எங்கள் ஊர்

img_3011-small.jpg
தென்னம் ஓலைகளில்
வழுக்கி விளையாடும்
ஈரக் காற்று.

வாழை இலைகளில்
உட்கார முயன்று முயன்று
தோற்றுப் போய்
வரப்புக் குச்சிகளில்
வந்தமரும் கொக்குகள்,

ஓடையில்
தங்க மணலின் மேல்
வெள்ளி முதுகுடன்
துள்ளி விளையாடும் மீன்கள்,

அடர்ந்து வளர்ந்த
ஆலமர நிழலில்
அமைதியாய் துயிலும்
சர்ப்பக் குளம்,

பூமியின்
புன்னகைப் புல்லரிப்புகளாய்
எங்கும்
பச்சைகளின் மாநாடு,

பொறுங்கள்,
இதெல்லாம்
சங்க உரையில் இருப்பதல்ல
எங்கள் ஊரில் இருப்பது தான்.

0

நாற்பது கிலோ மீட்டர்
வேகத்தில் தடுக்கினால்
குமரி கடலில்,

இரண்டு கிலோமீட்டர் வேகத்தில்
வழுக்கினால்
கேரளா எல்லைக்குள்,

இங்கே தான்
பரந்த குன்றுகள் அடங்கியதால்
பரக்குன்று
என்று பெயர்சூட்டப்பட்ட
என்
கிராமக் குழந்தை இருக்கிறது.

0

குறைந்த பட்ச வசதிகள் கூட
இங்கே
குறையோடு தான்
கிடைக்கிறது.

போடப்படும் சாலைகள்
குறைப்பிரசவமாய்,

தரப்படும் மின்சாரம்
மின்மினி வெளிச்சமாய்,

வருகின்ற பேருந்துகள்
தூரத்து விருந்தாளியாய்,

எங்கள் ஊரில்
குறைந்த பட்ச வசதிகளுக்கே
குறை!

ஆனாலும்
இயற்கை அன்னை
கொடுத்திருக்கிறாள்
அதிகபட்ச அங்கீகாரம்.

pku1.JPG

மேலாடை இல்லாத
உழைப்பாளர்
மேனிகள்,
தொப்பை
என்றால் என்னவெனக் கேட்கும்.

தாவணி வழுக்காத
மங்கையர்
தோள்கள்,
வெட்கச் சேலைகளை
கண்களால் போர்த்தும்.

முட்டிக்கு மேல் என்பதே
கலாச்சாரத்தில் மேல்
என்னும் கலகப் புயல்
இன்னும் தாக்காத
கல்லூரிக் கன்னியர்கள்,

குளத்துக்குள்
தலைகீழ்ப் பாய்ச்சலில்
கலியுகத் தவளைகளாய்
டவுசர் வயதுகள்.

முக்கியமாக,
இரண்டு பர்லாங் நடப்பதற்குள்
நூறு வாய்கள் கேட்கும்
‘நல்லா இருக்கியா பிள்ளே…’

இதுதான் எங்கள் மனிதரைப்பற்றி
தரமுடிந்த
தரப்பட்டியல்.

church.jpg

அறியாமையின் வரைபடத்தில்
இருளாய் இருந்த
இந்தப் பிரதேசத்தை
ஜேம்ஸ் தொம்மர் எனும்
ஜெர்மன் வெளிச்சம் வந்து
தூர்வாரி தூய்மைப்படுத்தியது.

கல்விக்கூடங்கள்,
ஆலயங்கள்,
ஆலைகள்,
என
வாழ்வுக்கான வரைகோலை
அறிமுகப் படுத்தியது.

செங்கல் சூளைகளிலும்
முந்திரி ஆலைகளிலும்
ஆழக் குழி தோண்டி நடப்பட்ட
ஆட்கள்
கல்வி என்றதும் முதலில்
தள்ளியே ஓட,
அவர்களை இழுத்து வர
கோதுமை மூட்டைகள் கொண்டுவரப்பட்டன.

நான் இன்று
கவிதை எழுதுவதற்கும்
அந்த
வெள்ளை மனிதன்
என் பெற்றோருக்கு
பேனா உதறக் கற்றுக் கொடுத்தது தான்
காரணம் !

கடந்த ஆண்டு
அந்த தலை சாய்ந்த போது
எங்கள்
ஊருக்குள்
முதன் முதலாய்
கண்ணீர் அருவி பாய்ந்தது.

0

img_3066-small.jpg

கவிதையாய்க் கிடக்கும்
என் கிராமத்தில்
பிறந்தோருக்கு
இலவச இணைப்பாய்க் கிடைக்கிறது
மலையாள மொழி.

வெள்ளைப் பாதிரியாரும்
காவிச் சாமியாரும்
ஒரே மேடையில்
அமர்ந்து பேசும்
தேவாலயங்கள்
என்னையும் பேச்சாளனாக்கிப் பார்த்தது.

கர்ணனா கும்பகர்ணனா ?
செய்நன்றியில் சிறந்தவன் யார்
என
சாஸ்தான் கோயிலிலும்,
சிலுவை காட்டும் வழி என
கிறிஸ்தவ ஆலயத்திலும்
அடுத்தடுத்த நாட்களிலேயே
பேசமுடியும்
அடிவாங்காமல்.

மத நல்லிணக்கத்தின்
இதமான காற்று
எங்கள் வீதிகள் தோறும்
வீசிக் கொண்டே இருக்கிறது
இன்றும்.

0

சங்கிலிப் பேய்
நள்ளிரவு தாண்டிய
ஏதேனும் ஓர் ஜாமத்தில்
சங்கிலி இழுத்து ஓடுவான் என்றும்,

ஊரோர ஆலமர
அடிவாரத்தில்
அமாவாசை இரவுகளில்
பேய்களின்
பொதுக்கூட்டம் நடக்கும் என்றும்,

கொல்லைப் பக்கத்தில்
ராத்திரி வேளைகளில்
எட்டிப்பார்த்தால்
எச்சில் பேய்கள்
கட்டிக் கொள்ளும் என்றும்,

பாட்டிகள் சொல்லும்
கதைகளெல்லாம்
மின்சாரம் வந்தபின்
கதைகளாகவே போயின.

100_1493-small.JPG

கிராமத்தின் அழகையும்
கிராமத்தானின் மனதையும்
எனக்குள்
ஆழமாக அடித்திறக்கியவர்
என் அப்பா.

சமீபகாலமாக
என்னால்
என் கிராம அழகுகளை
அள்ளிப் பருக முடிவதில்லை.

கண்களுக்குள்ளே
படுத்துக் கிடக்கிறார்
அப்பா.

என் பாதப் பதிவுகளுக்குக்
கீழே
அவரது
உறைந்து போன சுவடுகள்
உறங்கிக் கொண்டிருக்கின்றன.

0

எங்கள் ஊர்
இன்னும் இருக்கிறது
அதன்
அழுத்தமான அடையாளங்களை
அவிழ்த்தெறியாமல்.
img_3007-small.jpg

58 comments on “எங்கள் ஊர்

 1. திரு சேவியர் , உங்களின் ஊரைப்பற்றிய வர்ணனைகள் என்னூரின் ஞாபங்களை தூண்டி விட்டிருக்கிறது.

  Like

 2. கவியால் கவியை (ஊர்) பாடிவிட்டீர்கள். எப்போது காண்போம் என்று தவிக்கிறது என்னுள்ளம். நான் இங்கிலாந்து சென்ரிருந்த போது, ஊர் சுற்றி பார்த்ததெல்லாம் அங்குள்ள கிராமத்து அழகைத்தான். அப்போது என்னுள் ஓடிய எண்ணங்கள் இப்படி கொள்ளை கொள்ளும் அழகு இருப்பதால் தான் இங்கு பைரனும், ஷெல்லியும், ஷெக்ஸ்பியரும் இன்னும் பல கவிஞர்களும் இருந்திருக்கின்றனர் என்பது தான். உங்கள் கவிதைகளை படித்த போதும் அதே எண்ணோட்டம் என்னுள். இது வெறும் புகழ்ச்சி அல்ல கவிஞரே. நீங்கள் மென்மேலும் புகழடைய மனமார வாழ்த்துகிறேன்.

  Like

 3. சேவியர்,

  வாழை இலைகளில்
  உட்கார முயன்று முயன்று
  தோற்றுப் போய்
  வரப்புக் குச்சிகளில்
  வந்தமரும் கொக்குகள்,

  ஓடையில்
  தங்க மணலின் மேல்
  வெள்ளி முதுகுடன்
  துள்ளி விளையாடும் மீன்கள்,

  தாவணி வழுக்காத
  மங்கையர்
  தோள்கள்,
  வெட்கச் சேலைகளை
  கண்களால் போர்த்தும்.

  குளத்துக்குள்
  தலைகீழ்ப் பாய்ச்சலில்
  கலியுகத் தவளைகளாய்
  டவுசர் வயதுகள்.

  எங்கள் ஊர்
  இன்னும் இருக்கிறது
  அதன்
  அழுத்தமான அடையாளங்களை
  அவிழ்த்தெறியாமல்.

  நான் ரசித்த வரிகள், உன்னை சாதா கவிஞர்களின்று வேறுபடுத்திக் காட்டும் வரிகள்.
  ஓரு சிறு யோசனை,
  இனி நீங்கள் படைப்பை பதிவு செய்யும் பொழுது ஒவ்வொரு பத்திக்கும் (para) வரிசை எண் கொடுத்தீர்களென்றால், அடிகோடிடுக் காட்டுபருக்கு சுலபமாகவும் இருக்கும். மேலும் ஒரே பக்கத்தில் பல பிரதிகளை தவிர்க்கவும் இயலும்.
  இவண்,
  எண்பிலும் தமிழன்புடன்,
  வேலுமுகுந்தன்

  Like

 4. Hai Kavinarea, Kavithai Varigal Very smart.Ungal Orr Parakkundruthanea.
  Kandippaga ungal Orrukku Nanum Varuven orunal.

  Like

 5. குமரிமாவட்டத்தில் எந்த ஊர். பார்த்தால் மார்த்தாண்டம் அருகில் என தோன்றுகிறது.
  ஊரை பற்றி அழகாக உரைத்துள்ளீர்கள் கவிதை நடையில்

  பிரதாப் குமார் சி

  Like

 6. //முக்கியமாக,
  இரண்டு பர்லாங் நடப்பதற்குள்
  நூறு வாய்கள் கேட்கும்
  ‘நல்லா இருக்கியா பிள்ளே…’//

  Class!!!

  -aru!

  Like

 7. Enatharumai nanba!

  Un kavithaiyin azhakil therinthathu Nie pirantha sorga boomi!
  Un Kavithai varihazhil therinthathu Un Panpatta Manam!
  Un Kavithai Varnanaiyil therinthathu Un Nesikkum Gunam!
  Un Kavithai Mukavriyil therinthan en puthiya Nanban!

  Vazhha! Valrha Un Thamizh Sevai!…….
  Endrum Anbudan,
  Thamarai Chandiran.

  Like

 8. Dear Xavier,
  Ungal OOraipatrii…Padithabodhu, Enadhu oorin ninappai…meendum meendum konduvandhu vittadhu…Nanari…

  Priyamudan
  Lakshmipathy (Sudan)

  Like

 9. நான் உங்கள் கவிதையை கீற்று இதழில் பார்த்தபோது, நீங்கள் இவ்வளவு பெரிய கவியாக இருப்பீர்கள் என்று சற்றும் எண்ணவில்லை. உங்கள் வலைதளத்திற்கு வந்து பார்த்தால்தான், அடடா நீங்கள் எவ்ளோவ்வ்வ்வ்வ் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய எழுத்தாளர்ன்னு தெரியுது. அசந்து போயிட்டேன். ரொம்ப பெருமையாகவும் இருக்கு. கலக்குங்கள்.

  Like

 10. கவிதை அருமை..

  தங்களின் ஊரின் பெயரை மட்டும் மறைத்து விட்டீர்களே ஐயா!

  என்ன்னுடய கணிப்புப்படி களியக்காவிளைக்கு மிக அருகாமையில் இருக்க வேண்டும். சரியா?

  -அன்வர்,
  தக்கலை.

  Like

 11. //முக்கியமாக,
  இரண்டு பர்லாங் நடப்பதற்குள்
  நூறு வாய்கள் கேட்கும்
  ‘நல்லா இருக்கியா பிள்ளே…’

  //
  எனக்கு பழக்கமான கேள்வி.
  பாசமுள்ள வார்தைகள்.
  வாழ்த்துக்கள்.

  Like

 12. dear mr.savier unkal oor very super nampak garamathi net -il parthiil miagavam sonthzham **** murli******

  Like

 13. //முக்கியமாக,
  இரண்டு பர்லாங் நடப்பதற்குள்
  நூறு வாய்கள் கேட்கும்
  ‘நல்லா இருக்கியா பிள்ளே…’

  super anna when i coming to ur village did u welcome to me reply me anna

  Like

 14. இதென்ன கேள்வி, ஒரு வார்த்தை சொல்லுங்க.. உங்களை ராஜ மரியாதையோட அழைச்சு போறேன் ! விளையாட்டுக்கு சொல்லவில்லை. உண்மையா சொல்றேன் 🙂

  Like

 15. தங்களின் படைப்புகளை படிக்கும்போது எங்கிருந்தோ ஒரு ஈர்ப்பு வந்து ஒட்டிக்கொண்டது. படைப்புகள் அனைத்தும் படிப்பவர் மனதில் பளிச்சென்று ஒட்டி விடுகிறது. யார் இவரோ என்ற ஆர்வத்தில் எங்கள் ஊர் கவிதையை படிக்கிறேன் அது குமரிமாவட்டம், எத்தனை பெரிய மகிழ்சி நானும் குமரி மாவட்டம் தான்.

  தொடர்ந்து தொடர்பிலிருப்போம்

  Like

 16. //தங்களின் படைப்புகளை படிக்கும்போது எங்கிருந்தோ ஒரு ஈர்ப்பு வந்து ஒட்டிக்கொண்டது. படைப்புகள் அனைத்தும் படிப்பவர் மனதில் பளிச்சென்று ஒட்டி விடுகிறது. யார் இவரோ என்ற ஆர்வத்தில் எங்கள் ஊர் கவிதையை படிக்கிறேன் அது குமரிமாவட்டம், எத்தனை பெரிய மகிழ்சி நானும் குமரி மாவட்டம் தான்.//

  நன்றி ஐயா ! நாடக உலகின் மன்னன், பல இதழ்களில் படைப்புகள் எழுதும் எழுத்தாளர். உங்கள் வருகை மகிழ்ச்சியூட்டுகிறது. நன்றி 🙂 வாய்ப்பு கிடைக்கையில் சந்திப்போம் 🙂

  Like

 17. கிராமத்தில் மலர்ந்த நண்பரே
  கிராமத்தின் மகிமையை
  அழகா சொல்லியுள்ளீர்கள்.

  நானும் கிராமம் தான்… ஆனால் வேலூர் மாவட்டத்தில் உள்ள பாலாற்றின் சூழலில் பசுமையாக திகழும் ஊர்.
  அன்புடன் இளங்கோவன்.

  Like

 18. சகோதரனுக்கு மிக்க நன்றி.
  இந்த கவிதை எங்களையும் எங்கள் சொந்த கிராமத்துக்கே அழைத்து சென்றது

  Like

 19. இனிய நண்பருக்கு
  கிறிஸ்த்தவ கதைகள் பல நல்ல கற்பனை வளத்தோடும் நல்ல நயமான வரிகளோடும் பதிந்திருப்பது பாராட்டுக்குரியது குறிப்பாக நமது குமரிமாவட்டக்காரர் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி. தங்களைப்பற்றி ஐரேனிபுரம் பால்ராசய்யா மூலம் அறிந்தேன்.

  ஜே.எஸ் ஸ்டீபன்
  ஐரேனிபுரம்

  Like

 20. நன்றி ஸ்டீபன், உங்கள் அறிமுகத்தில் மகிழ்ச்சி. அடிக்கடி வருகை தாருங்கள்.

  Like

 21. MY FRIEND!!
  YOUR CREATIVITY IN POETRY FORM AS WELL AS IN THE PROSE VERSION IS APPEALING. YOUR CONCEPT OF YOUR FRIEND YOU HAVE LOST AND YOUR HOMETOWN IS GOOD. I AM IN US AND HAVE SEEN YOUNG FLAWLESS DIE VERY YOUNG AND PEOPLE LIKE YOU UPLIFT THEIR MEMORY.

  Like

 22. My Dear Friend,

  You made my mind think about my life and city… Really You are doing a Good Job and if you can just teach me how I have to learn to create a site like this. Really Green, Clean, Real sites like this will help the future community to know about our culture…

  Rajan From Ooty

  Like

 23. My brother,
  I’m like this lines;-

  கர்ணனா கும்பகர்ணனா ?
  செய்நன்றியில் சிறந்தவன் யார்
  என
  சாஸ்தான் கோயிலிலும்,
  சிலுவை காட்டும் வழி என
  கிறிஸ்தவ ஆலயத்திலும்
  அடுத்தடுத்த நாட்களிலேயே
  பேசமுடியும்
  அடிவாங்காமல்.

  மத நல்லிணக்கத்தின்
  இதமான காற்று
  எங்கள் வீதிகள் தோறும்
  வீசிக் கொண்டே இருக்கிறது
  இன்றும்.

  Like

 24. Pingback: எங்கள் ஊர் |

 25. Dear son ,I started my banking officer ,as a branch manager from tour area Padanthalumoodu.in 1983.My children and family came there during vaccations period and enjoyed a lot.All your poetic words were spelled byus prose words.You have omited 3 items.,Kulayai puttu,with vazhkka appam,fish,meals cocanut along with gingee thuvaiyal,and the paasipayar payasaum.There I worked 2 years and known all the areas surrounding,such as Palukal ,Arumanai,Kulaseharapatnam,thiparappu petchiparrai perenchani and unlimted list.I have .Then transferred to Nagercoil for 3 years I worked.ALL the days I enjoyed a lot .Thanks to recal my memory.by dk

  Like

 26. “போடப்படும் சாலைகள்
  குறைப்பிரசவமாய்,

  தரப்படும் மின்சாரம்
  மின்மினி வெளிச்சமாய்,

  வருகின்ற பேருந்துகள்
  தூரத்து விருந்தாளியாய்,”

  “enna kodumma sir ithu” — Chittapu superrrr

  Like

 27. எங்கள் சொந்த கிராமத்துக்கே அழைத்து சென்றது இந்த கவிதை.

  Like

 28. “குளத்துக்குள்
  தலைகீழ்ப் பாய்ச்சலில்
  கலியுகத் தவளைகளாய்
  டவுசர் வயதுகள்..”
  “Super ji…enakkum neechal theriyum enbadhai nyaabagapaduthiya varigal…” claps claps claps… 🙂 “Vaazhtha Vayadhillai..Vanangukiren !!!” -Ramesh

  Like

 29. குளத்துக்குள்
  தலைகீழ்ப் பாய்ச்சலில்
  கலியுகத் தவளைகளாய்
  டவுசர் வயதுகள்..”
  “Super ji…enakkum neechal theriyum enbadhai nyaabagapaduthiya varigal…” claps claps claps… 🙂 “Vaazhtha Vayadhillai..Vanangukiren !!!” -Ramesh

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.