காமத்துப் பால்

kaamam.jpg

உடையும் அணையின்
உத்வேகம்
தழுவல்களில் பீறிடும்.

மதகு மூடி
முனகிக் கிடக்கும் மோகம்
உதடுகளில்
போர்கால அவசரத்தில்
பாய்ந்து வரும்.

ஆடைகளின் மீதான
அவசரத் தாக்குதல்
உயிர் பூக்களை
கருக வைத்து,
மோக மொட்டுகளைக்
விரிய வைக்கும்.

போர் வாய் களாய்
போர்வை
பரபரக்கும்.

உதடுகள் பேச மறந்து
எழுதிக் கொண்டிருக்கும்,

விரல்கள்
எழுத மறந்து
பேசிக்கொண்டிருக்கும்.

பிறப்பும் இறப்பும் கலந்த
ஓர்
நிகழ்தலின் முடிவுக்காய்
இரவு
வெட்கக் கருப்புக்குள்
அரைகுறையாய் விழித்திருக்கும்.

ஓர்
முத்தத்தின் ஒப்பத்தில்
முடியும்
பரசவத்தின் நேர்முகத் தேர்வு.

காலம் காலமாய் கற்பிக்கப்பட்ட
முதல் பாவம்
அடித்தல் கோடிட்டு
முதல் புண்ணியமாய் மிளிரும்.

9 comments on “காமத்துப் பால்

  1. //உதடுகள் பேச மறந்து
    எழுதிக் கொண்டிருக்கும்,

    விரல்கள்
    எழுத மறந்து
    பேசிக்கொண்டிருக்கும்.//

    காமம் (காதல்) தலைக்கேறும் போது இது மாதிரி மாற்றங்கள் உண்டாகும். அழகான வைர வரிகள்.

    //போர் வாய் களாய்
    போர்வை
    பரபரக்கும்.//

    போர் வாள்களாய் ???

    ஒர் முத்தமா ? ஒரு முத்தமா ? மயங்கிய நிலையில் இலக்கணம் பார்க்க முடியாது

    Like

  2. //ஓர் முத்தம் என்பது சரியா, இல்லை ஒரு முத்தம் என்பது சரியா?//

    நீங்களே சொல்லுங்க 🙂 உயிரெழுத்துகளுக்கு முன் “ஒரு” என்று வரும் என படித்த நினைவு !

    Like

  3. மோக மொட்டுக்களை முழுதாய் மலர வைத்துவிட்டது உங்களது கவிதை. மோகத்தின் வெட்கத்தால், உங்கள் கவிதையே முகம் குனிந்து நிற்கிறது. பீச்சிடுகிறது… கவிதை நடை. பாராட்டுக்கள்.

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.