கவிதையில் கமல்…

கமல்…

( நடிகர்களைப் பற்றிக் கவிதையெழுதினால் கவிதையின் புனிதத்துவம் கெட்டுவிடும் என்று கருதாதவர்களுக்காக இந்தக் கவிதை….   )
 Kamal_Hassan

எல்லோரும்
நடிப்புச் சாளரங்களை
எட்டிப் பார்த்துத் திகைக்கையில்
நடிப்பு
இவன் வீட்டைத் தான்
எட்டிப் பார்த்து பிரமித்தது.

தாய் வயிற்றுக்குள்
நடிப்புப் பழகிய
ஒரே மனிதன்
இவனாய்த் தான் இருக்க வேண்டும்.

அதன் முன்னேற்றமே
முதல் அழுகையாய்
அரங்கேறியிருக்க வேண்டும்.

நடிப்பை
அணிந்து பார்க்க
எல்லோரும் ஆசைப்பட்டபோது
துணிந்து பார்க்க
ஆசைப்பட்டவன் இவன்.

அதனால் தான்
வீட்டுக் கண்ணாடியில்
இவனுக்கு மட்டும்
தினம் தினம் புது பிம்பம்.

தரையில் விழும்
நிழல் கூட
ஒரே மாதிரி இருந்ததாய்
வரலாறு இல்லையாம்.

இவன் வீட்டுக்
காவல் நாய் கூட
தினம் தோறும்
திணறிப் போவது வாடிக்கையாம்.

நெருப்பு என்றால்
வாய் வேகாது என்பர்
பொய்.
அழு என்றால்
அடுத்த வினாடி
கண்ணணை திறப்பவன் இவன்.

உரக்கப் பேசியே
பழகிய திரையுலகை
விழிகளால் பேசியே
விழ வைத்தவன் இவன்.

இவன்
ஐந்தில் வளைந்ததால்
ஐம்பதிலும் நிமிர்ந்து
நிற்பவன்.

மயிலே மயிலே
என்றால்
இவனுக்காய்
இறகு போடக் காத்திருக்கும்
இதயங்கள் ஏராளம்.

இவன் வாழ்வில்
அடிக்கும்
ஒவ்வோர் அலையும்
பூவையர் இதயங்களில்
புயல் சேதத்தை விளைவிக்கிறதாம்.

அரிதார இளைஞர்களுக்கு
அரிதாகவே கிடைக்கும்
அவதாரம் இவன்.

விருதுகள் இவன்
தலையிலமர்ந்து
கர்வப்பட்டன.
ஓட்டத்தில் எப்போதுமே
தோற்றுப் போகும்
ஆஸ்கர் மட்டும் அவமானப்பட்டது.

பிடித்திருந்தால் …வாக்களிக்கலாமே… நன்றி

18 comments on “கவிதையில் கமல்…

  1. Oscar is amrican proudct.But kamal are Indian prouduct,so no need osacr to kamal.proud to be an indian.

    Like

  2. தாய் வயிற்றுக்குள்
    நடிப்புப் பழகிய
    ஒரே மனிதன்
    இவனாய்த் தான் இருக்க வேண்டும்.

    Like

  3. Nice I was totally impressed with your poetic penned about My Favorite The LIVING LEGEND The UNIVERSAL STAR Kamal hassan. I shall Oblige my comment here : As everyone I too liked your lines about kamalji..but you portrait kamalji as an actor only but rather he is Living comradeship, I expect something more about his Leadership in Society, a role model for youngster ” Even veezhvaan yena ninaithayo”

    Like

  4. அன்பின் சேவியர்

    உலக நாயகனைப் பற்றிய அருமையான கவிதை

    நடிப்பினைப் பார்த்துப் பிரமித்த நடிகர்களின் நடுவில் நடிப்பு இவ்னைப் பார்த்து பிரமித்தது

    கருவினிலேயே நடிப்பு பயின்ற அபிமன்யு

    கண்ணாடியில் ஒவ்வொரு நொடியிலும் புது பிம்பம்

    நிழல் ஒவ்வொண்றும் ஒரு விதம்

    அழச் சொன்னால் அடுத்டஹ் நொடியில் கண் அணை திறப்பவன்

    விழிகளால் பேசுபவன்

    ஐந்தில் வளைந்து அம்பதில் நிமிர்ந்து நிற்பவன்

    ஆஸ்கார் – தேவை இல்லை இவனுக்கு

    நன்று நன்று நண்பா நல்வாழ்த்துகள்

    Like

  5. //உவமானம், உவமேயம், கவித்துவம் நிறைந்தவை கவிதையாகலாம் .. “மனித நேயம்” அற்றவர்களைவிட எல்லோருமே உயர்ந்தவர்கள் என்பதால் நீங்கள் தாராளமாக எல்லோரையும் பற்றிக் கவிதை வடிக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து!…//

    கலக்கிட்டீங்க போங்க….

    Like

  6. உவமானம், உவமேயம், கவித்துவம் நிறைந்தவை கவிதையாகலாம் .. “மனித நேயம்” அற்றவர்களைவிட எல்லோருமே உயர்ந்தவர்கள் என்பதால் நீங்கள் தாராளமாக எல்லோரையும் பற்றிக் கவிதை வடிக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து!…

    //நடிப்பு இவன் வீட்டைத் தான்
    எட்டிப் பார்த்து பிரமித்தது//

    //எல்லோரும் நடிப்புச் சாளரங்களை எட்டிப் பார்த்துத் திகைக்கையில்
    நடிப்பு இவன் வீட்டைத் தான் எட்டிப் பார்த்து பிரமித்தது.//

    //நெருப்பு என்றால் வாய் வேகாது என்பர்.
    பொய்.
    அழு என்றால் அடுத்த வினாடி கண்”அணை” திறப்பவன் இவன்.//

    //விழிகளால் பேசியே விழ வைத்தவன் இவன்//

    என்னே உண்மை வரிகள்!

    ஆஸ்கருக்கே ஆஸ்காரா?….
    அதனால் தானோ என்னவோ….
    சிகரத்தின் சிரம்தனில் ஏறியமர
    ஆஸ்காரால் முடியவில்லை போலும்!

    வளரட்டும் கவிப்பயணம்!…. வாழ்த்துகள்!!!!

    Like

  7. அருமையாய் கமலின் நினவோடு நனைய வைதீர்கள் ஒரு நொடி.அண்ணா கவலைப்படத் தேவையில்லை.ஆஸ்கார் ஒருநேரம் கமலைப் பார்த்து அவமானப்படும் பாருங்கள்.

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.