
மட்டுமே
அவசரமாய் மேய்ந்து வந்த
கண்கள்,
வரி விளம்பரங்களையும்
விடாமல் படிக்கும்.
தொலைக்காட்சியில்
வானிலை அறிக்கை வருகையிலும்
விரல்கள்
ரிமோட் தேடாது.
ஃபேஷன் சானலின்
எண் மறந்து போகும்
நியூஸ் சேனல் எண்
நினைவில் நிற்கும்.
அதிகாலை மூன்றுமணி
தூங்கப் போகும்
நேரமென்பது மாறி,
தூக்கம் வராமல்
எழும்பும் நேரமென்றாகும்.
இந்தக் கால இசை
சத்தம் என்று
சத்தமாய்ப் பேசும்.
இளமைக் கலாட்டாக்கள்
தவறுகளே என்பது
தெரியவரும்
பேசும் போதெல்லாம்
அறிவுரை முறைக்கும்
தத்துவம் தெறிக்கும்
தூங்கும் முன்
மடித்து வைக்கும்
புத்தகத்தில்
ஆன்மீக வாசனை வீசும்.
ஃ