கவிதை : பூக்கள் பேசினால்…

நான் தான்
பூ பேசுகிறேன்.

மொட்டுக்குள் இருந்தபோதே
முட்டி முட்டிப்
பேசியவைகள் தான்
எல்லாமே.
ஆனாலும்
உங்கள் திறவாச் செவிகளுக்குள்
விழுந்திருக்க வாய்ப்பில்லை.

என்
விலா எலும்புவரை
வண்டுகள் வந்து
கடப்பாரை இறக்கிச் செல்லும்.

வருட வரும்
வண்ணத்துப் பூச்சியும்
மகரந்தம்
திருடித் திரும்பும்.

என்னை
உச்சி மோந்துச் சிரிப்பாள்
இல்லத்தரசி,
ஆனாலும்
அவள் இப்போது
மிதித்து நிற்பது
நேற்றைய ஒரு மலரைத்தான்.

எனக்குப் பிடிக்கவில்லை
இந்த வாழ்க்கை.

தீய்க்குள் புதைக்கப்பட்ட
மெழுகு போலதான்
ஒரு பகலால்
இருட்டிப் போகும்
எனது வாழ்க்கையும்.

மென் கர வருடலும்,
சிறுமியரின் திருடலும்
வாடல் வரையே நீடிக்கும்.

மரணத்தின் போது
மண்டியிட்டழாத சொந்தமெதற்கு
எனக்கு ?

மொட்டாய் முடங்கியபோதே
விரியக் கூடாதென்று
உறுதியாய் இருந்தேன்.
முடியவில்லை.

விரிந்தபின்
வாடக் கூடாதென்று
வீம்பாய் இருந்தேன்
இயலவில்லை.

எதுவும் என்னால்
நிர்ணயிக்கப் படாத வாழ்க்கை
எனக்கெதுக்கு.

ஓரமாய்
நீ அமர்ந்து
கவிதை எழுதிப் போகவா ?

33 comments on “கவிதை : பூக்கள் பேசினால்…

 1. //எதுவும் என்னால்
  நிர்ணயிக்கப் படாத வாழ்க்கை
  எனக்கெதுக்கு.

  ஓரமாய்
  நீ அமர்ந்து
  கவிதை எழுதிப் போகவா ?
  //

  வாழும் வரை மணம் வீசிவிட்டு, அழகால் வசீகரித்து தன் கடமையை செவ்வனே செய்துவிட்டு மடிகிறது மலர் என்று நினைத்திருந்தேன். பூக்களும் இப்படி புலம்பக் கூடுமோ ??

 2. //மென் கர வருடலும்,
  சிறுமியரின் திருடலும்
  வாடல் வரையே நீடிக்கும்.//

  மனித வாழ்க்கையை ரோஜா அழகாக சித்தரிக்கிறது…

 3. எங்கே பறித்து வைத்தாலும் மணம் வீசுவது பூக்களின், பெண்களின் கடமை….என்று அப்பா சொல்வது ஏனோ நினைவுக்கு வருகிறது….
  பூ அழகாக் அருமையாகப் பேசியது….
  அன்புடன் அருணா

 4. அடுத்தவர் பார்த்து பொறாமைப் படுவது போல் வாழ்வானாலும் அவர்களுக்குத்தான் தெரியும் அவர்கள் வேதனை என்பது போல இருக்கு.என்றாலும் சில பூக்கள் கொடுத்து வைத்தவைகளே.ஒரு நாள் வாழ்ந்தாலும் இறைவனின் தலையில் வாழுமே!!!

 5. //வாழும் வரை மணம் வீசிவிட்டு, அழகால் வசீகரித்து தன் கடமையை செவ்வனே செய்துவிட்டு மடிகிறது மலர் என்று நினைத்திருந்தேன். பூக்களும் இப்படி புலம்பக் கூடுமோ ??

  //

  நமது கற்பனையில் புலம்பும் பூக்கள் உண்மையில் புலம்புகிறதா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம் !

 6. //மனித வாழ்க்கையை ரோஜா அழகாக சித்தரிக்கிறது…//

  நன்றி விக்கி. தத்துவப் பின்னூட்டத்துக்கு😉

 7. //எங்கே பறித்து வைத்தாலும் மணம் வீசுவது பூக்களின், பெண்களின் கடமை….என்று அப்பா சொல்வது ஏனோ நினைவுக்கு வருகிறது….
  //

  அசத்தல் !

 8. //அடுத்தவர் பார்த்து பொறாமைப் படுவது போல் வாழ்வானாலும் அவர்களுக்குத்தான் தெரியும் அவர்கள் வேதனை என்பது போல இருக்கு//

  நன்றி சகோதரி

 9. //எதுவும் என்னால்
  நிர்ணயிக்கப் படாத வாழ்க்கை
  எனக்கெதுக்கு.

  ஓரமாய்
  நீ அமர்ந்து
  கவிதை எழுதிப் போகவா ?
  //

  சேவியர்,
  ரொம்ப நல்லா இருக்கு, ஆனா சில சமயம்
  மனித வாழ்கையும் இப்படி தானே …..

  ஒரு மாறுதலுக்காக நகைச்சுவை கவிதை எழுதுங்கள் ….

 10. அன்புள்ள சேவியருக்கு,

  மரணத்தின் போது
  மண்டியிட்டழாத சொந்தமெதற்கு
  எனக்கு ?

  பாரதி இறந்த போது , அவர் இறுதி ஊர்வலத்தில் மிகக் குறைவான நபர்களே இருந்தனர். பதின்மூன்று பேர் என நினைக்கிறேன், அதை கவிப்பேரரசு வைரமுத்து அழகாக குறிப்பிடுவதாக ஒருவர் எனக்கு சொன்ன சேதி ” உன்னுடைய மாலையில் மொய்க்கக் கூடிய ஈக்களின் எண்ணிக்கை அளவுக்கு கூட உன் இறுதி ஊர்வலத்திற்கு வந்திருப்பவர்களின் எண்ணிக்கை இல்லையே ” என்று .
  அந்த பூக்கள் அவ்வாறு எண்ணி பார்த்தால் என்ன நிகழும் என்பதின் வடிவம் உங்கள் வரிகள் .

  எதுவும் என்னால்
  நிர்ணயிக்கப் படாத வாழ்க்கை
  எனக்கெதுக்கு.

  கையறு நிலை எண்ணி , கண்ணீரோடு கதறுவதை தாய்மை இதயத்தை உள் வாங்கிய ஆண்மையால் மட்டுமே புறக் கண்களால் பார்க்க இயலும் .
  அது உங்களால் முடிவதில் ஆச்சர்யம் இல்லை !!!!!!!!!!!!!!!!

  என்
  விலா எலும்புவரை
  வண்டுகள் வந்து
  கடப்பாரை இறக்கிச் செல்லும்.

  இந்த வரிகளைப் படித்து மூர்ச்சையற்றுப் போனேன்.,
  கவிப்பேரரசு வைரமுத்து பேனா முனைக்குள் மட்டுமே இது போன்ற வரிகளுக்கான மை உட்கார்ந்து கொண்டிருக்கும் என்று நினைப்பவன் .
  அபாரம் சேவியர் !!!!! அபாரம் !!!!!!!

  ஓரமாய்
  நீ அமர்ந்து
  கவிதை எழுதிப் போகவா ?

  குற்ற உணர்ச்சி தேவை இல்லை சேவியர் !!!! அவற்றின் உக்கிரமான ஏக்கப் பெருமூச்சை , அதே வெப்பச் சூட்டில் வெளிக்கொணர்ந்த பெருமை உணர்வு கொள்க !

  நட்புடன்
  குகன்

 11. //ரொம்ப நல்லா இருக்கு, ஆனா சில சமயம்
  மனித வாழ்கையும் இப்படி தானே …..

  ஒரு மாறுதலுக்காக நகைச்சுவை கவிதை எழுதுங்கள்
  //
  🙂 முயற்சி பண்றேன்.

 12. “பூக்கள் பேசினால்” அருமையான கவிதை.
  பேச முடிந்தும், பூக்களைப் போல பேச முடியாது
  //எதுவும் என்னால்
  நிர்ணயிக்கப் படாத வாழ்க்கை
  எனக்கெதுக்கு//
  என வாடி நிற்கும் பல மானுடப் பூக்களும் உள்ளனவே சேவியர்:(!

 13. //” உன்னுடைய மாலையில் மொய்க்கக் கூடிய ஈக்களின் எண்ணிக்கை அளவுக்கு கூட உன் இறுதி ஊர்வலத்திற்கு வந்திருப்பவர்களின் எண்ணிக்கை இல்லையே ” என்று//

  வாவ் !!! ம்ம்ம்.. அற்புதம்

  //கையறு நிலை எண்ணி , கண்ணீரோடு கதறுவதை தாய்மை இதயத்தை உள் வாங்கிய ஆண்மையால் மட்டுமே புறக் கண்களால் பார்க்க இயலும் .
  //

  கவித்துவமான வரிகள். நன்றி🙂

  //

  இந்த வரிகளைப் படித்து மூர்ச்சையற்றுப் போனேன்.,
  கவிப்பேரரசு வைரமுத்து பேனா முனைக்குள் மட்டுமே இது போன்ற வரிகளுக்கான மை உட்கார்ந்து கொண்டிருக்கும் என்று நினைப்பவன் .
  அபாரம் சேவியர் !!!!! அபாரம் !!!!!!!

  //

  மிக்க நன்றி குகன். வயலுக்கு இறைத்த நீர் சற்று வாய்க்காலுக்கும் பாய்வது போல தமிழ் என் பக்கமும் சில துளிகளை போகிற போக்கில் போட்டு விட்டுப் போயிருக்கிறது என நினைக்கிறேன்🙂

 14. /குற்ற உணர்ச்சி தேவை இல்லை சேவியர் !!!! அவற்றின் உக்கிரமான ஏக்கப் பெருமூச்சை , அதே வெப்பச் சூட்டில் வெளிக்கொணர்ந்த பெருமை உணர்வு கொள்க //

  மீண்டும் நன்றிகள் குகன்🙂

 15. //“பூக்கள் பேசினால்” அருமையான கவிதை.
  பேச முடிந்தும், பூக்களைப் போல பேச முடியாது
  //எதுவும் என்னால்
  நிர்ணயிக்கப் படாத வாழ்க்கை
  எனக்கெதுக்கு//
  என வாடி நிற்கும் பல மானுடப் பூக்களும் உள்ளனவே சேவியர்:(!

  //

  உண்மை. நன்றி வருகைக்கும், கருத்துக்கும்

 16. //மிக்க நன்றி குகன். வயலுக்கு இறைத்த நீர் சற்று வாய்க்காலுக்கும் பாய்வது போல தமிழ் என் பக்கமும் சில துளிகளை போகிற போக்கில் போட்டு விட்டுப் போயிருக்கிறது என நினைக்கிறேன் //

  உங்கள் தகுதியோடு ஒப்பிட்டு பார்கையில் , உங்கள் தன்னடக்கம் உண்மையிலேயே மெய் சிலிர்க்க வைக்கிறது , சேவியர் !!!
  எப்படி தான் முடியுதோ இப்படி இருக்க?

 17. பூக்கள் தாவரங்களின் பிறப்பு உறுப்பு
  அவைகளின் மணமும் நிறமும்
  புண்ர்ச்சிக்கான முயற்ச்சிதான்

  ஆனால் உங்கள் கவிதை மனித மனத்தின் அழகு, இரக்கம், அனுதாபம் அனைத்தையும் இணையத்தில் அப்பி இருக்கிறது
  (எழுத்துப்பிழை இருப்பின் மண்ணிக்கவும்)

 18. /*******எதுவும் என்னால்
  நிர்ணயிக்கப் படாத வாழ்க்கை
  எனக்கெதுக்கு.
  ஓரமாய்
  நீ அமர்ந்து
  கவிதை எழுதிப் போகவா ?****/

  very nicelines

 19. நல்லவேளை பூக்கள் பேசவில்லை.
  பேசினால் அதனைத் தாங்கும் சக்தி
  நம் மனதுக்கில்லை.
  – அப்துல் கையூம்

 20. Pingback: Nature resister: English & Tamil Poets | இனம்

 21. Pingback: Nature resister: English & Tamil Poets – Inam

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s