சிறந்த நூலுக்கான விருது வாங்கினேன்

கடந்த ஆண்டு வெளியான இயேசுவின் கதை : ஒரு புதுக்கவிதைக் காவியம் ( யாளி பதிவு வெளியீடு ) என்னும் எனது நூலுக்கு தமிழ்நாடு கிறிஸ்தவ இலக்கியத் தமிழ்ப் பேரவையின் விருது கிடைத்துள்ளது.

‘கல் மனிதன்’ என்னும் இதற்கு முந்தைய என்னுடைய நூலை கடந்த ஆண்டு சிற்பி அறக்கட்டளை விருதுக்குரியதாகத் தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் அப்போது நான் அமெரிக்காவில் பணி நிமித்தமாகச் சென்றிருந்ததால் அந்த விருது பின்னர் இன்னொரு இலக்கியவாதிக்கு அளிக்கப்பட்டது. அந்த காயம் தந்த பள்ளத்தை இந்த விருது வெள்ளம் நிரப்பியிருக்கிறது.

எனது தளத்துக்கு நேசத்துடன் வருகை தரும் அத்தனை நண்பர்களுக்கும் இந்த நேரத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.