சிரிக்காத போது அழகாயிருந்தாய்.

bride.jpg

கல்லூரி கால
காதல் படிக்கட்டுகளில்
மௌனமாய் என்னை
நீ
கடந்த நிமிடங்களிலும்

கொந்தளிக்கும் கண்களோடு
என்னை
முறைத்த தருணங்களிலும்,
நீ
அழகாய் தான் தெரிந்தாய்.

உன்
திருமண வரவேற்பில்
ஸ்நேகமாய் நீ
சிரித்த சிரிப்பிற்குள் தான்
புதைந்து போயிற்று
உனக்கே உனக்கான
அந்த மெல்லிய அழகு