கவிதை : தனிமைத் திண்ணைகள்

நாட்டில் எங்கும்
திண்ணைகளில்லாத வீடுகள்.

திண்ணை குறித்த
நினைவுகளுக்காக
புகைப்படமெடுக்கும் ஆர்வத்தில்
என்
கிராமக் கரையில் ஒதுங்கினேன்.

அங்கும்
திண்ணைகளின் மேல்
முளைக்க விட்டிருக்கிறார்கள்
இரும்புக் கம்பிகளை.

பாதுகாப்பு குறித்த
பயங்களின் பிராண்டல்களில்
தொலைந்து கொண்டிருக்கின்றன.
திண்ணைகள்.

பாக்கு இடிக்கும் பாட்டிகளும்
பனையேறும் தாத்தாக்களும்
டிஷ்களிளுக்குத் தாவியபின்
தனியே இருந்தாலும்
என்ன தான் செய்யும்
திண்ணைகள்

பிடித்திருந்தால் வாக்களிக்கலாமே

9 comments on “கவிதை : தனிமைத் திண்ணைகள்

  1. சில கிராமங்களில் இன்னமும் இருக்கின்றன திண்ணைகளும்,திண்ணைப்பேச்சுக்களும்.இருந்தாலும் பாட்டிகளும்,தாத்தாக்களும் தொலைக்காட்சியிலும்,அலைபேசியிலும் “கொலவெறி”கொண்டு அலைவதும் சுடுகின்ற யதார்த்தம் தான்.

    Like

  2. //சிறப்பான சிந்தனை

    பாக்கு இடிக்கும் பாட்டிகளும்
    பனையேறும் தாத்தாக்களும்
    டிஷ்களிளுக்குத் தாவியபின்
    தனியே இருந்தாலும்
    என்ன தான் செய்யும்
    திண்ணைகள்

    //

    நன்றி ராச கணேசன்

    Like

  3. சிறப்பான சிந்தனை

    பாக்கு இடிக்கும் பாட்டிகளும்
    பனையேறும் தாத்தாக்களும்
    டிஷ்களிளுக்குத் தாவியபின்
    தனியே இருந்தாலும்
    என்ன தான் செய்யும்
    திண்ணைகள்

    Like

  4. சந்திப்பின் அரங்கம் (திண்ணை)…
    துயில்கொள்ளும் மஞ்சம் (திண்ணை)….
    இன்று எம்மைச்
    சிந்திக்க வைத்து விட்டது!

    Like

  5. திண்ணைகளற்ற வீடுகள்
    திணைகளற்ற காடுகள்

    வாழ்த்துக்கள் நண்பா

    விஜய்

    Like

  6. எங்க வீட்லயும் தலையணை வச்ச கட்டில்போல ஒரு செம்மண்ணால கட்டின திண்ணை இருந்தது !

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.