“உங்களுக்கு ஒரு பையன் பொறந்திருக்கான்” என நிக்கை (Nick Vujicic) அவனுடைய தந்தையிடம் காட்டியபோது உள்ளுக்குள் குமட்டிக் கொண்டு வர, ஆஸ்பத்திரியை விட்டு வெளியே ஒடி வந்து வாந்தியெடுத்தார் தந்தை !
“இந்தாங்க உங்க பையன்” என தாயிடம் நீட்டியபோது “ஐயோ.. என் முன்னாலிருந்து கொண்டு போங்கள்…” என நான்கு மாதங்கள் அவனைத் தொடாமலேயே அழுது தீர்த்தாள் தாய்.
விஷயம் இது தான். நாளும் கிழமையும் எண்ணி எண்ணி ஆவலுடன் குழந்தையைக் கொஞ்ச காத்திருந்த அந்த பெற்றோருக்குப் பிறந்ததோ கைகளும் கால்களும் இல்லாத ஒரு குழந்தை ! இரண்டு கைகளும், இரண்டு கால்களும் இல்லாத ஒருவனால் என்ன செய்ய முடியும் பிச்சை எடுப்பதைத் தவிர ? என்று தானே நினைக்கத் தோன்றுகிறது ?
அந்தக் கவலைதான் அந்த ஆஸ்திரேலியப் பெற்றோருக்கும் இருந்தது. ஒரு சின்ன குறை இருந்தாலே சமூகத்தில் தாக்குப் பிடிப்பது மிகவும் கடினம். கைகளும் இல்லாமல், கால்களும் இல்லாமல் இல்லாமல் இவனெல்லாம் என்ன வாழ்க்கை வாழப்போகிறான் ? தொட்டதுக்கெல்லாம் யாரோ ஒருவருடைய உதவியில் தானே இவன் வாழ முடியும் என்பதே பெற்றோரின் தலையாய கவலையாய் ஆகிப் போனது.
அன்றைக்கு அவர்களிடம் போய், “கவலைப்படாதீர்கள். உங்கள் மகன் ஒரு நாள் ஓடுவான், குதிப்பான், நீச்சலடிப்பான், கால்ஃப் விளையாடுவான், புட்பால் விளையாடுவான், கடலில் ஷர்ப் செய்வான் என்றெல்லாம் சொல்லியிருந்தால்” அன்றைக்கே ஒரு கொலை விழுந்தாலும் விழுந்திருக்கும். ஆனால் எல்லாமே ஒரு பரபரப்பான சினிமா போல நிஜமாகியிருக்கிறது இன்று.
தற்போது தனது இருபத்து ஆறாவது வயதில் இருக்கும் நிக், இன்றைக்கு மேலே சொன்ன எல்லாவற்றையும் செய்கிறார். கூடவே கோடானு கோடி மக்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் சின்னமாகவும் உருவெடுத்திருக்கிறார்.
இப்போது மிகவும் உற்சாகமாய் இருக்கும் நிக் கடந்து வந்த ஆரம்ப வாழ்க்கை ரொம்பவே கொடுமையானது. கைகளும் கால்களும் இல்லையென்றாலும் பெற்றோர் அவனை பள்ளிக்கூடத்தில் சேர்த்து விட்டார்கள். பள்ளிக்கூடத்துக்குச் சென்றால் பிள்ளைகள் நிக்கை நெருங்கி வரவே பயப்பட்டார்கள். ஏதோ ஏலியனைப் பார்ப்பது போலத் தான் நிக்கை பார்த்தார்கள்.
எல்லாரையும் போல சாதாரணமாய் வாழ முடியாத ஏக்கம் நிக்கிற்குள் டன் கணக்காய் கனத்தது. மற்றவர்களின் கிண்டலும், கேலியும், அருவருப்புப் பார்வையும் நிக்கை நிலைகுலைய வைத்ததில் ஆச்சரியம் ஏதும் இல்லை. டீன் ஏஜ் வயது வரை நிக் செய்த செபம் என்ன தெரியுமா ? “கடவுளே தலைமுடி வளர்வது போல எனக்கு கைகளும் கால்களும் வளர வேண்டுமே” என்பது தான்.
அப்போதெல்லாம் தொட்டதுக்கெல்லாம் தற்கொலைச் சிந்தனைகள் வந்து கொண்டே இருந்தன. எப்படியாவது செத்துப் போகவேண்டும் என்று நினைத்தாலும் அதையும் தனியே செய்ய முடியாத நிலை. “கொஞ்சம் என்னைக் கொல்வீர்களா பிளீஸ்” என யாரிடமாவது கெஞ்ச வேண்டிய நிலையே நிக்கிற்கு.
அப்படியும் ஒருமுறை பாத்டப்பில் தண்ணீரை நிரப்பி மூழ்கிச் சாக முனைத்திருக்கிறார். இன்னொரு கழுத்து உடையட்டும் செத்து விடலாம் என டேபிளில் இருந்து தலைகீழாய் குதித்திருக்கிறார். ! என்ன செய்ய? வாழவேண்டும் எனும் விதி அவருக்கு. எல்லா தற்கொலை முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன.
ஆரம்ப காலத்தில் நிக்கின் உருவத்தைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர் பின்னர் நிக்கிற்கு தன்னம்பிக்கையை ஊட்டத் துவங்கினர். 18 மாதமாக இருந்தபோதே நீச்சல் பழக்கத் துவக்கிய தந்தை, ஆறு வயதாக இருக்கும் போது கம்ப்யூட்டர் கற்றுக் கொடுத்தார். தாய் பிளாஸ்டிக்கில் ஒரு வளையத்தைச் செய்து அதில் பென்சிலை மாட்டி எழுத கற்றுக் கொடுத்தார். இவையெல்லாம் தான் நிக்கிற்கு நிமிர்ந்து நிற்கும் தைரியத்தைக் கொடுத்தது.
நிக்கின் இடது கால் இருக்க வேண்டிய இடத்தில் ஆறாவது விரல் போல நீட்டிக் கொண்டிருக்கும் ஒரு பாகம் தான் அவனுடைய வரப்பிரசாதம். அதுதான் அவனுடைய கை, கால், துடுப்பு, எல்லாமே !. நடப்பது, எழுதுவது, நீந்துவது, விளையாடுவது என சர்வமும் அதன் வழியாகவே. இது மட்டும் இல்லாமலிருந்தால் நான் என்ன செய்திருப்பேனோ தெரியாது என சொல்லி சிரிக்கிறார் நிக்.
தனது பதின்மூன்றாவது வயதில் ஊனமுற்ற ஒருவரைப் பற்றிய வரலாறு ஒன்றை நிக் படித்தார். அதுதான் அவருடைய வாழ்க்கையையே புரட்டிப் போட்டது. அந்த ஊனமுற்ற மனிதர் கழுத்தையும், நாடியையும் பயன்படுத்தி கால்ப் விளையாடியதைப் படித்தபோது நிக்கிற்குள் ஒரு மின்னல் அடித்தது.
“அடடா… தேவையில்லாமல் தற்கொலை செய்யப் பார்த்தேனே” என தன்னையே நொந்து கொண்டவர், “நல்ல வேளை இதுவரை சாகவில்லை” என நினைத்துக் கொண்டு வாழ்க்கையை புதிய உத்வேகத்துடன் எதிர்கொள்ள ஆரம்பித்திருக்கிறார். அதுவரை கண்ணாடியைப் பார்க்கும் போது கைகளும், கால்களும் இல்லாத சதுர உடம்பு மட்டுமே தெரிந்த நிக்கிற்கு அதன் பின் தான் தனது அழகிய கண்கள் தெரிந்தன என சிலிர்ப்பூட்டும் நம்பிக்கை விதைக்கிறார்.
அதன் பிறகு கடவுளைப் பழிப்பது, சாக நினைப்பது, முனகுவது, அழுவது, கவலை கொள்வது என அனைத்து வேண்டாத விஷயங்களையும் மூட்டை கட்டி தூர எறிந்து விட்டு உற்சாகமாகிவிட்டார் நிக். பிறருக்கு தன்னம்பிக்கை ஊட்டும் பேச்சுகளையும் மீட்டிங்களையும் நடத்தத் துவங்கிவிட்டார்.
அப்படி ஆரம்பித்த அவரது தெம்பூட்டும் பணி, 24 நாடுகளுக்குப் பயணம் செய்து இலட்சக்கணக்கான மக்கள் கூட்டத்தில் உரையாற்றுமளவுக்கு பரந்து விரிந்திருப்பது வியக்க வைக்கிறது ! தற்போது ஊனமுற்றவர்களுக்காக இயங்கும் “லைஃப் வித்தவுட் லிம்ப்ஸ்” எனும் நிறுவனத்தின் இயக்குனராகவும் இருக்கிறார் அவர்.
ஆஸ்திரேலியாவிலுள்ள மெல்போர்னில் பிறந்த நிக் இப்போது வசிப்பது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில். சோர்வுற்றும், சோகமுற்றும் இருப்பவர்களுக்கு இப்போது உற்சாக டானிக் இவர் தான், இவருடைய பேச்சுகள் தான்.
ஐயோ அது இல்லையே, இது இல்லையே என புலம்பும் மக்கள் எதுவும் இல்லாமல் எல்லாம் இருப்பதை விட மகிழ்ச்சியாய் இருக்கும் நிக்கைப் பார்த்ததும் விளக்கைப் போட்ட இருட்டு அறைபோல சட்டென தெளிவாகி விடுகின்றனராம்.
குறிப்பாக இளம் வயதினரின் தாழ்வு மனப்பான்மை, தன்னம்பிக்கைக் குறைவு, மன அழுத்தம் இவையெல்லாம் இவரைப் பார்த்ததும் பனிக்கட்டியில் வரைந்த ஓவியமாய் ஈரமாய் ஒழுகி மறைந்துவிடுகிறதாம்.
“கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலைகளும் இல்லை” எனச் சிரிக்கும் நிக் உண்மையிலேயே இந்த நூற்றாண்டின் வியப்புக் குறியீடாய் நிமிர்ந்து நிற்கிறார்.
ஃ
Too good. Was he in India too?
LikeLike
வந்திருக்கிறார் என்று தான் நினைக்கிறேன். நன்றி ஜெயலக்ஷ்மி.
LikeLike
Hi Anna,
We always worry of what we are not having instead of what we got,
This Gentleman should come to our mind when we worry.
Thanks Anna.
LikeLike
கைகள் பிறக்கவில்லையென்றாலும் அவருக்கு நம்பிக்கைகள் பிறந்திருக்கின்றன!
கால்கள் நடக்கவில்லையென்றாலும் அவரது எண்ணங்கள் நடந்தேறியிருக்கின்றன!
நம்பிக்கை விதைகளில் தான் விருட்சங்களை எதிர்பார்க்கமுடியும்! வியப்பின் விருட்சத்திற்கும் அவரது நம்பிக்கைக்கு ஒரு சல்யூட்.
LikeLike
கை கால்கள் இல்லாவிட்டால் என்ன.அவரின் மனதின் தளரா நம்பிக்கையும் துணிவுமே அவரை இவ்வளவு தூரம் நடைபோட வைக்கிறது.எல்லோராலும் முடியாது.
இன்னும் ஒன்றும் சொல்லலாம் அண்ணா.இந்த நாட்டு அரசாங்கங்கள்.இவர்களுக்கு ஊக்கமும் அக்கறையும் காட்டுகிறது.அதோடு இவர்களது சமூகமும் இவர்களை ஒதுக்கிக் கேவலமாகப் பார்ப்பதில்லை.இவைகளும் இவர்களைப் போன்றவர்களுக்கு ஒரு ஊட்டச் சத்துதானே !
LikeLike
பல வருடங்களுக்கு முன்பு ஆனந்த விகடனில் சுபா (சுபா என்று தான் நினைக்கிறேன்) எழுதிய கோழிக்குஞ்சு என்ற சிறுகதை நினைவுக்கு வருகின்றது. வாழ்க்கையின் நான் என்றுமே மறக்க இயலாத ஒரு சிறுகதை அது. நிக்கை போன்றே அப்படியே அந்த கதை நாயகனும் கை கால்கள் இல்லாமல்…… அவன் பெற்றோர் அவனை ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டில் வைத்து வளர்ப்பார்கள்….. நெஞ்சைப்பிழியும் கதைக்கரு.
நிக் வாழ்க்கையை அனைவருக்கும் காண்பிக்கவேண்டும்….குறிப்பாக கல்லூரி மாணக்கார்களுக்கு.
LikeLike
வெகு தொலைவிலிருந்து வந்துள்ள நம்பிக்கையின் வெளிச்சத்திற்க்கு நன்றி…நம்பிக்கை தந்தமைக்கு..
LikeLike
உண்மையிலேயே உற்சாகமான மனிதர் தான். இவரைப் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டதிற்கு நன்றி !!!!
LikeLike
wow! stephen hawkins varisayil innoruthar.
தன்னம்பிக்கையுடன் ஆனந்தமாய் வாழ்வை எதிர்கொள்ளும் இவரல்லவா முழுமையடைந்த மனிதர்
LikeLike
really great man! He is the role model for everyone.
LikeLike
hi
LikeLike
thanks nick
realy your are a nice genleman
rajasekaran
LikeLike
//thanks nick
realy your are a nice genleman
rajasekaran//
வருகைக்கு நன்றி ராஜசேகர் 🙂
LikeLike
//really great man! He is the role model for everyone./
உண்மை நிலா. வருகைக்கு நன்றி.
LikeLike
//wow! stephen hawkins varisayil innoruthar.
தன்னம்பிக்கையுடன் ஆனந்தமாய் வாழ்வை எதிர்கொள்ளும் இவரல்லவா முழுமையடைந்த மனிதர்
//
நன்றி பாஸ் 🙂
LikeLike
/உண்மையிலேயே உற்சாகமான மனிதர் தான். இவரைப் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டதிற்கு நன்றி !!!!//
வருகைக்கு நன்றி பதி. 🙂
LikeLike
//வெகு தொலைவிலிருந்து வந்துள்ள நம்பிக்கையின் வெளிச்சத்திற்க்கு நன்றி…நம்பிக்கை தந்தமைக்கு..//
நன்றி உமா 🙂
LikeLike
//பல வருடங்களுக்கு முன்பு ஆனந்த விகடனில் சுபா (சுபா என்று தான் நினைக்கிறேன்) எழுதிய கோழிக்குஞ்சு என்ற சிறுகதை நினைவுக்கு வருகின்றது. வாழ்க்கையின் நான் என்றுமே மறக்க இயலாத ஒரு சிறுகதை அது. நிக்கை போன்றே அப்படியே அந்த கதை நாயகனும் கை கால்கள் இல்லாமல்…… அவன் பெற்றோர் அவனை ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டில் வைத்து வளர்ப்பார்கள்….. நெஞ்சைப்பிழியும் கதைக்கரு.
நிக் வாழ்க்கையை அனைவருக்கும் காண்பிக்கவேண்டும்….குறிப்பாக கல்லூரி மாணக்கார்களுக்கு
//
தகவலுக்கும், வருகைக்கும் மனமார்ந்த நன்றிகள் நாகு.
LikeLike
//கை கால்கள் இல்லாவிட்டால் என்ன.அவரின் மனதின் தளரா நம்பிக்கையும் துணிவுமே அவரை இவ்வளவு தூரம் நடைபோட வைக்கிறது.எல்லோராலும் முடியாது.
இன்னும் ஒன்றும் சொல்லலாம் அண்ணா.இந்த நாட்டு அரசாங்கங்கள்.இவர்களுக்கு ஊக்கமும் அக்கறையும் காட்டுகிறது.அதோடு இவர்களது சமூகமும் இவர்களை ஒதுக்கிக் கேவலமாகப் பார்ப்பதில்லை.இவைகளும் இவர்களைப் போன்றவர்களுக்கு ஒரு ஊட்டச் சத்துதானே !
கை கால்கள் இல்லாவிட்டால் என்ன.அவரின் மனதின் தளரா நம்பிக்கையும் துணிவுமே அவரை இவ்வளவு தூரம் நடைபோட வைக்கிறது.எல்லோராலும் முடியாது.
இன்னும் ஒன்றும் சொல்லலாம் அண்ணா.இந்த நாட்டு அரசாங்கங்கள்.இவர்களுக்கு ஊக்கமும் அக்கறையும் காட்டுகிறது.அதோடு இவர்களது சமூகமும் இவர்களை ஒதுக்கிக் கேவலமாகப் பார்ப்பதில்லை.இவைகளும் இவர்களைப் போன்றவர்களுக்கு ஒரு ஊட்டச் சத்துதானே ! //
“அவரின் மனதின் தளரா நம்பிக்கையும் துணிவுமே அவரை இவ்வளவு தூரம் நடைபோட வைக்கிறது” – மிகச் சரியாக சொன்னீங்க ! நன்றி ஹேமா 🙂
LikeLike
/கைகள் பிறக்கவில்லையென்றாலும் அவருக்கு நம்பிக்கைகள் பிறந்திருக்கின்றன!
கால்கள் நடக்கவில்லையென்றாலும் அவரது எண்ணங்கள் நடந்தேறியிருக்கின்றன!
நம்பிக்கை விதைகளில் தான் விருட்சங்களை எதிர்பார்க்கமுடியும்! வியப்பின் விருட்சத்திற்கும் அவரது நம்பிக்கைக்கு ஒரு சல்யூட்//
நன்றி ஐரேனிபுரம் பால்ராசையா. வருகைக்கும், கருத்துக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙂
LikeLike
//We always worry of what we are not having instead of what we got,
/
மிக சரி. நன்றி தம்பி, வருகைக்கும் கருத்துக்கும்.. 🙂
LikeLike
தேர்ந்தெடுத்த அருமையான கட்டுரை
வாழ்த்துக்கள்
LikeLike
கைகள் இல்லை, கால்கள் இல்லை,
இப்போது “நிக்”-க்கு கவலைகளும் இல்லை….
படிக்கும் போது மிகவும் சந்தோஷமாக இருந்தது… இவ்வாறு பிறந்தபோதிலும் இப்படியொரு “மலை” போன்ற தன்னம்பிக்கை வருவதென்பது சுலபமான காரியமில்லை…
அவருடைய ஜெபமும், கூடவே அவருக்கு வாழ்வை அளித்திருக்கிறது….
செருப்பில்லையே எனக் கவலைப்படுபவர்கள் மத்தியில்,
காலே இல்லாவிட்டாலும், மனந்தளராது… விடாமுயற்ச்சியுடனும் தன்னம்பிக்கையுடனும் சாதனை செய்பவர்களைப்பற்றி என்ன சொல்வது?….
மென்மேலும், “நிக்” அவர்கள் தன்னுடைய எல்லா முயற்ச்சிகளிலும் வெற்றியடையவும், அவரின் நம்பிக்கை ஒளியால் மற்றவர்களும் ஒளிபெறவும் பிரார்த்தனையோடு வாழ்த்துகிறேன்….
அழகானதொரு விடையத்தை அழகுறச் சொன்ன உங்களுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும் சேவியர்!
LikeLike
நன்றி ஷாமா 🙂 உங்கள் கருத்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
LikeLike
நன்றி நிகழ்… வருகைக்கும், கருத்துக்கும் !
LikeLike
வாழ்க்கையில் இல்லை என்பதைவிட இருக்கின்றவற்றை வைத்து வாழ்கின்றவனே மனிதனாகிறான். ஆகையால் இவர் மனிதன்.
கடந்த 3 வருடங்களாக நானும் எனது பிரதேசத்தில் “Differently able” மக்களுடன் பணி புரிகிறேன் இந்த நல்ல உதாரணத்தை தந்தமைக்கு நன்றி கூறுகின்றேன்.
“ரஜனி
பழுகாமம்
இலங்கை.”
LikeLike
/வாழ்க்கையில் இல்லை என்பதைவிட இருக்கின்றவற்றை வைத்து வாழ்கின்றவனே மனிதனாகிறான். ஆகையால் இவர் மனிதன்.
கடந்த 3 வருடங்களாக நானும் எனது பிரதேசத்தில் “Differently able” மக்களுடன் பணி புரிகிறேன் இந்த நல்ல உதாரணத்தை தந்தமைக்கு நன்றி கூறுகின்றேன்.
“ரஜனி
பழுகாமம்
இலங்கை.”//
நன்றி ரஜனி.
LikeLike
Nick great model is every one
LikeLike
frcrgrr
LikeLike
in tha kavithy weri full naes
asweni i love you
LikeLike
வருகைக்கு நன்றி ஜீவா…
LikeLike
/Nick great model is every one//
நன்றி பெர்லின்…
LikeLike
super anna
LikeLike
your very great anna
LikeLike
நன்றி லோகி.
LikeLike
நன்றி கம்சி.
LikeLike
hai,
I LIKE IT.MAINLY I AM VERY IMPRESSED NICK(PHYSICALLY CHALLENGED).
LikeLike
//hai,
I LIKE IT.MAINLY I AM VERY IMPRESSED NICK(PHYSICALLY CHALLENGED).//
நன்றி ராணி.
LikeLike
whatevre happens life has 2 go on…
thanks to u.
LikeLike
SUPPER DA
LikeLike
நன்றி சரத் 🙂
LikeLike
everything is possible in our life
he is the best example
LikeLike
//everything is possible in our life
he is the best example
//
நன்றி நண்பரே…
LikeLike
dear self, we have all what Nick doesn’t have. But still we are worrying about something or sometimes nothing. be happy. be helpful to helpless. thank you.bye.
ravi, teacher, karur.
LikeLike
no words to say…….
………………………….
……………………………
very nice….brother….
LikeLike
i feel you are doing great sevice through valuable and worthful article, keep it up.
By susaan
LikeLike
nick story i like very much …. MAINLY I AM VERY IMPRESSED NICK(PHYSICALLY CHALLENGED). please say many stories this way
LikeLike
ick story i like very much …. MAINLY I AM VERY IMPRESSED NICK(PHYSICALLY CHALLENGED). please say many stories this way
LikeLike
Praise the Lord,
We have everything, without any use. Mr. Nick’s confidant is an eye opener for human being. God is graceful almighty. He made us to see all these, and put shame on us. Thank you for this wonderful message.
Mariya
LikeLike
//Praise the Lord,
We have everything, without any use. Mr. Nick’s confidant is an eye opener for human being. God is graceful almighty. He made us to see all these, and put shame on us. Thank you for this wonderful message.
Mariya
//
மிக்க நன்றி மரியா… தொடர்ந்து வாருங்கள்.
LikeLike
ick story i like very much …. MAINLY I AM VERY IMPRESSED NICK(PHYSICALLY CHALLENGED). please say many stories this way
நன்றி… நிச்சயம் செய்வோம் !
LikeLike
//i feel you are doing great sevice through valuable and worthful article, keep it up.
By susaan
//
நன்றி சூசன்
LikeLike
நன்றி பிரியா…
LikeLike
//dear self, we have all what Nick doesn’t have. But still we are worrying about something or sometimes nothing. be happy. be helpful to helpless. thank you.bye.
ravi, teacher, karur.
//
நன்றி சார்.
LikeLike
aiya
nalla katturai
vaazhthukal xavier
Thamizh iyalan
LikeLike
it’s a wonderful tonic for all youngsters.
i love your self confidence nick.
may god bless u and i will pray for u .
bye
geetha
coimbatore
LikeLike